கிளாந்தான் மாநில சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாந்தான்
மாநில சட்டமன்றம்
Kelantan State Legislative Assembly
Dewan Undangan Negeri Kelantan
14-ஆவது சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
கிளாந்தான் மாநில
சட்டமன்ற சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1959
தலைமை
சுல்தான்
சுல்தான் முகமது V
13 செப்டம்பர் 2010 (2010-09-13) முதல்
அப்துல்லா யாக்கோப், பெரிக்காத்தான்-பாஸ்
13 சூன் 2013 (2013-06-13) முதல்
துணைப் பேரவைத் தலைவர்
பாத் மகமூத்,
பெரிக்காத்தான்-பாஸ்
28 சூன் 2018 (2018-06-28) முதல்
அகமது யாக்கோப், பெரிக்காத்தான்-பாஸ்
6 மே 2022 (2022-05-06) முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
அல்வி செ அகமட், பாரிசான்-அம்னோ
28 சூன் 2022 (2022-06-28) முதல்
செயலாளர்
முகமது சைக்கா யமானி இப்ராகிம்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்45
குறைவெண் வரம்பு:15
எளிய பெரும்பான்மை: 23
மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 30
அரசியல் குழுக்கள்
ஆண்டு
(30.04.2021)

அரசாங்கம் (37)
     பெரிக்காத்தான் (37)

எதிர்க்கட்சிகள் (7)
     பாரிசான் (7)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
9 மே 2018
அடுத்த தேர்தல்
28 ஆகஸ்து 2023
கூடும் இடம்
Kota Darul Naim, Kota Bharu, Kelantan
கோத்தா டாருல் நாயிம், கோத்தா பாரு, கிளாந்தான்
வலைத்தளம்
kelantan.gov.my
தற்போதைய கிளாந்தான் மாநில சட்டமன்றத் தொகுதிகள் (2022)

கிளாந்தான் மாநில சட்டமன்றம் அல்லது கிளாந்தான் சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Negeri Kelantan; ஆங்கிலம்: Kelantan State Legislative Assembly; சீனம்: 吉兰丹州议会) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.

மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான கிளாந்தான் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். கிளாந்தான் மாநிலச் சட்டமன்றம் 45 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டம், கோத்தா பாரு, கோத்தா டாருல் நாயிம், (Kota Darul Naim) சட்டமன்ற வளாகத்தில் கிளாந்தான் மாநிலப் பேரவை கூடுகிறது.

பொது[தொகு]

கிளாந்தான் மாநில சட்டமன்றம் கிளாந்தான் மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

கிளாந்தான் மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. கிளாந்தான் மாநில சட்டமன்றம், கிளாந்தான் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் உரிமை[தொகு]

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை கிளாந்தான் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

சபாநாயகர் தலைமை[தொகு]

கிளாந்தான் மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் அப்துல்லா யாக்கோப் (Ahmad Yakob).

சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

கிளாந்தான் புவியியல்[தொகு]

கிளாந்தான் மாநிலம் தீபகற்ப மலேசியாவின் கிழக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம். இந்த மாநிலத்தின் வடக்கே தாய்லாந்து நாடு உள்ளது. கிளாந்தான் மாநிலத்திற்கு மேற்கே பேராக், கெடா, பெர்லிஸ் மாநிலங்கள் உள்ளன.

தெற்கே திராங்கானு, பகாங் மாநிலங்கள் உள்ளன. கிழக்கே தென் சீனக் கடல் உள்ளது. கிளாந்தான் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 586 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.

கோத்தா பாரு மாநகரம்[தொகு]

கோத்தா பாரு மாநகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமாகவும், தலைநகரமாகவும் விளங்குகின்றது. கிளாந்தான் மாநிலத்திற்கு ‘டாருல் நாயிம்’ எனும் நன்மதிப்பு அரபு அடைமொழியும் உண்டு. ’டாருல் நாயிம்’ என்றால் ‘மகிழ்ச்சியான இருப்பிடம்’ என்று பொருள். [1]

கிளாந்தான் ஒரு விவசாய மாநிலம் ஆகும். இங்கு நெல் வயல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கடற்கரைகளில் நிறைய மீனவக் கிராமங்கள் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பூர்வீகக் குடிமக்கள், இந்த மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அரசாங்கமும் அரசியலும்[தொகு]

அரசியல் சாசனப் படி கிளாந்தான் சுல்தான் தான் கிளாந்தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். கிளாந்தான் மாநிலத்தில் இசுலாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார்.

கிளாந்தான் மாநிலத்தில் இப்போது சுல்தான் முகமது V (Sultan Muhammad V of Kelantan) என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 2010-ஆம் ஆண்டில் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.

மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர். இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார்.

தற்போதைய கிளாந்தான் சட்டமன்றம் (2022)[தொகு]

அரசு எதிரணி
பெரிக்காத்தான் பாரிசான்
37 7
36 1 7
பாஸ் பெர்சத்து அம்னோ

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]