பிரதான நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dayparting in the United States.svg

பிரதான நேரம் அல்லது உச்ச நேரம் (Prime time) என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான மாலை நடுப்பகுதியில் நடக்கும் ஒளிபரப்பு நிரலாக்கத்தின் தொகுதி. பிரதான நேரம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரக் கால அளவைப் பொறுத்து அடிக்கடி வரையறுக்கப்படுகிறது - உதாரணமாக (அமெரிக்காவில்), 19:00 முதல் 22:00 வரை (மத்திய மற்றும் மலை நேரம்) அல்லது 20:00 முதல் 23:00 (கிழக்கு மற்றும் பசிபிக்) நேரம்).

இந்தியா[தொகு]

இந்திய தொலைக்காட்சியில் பிரதான நேரம் 20:00 மற்றும் 22:30 க்கு இடையே நிகழ்கிறது. பிரதான செய்தி நிகழ்ச்சிகள் 20:30 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றன, மேலும் அதிகபட்சமாக மதிப்பிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியானது 20:00 மணிக்கு அதற்கு முன்னதாக உள்ளது. பொதுவாக, பிரதான நேரங்களில் நிகழ்ச்சிகள் உள்நாட்டு நாடகங்கள் தான் ஒளிபரப்பப்படுகிறது. வார நாட்களில் பல்சுவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.[1]

பிரதான நேரத்த தொடர்களில் சன் தொலைக்காட்சி தொடர்கள் தான் முதலிடம். சித்தி, திருமதி செல்வம், கோலங்கள், தெய்வமகள், தென்றல் , நந்தினி, கண்மணி, சரவணன் மீனாட்சி, அழகு, செம்பருத்தி, நாயகி, யாரடி நீ மோகினி, வாணி ராணி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பல தொடர்கள் பிரதான நேர வெற்றித் தொடர்கள் ஆகும்.

சீனா[தொகு]

சீன தொலைக்காட்சியில் பிரதான நேரம் 19:00 முதல் 22:00 இடையே நிகழ்கிறது. இதை கோல்டன் டைம் என்றும் அழைக்கப்பார்கள். மற்றும் கோல்டன் வீக் என விடுமுறை நாட்களில் அழைக்கப்படுகிறது.

தென் கொரியா[தொகு]

தென் கொரியாவில் பிரதான நேரம் வழக்கமாக வாரத்தில் 20:00 முதல் 23:00 இடையே நிகழ்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இது 18:00 முதல் 23:00 வரை நிகழ்கிறது. குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 22:00 க்கு முன் ஒளிபரப்பப்படுகின்றது, மேலும் வயதுவந்தோர் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 22:00 க்குப் பிறகு ஒளிபரப்பப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prime Time on TV is not just from 7pm to 11pm, it's now all day, owing to the lockdown". timesofindia.indiatimes.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதான_நேரம்&oldid=2982151" இருந்து மீள்விக்கப்பட்டது