உள்ளடக்கத்துக்குச் செல்

அல்பர்ட் பீரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பர்ட் பீரிஸ்
Albert Peries
இலங்கை நாடாளுமன்றத்தின் 4வது சபாநாயகர்
பதவியில்
13 பெப்ரவரி 1951 – 18 பெப்ரவரி 1956
பிரதமர்டி. எஸ். சேனநாயக்கா
டட்லி சேனாநாயக்க
ஜோன் கொத்தலாவலை
முன்னையவர்ஏ. எஃப். மொலமூர்
பின்னவர்எச். எச். எஸ். இசுமாயில்
இலங்கை நாடாளுமன்றத்தின் 6வது சபாநாயகர்
பதவியில்
5 ஏப்ரல் 1965 – 21 செப்டம்பர் 1967
பிரதமர்டட்லி சேனாநாயக்க
முன்னையவர்ஹியூ பெர்னாண்டோ
பின்னவர்சேர்லி கொரெயா
நாத்தாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1952–?
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1905-05-12)12 மே 1905
நாத்தாண்டியா, வடமேல் மாகாணம், இலங்கை
இறப்புசெப்டம்பர் 21, 1967(1967-09-21) (அகவை 62)
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி

சேர் பட்டியபதிரென்னஹெலாகே அல்பர்ட் பிரெட்ரிக் பீரிசு (Pattiyapathirennehelage Albert Fredrick Peries, 12 மே 1905 - 21 செப்டம்பர் 1967) இலங்கையின் 5வது, மற்றும் 10வது நாடாளுமன்ற சபாநாயகர் ஆவார். துணை சபாநாயகராகப் பணியாற்றிய இவர் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் இறந்ததை அடுத்து சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா தேர்தல் தொகுதியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[1][2]

கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியில் கல்வி கற்றவர். நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[3] இவரது நினைவாக வென்னப்புவையில் உள்ள விளையாட்டரங்கம் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Molamure is elected Speaker of First Parliament". Sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
  2. Kurera, S. K. J. "18th Death Anniversary of former Speaker Hugh Fernando today". Island.lk. Archived from the original on 30 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Epasinghe, Premasara. "Former Speaker Sir Albert F. Peries was a versatile Josephian sportsman". Archived from the original on 31 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பர்ட்_பீரிசு&oldid=4147025" இலிருந்து மீள்விக்கப்பட்டது