டைரோசின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டைரோசின் | |
|---|---|
| (IUPAC) ஐயுபிஏசி பெயர் |
|
| பிற பெயர்கள் | 2-அமினோ-3-(4-ஹைடிராக்சி பினைல்) புரோபநோயிக் அமிலம் |
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| Jmol-3D images | Image 1 |
| பண்புகள் | |
| Molecular formula | C9H11NO3 |
| Molar mass | 181.19 g mol-1 |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
டைரோசின் (Tyrosine) [குறுக்கம்: Tyr (அ) Y][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C9H11NO3. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். டைரோசின் சாதாரணமாக, நாம் உட்கொள்ளும் புரதங்களில் உள்ள பினைல்அலனின் என்னும் அத்தியாவசிய அமினோ அமிலத்திலிருந்து மாற்றப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: UAC மற்றும் UAU. நீர்தவிர்க்கும் டைரோசின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையுள்ள அமினோ அமிலமாகும். டைரோசின் என்ற சொல் கிரேக்க மொழியில் உள்ள "டைரி" (பொருள்: பாலாடைக்கட்டி) என்னும் சொல்லில் இருந்து தோன்றியது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.