லானோ மக்கள்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
390 (2010)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா பேராக் | |
மொழி(கள்) | |
லானோ மொழி (செம்னாம் மொழி, சாபும் மொழி), மலாய் மொழி | |
சமயங்கள் | |
பாரம்பரிய சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செமாங் மக்கள் (பாத்தேக் மக்கள், ஜெகாய் மக்கள்) நெகிரிட்டோ மக்கள் மானிக் மக்கள் பிலிப்பீன்சு நெகிரித்தோ மக்கள், அந்தமானியப் பழங்குடிகள் |
லானோ அல்லது லானோ மக்கள் (ஆங்கிலம்: Lanoh people; மலாய்: Orang Lanoh) என்பவர்கள் செமாங் மக்கள் இனக்குழுவில் ஒராங் அஸ்லி (அசல் மக்கள்) என மலேசிய அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்ட குழுவினர் ஆவார்கள். இவர்கள் சபுன் (Sabub'n) அல்லது லானோ (Lano) என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளிலும் பேராக், மற்றும் கெடா மாநிலங்களில் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 390 ஆகும்.[2]
பொது
[தொகு]பேராக்கில் உள்ள கிரிக் மற்றும் லெங்கோங்கில் உள்ள லானோ சமூகத்தினர் தங்களை மெனிக் செம்னாம் (ஆங்கிலம்: Menik Semnam; Semnam people; மலாய் மொழி: Orang Semnam) என்று அடையாளப்படுத்திக் கொள்வார்கள். மெனிக் செம்னாம் என்றால் செம்னாம் மக்கள் என்று பொருள்படும். செம்னாம் என்பது முன்பு காலத்தில் செம்னாம் ஆற்றுப் பகுதிகளில் வாழ்ந்த லானோ மக்களைக் குறிக்கிறது.
அதே வேளையில் பேராக் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மலாய் சமூகத்தினர் லானோ மக்களை சக்காய் ஜெராம் (Sakai Jeram) என்று குறிப்பிடுகிறார்கள்.[3]
லானோ மக்கள் தொகை
[தொகு]தற்போது, மலேசியாவில் 390 லானோ மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான லானோ மக்கள் காட்டில் வேட்டையாடும் மக்களாக வாழ்கின்றனர். ஆனாலும் லானோ மக்களில் சிலர் நகர்ப்புறங்களிலும் வசிக்கத் தொடங்கி விட்டனர். அங்கு அவர்கள் பொதுவான உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களில் தொழில் புரிகின்றனர்.[4][5]
பிரித்தானிய மலாயாவின் போது, லானோ மக்கள் பிரித்தானிய நிர்வாக அதிகாரிகளால் வனக் காவலர்களாகவும், சுமை தூக்குபவர்களாகவும் பணியில் அமர்த்தப்பட்டனர்.[4]
லானோ மக்கள் தொகை
[தொகு]லானோ மக்களின் மக்கள் தொகை:-
ஆண்டு | 1960[6] | 1965[6] | 1969[6] | 1974[6] | 1980[6] | 1993[7] | 1996[6] | 2000[8] | 2003[8] | 2004[9] | 2010[1] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை | 142 | 142 | 264 | 302 | 224 | 359 | 359 | 173 | 350 | 350 | 390 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ "Association of British Malaya". British Malaya, Volume 1. Newton. 1927. p. 259. இணையக் கணினி நூலக மைய எண் 499453712.
- ↑ Hamid Mohd Isa (2015). The Last Descendants of The Lanoh Hunter and Gatherers in Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1948-6.
- ↑ 4.0 4.1 Csilla Dallos (2011). From Equality to Inequality: Social Change Among Newly Sedentary Lanoh Hunter-Gatherer Traders of Peninsular Malaysia. University of Toronto Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-144-2661-71-4.
- ↑ Main Rindam & Fatan Hamamah Yahaya (2014). "Analisis SWOT(C) prospek pembangunan ekotourism di petempatan Orang Asli Lanoh, Perak". Geografia: Malaysian Journal of Society and Space (GEOGRAFIA Online Malaysian Journal of Society and Space). பன்னாட்டுத் தர தொடர் எண்:2180-2491. http://www.ukm.my/geografia/images/upload/11x.geografia-okt14-MainRindam-edam.pdf. பார்த்த நாள்: 2016-11-11.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ Colin Nicholas (2000). The Orang Asli and the Contest for Resources. Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia (PDF). Center for Orang Asli Concerns & International Work Group for Indigenous Affairs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-90730-15-4. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ 8.0 8.1 "Basic Data / Statistics". Center for Orang Asli Concerns. Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-11-341-0076-7.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Negrito of Malaysia
- The Negrito of Thailand (includes information about Negritos of Malaysia)
- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)
- http://hdl.handle.net/10050/00-0000-0000-0003-78F4-2@view Lanoh in RWAAI Digital Archive