உள்ளடக்கத்துக்குச் செல்

க. குமாரவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
க. குமாரவேலு
பதவியில்
1947–1952
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டது
பின்னவர்யு. பி. உன்னாம்பெளவே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கருப்பையா குமாரவேலு

(1921-09-03)3 செப்டம்பர் 1921
தேசியம்இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை இந்திய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி

கருப்பையா குமாரவேலு (Karuppiah Kumaravelu) (பிறப்பு 3 செப்டம்பர் 1921) என்பவர் இலங்கையைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார்.[1]

குமாரவேலு 1947 ஆகஸ்ட் 23 மற்றும் 20 செப்டம்பர் 1947க்கு இடையில் நடைபெற்ற முதலாவது இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கொட்டகலைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டு மொத்த வாக்குகளில் 53.5% பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரை விட 3,543 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிபெற்றார்.

1947-ல் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழுபேரில், குமாரவேலுவின் மருமகன் செளமியமூர்த்தி தொண்டமானும் ஒருவர்.[2] இவர் இலங்கை இந்தியக் காங்கிரசு நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.[3]

1948இல் நாடாளுமன்றம் இலங்கை குடியுரிமைச் சட்டம்-1948 நிறைவேற்றியது. பின்னர் 1949இல் இலங்கை (நாடாளுமன்றத் தேர்தல்) திருத்தச் சட்டம் எண் 48ஐ நிறைவேற்றியது. இதன் மூலம் இந்தியக் குடிமக்கள் நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியவில்லை. இதன் விளைவாக குமாரவேலுவால் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியில் போட்டியிட முடியவில்லை.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hon. Kumaravelu, Karuppiah, M.P." Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 22 September 2017.
  2. Avtar Singh Bhasin (2001). India-Sri Lanka relations and Sri Lanka's ethnic conflict documents, 1947-2000, Volume 3. Indian Research Press. p. 1,441.
  3. de Silva (2 June 2009). "Indian Tamils and Prabakaran’s Eelam: Seeking Tamil Nadu’s refuge after its betrayal". 
  4. "Statelessness in Sri Lanka". UNHCR in Sri Lanka. Archived from the original on 23 October 2009. பார்க்கப்பட்ட நாள் 20 June 2009.
  5. Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999 பரணிடப்பட்டது 2009-12-12 at the வந்தவழி இயந்திரம், International Centre for Ethnic Studies
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._குமாரவேலு&oldid=3792464" இலிருந்து மீள்விக்கப்பட்டது