உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் அசீஸ் (இலங்கை அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல் அசீஸ் (Abdul Aziz, 6 அக்டோபர் 1921 – 5 சூன் 1990) இலங்கை அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இந்தியாவில் பிறந்த அப்துல் அசீஸ் மும்பை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று தனது தந்தையுடன் இலங்கை]]யில் குடியேறினார். ஜவகர்லால் நேரு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபோது, 1939 சூலை 15 இல் இலங்கை இந்தியக் காங்கிரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்துல் அசீஸ் அதன் நிறுவனர்களில் ஒருவராவார். ஆரம்பத்தில் அக்கட்சியின் இணைச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.[3] 1942 இல் இலங்கை இந்தியக் காங்கிரசின் தொழிற்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 மார்ச்சில், அன்றைய அரசின் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பான அன்றைய இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு அசீஸ் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், உலகப் போர் முயற்சிகளுக்கு முட்டுக்கட்ட போடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் இவர் உச்ச நீதிமன்றத்தினால் விடுவிப்பட்டார். 1944 இல் இந்திய வம்சாவளித் தமிழரின் குடியுரிமை மற்றும் வாக்குரிமை போன்றவற்றை வலியுறுத்தி இலங்கை இந்தியக் காங்கிரசு குழுவிற்குத் தலைமைதாங்கி சோல்பரி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். ஆனாலும் ஆணைக்குழுவிலிருந்து கணிசமான உத்தரவாதங்களைப் பெற முடியவில்லை.

1950 இல் இலங்கை இந்திய காங்கிரசின் பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1950 மார்ச்சில் முதலாவது நாடாளுமன்றத்திற்காக மலையகத்தில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நடப்பு உறுப்பினர் ஜி. ஆர். மோத்தா காலமானதால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அப்துல் அசீஸ் இலங்கை இந்தியக் காங்கிரசு கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4][5]

1956 இல், இக்கட்சியின் தலைவர் எஸ். தொண்டமானுக்கும், செயலாளர் அசீசிற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், அசீசு அக்கட்சியில் இருந்து விலகி, தேசிய தொழிலாளர் காங்கிரசு என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

1970 இல் நாடாளுமன்றத்திற்கு நியமன உறுப்பினராக ஐக்கிய முன்னணி அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[3] 1972 இல் புதிய அரசியலமைப்பு அறிமுகமானதை அடுத்து நியமன உறுப்பினர் முறை ஒழிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hon. Aziz, Abdul, M.P." Directory of Past Members. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 18 September 2017.
  2. Peebles, Patrick (2015). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442255852.
  3. 3.0 3.1 "26th death anniversary commemoration of Abdul Aziz : Remembering a veteran plantation trade union leader". தி ஐலண்டு (இலங்கை). 29 May 2016 இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170918154554/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=146041. 
  4. "Results of the Parliamentary By Elections held between 1947 - 1988" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 18 September 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Mohan, Vasundhara (1987). Identity Crisis of Sri Lankan Muslims. Mittal Publications. p. 43.