கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அல்போன்சா (ஆங்கிலம்Saint Alphonsa Muttathupadathu, (மலையாளம்: അല്ഫോണ്സാ മുട്ടത്തുപാടത്ത്; 19 ஆகஸ்ட் 1910 – 28 ஜூலை 1946) என்பவர் இந்தியாவின் முதல் புனிதர் ஆவார்.
பிறப்பும் வளர்ப்பும் [தொகு]
அக்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த குடமலூர் எனும் ஊரில் (தற்போதைய கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில்) 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் நாள் ஜோசஃப் மற்றும் மேரி இணையருக்கு மகளாய்ப் பிறந்தார். பெற்றோர் இவருக்குப் புனித அன்னாவின் நினைவாக அன்னக்குட்டி என்றுப் பெயரிட்டனர்.
அன்னா இளம் வயதில் விளையாடினாரோ இல்லையோ விதி அவர் வாழ்வில் விளையாடத் தவறவில்லை. அன்னாவின் இளம் வயதிலேயே அவரின் தாயார் இறந்து விட்டார். தாயில்லாக் குழந்தையான அன்னாவை அவரின் அத்தை தான் வளர்த்தெடுத்தார்.பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர்தான் அவரை படிக்க வைத்தார்.
வாழ்வைப் பாதித்த விபத்து [தொகு]
1923 ஆம் ஆண்டு எரியும் நெருப்புக் குழிக்குள் தவறி விழுந்த அன்னாவின் பாதங்கள் கருகின. இவ்விபத்து வாழ்நாள் முழுமைக்கும் இவரை இயலாமையில் ஆழ்த்தியது.பட்ட காலிலே படும் என்பதைப் போல இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன. கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு சோதனையையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
அன்னா அல்ஃபோன்சாவாக மாறியது [தொகு]
தன் வாழ்வை கிறித்துவுக்காக அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1928 ஆம் ஆண்டில் அல்ஃபோன்சா எனும் பெயரைத் தாங்கி கன்னியாஸ்திரீயாக மாறினார். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதித்தார். எனினும் உடல்நலக்குறைவால் இவரால் ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்ய முடியவில்லை.
இயற்கை எய்தல் [தொகு]
கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி மேலும் பலவீனமடைந்து படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35-வதில் 1946 ம் ஆண்டு சூலை 28ம் நாள் கன்னியாத்திரி அல்போன்சா மரணம் அடைந்தார்.
நல்அடக்கம் [தொகு]
இவரது உடல் பரனாங்கானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றளவும் இந்த இடம் நம்பிக்கை உள்ளம் கொண்ட பக்தர்கள் பலர் வந்து செல்லும் புனிதத் தலமாய் விளங்குகிறது. இங்கு வரும் பலர் அன்னை அல்ஃபோன்சா தங்கள் வாழ்வில் அதிசயங்களை ஏற்படுத்திய விதத்தைக் கூறுகின்றனர். இவ்வாறாக 1999 இல் ஒரு பச்சிளங்குழந்தையின் வளைந்த பாதங்கள் (club foot) குணப்படுத்தப்பட்டதாய்க் கூறப்படும் நிகழ்வே அல்ஃபோன்சா அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்குதற்கு காரணமாய் அமைந்தது.
புனிதர் பட்டம் வழங்கப்படல் [தொகு]
புனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985-ம் ஆண்டு அப்போதையை போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார்.அருளாளர் பட்டத்தை தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் அறிவித்தார். இதன்படி அக்டோபர் மாதம் 12ஆம் தியதி 2008ஆம் வருடம் அருளாளர் அல்போன்சாவிர்க்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். புனிதர் பட்டத்திற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டு கால் நூற்றாண்டு (25 ஆண்டுகள்) கழிந்த பின்னர் அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது குறிக்கத்தக்கது.
அரசாங்க கவுரவம் [தொகு]
- கேரள அரசு அல்போன்சாவின் சமாதி இருக்கும் பரணஞானத்திற்குச் செல்லும் சாலையை 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது.
- புனித அல்போன்சாவை கௌரவிக்கும் படியாக இந்தியஅரசு 19 ஜூலை 1996ஆம் வருடம் அவருடைய தபால் தலையை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விருந்து [தொகு]
புனித அல்ஃபோன்சாவின் நல்லடக்கத்தலம்
ஒவ்வோராண்டும் சூலை 19 முதல் 28 தேதிகளில் அன்னை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடக்கும் விருந்துக்கு ஆயிரக் கணக்கான மக்கள் அன்னையின் அருளாசி பெறும் பொருட்டுக் கூடுகிறார்கள்.
வெளியிணைப்புகள் [தொகு]
|
கத்தோலிக்க புனிதர்கள் அகர வரிசை (வழிபாட்டு ஆண்டு விழா முறைப்படி) |
|
அக்கிலேயு, நெரேயு · அக்குவினோ நகர் தோமா · அகஸ்டின் ஜாவோ ரோங்கு · அகுஸ்தீன் · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · அங்கேரி எலிசபெத்து · அங்கேரி ஸ்தேவான் · அசிசி நகர் பிரான்சிஸ் · அடால்பெர்ட் · அத்தனாசியு · அந்தியோக்கு நகர் இஞ்ஞாசி · அந்திரேயா · அந்தோணியார் (பதுவா நகர்) · அந்தோணி மரிய கிளாரெட் · அந்தோனி மரிய செக்கரியா · அப்போலினாரிஸ் · அம்புரோஸ் · அரசியான தூய கன்னி மரியா · அருளானந்தர் (ஜான் தெ பிரிட்டோ) · அல்போன்ஸ் மரிய லிகோரி · அல்போன்சா முட்டாத்துப்பாடாத் · அலக்கோக்கு மார்கரீத் மரியா · அலெக்சாந்திரியா நகர் கேத்தரின் · அலெக்சாந்திரியா நகர சிரில் · அலோசியுஸ் கொன்சாகா · அவிலா நகர் இயேசுவின் தெரேசா · அன்னா, சுவக்கீம் (தூய மரியாவின் பெற்றோர்) · அன்னை தெரேசா · ஆகத்தா · ஆக்னெஸ் · ஆஞ்சலா மெரிசி · ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · ஆண்டவரின் தோற்றமாற்றம் · அன்னை (கன்னி மரியாவின் பிறப்பு) · ஆல்பர்ட் (பெரிய) · ஆன்சலம் · ஆன்ஸ்காரியு · ஆன்ரூ கிம் தே கோன் · ஆன்ரு டுங் லாக் · இசிதோர் · இஞ்ஞாசி (லொயோலா) · இப்போலித்து; போன்சியானு · இயேசுவின் (அவிலா நகர்) தெரேசா · இயேசுவின் திருப்பெயர் · இரண்டாம் சிக்ஸ்து · இரபேல்; கபிரியேல்; மிக்கேல் ·இரனேயு · இரேய்முந்து பெனாப்போர்த்து · இலாரியார் · இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு · இறை யோவான் · இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் · ஈசாக்கு ஜோகு; ஜான் பிரபூபு · உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர் · எட்விஜ் · எபிரேம் · எமிலியன் எரோணிமுசு · எருசலேம் நகர் சிரில் · எரோணிமுசு · எரோணிமுசு எமிலியன் · எலிசபெத்து (அங்கேரி) · எலிசபெத்து (போர்த்துகல் · எலியாஸ் சவாரா குரியாக்கோஸ் · என்றி · ஏழாம் கிரகோரி · ஐந்தாம் பயஸ் · கசிமீர் · கபிரியேல், மிக்கேல், இரபேல் · கப்பெஸ்தரானோ நகர் யோவான் · கமில்லஸ் தெ லெல்லிஸ் · கயத்தான் · கலசான்ஸ் நகர் யோசேப்பு · கலிஸ்து (முதலாம்) · கனீசியு பீட்டர் · காசியா சபை ரீத்தா · கார்மேல் அன்னை · காவல் தூதர்கள் (தூய) · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · கான்டி நகர் யோவான் · கிம் தே கோன், ஆன்ரூ · கிரகோரியார்; நசியான்சன்; பெரிய பசிலியார் · கிரகோரி (பெரிய) · கிரகோரி (ஏழாம்) · கிளமெண்ட் (முதலாம்) · கிளாரா ·கிளாவர் பீட்டர் · யோவான் கிறிசோஸ்தோம் · கிறிசோலோகு பீட்டர் · கிறிஸ்டோபர் மெகாலன் · கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு · குரியாக்கோஸ் எலியாஸ் சவாரா · குழந்தை இயேசுவின் தெரேசா · கேத்தரின் (அலெக்சாந்திரியா நகர்) · கேத்தரின் (சியென்னா நகர்) · கொர்னேலியு; சிப்பிரியான் · மரியா கொரெற்றி · கொலும்பன் · கொன்சாகா அலோசியுஸ் · கொன்சாலோ கார்சியா · கோஸ்மாஸ்; தமியான் · சலேசியார் பிரான்சிஸ் · சவேரியார் பிரான்சிஸ் · சனுவாரியுசு · சாந்தால் நகர் ஜான் பிரான்சிஸ்கா · சார்லஸ் பொரோமியோ · சார்லஸ் லுவாங்கா · சார்பெல் மாக்லுப் · சானல் பியர் · சிக்மரிங்கன் நகர் பிதேலிஸ் · சிக்ஸ்து (இரண்டாம்) · சிப்பிரியான் · சியென்னா நகர் கேத்தரின் · சியன்னா நகர் பெர்னார்தீன் · சிராமெல் மரிய தெரேசா · அலெக்சாந்திரியா நகர சிரில் · சிரில் (எருசலேம் நகர்) · சிரில்; மெத்தோடியு · சில்வெஸ்தர் (முதலாம்) · சிலுவையின் பவுல் · சிலுவையின் யோவான் · சீமோன்; யூதா · சுவக்கீம்; அன்னா · செசிலியா · செபஸ்தியார் · செபமாலை அன்னை · சோங் காசாங் பவுல் · ஜஸ்டின் · ஜார்ஜ் · ஜாவோ ரோங்கு அகஸ்டின் · ஜான் தெ பிரிட்டோ · ஜான் பாப்டிஸ்ட் (லசால் நகர்) · ஜான் பிரபூபு; ஈசாக்கு ஜோகு · ஜான் பிரான்சிஸ்கா (சாந்தால் நகர்) · ஜான் பிசர்; தாமஸ் மூர் · ஜான் போஸ்கோ · ஜான் மரிய வியான்னி · ஜான் யூட்ஸ் · ஜூலியன் எய்மார்ட் பீட்டர் · ஜெர்த்ரூது · யோசப் வாசு · ஜோஸ்பீன் பக்கீத்தா · ஸ்காட்லாந்து மார்கரீத் · ஸ்கொலாஸ்திக்கா · ஸ்தேவான் · டுங் லாக் ஆன்ரூ · தமசுஸ் (முதலாம்) · தமசேன் யோவான் · தமியான்; கோஸ்மாஸ் · தமியான் பீட்டர் · தனிஸ்லாஸ் · தாமஸ் பெக்கட் · தாமஸ் மூர்; ஜான் பிசர் · திமொத்தேயு; தீத்து · திருச்சிலுவையின் தெரேசா பெனடிக்டா · திருச்சிலுவையின் மகிமை · திருமுழுக்கு யோவானின் பிறப்பு · திருமுழுக்கு யோவானின் பாடுகள் · தியோனிசியு · தீத்து; திமொத்தேயு · துரீபியு மாங்ரோவேகோ · தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் · தூய கன்னி மரியா அரசி · தூய கன்னி மரியா இறைவனின் தாய் · தூய கன்னி மரி ஊழியர் சபை நிறுவிய புனிதர் எழுவர் · தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் · தூய கன்னி மரியாவின் கணவர் யோசேப்பு · தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · தூய கன்னி மரி பிறப்பு (ஆரோக்கிய அன்னை) · தூய கன்னி மரியாவின் பெற்றோர் சுவக்கீம், அன்னா · தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை) · தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு · தூய கார்மேல் அன்னை · தூய காவல் தூதர்கள் · தூய செபமாலை அன்னை · தூய பாத்திமா அன்னை · தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) · தூய லூர்து அன்னை · தூர் நகர் மார்ட்டின் · தெ பால் வின்சென்ட் · தெ பிரிட்டோ ஜான் (அருளானந்தர்) · தெ போரஸ் மார்ட்டின் · தெ லெல்லிஸ் கமில்லஸ் · தெரசா (அன்னை) · தெரேசா (இயேசுவின்) (அவிலா நகர்) · தெரேசா (குழந்தை இயேசுவின்) · தெரேசா பெனடிக்டா (திருச்சிலுவையின்) · தொழிலாளர் யோசேப்பு · தோமா · தோமா (அக்குவீனோ நகர்) · தோமினிக் · தோமினிக் சாவியோ · நசியான்சன் கிரகோரியார்; பெரிய பசிலியார் · நார்பெர்ட் · நிக்கோலாஸ் · நெரேயு; அக்கிலேயு · நேரி பிலிப்பு · நோலா பவுலீனு · பக்கீத்தா ஜோஸ்பீன் · பங்கிராஸ் · பசிலியார் (பெரிய); நசியான்சன் கிரகோரியார் · பத்தாம் பயஸ் · பதுவா நகர் அந்தோணியார் · பபியான் · பயஸ் (ஐந்தாம்) · பயஸ் (பத்தாம்) · பர்த்தலமேயு · பர்னபா · பவுல் (சிலுவையின்) · பவுல் சோங் காசாங் · பவுல்; பேதுரு · பவுல், பேதுரு பேராலயங்களின் நேர்ந்தளிப்பு · பவுல் மனமாற்றம் · பவுல் மீகி · பவுலீனு நோலா · பவோலா பிரான்சிஸ் · பனிமய அன்னை (தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு · பாசி நகர் மகதலா மரியா · பாத்திமா அன்னை (தூய) · பிசர் ஜான்; தாமஸ் மூர் · பிதேலிஸ் (சிக்மரிங்கன் நகர்) · பியர் சானல் · பிரான்சிஸ்கா (உரோமை நகர்) · பிரான்சிஸ் (அசிசி நகர்) · பிரான்சிஸ் சலேசியார் · பிரான்சிஸ் சவேரியார் · பிரான்சிஸ் பவோலா · பிரிசித்தா · பிரிந்திசி நகர் லாரன்ஸ் · பிலிப்பு நேரி · பிலிப்பு; யாக்கோபு · பிளாசியு · பீட்டர் கனீசியு · பீட்டர் கிறிசோலகு · பீட்டர் கிளாவர் · பீட்டர் ஜூலியன் எய்மார்ட் · பீட்டர் தமியான் · பீட்டர் மார்சலின் · பீடு (வணக்கத்துக்குரிய) · புரூனோ · புனிதர் அனைவர் · பெக்கட் தாமஸ் · பெர்நார்ட் · பெர்பெத்துவா; பெலிசித்தா · பெலிசித்தா; பெர்பெத்துவா · பெர்னார்தீன் (சியன்னா நகர்) · பெரர் வின்சென்ட் · பெரிய ஆல்பெர்ட் · பெரிய கிரகோரியார் · பெரிய லியோ · பெல்லார்மின் ராபர்ட் · பெனடிக்ட் · பெனடிக்டா தெரேசா (திருச்சிலுவையின்) · பெனாப்போர்த்து இரேய்முந்து · பேட்ரிக் · பேதுருவின் தலைமைப் பீடம் · பேதுரு; பவுல் · பொரோமியோ சார்லஸ் · பொலிக்கார்ப்பு · பொனவெந்தூர் · போஸ்கோ ஜான் · போன்சியானு; இப்போலித்து · போனிப்பாஸ் · மகதலா மரியா · மகதலா மரியா (பாசி நகர்) · மத்தியா · மத்தேயு · மரிய கிளாரெட் அந்தோணி · மரியா கொரெற்றி · மரிய கோல்பே மாக்சிமிலியன் · மரிய செக்கரியா · மரிய தெரேசா சிராமெல் · மரிய லிகோரி அல்போன்ஸ் · மரிய வியான்னி ஜான் · மரியா மகதலா · மரியா மகதலா (பாசி நகர்) · மரியாவின் திருப்பெயர் · மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · மாக்சிமிலியன் மரிய கோல்பே · மாக்லுப் சார்பெல் · மாங்ரோவேகோ துரீபியு · மாசில்லாக் குழந்தைகள் · மார்கரீத் மரியா அலக்கோக்கு · மார்சலின் பீட்டர் · மார்ட்டின் தெ போரஸ் · மார்ட்டின் (தூர் நகர்) · மார்ட்டின் (முதலாம்) · மார்த்தா · மாற்கு · மான்போர்ட் நகர் லூயி மரிய கிரிஞ்ஞோ · மிக்கேல், கபிரியேல், ரபேல் (அதிதூதர்கள்) · மீகி பவுல் · முட்டாத்துபாடாத் அல்போன்சா · முதலாம் கலிஸ்து · முதலாம் சில்வெஸ்தர் · முதலாம் கிளமெண்ட் · முதலாம் தமசுஸ் · முதல் மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · முதலாம் மார்ட்டின் · மெகாலன் கிறிஸ்டோபர் · மெத்தோடியு; சிரில் · மெரிசி ஆஞ்சலா · மோனிக்கா · யாக்கோபு · யாக்கோபு; பிலிப்பு · யுசேபியு (வெர்செல்லி நகர் · யூட்ஸ் ஜான் · யூதா; சீமோன் · யோசபாத்து · யோசேப்பு (கலசான்ஸ் நகர்) · யோசேப்பு (தூய கன்னி மரியாவின் கணவர்) · யோசேப்பு (தொழிலாளர்) · யோவான் · யோவான் (இறை) · யோவான் (கப்பெஸ்த்தரானோ நகர்) · யோவான் (கான்டி நகர்) · யோவான் கிறிசோஸ்தோம் · யோவான் (சிலுவையின்) · யோவான் தமசேன் · யோவான் (முதலாம்) · யோவான் லெயோனார்ட் · யோவானின் (திருமுழுக்கு) பிறப்பு · யோவானின் (திருமுழுக்கு) பாடுகள் · ரபேல், மிக்கேல், கபிரியேல் (அதிதூதர்கள்) · ராபர்ட் பெல்லார்மின் · ரீத்தா (காசியா சபை) · ருய்ஸ் லாரன்ஸ் · ரோசா (லீமா நகர்) · ரோமுவால்து · லசால் நகர் ஜான் பாப்டிஸ்ட் · லாரன்ஸ் · லாரன்ஸ் (பிரிந்திசி நகர்) · லாரன்ஸ் ருய்ஸ் · லீமா நகர் ரோசா · லுஸ்தானியா நகர் எலிசபெத்து · லுவாங்கா சார்லஸ் · லூக்கா · லூசியா · லூயி · லூயி மரிய கிரிஞ்ஞோ (மான்போர்ட் நகர் · லூர்து அன்னை (தூய) · லெயோ (பெரிய) · லெயோனார்ட் யோவான் · லொயோலா இஞ்ஞாசி · புனித வனத்து அந்தோனியார் · வணக்கத்துக்குரிய பீடு · யோசப் வாசு · வியாகுல அன்னை (தூய மரியாவின் துயரங்கள் · வியான்னி மரிய ஜான் · வின்சென்ட் · வின்சென்ட் தெ பால் · வின்சென்ட் பெரர் · வெர்செல்லி நகர் யுசேபியு · வென்செஸ்லாஸ் ·
|
|