சிட்னி லூமெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிட்னி ஆர்தர் லூமெட் (Sidney Arthur Lumet ஜூன் 25, 1924   - ஏப்ரல் 9, 2011) ஓர் அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். அகாதமி விருதுக்கு இவர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.12 ஆங்ரிமேன் , 1975 இல் வெளியான டாக் டே ஆஃப்டர்னூன் , 1976 இல் வெளியான நெட் ஒர்க் மற்றும் தெ வெர்டிக்ட் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டில் வெளியான பிரின்ஸ் ஆஃப் தெ சிட்டி திரைபப்டத்திற்காக சிறந்த தழுவலுக்கான திரைக்கதையாளர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.இருந்தபோதிலும் தனிநபருக்கான அகாதமி விருதினை இவர் வென்றதில்லை. ஆனால் கௌரவ அகாதமி விருதினைப் பெற்றுள்ளார். இவரது 14 திரைப்படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.நெட்ஒர்க் திரைப்படம் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு 4 விருதுகளை வென்றது.

தி என்சைக்ளோபீடியா ஆஃப் ஹாலிவுட் நவீன யுகத்தின் மிகச் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக இவர் விளங்குகிறார் எனத் தெரிவித்தது. 1957 இல் இவர் இயக்குநராக அறிமுகமானதிலிருந்து சராசரியாக ஆண்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். [1] திரைப்பட விமர்சகர் ரோஜர் ஈபர்ட் இவரை "அனைத்து திரைப்பட இயக்குநர்களில் மிகச் சிறந்த கலைத் திறன் கொண்டவர் மற்றும் மனிதநேயமிக்கவர் எனத் தெரிவித்துள்ளார். [2] லூமெட், நடிகரின் இயக்குநராகப் பரவலாக அறியப்பட்டார். இவர் பரவலாக அறியப்பட்ட பல நடிகர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.இவரது ஐந்து படங்களில் நடித்த சான் கானரி இவரை தனது விருப்பமான இயக்குநர்களில் ஒருவராகவும்,தொலை நோக்குப் பார்வை கொண்டிருந்தவராகவும் கருதினார். [3]

சுயசரிதை[தொகு]

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

லூமெட் பிலடெல்பியாவில் பிறந்தார் மற்றும் மன்ஹாட்டனின் லோயர் ஈஸ்ட் சைட் பகுதியில் வளர்ந்தார். [4] நியூயார்க்கின் புரஃபசனல் சில்ட்ரன்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நாடக நடிப்பைப் பயின்றார். [5] [6]

லுமெட்டின் பெற்றோர்களான பருச் மற்றும் யூஜீனியா (நீ வெர்மஸ்) லுமெட் இருவரும் இத்திஷ் நாடக அரங்கின் துறைத்தேர்ந்தோர் ஆவர். [7] இவர்கள் போலந்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய யூதர்கள் ஆவர். இவரது தந்தை, ஒரு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் வார்சாவில் பிறந்தார். [8] இவரின் தாய் நடனக் கலைஞராக இருந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே இவரின் தாய் இறந்தார்.இவர் தனது நான்கு வயதாக இருந்த போது வானொலியில் அறிமுகமானார் மற்றும் ஐந்தாவது வயதில் இத்திஷ் கலை அரங்கில் நாடக மேடையில் அறிமுகமானார். [9] ஒரு குழந்தையாக இருந்தபோது இவர் பல பிராடுவே நாடக அரங்கின் தயாரிப்புகளிலும் நடித்தார். 1935 இன் டெட் எண்ட் மற்றும் கர்ட் வெயிலின் தி எடர்னல் ரோடு உட்பட பல நாடகங்களில் நடித்தார். .

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

லூமெட் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தது. இவர் நடிகை ரீட்டா காமை 1949 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு 1955 ஆம் ஆண்டு வரை இணைந்து இருந்தார்.[10] 1956 ஆம் ஆண்டு முதல் 1963 வரை சமூகவாதியான குளோரியா வாண்டர்பில்ட்டுடன் இருந்தார். 1963 முதல் 1978 வரை கெயில் ஜோன்சுடனும் ( லீனா ஹார்னின் மகள்), மற்றும் 1980 முதல் இவர் இறக்கும் வரை மேரி பெய்லி கிம்பலுடன் இணைந்து வாழ்ந்தார்.2008 ஆம் ஆண்டு வெளியான ரேச்சல் கெட்டிங் மேரேட் திரைப்படத்திற்கும் திரைக்கதை எழுதினார் . [11] [12]

சான்றுகள்[தொகு]

 1. Siegel, Scott and Barbara. The Encyclopedia of Hollywood (2004) Checkmark Books, 256
 2. Ebert, Roger. "Sidney Lumet: In memory" Chicago Sun Times, April 9, 2011
 3. "Sidney Lumet", The Sunday Herald, Scotland, April 10, 2011
 4. Clark, John (2006-04-30). "New York City as Film Set: From Mean Streets to Clean Streets" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2006/04/30/movies/new-york-city-as-film-set-from-mean-streets-to-clean-streets.html. 
 5. "Obituary: Sidney Lumet". April 9, 2011. https://www.bbc.co.uk/news/entertainment-arts-13025261. 
 6. "Film Obituaries; Sidney Lumet". The Daily Telegraph. April 9, 2011. https://www.telegraph.co.uk/news/obituaries/culture-obituaries/film-obituaries/8440445/Sidney-Lumet.html. 
 7. French, Philip (April 10, 2011). "Sidney Lumet, giant of American cinema, dies at 86 | Film | The Observer". The Observer. https://www.theguardian.com/film/2011/apr/10/sidney-lumet-dies-aged-86. 
 8. "Finding Aid for the Baruch Lumet Papers, 1955-1983". Oac.cdlib.org. 2014-12-01. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.
 9. Honeycutt, Kirk (April 9, 2011). "Sidney Lumet Made New York City Star of His Films". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/sidney-lumet-made-new-york-176710. 
 10. ""TCM Biography"". Tcm.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.
 11. Katz, Ephraim. The Film Encyclopedia (1998) Harper Collins, 856
 12. Sidney Lumet biography பரணிடப்பட்டது ஆகத்து 14, 2006 at the வந்தவழி இயந்திரம் on AMCTV.com. Retrieved August 30, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_லூமெட்&oldid=2905645" இலிருந்து மீள்விக்கப்பட்டது