உள்ளடக்கத்துக்குச் செல்

பெடெரிக்கோ ஃபெலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடெரிக்கோ ஃபெலினி

பிறப்பு (1920-01-20)சனவரி 20, 1920
ரிமினி, இத்தாலி
இறப்பு அக்டோபர் 31, 1993(1993-10-31) (அகவை 73)
ரோம், இத்தாலி
நடிப்புக் காலம் (1945 - 1990)
துணைவர் Giulietta Masina (1943 - 1993)

பெடெரிக்கோ ஃபெலினி (Federico Fellini - ஜனவரி 20, 1920 – அக்டோபர் 31, 1993) ஒரு இத்தாலியத் திரைப்பட இயக்குனர். கற்பனைவாதமும், பரோக் பாணியும் கலந்த இவரது தனித்துவமான பாணி பெரிதும் பெயர் பெற்றது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரும் மிகவும் மதிக்கப்படுபவருமான ஒரு திரைப்பட இயக்குனராக விளங்குகிறார்.[1][1][2][2][3][3]

கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகள் கலைப்பயணத்தில், ஃபெலினி அவர்கள் பாம் டி'ஆர் விருது லா டாலஸ் வீடா (இனிமையான வாழ்க்கை) என்ற இத்தாலிய திரைப்படத்திற்காக வென்றார். மேலும் பன்னிரெண்டு அகாடமி விருதிற்காக ஃபெலின்யின் பெயர் பரிந்திரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் என்ற வகையில் அவர் இயக்கிய நான்கு திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வென்றார். 1993 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 65 வது வருடாந்திர அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் ஃபெலினி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற் கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.[4]

இனிமையான வாழ்க்கை (La Dolce Vita) மற்றும் 8 ½, போன்ற புகழ்பெற்ற மற்றும் நன்கு அறியப்பட்ட படங்கள் தவிர ஃபெலினி அவர்கள் இயக்கிய பிறத்திரைப்படங்கள் சாலை (La Strada), காபிரியாவின் இரவுகள் (Nights of Cabiria), ஜுலியட்டின் மனது (Juliet of the Spirits), Satyricon, என் நினைவில் (Amarcord) மற்றும் Fellini's Casanova.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ரிமினி (1920–1938)

[தொகு]

ஃபெலினி 20 வது சனவரி 1920 ஆம் ஆண்டில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் ஏட்ரியாட்டிக் கடல் அருகில் உள்ள ரிமினி என்னும் சிறிய நகரத்தில் பிறந்தார். அவருடைய தந்தை உர்பான் ஃபெலினி (1894-1956), ஒரு சிறிய ரோம விவாசய குடும்பத்தில் கேம்பட்டோவில் பிறந்தார். பின்னர் 1915 ஆம் ஆண்டில் அவர் ரோம நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் ஒரு ரோட்டி தயாரிக்கும் பான்டிலா பாஸ்தா பேக்கரி தொழிற்சாலையில் உதவியாளராக பணிபுரிந்தார்.

ஃபெலினியின் தாயார், ஐடா பார்பியனி (1896-1984), ரோமானிய வணிகர்களின் கத்தோலிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அவர் 1917 ஆம் ஆண்டில் உர்பான் ஃபெலினியுடன் வாழ கேம்பட்டோவில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று வாழ்க்கையை தொடங்கினர்.[5] ஒரு வருடம் கழித்து, ரோம் நகரில் சாண்டா மரியா மாகோர் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் மதச் சம்பிராதாயப்படி 1918 ஆம் ஆண்டில் ஃபெலினிக்கிம் ஐடா பார்பியனிக்கும் திருமணம் நடைபெற்றது.

தம்பதியர் ரிமினி நகரத்தில் வாழ்க்கையை தொடர்ந்தனர். அங்கு உர்பான் மொத்த வியாபாரியாக தொழில் புறிந்தார். பெடெரிக்கோ ஃபெலினியுடன் உடன் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் ரிக்கார்டோ ஃபெலினி (1921–1991) ஆவணப்பட தொகுப்பாளராக RAI என்ற தொலைக்காட்சிக்கு வேலை செய்தார் மற்றொருவர் மரியா மெடாலினா ஃபெலினி (1929–2002) ஆவார்.

1924 ஆம் ஆண்டில், ரிமினியில் உள்ள சான் வின்சென்சோவில் சந்நியாசிகளால் நடத்தப்பட்ட ஒரு பள்ளியில் ஃபெலினி ஆரம்பக் கல்வி பயின்றார், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கார்லோ டோனி பொது பள்ளியில் கல்வியை தொடர்ந்தார். ஒரு விடாமுயற்சியுள்ள மாணவராக இருந்தார். தனது ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைதல், பொம்மலாட்டம் நடத்துதல் மற்றும் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான இதழ்களில் வரும் பாரம்பரிய மிக்க அமெரிக்க கேலிச்சித்திர கதைகளை வாசிப்பதுமாக இருந்தார்.

ரோம் (1939)

[தொகு]

செப்டம்பர் 1939 ஆம் ஆண்டில், தனது பெற்றொர்களை மகிழ்விப்பதற்காக ரோம் பல்கலைகழகத்தில் சட்டப் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான ஹோலிஸ் ஆல்பெர்ட் "ஃபெலினி சட்ட வகுப்பில் கலந்து கொண்டிருப்பதைப் பற்றிய பதிவு எதுவும் இல்லை" என்று கூறுகிறார்.[6] குடும்ப ஓய்வுதியம் நிறுத்தப்பட்ட பிறகு தனது வாழ்நாள் நண்பரும் ஓவியரும்மான ரினால்டோ கெலெங்கைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் ஓவியம் வரைதல் பணி செய்தனர். சிறிது காலத்தில் இதில் தோல்வியுற்றனர். அதன் பிறகு ஃபெலினி ஒரு தினசரி பத்திரிக்கையில் நிருபராக வேலை செய்தார். அன்றாடம் நீதிமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவர் செய்தியாக தொகுப்பது அவரது பணியாக இருந்தது. ஆனால் சிறிது காலத்திலேயே அந்த வேலையில் சோர்வடைந்து வேலையில் இருந்து விலகினார்.

மார்க் ஆரேலியோ என்ற வாரம் இருமுறை வரும் நகைச்சுவை பத்திரிகையில் தனது முதல் கட்டுரையை வெளியிட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, மிகவும் செல்வாக்குமிக்க பத்திரிகை ஆசிரியர் குழுவில் சேர்ந்தார், ஆனால் நீங்கள் கேட்கிறீர்களா? என்ற வழக்கமாக வுரும் கட்டுரை தலைப்புப் பத்தியை எழுதி வெற்றி அடைந்தார். "ஃபெலினியை பொருத்தவரை இந்தத் தருணம் தான் அவரது வாழ்க்கையை தீர்மானித்த கணம்" என்றார் [7] மேலும் 1939 முதல் 1942 ஆம் ஆண்டு வரை இந்தப் பத்திரிக்கை தான் அவருக்கு ஒரு நிலையான வேலையை வழங்கியது அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் போன்றோரிடம் பழகும் வாய்ப்பையும் பெற்றார். இதன் மூலம் எதிர்கால தொழில் மற்றும் சினிமாவிற்கான வாய்ப்புகளுக்கான் அடித்தளமாகவும் அமைந்தது. பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் அவரது கூட்டாளிகளுள் வருங்கால இயக்குநர் எட்டோர் ஸ்கோலா, மார்க்சியம் தத்துவவாதி மற்றும் திரைக்கதை எழுத்தாளர் செசரே சவட்டினி, மற்றும் எதிர்கால ஃபெலினியின் திரைக்கதை ஆசிரியர் பெர்னார்ட்டினோ ஜப்போனி ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

விருதுகள்

[தொகு]

தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள் மற்றும் பரிந்துரைப்புகள்

[தொகு]
 • ரோம், ஓபன் சிட்டி (இயக்கு. ரொபர்டோ ரொசிலினி 1945)
  • சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது (செர்ஜியோவுடன் இனைந்து) பரிந்துரைப்பு
 • பைசா (இயக்கு. ரொபர்டோ ரொசிலினி 1946)
  • சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது (செர்ஜியோ, ஆல்பிரட், ரொபர்டோ ரொசிலினிவுடன் இனைந்து) பரிந்துரைப்பு
 • ஐ விட்டெல்லோனி (I Vitelloni) (1953)
  • வெனிஸ் திரைப்பட விழா வெள்ளி சிங்கம்
  • சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது (டூலியோ பினெல்லி, என்னி ஃப்ளையனோவுடன் இனைந்து) பரிந்துரைப்பு
 • லா ஸ்ட்ராடா (La Strada) (1954)
  • வெனிஸ் திரைப்பட விழா வெள்ளி சிங்கம்
  • சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது [8]
  • சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைப்பு (டூலியோ பினெல்லி, என்னி ஃப்ளையனோவுடன்)
  • சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான நியூயார்க் பிலிம் கிரிடிக்ஸ் விருது
  • சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான திரை இயக்குநர்கள் கில்ட் விருது
 • கேபிரியாவின் இரவுகள் (Nights of Cabiria) (1957)
  • கேன்ஸ் திரைப்பட விழா சிறந்த நடிகை விருது (கியுலியட்டா மாசினா) [9]
  • சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது.[10]
 • இனிமையான வாழ்க்கை (La Dolce Vita) (1960)
  • கேன்ஸின் திரைப்பட விழாவில் பாம் டி'ஆர் விருது
  • சிறந்த உடை வடிவமைப்பாளர் க & வெ படத்திற்கான ஆஸ்கர் விருது (பியரோ கெரார்டு)
  • சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைப்பு, சிறந்த திரைக்கதை (டூலியோ பினெல்லி, என்னோ ஃப்ளையனோ, ப்ருனெல்லோ ரோண்டி ஆகியோருடன்), சிறந்த கலை மற்றும் அரங்கம் அமைப்பு ஆகியவற்றுக்கான ஆஸ்கர் பரிந்துரைப்பு
  • சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான நியூயார்க் பிலிம் கிரிடிக்ஸ் விருது
  • சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான தேசிய வாரியம் சான்று
 • 8½ (1963)
  • மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா கிராண்ட் பரிசு [11]
  • சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது [12]
  • சிறந்த உடை வடிவமைப்பாளர் க & வெ படத்திற்கான ஆஸ்கர் விருது (பியரோ கெரார்டு)
  • சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் பரிந்துரைப்பு
  • சிறந்த கலை மற்றும் அரங்கம் அமைப்பு ஆகியவற்றுக்கான க & வெ படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரைப்பு (பியரோ கெரார்டு)
  • இத்தாலிய தேசிய சிண்டிகேட் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளி ரிப்பன் விருதுகள், சிறந்த ஒளிப்பதிவாளர் க & வெ படத்திற்கான விருது (ஜியானி டி வென்ஜோசோ), சிறந்த இயக்குநர் (பெடெரிக்கோ ஃபெலினி), சிறந்த அசல் கதை (ஃபெலினி மற்றும் ஃப்ளாயானோ), சிறந்த தயாரிப்பாளர் (ஏஞ்சலோ ரோசோலி), சிறந்த பின்னணி இசை (நினோ ரோடா), சிறந்த திரைக்கதை (ஃபெலினி, பின்லி, ஃப்லயானோ, ரோண்டி) மற்றும் சிறந்த துணை நடிகை (சாண்ட்ரா மிலோ)
  • பெர்லின் சர்வதேச திரைப்பட விழா சிறப்பு விருது
  • சிறந்த இயக்குநருக்கான அமெரிக்க இயக்குநர்கள் கில்ட் விருது
  • சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான நியூயார்க் பிலிம் கிரிடிக்ஸ் விருது
  • சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான தேசிய வாரிய விருதுக்கான விருது
  • சிறந்த இயக்குனருக்கான செயிண்ட் வின்சன்ட் திரைப்பட விழாவில் குரோடா டி ஓரோ விருது
  • சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான சினிமா ஜூனோ விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட இயக்குநர் விருது
 • என் நினைவில் (Amarcord) (1974)
  • சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது [13]
  • சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் பரிந்துரைப்பு
  • அசல் திரைக்கதை மற்றும் சிறந்த எழுத்திற்கான ஆஸ்கர் பரிந்துரைப்பு
  • சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம் கிரிடிக்ஸ் விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான நியூயார்க் பிலிம் கிரிடிக்ஸ் விருது

இறப்பு

[தொகு]

1993 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி 73 வயதில் ஃபெலினி ரோமில் மாரடைப்பால் இறந்தார்,[14] அவர் இறந்த முந்தைய நாளில் தான் தனது 50 வது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்திருந்தார். அவரது நினைவு நாள் கூட்டம் ஸ்டூடியோ 5 சினிசினிட்டாவில் நடைபெற்றது, அதில் 70,000 பேர் வரை கலந்து கொண்டனர்.[15]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "The 25 Most Influential Directors of All Time". MovieMaker Magazine. Archived from the original on 2015-12-11. பார்க்கப்பட்ட நாள் 2017-09-29.
 2. 2.0 2.1 "10 Most Influential Directors Of All Time". WhatCulture.com.
 3. 3.0 3.1 Burke and Waller, 12
 4. "Federico Fellini".
 5. Alpert, 16
 6. Alpert, 33
 7. Bondanella, The Films of Federico Fellini, 8
 8. "The 29th Academy Awards (1957) Nominees and Winners". oscars.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-24.
 9. "Festival de Cannes: Nights of Cabiria". festival-cannes.com. பார்க்கப்பட்ட நாள் 2 August 2009.
 10. "The 30th Academy Awards (1958) Nominees and Winners". oscars.org. பார்க்கப்பட்ட நாள் 25 October 2011.
 11. "3rd Moscow International Film Festival (1963)". MIFF. Archived from the original on 16 January 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
 12. "The 36th Academy Awards (1964) Nominees and Winners". oscars.org. பார்க்கப்பட்ட நாள் 3 November 2011.
 13. "The 47th Academy Awards (1975) Nominees and Winners". oscars.org. பார்க்கப்பட்ட நாள் 10 December 2011.
 14. Federico Fellini, Film Visionary, Is Dead at 73, nytimes.com; accessed 28 August 2017.
 15. Kezich, 416
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடெரிக்கோ_ஃபெலினி&oldid=3908955" இலிருந்து மீள்விக்கப்பட்டது