இசுப்பைக் லீ
Spike Lee ஸ்பைக் லீ | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() Spike Lee, 2007 | ||||||||||||||||||
இயற் பெயர் | ஷெல்டன் ஜாக்சன் லீ | |||||||||||||||||
பிறப்பு | மார்ச்சு 20, 1957 அட்லான்டா, ஜோர்ஜியா | |||||||||||||||||
நடிப்புக் காலம் | 1977 - இன்று | |||||||||||||||||
துணைவர் | டான்யா லூயிஸ் (1993-) | |||||||||||||||||
|
செல்டன் ஜாக்சன் "இசுப்பைக்" லீ (பிறப்பு மார்ச் 20, 1957) எமி மற்றும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும், எழுத்தாளரும் ஆவார். சமூகத்திலும் அரசியலிலும் சர்ச்சை கொண்ட தலைப்புகளை பற்றி திரைப்படங்களை படைத்ததிற்காக இவர் அறியப்படுகிறார். லீ நியூயோர்க் பல்கலைக்கழகத்திலும் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1983 முதல் இவரது தயாரிப்பு நிறுவனம் குறைந்தது 35 திரைப்படங்களைப் படைத்துள்ளது.
இன்சைடு மேன், ஹி காட் கேம், பாம்பூசில்ட், டூ த ரைட் திங் ஆகியன இவரது சில புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
பகுப்புகள்:
- நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்
- ஆபிரிக்க அமெரிக்க நடிகர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- 1957 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- சிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்