உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்லி டெம்பிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிர்லி டெம்பிள் பிளாக் ( Shirley Temple Blackஏப்ரல் 23, 1928   - பிப்ரவரி 10, 2014) ஓர் அமெரிக்க நடிகை, பாடகி, நடனக் கலைஞர், தொழிலதிபர் மற்றும் இராஜதந்திரி ஆவார். இவர் 1935 ஆம் ஆண்டு முதல் 1938 வரை  ஹாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னாளில் இவர் கானா மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவிற்கான அமெரிக்க  தூதராக இருந்தார். மேலும் அமெரிக்காவின் நெறிமுறைகளின் தலைவராகவும் பணியாற்றினார்.

1932 டெம்பிள் தனது மூன்று வயதில்  டெம்பிள் தனது திரைப்பட வாழ்க்கையை துவங்க்கினார்.. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,பிரைட் ஐஸ் என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் சர்வதேச  அளவில் புகழ் பெற்றார். 1934 ஆம் ஆண்டில்  அசைவு திரைப்திரைசிறப்பான முறையில் பங்களிப்பு செய்ததற்காக பிப்ரவரி 1935 இல் அவர் ஒரு சிறப்பு அகாதமியின் சிறார் விருது பெற்றார்.

1930ஆம் ஆண்டுகளில் இவர் கர்லி டாப்  மற்றும் ஹெய்டி போன்ற திரைப்படங்களில் நடித்தார் .அந்த திரைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரங்கள் பொம்மைகள், உணவுகள் மற்றும் உடைகள் போன்ற வணிக  விற்பனை செய்யும் அளவிற்கு பரவலானது. அதன் பிறகான திரைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. அவர் 3 முதல் 10 வயது வரை சுமார் 29 திரைப்படங்களில் நடித்தார்.ஆனால் 14 முதல் 21 வயது வரையிலான  காலகட்டங்களில் 14 திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். [1][2]டெம்பிள் 1950 இல் தனது 22 வயதில் திரைப்படத்தில்   நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார்.[3][4]

1958 ஆம் ஆண்டில், தொலைக் காட்சிகளில் நடிக்கத் துவங்கினார். அவர் 1960 களின் முற்பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராக தோன்றினார்.. தி வால்ட் டிஸ்னி கம்பெனி, டெல் மான்டே ஃபுட்ஸ் மற்றும் தேசிய வனவிலங்கு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின்  நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஷெர்லி டெம்பிள் ஏப்ரல் 23, 1928 இல் , கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில்,  பிறந்தார்.இவரின் தாய் கெர்ட்ரூட் டெம்பிள்  ஓர் இல்லத்தரசி ஆவார். இவரின் தந்தை ஜார்ஜ்  வங்கி ஊழியர் ஆவார். இவரது பெற்றோருக்கு இவர் மூன்றாவது குழந்தை. இந்த குடும்பம் டச்சு, ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தது.[5][6] ஜான் மற்றும் ஜார்ஜ் எனும்  இரண்டு சகோதரர்கள் இருந்தனர்..[7][8][9] இவர்களது குடும்பம் லாஸ் ஏஞ்சல்ஸின் ப்ரெண்ட்வுட் நகருக்கு குடிபெயர்ந்தது.[10]


e Him Wrong, ts.

சான்றுகள்

[தொகு]
  1. Balio 227
  2. Windeler 26
  3. Balio 227
  4. Windeler 26
  5. Edwards 15, 17
  6. Windeler 16
  7. Windeler 16
  8. Edwards 15
  9. Burdick 3
  10. A look at the late Shirley Temple's very first home, Yahoo!. Retrieved 28 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்லி_டெம்பிள்&oldid=2894424" இலிருந்து மீள்விக்கப்பட்டது