உள்ளடக்கத்துக்குச் செல்

கேரி கிராண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரி கிராண்ட் (பிறப்பு ஆர்க்கிபால்ட் அலெக் லீச் Cary Grant (born Archibald Alec Leach;ஜனவரி 18, 1904  – நவம்பர் 29, 1986) ஓர் அமெரிக்க நடிகர் ஆவார். பண்டைய ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்பட்டார்.

கிராண்ட் பிரிஸ்டலின் ஹார்பீல்டில் பிறந்தார். அவர் இளம் வயதிலேயே நாடகத்துறையினால் ஈர்க்கப்பட்டார் . இவரது ஆறாவது வயதில் தி பெண்டர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு குழுவுடன் இணைந்து நிகழ்ச்சியில் கல்ந்துகொள்ளத் துவங்கினார். தனது 16 வயதில், அமெரிக்க சுற்றுப்பயணத்திற்காக பெண்டர் குழுவுடன் சென்றார். இவரின் நாடகங்கள் நியூயார்க் நகரில் தொடர்ச்சியான வெற்றி பெற்றன.இதனால் அவர் அங்கேயே இருக்க முடிவு செய்தார். [1]1930 களின் முற்பகுதியில் ஹாலிவுட்டுக்குச் செல்வதற்கு முன்பு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.

கிராண்ட் ஆரம்பத்தில் குற்றத் திரைப்படங்கள் அல்லது குற்ற நாடகங்களில் நடித்தார். 1932 ஆம் ஆண்டில் வெளியான ப்ளாண்ட் வீனஸ் மற்றும் 1933 ஆம் ஆண்டில் வெளியான ஷீ டன் ஹிம் ராங் ஆகிய அதில் குறிப்பிடத் தகுந்தன ஆகும்.அதன் பின்னர் இவர் காதல் மற்றும் நகைச்சுவையினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். தி அவ்ஃபுல் ட்ரூத் (1937), பிரிங்கிங் அப் பேபி (1938 ), ஹிஸ் கேர்ள் ஃபிரைடே (1940) மற்றும் தி பிலடெல்பியா ஸ்டோரி (1940), ஆகியன இந்தவகைத் திரைப்படங்களில் குறிப்பிடத் தகுந்தன ஆகும். இந்த திரைப்படங்கள் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த நகைச் சுவைத் திரைப்படங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[2] மேலும் இவர் அதே சமயத்தில் குங்கா தின் (1939) மற்றும் ஆர்சனிக் மற்றும் ஓல்ட் லேஸ் (1944). ஓன்லி ஏஞ்சல்ஸ் ஹேவ் விங்ஸ் (1939), பென்னி செரினேட் (1941) மற்றும் நொன் பட் தி லோன்லி ஹார்ட் (1944) போன்ற நாடகங்களிலும் இவர் நடித்தார்.சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கிராண்ட் ஜனவரி 18, 1904 அன்று வடக்கு பிரிஸ்டல் புறநகர்ப் பகுதியான ஹார்பீல்டில் எண் 15 ஹுகென்டன் சாலையில் ஆர்க்கிபால்ட் அலெக் லீச்சில் பிறந்தார். [3] இவரின் தந்தை எலியாஸ் ஜேம்ஸ் லீச் (1872-1935) தாய் எல்ஸி மரியா லீச் (நீ கிங்டன்; 1877-1973) ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். [4] அவரது தந்தை ஒரு துணி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் அவரது தாயார் தையல்காரராக பணிபுரிந்தார். [5] அவரது மூத்த சகோதரர் ஜான் (1899-1900) காசநோய் மூளைக்காய்ச்சலால் இறந்தார். [5] கிராண்ட் தன்னை பகுதி யூதராகக் கருதினார். இவர் தனது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்ற ஒன்றாக இருந்ததாகக் கருதினார். அவரது தந்தை ஒரு குடிகாரர் ஆவார் [6] அவரது தாயார் பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவினால் பாதிக்கப்பட்டார். [7]

திரைப்படவியல் மற்றும் மேடை வேலை[தொகு]

தி அவ்ஃபுல் ட்ரூத் (1937), பிரிங்கிங் அப் பேபி (1938), ஹிஸ் கேர்ள் ஃபிரைடே (1940) மற்றும் தி பிலடெல்பியா ஸ்டோரி (1940), ஆகியன இந்தவகைத் திரைப்படங்களில் குறிப்பிடத் தகுந்தன ஆகும். மேலும் இவர் அதே சமயத்தில் குங்கா தின் (1939) மற்றும் ஆர்சனிக் மற்றும் ஓல்ட் லேஸ் (1944). ஓன்லி ஏஞ்சல்ஸ் ஹேவ் விங்ஸ் (1939), பென்னி செரினேட் (1941) மற்றும் நொன் பட் தி லோன்லி ஹார்ட் (1944) போன்ற நாடகங்களிலும் இவர் நடித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. McCann 1997, ப. 44–46.
  2. Wigley, Samuel (September 13, 2015). "10 great screwball comedy films". British Film Institute. Archived from the original on June 15, 2016. பார்க்கப்பட்ட நாள் June 15, 2016.
  3. "Index entry – Birth record list". FreeBMD. ONS. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
  4. Wansell 2013.
  5. 5.0 5.1 Eliot 2004.
  6. Klein 2009.
  7. Weiten 1996.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_கிராண்ட்&oldid=3708835" இலிருந்து மீள்விக்கப்பட்டது