ச. மு. சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எம். சுப்பையா
இங்கை நாடாளுமன்றம்
for பதுளை
பதவியில்
1947–1952
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்ஜே. சி. டி. கொத்தலாவலை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சங்கரலிங்கம் முனியாண்டிப்பிள்ளை சுப்பையா

(1912-10-19)19 அக்டோபர் 1912
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை இந்தியக் காங்கிரசு
துணைகோகிலம் சுப்பையா (1925-2011)
தொழில்தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி

எஸ். எம். சுப்பையா என அழைக்கப்பட்ட சங்கரலிங்கம் முனியாண்டிப்பிள்ளை சுப்பையா (Sangaralingam Muniandi Pillai Subbiah, 19 அக்டோபர் 1912 – ?) இலங்கை அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும், தமிழ்ச் செயற்பாட்டாளரும் ஆவார்.[1][2]

சுப்பையா இலங்கை இந்தியக் காங்கிரசு கட்சியின் சார்பில் இலங்கையின் 1947 1-ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் பதுளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார். இவர் 27,121 வாக்குகள் (50%) வாக்குகளைப் பெற்று லங்கா சமசமாஜக் கட்சியின் ஜே. சி. டி. கொத்தலாவலையை விட 10,467 வாக்குகள் அதிகப்படியாகப் பெற்றார்.[3][4] பதுளை தேர்தல் தொகுதி இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் தொகுதி ஆகும்.[4][5] எஸ். எம். சுப்பையா இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கை இந்தியக் காங்கிரசின் உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.[6][7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுப்பையா இந்தியாவின் திருச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் கோகிலம் சுப்பையா என்பாரைத் திருமணம் புரிந்தார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hon. Subbiah, Sangaralingam Muniandi Pillai, M.P." Directory of Past Members. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
  2. Peebles, Patrick (2015). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442255852.
  3. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
  4. 4.0 4.1 University of Ceylon Review. 6-8. University of Ceylon. 1948. p. 193. 
  5. Gaveshaka (19 August 2007). "First parliamentary elections". Sunday Times. http://www.sundaytimes.lk/070819/FunDay/heritage.html. பார்த்த நாள்: 18 October 2017. 
  6. de Silva, Lakshmi (2 June 2009). "Indian Tamils and Prabakaran's Eelam: Seeking Tamil Nadu's refuge after its betrayal". Daily News. http://archives.dailynews.lk/2009/06/02/fea40.asp. பார்த்த நாள்: 23 October 2017. 
  7. Sabaratnam, T. (1990). Out of Bondage: A Biography. Sri Lanka Indian Community Council. p. 35.
  8. இவரைப் பற்றி இந்து பத்திரிகையில் பரணிடப்பட்டது 2005-05-07 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._மு._சுப்பையா&oldid=3839698" இலிருந்து மீள்விக்கப்பட்டது