சரயு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சரயு
சரயு நதி
சரயு நதி
மூலம் இமயமலை
வாயில் கங்கை ஆற்றின் கிளை
நீளம் 350 கிமீ
ஏற்றம் 4150 மீ
வடிநிலப்பரப்பு கிழக்கு கூமோன் (நேபாளம்)

சரயு (Sarayu; தேவநாகரி: सरयु) என்பது இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாற்றைப் பற்றி பண்டைய வேதம், மற்றும் இராமாயணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் பகராயிச் மாவட்டத்தில் கர்னாலி (ககாரா), சாரதா (மகாகாளி) ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகிறது. சாரதா நதி இந்திய-நேபாள எல்லையை உருவாக்குகிறது. அயோத்தி நகரம் சரயு ஆற்றுக் கரையில் அமைந்துள்ளது.[1]

இராமரின் பிறந்த நாளான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கிக் குளிக்கிறார்கள்.[2] இராமர் இந்த உலக வாழ்வை முடித்து கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Plate 30: India, Plains : Nepal : Mt. Everest". The Times Atlas of the World (seventh ed.). Edinburgh: John Bartholomew & Sons, Ltd. and Times Books, Ltd.. ISBN 978-0-8129-1298-2. 
  2. At Ayodhya, Ram Navami celebrated amid religious harmony இந்தியன் எக்சுபிரசு, ஏப்ரல் 15, 2008.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சரயு&oldid=1651156" இருந்து மீள்விக்கப்பட்டது