இலட்சுமணன் கோடு
இலசுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி இவ்வாறு இடம் பெறுகிறது: அதாவது சீதை ஆசை பட்டு கேட்ட புள்ளி மானை துரத்தி கொண்டு வெகு தூரம் சென்ற ராமரின் குரல் போல ஓர் குரல் கேட்டதும், லக்ஷ்மணனை அவ்விடத்திற்கு சென்று பார்த்து வருமாறு சீதை அனுப்புகிறாள். ஆனால் லக்ஷ்மணன் அது ராமரின் குரல் இல்லை என்று எவ்வளவு கூறியும், அதைக் கேட்காமல் சீதை அவனை கடிந்து பேசுகிறாள், அதனால் ராமனை தேடி புறப்பட ஆயத்தமான லக்ஷ்மணன், தன்னுடைய வில்லின் நுனியினால், தரையில் மூன்று கோடுகளைக் கிழித்து, “எக் காரணம் கொண்டும் இவற்றை தாண்ட வேண்டாம்” என்று சீதையிடம் கூறிச் செல்கிறான். ராவணன் சந்நியாசி வேடத்தில் வந்த போது, அவனுக்கு பிட்சை இட சீதை அந்த கோட்டை தாண்டிய போதுதான், ராவணனால் கவரபட்டாள் என்று ஆனந்த ராமாயணம் கூறுகிறது. வால்மிகி, கம்பர், துளசிதாசர் ஆகிய மூவரில் ஒருவர் கூட இது பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனந்த ராமாயணத்தில்தான் லக்ஷ்மணன் கோடு கிழித்த நிகழ்ச்சி இவ்வாறு இடம் பெறுகிறது.