கைக் கணினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கைக் கணினி
Tablet.jpeg

கைக் கணினி (ஆங்கிலம்: Tablet Computer) என்பது ஒரு தொடுதிரை கொண்ட அட்டை வடிவிலான கணினி ஆகும். இதை வரைபட்டிகைக் கணினி என்றும் சொல்லலாம். இதன் உள்ளீடானது ஒரு விரல் நுனியாலோ அல்லது ஒரு எண்முறை பேனாவின் மூலமாகவோ தரப்படும். அவ்வாறு தரப்படும் அந்த உள்ளீடைத் தத்தல் என்று அழைப்பர்.[சான்று தேவை]

மலிவு விலைக் கைக் கணினி[தொகு]

35 டாலர்கள் மட்டுமே செலவாகும் படியான சாக்சாட் போன்ற முன்மாதிரிக் கைக் கணினிகள் மூலம் இந்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கூட அதன் மூலப் பொருள்களின் விலை 47 டாலர்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தை ஒரு கைக் கணினி திட்டம் (ஒரு.கு.ஒரு.கை.) 100 டாலர்கள் கைக் கணினியை அறிமுகம் செய்துள்ளது. நிகோழசு நெக்குரோபோண்டன், ஒரு.கு.ஒரு.த திட்ட தலைவர், இந்திய ஆய்வாளர்களை இவ்வகையான கைக் கணினிகளை கட்டமைக்க மதராசு தகவல் தொழில்நுட்பத்திற்கு அழைத்துள்ளார்.

இயக்கு தளம்[தொகு]

வழக்கமான கணினிகள் போன்ற தத்தல்கள் பல வகையான இயக்கு தளங்களில் இயங்கக் கூடும். பிரபலமானவை மைக்ரோசாப்டு விண்டோசு, ஆப்பிள் ஐஒயெசு, மற்றும் கூகிள் ஆண்டராயிடு. தயாரிப்பாளர்கள் விண்டோசு சிஇ, குரோம் ஒயெசு, மற்றும் லினக்சு பரவல்கள் போன்ற மேலும் சில இயக்கு தளங்களை சோதனை செய்து வருகிறார்கள்.

மைக்ரோசாப்டு[தொகு]

மைக்ரோசாப்டு நிறுவனம் விண்டோசைக் கைக் கணினிகளில் பயன்படுத்த வளர்த்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு மைக்ரோசாப்டு அறிவித்ததின் படி, கைக் கணினி என்பது கையெழுத்து மற்றும் வாய்ப்பேச்சு போன்றவற்றை அறியும் பேனா அடிப்படை கணினி ஆகும். அதன் வன்பொருட்கள் மடிக்கணினியைப் போன்றே இருக்கும் ஆனால் அதில் பேனா உள்ளீடு செய்வதற்கு சிலவற்றை சேர்க்கப் பட்டிருக்கும். பேனா உள்ளீடு கணினிக்களுக்காகவே, மைக்ரோசாப்டு நிறுவனம் தனியாக விண்டோசு எக்சு.பி டாப்லட் பிசி எடிசனை வெளியிட்டது.

முக்கிய வன்பொருள்[தொகு]

  • மையச் செயற்பகுதி : கைக் கணினியில் x86 or x86-64 கட்டமைப்பு மையச் செயற்பகுதிகளை பயன்படுத்துகின்றன.
  • தாய்ப்பலகை
  • தொடுதிரை
  • திண்மநிலை நினைவகம்
  • முடுக்கமானி
  • புளுடூத் இசைவாக்கி மற்றும் கம்பியற்ற பிணைய இசைவாக்கி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்_கணினி&oldid=2239412" இருந்து மீள்விக்கப்பட்டது