குளூட்டாமிக் காடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| குளூட்டாமிக் காடி | |
|---|---|
| (IUPAC) ஐயுபிஏசி பெயர் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| எளிமைப்படுத்தப்பட்ட மூலக்கூறுகளின் உள்ளீட்டு தனிக்குறிப்பீடு(SMILES) | N[C@@H](CCC(O)=O)C(O)=O |
| பண்புகள் | |
| Molecular formula | C5H9NO4 |
| Molar mass | 147.13 g mol-1 |
| Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25 °C, 100 kPa) Infobox disclaimer and references |
|
குளூட்டாமிக் காடி (சுருக்கமாக Glu அல்லது E) என்பது மாந்தர்களின் உடலியக்கத்திற்கு அடிப்படையாக உள்ள ஏறத்தாழ 20 அமினோ காடிகளில் ஒன்று, ஆனால் மிகத்தேவையான அமினோகாடிகளில் ஒன்றல்ல. குளூட்டாமிக் காடியின் உப்பும், எதிர்மின்மம் கொண்ட கார்பாக்சைலேட்டும் (carboxylate anion) குளூட்டாமேட் என்று அழைக்கப்படுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] வேதியியல்
பக்கக் கிளை இணைப்பு கொண்ட கார்பாக்சைலிக் காடியின் (carboxylic acid) வினைப்படும் பகுதி (functional group) காடி பிரிவுறும் எண் (acid dissociation constant) pKa = 4.1 கொண்டுள்ளது. உடலியக்க pH அளவில் இது எதிர்மின்மம் கொண்ட (நேர்மினமம் களையப்பட்ட) கார்பாக்சைலேட்டு (carboxylate) வடிவில் உள்ளது.
[தொகு] வரலாறு
இந்த குளூட்டாமிக் காடியை 1908 இல் நிப்பானைச் சேர்ந்த பேராசிரியர் கிக்குனே இக்கேடா (Kikunae Ikeda), டோக்கியோ அரசக பல்கலைக்கழகத்துல் கண்டுபிடித்தார். இவர் கடல்பாசி போன்ற கடல் களைச்செடி எனக் கருதப்படும் கொம்பு (Kombu) என்னும் செடியில் இருந்து குளூட்டாமிக் காடியை பிரித்தெடுத்தார். இதில் இருந்து பெறும் குளூட்டாமேட் என்னும் பொருள், சுவை மிக்கதாக நாவில் உணரும் உமாமி என்னும் சுவையைத் தருவதாகக் கண்டுபிடித்தார். அறிவியலில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு (கரிப்பு) ஆகிய நான்கு சுவைகளைப் போல நாவில் உணரும் புதிய ஐந்தாவது சுவையாக இந்த உமாமி இருப்பதாகக் கணக்கிடுகிறார்கள்[1]
. இதனால் இந்த குளூட்டாமேட் என்னும் பொருள் பல உணவுப்பொருள்களில் சுவைகூட்டியாக (சுவையூட்டியாக) சேர்க்கப்படுகின்றது. இந்த சுவையூட்டி பெரும்பாலும் மோனோ சோடியம் குளூட்டாமேட்டாக இருக்கின்றது.
[தொகு] மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு] மேலும் படிக்க
- Nelson DL and Cox MM. Lehninger Principles of Biochemistry, 4th edition.