வாலின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Valine | |
|---|---|
|
வாலின் |
|
|
பிற பெயர்கள்
2-அமினோ-3- மீதைல் பியூட்டநோயிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| en:KEGG | D00039 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C5H11NO2 |
| வாய்ப்பாட்டு எடை | 117.15 g mol-1 |
| அடர்த்தி | 1.316 g/cm3 |
| உருகுநிலை |
298 °C decomp. |
| நீரில் கரைதிறன் | soluble |
| காடித்தன்மை எண் (pKa) | 2.32 (கார்பாக்சில்), 9.62 (அமினோ)[1] |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
வாலின் (Valine) [குறுக்கம்: Val (அ) V][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: GUU, GUC, GUA மற்றும் GUG. இது மின் முனைவற்ற அமினோ அமிலமாகும். இந்த அமினோ அமிலம், வலேரியன் என்னும் தாவரத்திலிருந்து இப்பெயரைப்பெற்றுள்ளது. அரிவாளணு இரத்தசோகை நோயில் (sickle cell anemia; SCA) இரத்தப் புரதத்தில் (ஈமோகுளோபின்) உள்ள நீர்நாடுதிறன் கொண்ட குளுடாமிக் அமிலத்தினை நீர் தவிர்க்கும் வாலின் அமினோ அமிலம் பதிலீடு செய்வதால் இரத்தப் புரதம் சரியாக மடங்குவதில்லை.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.