லீ டி பாரெசுட்
லீ டி பாரெஸ்ட் Lee de Forest | |
---|---|
1904 இல் லீ டி பாரெஸ்ட் | |
பிறப்பு | அயோவா, ஐக்கிய அமெரிக்கா | ஆகத்து 26, 1873
இறப்பு | சூன் 30, 1961 ஹாலிவுட், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 87)
படித்த கல்வி நிறுவனங்கள் | யேல் கல்லூரி |
பணி | கண்டுபிடிப்பாளர் |
அறியப்படுவது | மூன்று-மின்முனை வெற்றிடக் குழாய் (ஆடியோன்), படத்தில் ஒலிப்பதிவு (போனோஃபில்ம்)[1] |
விருதுகள் | ஐஇஇஇ கௌரவப் பதக்கம் (1922) எலியட் கிரெசன் பதக்கம் (1923) ஐஇஇஇ எடிசன் பதக்கம் (1946) |
லீ டி பாரெசுட் (Lee de Forest, 26 ஆகத்து 1873 – 30 சூன் 1961) என்பவர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், மின்னணுவியலின் முக்கியமான தொடக்க முன்னோடியும் ஆவார். மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும் முதல் மின்னணுக் கருவியை இவர் கண்டுபிடித்தார்; 1906 இல் மூன்று-உறுப்பு "ஆடியன்" மும்முனைய வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.[2][3][4] இதன் மூலம் மின்னணு யுகம் தொடங்கி, மின்னணு பெருக்கி, அலையியற்றி ஆகியவற்றின் வளர்ச்சியை செயல்படுத்தியது. இவை வானொலி ஒலிபரப்பு,[5] தொலைதூர தொலைபேசி இணைப்புகளை சாத்தியமாக்கியது, அத்துடன் எண்ணற்ற பிற பயன்பாடுகளில் பேசும் இயக்கப் படங்களை உருவாக்க வழிவகுத்தது.[6][7][8]
இவர் ஒரு கொந்தளிப்பான வாழ்வுப் பணியுடன், உலகளவில் 300 இற்கும் அதிகமான காப்புரிமைகளை வைத்திருந்தார். இவர் நான்கு நல்வாய்ப்புகளை சம்பாதித்ததாகவும், பின்னர் அவற்றை இழந்ததாகவும் பெருமையாக கூறுவார். இவர் பல முக்கிய காப்புரிமை வழக்குகளிலும் ஈடுபட்டார்,[9] தனது வரும்படியில் கணிசமான அளவை வழக்குகளுகாகச் செலவிட்டார்,[10] அஞ்சல் மோசடிக்காக விசாரணை செய்யப்பட்டார்.
இருந்தபோதிலும், 1922 இல் ஐஇஇஇ கௌரவப் பதக்கம்,[11] 1923 இல் பிராங்கிளின் கல்விக் கழகத்தின் எலியட் கிரெசன் பதக்கம், 1946 இல் ஐஇஇஇ எடிசன் பதக்கம் ஆகிய விருதுகளுடன் அவரது முன்னோடிப் பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "March 12, 1923: Talkies Talk... On Their Own" by Randy Alfred, Wired, March 12, 2008. (wired.com)
- ↑ US 841387, De Forest, Lee, "Device for Amplifying Feeble Electrical Currents", published 1907-01-15
- ↑ "What Everyone Should Know About Radio History: Part II" by J. H. Morecroft, Radio Broadcast, August 1922, p. 299: "[De Forest] took out a patent in 1905 on a bulb having two hot filaments connected in a peculiar manner, the intended functioning of which is not at all apparent to one comprehending the radio art."
- ↑ "The Audion; A Third Form of the Gas Detector" by John L. Hogan, Jr., Modern Electrics, October 1908, p. 233.
- ↑ "Election Returns Flashed by Radio to 7,000 Amateurs", The Electrical Experimenter, January 1917, p. 650. (archive.org)
- ↑ "De Forest—Father of Radio" by Hugo Gernsback, Radio-Craft, January 1947, p. 17.
- ↑ "Lee de Forest: American inventor" by Raymond E. Fielding (britannica.com)
- ↑ "De Forest Forecasts Boom in Use of Television" (AP), Washington (D.C.) Evening Star, April 7, 1943, p. B-11.
- ↑ Tyne, Gerald E. J. (1977). Saga of the Vacuum Tube. Indianapolis, IN: Howard W. Sams & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-672-21471-7. pp. 119 and 162.
- ↑ Armstrong, Edwin H. "Edwin Armstrong: Pioneer of the Airwaves". Living Legacies. Columbia University. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
- ↑ "IRE Medal of Honor Recipients 1917–1963" (ethw.org)
வெளி இணைப்புகள்
[தொகு]- Lee de Forest, American Inventor (leedeforest.com)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லீ டி பாரெசுட்
- Lee de Forest biography (ethw.org)
- Lee de Forest biography at National Inventors Hall of Fame
- யூடியூபில் A Few Moments with Eddie Cantor (1923) (De Forest Phonofilm Sound Movie)
- "Who said Lee de Forest was the 'Father of Radio'?" by Stephen Greene, Mass Comm Review, February 1991.
- "Practical Pointers on the Audion" by A. B. Cole, Sales Manager – De Forest Radio Tel. & Tel. Co., QST, March 1916, pp. 41–44. (wikisource.org)
- "A History of the Regeneration Circuit: From Invention to Patent Litigation" by Sungook Hong, Seoul National University (PDF)
- "De Forest Phonofilm Co. Inc. on White House grounds" (1924) (shorpy.com)
- Guide to the Lee De Forest Papers 1902–1953 at the University of Chicago Special Collections Research Center