ராமகொண்டஅள்ளி
ராமகொண்டஅள்ளி
ராமகொண்டள்ளி ராமகொண்டஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636810 |
ராமகொண்டஅள்ளி (Ramakondahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643659.[1] இது ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 340 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1786, மொத்த மக்கள் தொகை 6635,[2]. இதில் 3548 ஆண்களும்,3087 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் மொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 53.1 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்
[தொகு]- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
- ↑ "Ramakondahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.