க. வே. நடராசா
கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை நடராசா | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for பண்டாரவளை | |
பதவியில் 1947–1952 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | கே. டி. சுகததாச |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சூலை 1905 |
இறப்பு | அக்டோபர் 2000 (அகவை 95) வாசிங்டன், ஐக்கிய அமெரிக்கா |
அரசியல் கட்சி | சுயேச்சை |
துணைவர் | ஞானமணி இளையதம்பி |
பிள்ளைகள் | பாலா (மகன்) |
முன்னாள் கல்லூரி | யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பரமேசுவரா கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
இனம் | இலங்கைத் தமிழர் |
க. வே. நடராசா (Kanthapillai Velupillai Nadarajah, 6 சூலை 1905 – அக்டோபர் 2000) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]நடராசா 1905 சூலை 6 இல்,[1] கே. வேலுப்பிள்ளை, ஆச்சிக்குட்டி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பரமேசுவரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1] பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.[1] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று வழக்கறிஞரானார். இவர் பி. எஸ். இளையதம்பி என்பவரின் மகள் ஞானமணியைத் திருமணம் புரிந்தார்.[1]
பணி
[தொகு]நடராசா இலங்கையின் மலையகத்தில் பதுளையில் 1930 இல் சட்டத் தொழிலை ஆரம்பித்தார்.[1] ஊவா மாகாணத்தில் 54 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]நடராசா பதுளை நகரசபை உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்தார்.[1] 1947 நாடாளுமன்றத் தேர்தலில் பண்டாரவளை தேர்தல் தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][3]
நடராசா பதுளை சைவ பரிபாலன சங்கத்தின் தலைவராகவும், பதுளை கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் அறங்காவலராகவும் இருந்து சேவையாற்றினார்.[1] ஊவா மாகாணத்தின் முதலாவது தமிழ்ப் பாடசாலையை நிறுவினார். பதுளை சரசுவதி மகா வித்தியாலயத்தின் முகாமையாளராக 30 ஆண்டுகள் இருந்துள்ளார்.[1]
பிற்கால வாழ்க்கை
[தொகு]1983-இல் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளின் போது பிங்காரவையில் இருந்த இவரது வீடு வன்முறையாளர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது.[3] பதுளையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சி. டி. கொத்தலாவலையின் உதவியுடன் கொழும்பு சென்றார்.[3] பின்னர் அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து வாசிங்டனில் வாழ்ந்து வந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 109–110.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Abeyesekera, Kirthie (29 October 2000). "Former Badulla MP K.V. Nadarajah passes away". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010220082802/https://island.lk/2000/10/29/opinio02.html.