ஐசோலியூசின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| L-ஐசோலியூசின் | |
|---|---|
|
ஐசோலியூசின் |
|
|
பிற பெயர்கள்
2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| en:KEGG | D00065 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C6H13NO2 |
| வாய்ப்பாட்டு எடை | 131.17 g mol-1 |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
ஐசோலியூசின் (Isoleucine) [குறுக்கம்: Ile (அ) I][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)CH2CH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AUU, AUC மற்றும் AUA. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், ஐசோலியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. ஐசோலியூசினுக்கு நான்கு முப்பரிமாண மாற்றியங்கள் சாத்தியமானது. எனினும் இயற்கையில், ஐசோலியூசினானது ஒரு ஆடி மாற்றியன் உருவத்திலேயே உள்ளது [(2S,3S)-2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம்].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.