உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிகர் ராமானுஜம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிகர் ராமானுஜம்
Desigar Ramanujam
இலங்கை நாடாளுமன்றம்
for அளுத்நுவரை
பதவியில்
1947–1952
முன்னையவர்புதிய தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-07-17)17 சூலை 1907
இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புசூன் 4, 1968(1968-06-04) (அகவை 60)
அரசியல் கட்சிஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
வேலைதொழிற்சங்கவாதி, அரசியல்வாதி

தேசிகர் ராமானுஜம்(Desigar Ramanujam, 17 சூலை 1907 - 4 சூன் 1968) இலங்கைத் தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியுமாவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தேசிகர் ராமானுஜம் 1907 சூலை 17 அன்று தென்னிந்திய மாநிலமான இராமநாதபுரத்தில் பிறந்தார்.[3] உயர் படிப்பை முடித்ததும் இவர் பத்திரிகைத் தொழிலைத் தொடங்கினார். 1920-களின் பிற்பகுதியில், ஒரு திறமையான எழுத்தாளரான இவர், இலங்கைக்கு வந்து "தேசபக்தன்" என்ற தமிழ் பத்திரிகையில் சேர்ந்தார்.[3]

பணிகள்

[தொகு]

1934 இல் கண்டியில் உள்ள தர்மராஜா கல்லூரியில் கற்பித்தல் பணியை மேற்கொண்டார்.[3] இவர் மகாயாவா மற்றும் அஸ்கிரியா கிராமங்களை உள்ளடக்கிய இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 'போஸ் சங்கம்' என்ற ஒரு சங்கத்தை உருவாக்கினார். 1950ஆம் ஆண்டில் இலங்கை இந்திய காங்கிரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சங்கம் கலைக்கப்பட்டது. காங்கிரசில் இராமானுஜம் ஒரு நிறுவன உறுப்பினராக இருந்தார்.

அரசியலில்

[தொகு]

அஸ்கிரியா தொகுதியப் பிரதிநிதித்துவப்படுத்தி 1943 ஆம் ஆண்டில் கண்டி நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1946 ஆம் ஆண்டில் கண்டியின் துணை நகரம முதல்வராக நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் இவர் ஆவார்.

இராமானுசம் 1947 இல் நடைபெற்ற இலங்கையின் 1-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் இரத்தினபுரி மாவட்டம், அளுத்நுவரைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 46.6% வாக்குகள் பெற்று 1,437 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4][5] [6]

1961-ஆம் ஆண்டில் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினராக இராமானுசத்தைப் பிரேரித்தார், ஆனால் இராமானுசம் அப்பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுத் தலைவர் எஸ். தொண்டமானுக்கு அளிக்க ஆதரவாக அப்பதவியை ஏறக மறுத்து விட்டார்.

1962-இல், சுதந்திரத் தொழிற்சங்கங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு இவரைத் தங்கள் அமைப்பில் சேர அழைத்தது, இதன்மூலம் மொரிசியசில் சர்க்கரைத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க இயக்கத்தை ஒழுங்கமைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் எத்தியோப்பியாவிற்கு அங்கு தொழிற்சங்கங்களை நிறுவ அனுப்பப்பட்டார். 1965-இல் ராமானுசத்தை சிங்கப்பூரில் அதன் சிறப்புப் பிரதிநிதியாகவும் பின்னர் தென்கிழக்கு ஆசியாவில் அமைப்பின் பிராந்திய இயக்குநராகவும் நியமித்தது. 1968 சூனில், இந்தியாவில் உள்ள அவ்வமைப்பின் ஆசியப் பிராந்திய அலுவலகத்தின் இயக்குநராக இராமானுசத்தை நியமித்தது. இருப்பினும், அவர் அந்த பதவியை ஏற்கும் முன், தனது 61 வயதில், 1968 சூன் 4 அன்று திடீரென இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hon. Ramanujam, Desigar, M.P." இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 22 September 2017.
  2. Jātika Rājya Sabhāva. Pustakālaya (1972). Members of the Legislatures of Ceylon: 1931-1972. National State Assembly Library. p. 157.
  3. 3.0 3.1 3.2 Naalir, Mohammed (18 July 2007). "Desigar Ramanujam fought for estate workers’ rights - Hakeem". Daily News. http://archives.dailynews.lk/2007/07/18/news35.asp. 
  4. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 21 September 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Goonetilleke, T. V. (Ed) (1983). Members of the Legislatures of Sri Lanka, 1931-83: Record of Service. Library of Parliament. p. 203.
  6. de Silva, Lakshmi (2 June 2009). "Indian Tamils and Prabakaran's Eelam: Seeking Tamil Nadu's refuge after its betrayal". Daily News. http://archives.dailynews.lk/2009/06/02/fea40.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிகர்_ராமானுஜம்&oldid=3839836" இலிருந்து மீள்விக்கப்பட்டது