ஃபூசிலேட் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபூசிலேட் நடவடிக்கை (Operation Fusilade) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடத்த திட்டமிடப்பட்ட ஒரு போர் நடவடிக்கை. 1944ல் சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியாக நேசநாட்டுப் படைகள் ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் அமைந்திருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகங்களை நாசி ஜெர்மனியிடமிருந்து கைப்பற்ற முயன்றன.

அத்துறைமுகங்களுள் டியப் நகரமும் ஒன்று. அதனைக் கைப்பற்ற கனடிய 1வது ஆர்மி திட்டமிட்டது. இத்தாkகுதலுக்கு ஃபூசிலேட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப் பட்டிருந்தது. ஆனால் டியப் நகரின் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் எதிர்ப்புக் காட்டாமல் நகரைக் காலி செய்துவிட்டு பின்வாங்கின. செப்டம்பர் 1, 1944ல் கனடியப் படைகள் எதிர்ப்பின்றி டியப் நகருள் நுழைந்தன. எனவே நகரைத் தாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபூசிலேட்_நடவடிக்கை&oldid=2266353" இருந்து மீள்விக்கப்பட்டது