பீட்டர் ஓ டூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பீட்டர் ஓ'டூல்
Peter O'Toole -- LOA trailer.jpg
லாரன்ஸ் ஒப் அரேபியா திரைப்படத்திற்கான விளம்பரப் படத்தில்
பிறப்பு பீட்டர் ஜேம்சு ஓ'டூல்[1]
ஆகத்து 2, 1932(1932-08-02)
கன்னிமரா, கால்வே கவுன்ட்டி, அயர்லாந்து
அல்லது
லீட்சு, இங்கிலாந்து
இறப்பு 14 திசம்பர் 2013(2013-12-14) (அகவை 81)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம் ஐரியர்
குடியுரிமை அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம்
படித்த கல்வி நிறுவனங்கள் நாடகக் கலைக்கான ரோயல் அகாதமி
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1954–2012
வாழ்க்கைத்
துணை
சியான் பிலிப்சு (1959–1979)
பிள்ளைகள் 3; நடிகை கேட் ஓ'டூல் உட்பட
விருதுகள்
அகாதமி விருதுகள்
அகாதமி கௌரவ விருது
2003
எம்மி விருதுகள்
மிகச்சிறந்த துணை நடிகர் – குறுந்தொடர் அல்லது திரைப்படம்
1999 ஜோன் ஆஃப் ஆர்க் (குறுந்தொடர்)
கோல்டன் குளோப் விருதுகள்
கோல்டன் குளோப் சிறந்த நடிகர் – திரைப்படம் நாடகம்
1964 பெக்கட்
1968 த லயன் இன் வின்டர்
கோல்டன் குளோப் சிறந்த நடிகர் – திரைப்படம் (இசைவடிவ அல்லது சிரிப்பு)
1969 குட்பை, மிஸ்டர். சிப்சு
பாஃப்டா விருதுகள்
முன்னணி வேடத்தில் மிகச்சிறந்த நடிகர்
1962 லாரன்ஸ் ஒப் அரேபியா

பீட்டர் ஜேம்சு ஓ'டூல் (Peter James O'Toole) [2] (2 ஆகத்து 1932 – 14 திசம்பர் 2013) அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல நடிகர்.[3] நாடகக் கலைக்கான ரோயல் அகாதமியில் பயின்ற இவர் நாடகங்களில் நடிக்கத் துவங்கி சிறந்த சேக்சுபீரிய நடிகராக புகழ் பெற்றார். தமது முதல் திரைப்படத்தில் 1959இல் நடித்தார். தொடக்க காலத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய டூல், பின்னர் இங்கிலாந்து கடற்படையில் வானொலி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

1962ஆம் ஆண்டு வெளியான லாரன்சு ஆஃப் அரேபியா திரைப்படத்தில் டி.ஈ.லாரன்சாக நடித்து உலகெங்கும் பரவலாக அறியப்பட்டார். இதற்காக அகாதமி விருது பரிந்துரைகளில் முதன்முதலாக இடம் பெற்றார். இவருக்கு மேலும் ஏழு ஆசுகார் விருதுப் பரிந்துரைகள் கிடைத்தன – பெக்கட் (1964), த லயன் இன் வின்டர் (1968), குட்பை, மிஸ்டர். சிப்சு (1969), த ரூலிங் கிளாஸ் (1972), த ஸ்டன்ட் மேன் (1980), மை பேவரைட் இயர் (1982) மற்றும் வீனசு (2006) – ஆனால் மிக கூடுதலான ஆசுகார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு ஒன்று கூடப் பெறாத சாதனையை படைத்துள்ளார். இவர் நான்கு கோல்டன் குளோப் விருது, ஒரு பாஃப்டா விருது மற்றும் எம்மி விருதுகளைப் பெற்றுள்ளார். 2003இல் அகாதமியின் கௌரவ விருதினைப் பெற்றுள்ளார்.

இளமை வாழ்க்கை[தொகு]

ஓ'டூல் ஆகத்து 2, 1932ஆம் ஆண்டு கான்ஸ்டன்சு ஜேன் எலியட் (திருமணம் முன்பு:பெர்குசன்) என்ற இசுக்காட்டு மருத்துவ தாதிக்கும் பாட்றிக் ஜோசஃப் ஓ'டூல் என்ற அயர்லாந்து காற்பந்தாட்ட வீரருக்கும் மகனாக அயர்லாந்தில் உள்ள கால்வே கவுன்ட்டியின் கன்னிமேராவில் பிறந்தார்.

ஓ'டூல் ஓர் அயர்லாந்து கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார். இங்கிலாந்திலுள்ள லீட்சில் வளர்ந்தார். அங்கிருந்து இரண்டாம் உலகப் போரின் போது வெளியேற வேண்டி வந்தது. 1952 முதல் 1954 வரை நாடகக் கலைக்கான ரோயல் அகாதமியில் கல்வி கற்று நடிகரானார்.

பணி வாழ்க்கை[தொகு]

பீட்டர் ஓ'டூல் 1968இல் வெளியான லயன் இன் வின்டர் திரைப்பட முன்னோட்டத்தில்

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஓ டூல் 1959ஆம் ஆண்டு சியான் பிலிப்சு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண உறவு 1979ஆம் ஆண்டு முறிவுற்றது. இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். பிலிப்சிடம் இரண்டு மகள்களையும் (கேட், பாட்றீசியா) பெண் நண்பர் கரேன் பிரவுன் மூலம் மகனையும் (லோர்சன் பாட்றிக் ஓ டூல்) பெற்றார். ஓ டூல் இங்கிலாந்தில் இலண்டன் பெருநகரத்தில் வாழ்ந்து வந்தார். இவரது வாழ்நாள் நண்பராக இருந்த அயர்லாந்து நடிகர் ரிச்சர்டு ஹாரிசு 2002இல் உயிரிழந்தார்.

நோயும் மரணமும்[தொகு]

ஓ'டூல் 1970களில் வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று மீண்டார். தமது 81ஆவது அகவையில் அறியப்படாத நோயால் இலண்டனில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.[5]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஓ_டூல்&oldid=2213544" இருந்து மீள்விக்கப்பட்டது