கே. ராஜலிங்கம்
Appearance
கே. ராஜலிங்கம் என அழைக்கப்பட்ட காளிமுத்து ராஜலிங்கம் (Kalimuthu Rajalingam, திசம்பர் 3, 1909 – பெப்ரவரி 11, 1963) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத்தலைவரும், தமிழ் செயற்பாட்டாளரும் ஆவார்.[1][2]
ராஜலிங்கம் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்ற இலங்கையின் 1-வது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இத்தேர்தலில் இலங்கை தொழிலாலர் காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏழு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[4]
கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி இலங்கை வந்திருந்த போது ராஜலிங்கத்திற்கு 'மலையக காந்தி' என்ற பட்டம் சூட்டி, அவருடைய படத்தை 1950 செப்டம்பர் 10 கல்கி இதழில் அட்டைப் படமாக பிரசுரித்துக் கட்டுரை எழுதினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon. Rajalingam, Kalimuthu, M.P." Directory of Past Members. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 8 October 2017.
- ↑ Peebles, Patrick (2015). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442255852.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 14 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 18 September 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ de Silva, Lakshmi (2 சூன் 2009). "Indian Tamils and Prabakaran’s Eelam: Seeking Tamil Nadu’s refuge after its betrayal". டெய்லி நியூசு. http://archives.dailynews.lk/2009/06/02/fea40.asp. பார்த்த நாள்: 6 அக்டோபர் 2017.