தொலைக்காட்சி நாடகத் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு கதை, திரைவடிவம் பெற்றுத் தொடர்கதை போல, தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்போது அது தொலைக்காட்சி நாடகத் தொடர் (Soap Opera) என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைகளின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன. கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு, டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ், விகடன் டெலிவிஸ்டாஸ், சினி டைம்ஸ், ஹோம் மீடியா, யுடிவி, திரு பிக்சர்ஸ், அபிநயா கிரியேஷன்ஸ், விஷன் டைம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன.

இந்தியாவில்[தொகு]

சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, புதுயுகம் தொலைகாட்சி, ஜீ தமிழ், ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி போன்ற இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. ஹிந்தி தொடர்களை தமிழ் மொழி மாற்றம் செய்து விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், பாலிமர் டிவியில் ஒளிபரப்பி வருகின்றது.

இலங்கையில்[தொகு]

சக்தி தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, நேத்ரா தொலைக்காட்சி போன்ற இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழில் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன.

தமிழ் மொழியில்[தொகு]

ஏறத்தாழ அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களும் கதை அடிப்படையிலான தொடர்களை ஒளிபரப்புகின்றன. இசை மற்றும் செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் நிலையங்கள் மட்டுமே விதிவிலக்கு.
தமிழில் தொடராக வரும் கதை வகைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

தொலைகாட்சி கதைகள்[தொகு]

குடும்பக் கதை[தொகு]

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகி, இளவரசி,தெய்வமகள், வம்சம், வள்ளி, பொம்மலாட்டம், பாசமலர் மற்றும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி, ரெங்கவிலாஸ், அவள் அப்படித்தான், வைதேகி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த வீடு, தாயுமானவன் மற்றும் புதுயுகம் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் உணர்வுகள், அக்னிப்பறவை மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் உறவுகள் சங்கமம் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி பார்த்த ஞாபகம் இல்லையோ மற்றும் ஜீ தமிழ்ல் ஒளிபரப்பாகி வரும் மாமியார் தேவை போன்ற குடும்பக் கதைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

மர்மக் கதை[தொகு]

விடாது கறுப்பு, காலபைரவன், போன்ற மர்மத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

கடவுள் நம்பிக்கைக் கதை[தொகு]

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிவசங்கரி மற்றும் ஒளிபரப்பான அம்மன், சூலம், வேலன், நாகவல்லி, நாகம்மா போன்ற தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

புராணக் கதை[தொகு]

புதுயுகம் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயன்மார்கள் சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம், சிவம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இராமாயணம் போன்ற புராணத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

வரலாற்றுக் கதை[தொகு]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை, வீர சிவாஜி போன்ற வரலாற்றுத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

நகைச்சுவைக் கதை[தொகு]

புதுயுகம் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்காரம் தெரு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாமா மாப்பிளை, பொண்டாட்டி தேவை போன்ற நகைச்சுவைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

காதல் கதை[தொகு]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுக்கவிதை மற்றும் ஒளிபரப்பான அன்பே வா, காதலிக்க நேரமில்லை, இது ஒரு காதல் கதை போன்ற காதல்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

திகில் கதை[தொகு]

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி (தொலைக்காட்சித் தொடர்) போன்ற திகில்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

மொழி மாற்றம் செய்யப்பட்டவை[தொகு]

ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சாமி போட்ட முடிச்சு, உள்ளம் கொள்ளை போகுதடா மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த என் தங்கை, என் கணவன் என் தோழன், என் வாழ்க்கை, இது காதலா, நந்தவனம், உறவுகள் தொடர்கதை மற்றும் ஜீ தமிழ்ல் ஒளிபரப்பாகி வரும் காதலுக்கு சலாம் போன்ற மொழி மாற்றத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

விருதுகள்[தொகு]

சன் குடும்பம் விருதுகள், இந்திய டெலி விருதுகள், இந்திய டெலிவிஷன் அகாடமி விருதுகள், ஜீ ரிஷ்தே விருதுகள், ஜீ தங்க விருதுகள், புதிய திறமை விருதுகள், எவ். ஐ. சி. சி. ஐ. விருது, தி குளோபல் இந்திய ஃபிலிம் அண்ட் டெலிவிசன் ஹானர்ஸ், பிக் டெலிவிசன் விருதுகள் போன்றவற்றில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கும் அவற்றில் தமது திறமையை வெளிக்காட்டியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]