12 ஆங்ரி மென் (1957 திரைப்படம்)
12 ஆங்க்ரி மென் 12 Angry Men | |
---|---|
இயக்கம் | சிட்னி லூமட் |
தயாரிப்பு | என்றி ஃபொண்டா ரெஜினால்ட் ரோஸ் |
கதை | ரெஜினால்ட் ரோஸ் |
இசை | கென்யன் ஹாப்கின்ஸ் |
நடிப்பு | ஹென்றி பாஃன்டா, லீ ஜே காப், ஈ ஜி மார்ஷல், மார்டின் பால்சம், ஜேக் வார்டன், ஜான் பீட்லர், ஜேக் குளுக்மன், எட்வர்ட் பின்ஸ், ஜோசப் ஸ்வீனி, எட் பெக்லி, ஜார்ஜ் வாஸ்கோவெக், ராபர்ட் வெபர் |
ஒளிப்பதிவு | பொரிஸ் காஃப்மென் |
படத்தொகுப்பு | கார்ல் லெர்னர் |
விநியோகம் | யுனைட்டட் ஆர்ட்டிஸ்ட்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 4, 1957[1] |
ஓட்டம் | 96 நிமி. |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $350,000 |
12 ஆங்ரி மென் (12 கோபக்கார மனிதர்கள் - 12 Angry Men) 1957இல் வெளியிடப்பட்ட ஆங்கிலத் திரைப்படம். இது மிகவும் பாரட்டப்பட்ட, இன்றும் போற்றப்படும் ஒரு திரைப்படமாகும். தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு பின் திரைக்கு வந்த இந்தப்படம் முழுவதும் ஒரு சிறு அறையில் நடைபெறுவதாக இருக்கும்.[2][3]
கதைச்சுருக்கம்
[தொகு]கொலைக்குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட பதின்ம வயதுச் சிறுவனின் மீதான வழக்கின் பன்னிரண்டு (12) நடுவர்கள் (Jurors), வழக்கின் முடிவின், வழக்கின் மீதான தீர்ப்பளிக்க வழக்கின் நீதிபதி , அவர்களை பணிக்கும் காட்சியில் கதை தொடங்கும். நடுவர்கள் அறையில் (Juror's room), பன்னிரண்டு நடுவர்களும் கூடி இறுதித் தீர்ப்பு குறித்து முடிவெடுக்கத் துவங்குவதிலிருந்து, இறுதியாய் முடிவெடுப்பது வரை நடப்பதே இந்தப்படம்.
பன்னிரண்டு நடுவர்களும், ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் வரை தொடரும் அவர்களின் விவாதமே படத்தின் கரு. கூட்டு முடிவு அல்லது அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரே முடிவு என்னும் கருத்தில், இந்தப் படம் உண்மையான மக்களாட்சிக்கான அடிப்படைக் கருத்தை தெளிவாகக் காட்டும்.
நடுவர் எண் 8 ஆக நடிப்பவர், 1950களில் மிகவும் புகழ்பெற்ற நடிகரான ஹென்றி பாஃன்டா - இவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமாவார்.
மற்றெல்லா நடுவர்களும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை, குற்றவாளி என்று முடிவெடுக்கையில், நடுவர் 8 மட்டும் அந்தச் சிறுவனை குற்றவாளி என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுப்பார். மற்ற நடுவர்களின் கோபத்திற்கு இடையில், நடுவர் 8, நடந்த குற்றத்தையும் அது குறித்த விசாரணைகளையும் கலந்து ஆலோசிக்காமல், அந்தப் பதின்ம வயதுச் சிறுவனை குற்றவாளி என ஏற்க மறுப்பார். மற்ற நடுவர்களில் சிலர் தமது அவசர வேலைகள் காரணமாகவும், கலந்து பேசுவதற்கு தயங்கியும் அவசரமாக முடிவெடுக்க முனைவர். நடுவர் 8 அவற்றை மறுப்பதனால் வேறு வழியின்றி வழக்கு குறித்து கலந்து பேசத் துவங்குவர்.
அதில் துவங்கி, இறுதியாக, அனைத்து நடுவர்களும், ஒருங்கிணைந்து, அந்தச் சிறுவனை, குற்றமற்றவனென்று முடிவெடுப்பதும், பின் நடுவர்கள் அவர்களது நடுவர் பணியை முடித்து தமது பாதைகளில் பிரிவதுடன் படம் முடியும்.
படத்துக்கான வரவேற்பு
[தொகு]1957இல் படம் வெளியிடப்பட்டவுடன் மக்களிடையேயும் பத்திரிக்கைகளிலும் இந்தப்படம் மிகப்பெறும் வரவேற்பைப் பெற்றது. 2007இல், இந்தப் படம், அமெரிக்காவின் தேசிய படக் காப்பகத்தால் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் பாதுகாக்கப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்தப் படம் 'கலாச்சாரத்தின் படியும், வரலாற்றின்படியும் மற்றும் படைப்பு ஒருங்கிணைப்பிலும் சிறந்த திரைப்படமென்று' குறிக்கப்பட்டுள்ளது. இப்படம் ராட்டன் டொமேட்டோஸ் (Rotten Tomatoes) தளத்தின் விமர்சனம் மற்றும் வாசகர் ஏற்பில் 100% மதிப்பு பெற்றுள்ளது.
வேறு மொழிகளில் இந்தப் படம்:
[தொகு]- 1986இல், இயக்குநர் பாசு சாட்டர்ஜீ இந்தப் படத்தை இந்தியில் ஏக் ரூகா ஹுவா பைஸ்லா என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.
- 2007இல், ரஷியாவைச் சேர்ந்த நிகிதா மிகல்கோவ், 12 என்ற பெயரில் ரஷிய மொழியில் தயாரித்திருக்கிறார். அந்தப் படம் 64வது வெனிஸ் பட விழாவில் சிறப்புப் பரிசும் பெற்றிருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "12 Angry Men – Details". AFI Catalog of Feature Films. பார்க்கப்பட்ட நாள் July 8, 2018.
- ↑ "AFI's 10 Top 10 Courtroom Drama". American Film Institute. 2008-06-17. http://www.afi.com/10top10/category.aspx?cat=9. பார்த்த நாள்: 2014-11-29.
- ↑ "Top 100 Movies of All Time". அழுகிய தக்காளிகள். பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
வெளி இணைப்புகள்
[தொகு]