மு. ச. காரியப்பர்
எம். எஸ். காரியப்பர் M. S. Kariapper | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் கல்முனை | |
பதவியில் 1947–1952 | |
பின்னவர் | ஏ. எம். மெர்சா, சுயே |
பதவியில் 1956–1960 | |
முன்னையவர் | ஏ. எம். மெர்சா, சுயே |
பின்னவர் | எம். சி. அகமது, இதக |
பதவியில் 1965–1965 | |
முன்னையவர் | எம். சி. அகமது, சுயே |
பின்னவர் | எம். சி. அகமது, இசுக |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 29, 1899 |
இறப்பு | ஏப்ரல் 17, 1989 | (அகவை 89)
முன்னாள் கல்லூரி | உவெசுலி கல்லூரி, கல்முனை |
கேட் முதலியார் முகமது சம்சுதீன் காரியப்பர் (Mohammed Samsudeen Kariapper, ஏப்ரல் 29, 1899 - ஏப்ரல் 17, 1989) இலங்கை முஸ்லிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]1899 ஆம் ஆண்டில் பிறந்த காரியப்பர் கல்முனை, உவெசுலி கல்லூரியில் கல்வி கற்றவர். இவர் ஒரு செல்வாக்கு மிக்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தேங்காய் வணிகரும் ஆவார்.
அரசியலில்
[தொகு]காரியப்பர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கல்முனையில் 1947 தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[1] 1952 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2]
அதன் பின்னர் கல்முனை நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் சார்பில் 1956 தேர்தலில் கல்முனையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[4] நாடாளுமன்றம் சென்ற ஆறு மாதத்தில் அவர் தமிழரசுக் கட்சியை விட்டு விலகி அன்றைய சாலமன் பண்டாரநாயக்காவின் அரசில் இணைந்தார். மார்ச் 1960 தேர்தலில் இலங்கை சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்..[5]
1960 ஆம் ஆண்டில் காரியப்பர் அகில இலங்கை இசுலாமிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியைத் தோற்றுவித்தார். சூலை 1960 தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்..[6] 1960 இன் இறுதியில் தலகோடப்பிட்டிய ஊழல் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார்.
காரியப்பர் மீண்டும் 1965 தேர்தலில் கல்முனைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] ஆனாலும், நாடாளுமன்றம் சென்ற சில மாதங்களிலேயே 1960 ஆம் ஆண்டு இவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கையை இழந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- Sri Kantha, Sachi. "Sinhala-Muslim Romancing and Rift: Two Published Records from the Past". Ilankai Tamil Sangam.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.
- ↑ "History of kalmunai and MC". கல்முனை மாநகரசபை.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). Commission. Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.
- 1899 பிறப்புகள்
- 1989 இறப்புகள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள்
- இலங்கை முசுலிம்கள்
- அம்பாறை மாவட்ட நபர்கள்
- கொழும்பு உவெசுலி கல்லூரி பழைய மாணவர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்