ஏஞ்சலா லேன்சுபரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேம்
ஏஞ்சலா லேன்ஸ்பியூரி
2013 இல் லேன்ஸ் பியூரி
பிறப்புஎஞ்சலா பிரிகித் லேன்ச்பியூரி
16 அக்டோபர் 1925 (1925-10-16) (அகவை 98)
ரீஜென்ட்ஸ் பார்க், இலண்டன், இங்கிலாந்து[1]
தேசியம்அமெரிக்கர், ஐரிஸ் [2] (multiple citizenship)
பணிநடிகை, எழுத்தாளர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1943–தற்போது வரை
பெற்றோர்எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு அரசியல்வாதி
மொயானா மக்கி நடிகை
வாழ்க்கைத்
துணை
ரிச்சர்டு கிராம் வெல் நடிகர்
(தி. 1945; திருமணமுறிவு 1946)

பீட்டர் ஷா (தயாரிப்பாளர்)
(தி. 1949; இற. 2003)
பிள்ளைகள்அந்தோணி பீட்டர் ஷா
அன் ஷா

டேம் ஏஞ்சலா பிரிஜித் லேன்ச்பியூரி (Dame Angela Brigid Lansbury (பிறப்பு அக்டோபர் 16, 1925) என்பவர் அமெரிக்க ஐக்கிய நாடு - அயர்லாந்து நடிகை ஆவார். இவர் திரைப்படம், தொலைக்காட்சி நாடகத் தொடர், நாடகத் திரைப்படம் போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளர் (திரைப்படம்), பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் ஏழு தசாப்தங்களாக நடித்துக்கொண்டிருந்தார். இவற்றில் பெரும்பான்மையானவை அமெரிக்கத் திரைப்படங்களாகும். இவரின் நடிப்பிற்காக சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தது.

இவர் மத்திய இலண்டனில் உள்ள ரீஜன்ட்ஸ் பார்க்கில் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு அரசியல்வாதி ஆவார். இவரின் தாய் மொயான மக்கில் அயர்லாந்தைச் சேர்ந்த நடிகை ஆவார். தி பிளிட்ஸ்சில் இருந்து தப்பிப்பதற்காக தனது தாய் மற்றும் இரு இளைய சகோதரர்களுடன் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். பின் நியூயார்க் நகரத்தில் நடிப்பு பயின்றார். 1942 ஆம் ஆண்டில் எம் ஜி எம் எனப்படும் மெட்ரோ- கோல்ட்வின்- மேயர் நிறுவனத்தின் கீழ் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். இவரின் முதல் திரைப்படம் 1944 ஆம் ஆண்டில் வெளியான கேஸ்லைட் ஆகு. பின் 1945 இல் தெ பிக்சர் ஆஃப் தெ தோரியன் கிரே திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகிய விருதுகளுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. எம் ஜி எம் நிறுவனத் தயாரிப்பில் பதினொரு திரைப்படங்களில் இவர் நடித்தார். இதில் பெரும்பான்மையனவை துணைக் கதாப்பாத்திரங்கள் ஆகும். இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டில் முடிவுற்றது. 1950களில் குறைந்தபட்ச நிதியில் தயாராகும் திரைப்படங்களின் (பி லிஸ்ட்) நட்சத்திர நாயகியாக இவர் விளங்கினார். 1962 இல் தெ மஞ்சூரியன் கேண்டிடேட் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.

ஏஞ்சலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவர் கலிபோர்னியாவில் இருந்து அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க்க்கிற்கு 1970 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தார். அதன் பின்பும் இவர் நாடகத் திரைப்படம் மற்றும் திரைப்படம் போன்றவற்றில் தொடர்ந்து நடித்தார். ஜிப்சி,சுவீனி டோட் மற்றும் தெ கிங் அன்ட் ஐ ஆகியவற்றில்முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பெட்னாப்ஸ் அண்ட் புரூம்ஸ்டிக்ஸ் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்ப்பட்திரத்தில் நடித்தார். 1971 ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பின்பும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் நடித்தார். புதின எழுத்தாளராக சர்வதேச அளவில் புகழ்பெற்றார். இவரும் ஜெஸ்ஸிகா பிளெட்சர் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த மர்டர் ஷீ ரோட் எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரானது 1984 முதல் 1996 ஆண்டு வரையில் 12 பருவங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவரை வெளியான தொலைக்காட்சி நாடகத் தொடர் வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஒளிபரப்பான குற்ற நாடகத் தொடர் எனும் சாதனை படைத்தது. 1991 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பியூட்டி அண்ட் பீஸ்ட் எனும் இயங்குபடத்தில் பின்னணிக் குரல் கொடுத்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Interview with Mark Lawson". BBC Radio 4. February 3, 2014. Archived from the original on September 8, 2016. "I want to make one thing clear: I was not born in Poplar, that's not true, I was born in Regent's Park, so I wasn't born in the East End, I wish I could say I had been. Certainly my antecedents were: my grandfather, my father." (mins 3–4)
  2. "Angela Lansbury: I find Ireland an extraordinarily warm place to live". Irish Post. January 24, 2014. Archived from the original on August 8, 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏஞ்சலா லேன்சுபரி

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலா_லேன்சுபரி&oldid=3586394" இலிருந்து மீள்விக்கப்பட்டது