அகலிகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகலிகை கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினி ஆவார். அகலிகை (அகல்யை) என்ற பெயர் களங்கமற்றவள் என்று போருல்படக்கூடியது. இவர் பிரம்ம தேவரின் மானசீக மகளாவர். புராணங்களின் படி உலகை முதலில் சுற்றிவருபவர்க்கு தன் மகளை மணமுடித்து தருவதாக பிரம்மா கூறியதாகவும், அதன்படி கௌதமர் ஒரு பசுவை வலம் வந்து அகலிகையை மணந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்திரனின் மாயவலையில் சிக்கி, கௌதமரின் சாபத்தால் இவர் கல்லாக சில காலம் இருந்தார். பின்பு இராமனின் பாதம் பட்டு இவர் சாபவிமோசனம் பெற்றார் என்பர்.