வலைத் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலைத் தொடர் (Web series) என்பது இணைய காணொளித் தொடர் ஆகும். பொதுவாக அத்தியாயங்கள் வடிவத்தில் இணையத்தில் வெளியிடப்படுகின்றது. மற்றும் வலைத் தொலைக்காட்சி ஊடகத்தின் ஒரு பகுதி ஆகும். இது 1990 களின் பிற்பகுதியில் தோன்றியது மற்றும் 2000 களின் முற்பகுதியில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஒரு வலைத் தொடரின் ஒரு ஒற்றை நிகழ்வை ஒரு அத்தியாயம் அல்லது "வெப்சோட்" என்று அழைக்கலாம், இருப்பினும் பிறகு அந்த சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.

மேசைக் கணினி, மடிக்கணினி, கைக் கணினி மற்றும் திறன்பேசி உள்ளிட்ட பல சாதனங்கல் மூலம் வலைத் தொடர்களைக் காணலாம். அவற்றை தொலைக்காட்சியிலும் பார்க்கலாம். 2013 ஆம் ஆண்டில் நெற்ஃபிளிக்சு என்ற இணையத் தளத்தில் வெளியான ஹவுஸ் ஒப் கார்ட்ஸ், அரெஸ்டடு டெவலப்மெண்ட், ஹீமலோக் குரோவ் போன்ற வலைத் தொடர்கள் 65வது பிரைம் டைம் எம்மி விருதுகளில் முதலாவது அசல் இணைய வலைத் தொலைக்காட்சி தொடருக்காக பரிந்துரை செய்யப்பட்டது.[1] 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி வலைத் தொடர்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகின்றது. அதன் படி எம்மி விருதுகள் மற்றும் கனடிய திரை விருதுகள் போன்ற பல விருதுகளுக்கின் கீழ் பல விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

2015 ஆம் ஆண்டு காலப் பிற் பகுதிக்கு பிறகு தான் தமிழ் மொழியில் வலைத் தொடர்கள் உருவாக்கப்பட்டது . தற்பொழுது தமிழ் வலைத் தொடர்கள் பெரும் வளர்ச்சியடையத் துவங்கியுள்ளது. நிலா நிலா ஓடி வா, ஆட்டோ சங்கர்,[2] அமெரிக்கா மாப்பிள்ளை, கள்ளச்சிரிப்பு,[3] மாயத்திரை,[4] குயின், வெல்ல ராஜா போன்ற பல வலைத் தொடர்கள் நெற்ஃபிளிக்சு, பிரைம் வீடியோ, ஜீ5, ஆல்ட் பாலாஜி, ஹாட் ஸ்டார் போன்ற பல இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைத்_தொடர்&oldid=3315895" இருந்து மீள்விக்கப்பட்டது