பேராக் சுல்தான் நசுரின் சா
பேராக் சுல்தான் நசுரின் சா Sultan Nazrin Muizzuddin Shah ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah Nazrin Shah of Perak سلطان ڤيراق | |||||
---|---|---|---|---|---|
சுல்தான் நசுரின் சா | |||||
ஆட்சிக்காலம் | 29 மே 2014 – இன்று வரையில் | ||||
மலேசியா | 6 மே 2015 | ||||
முன்னையவர் | பேராக் சுல்தான் அசுலான் சா Sultan Azlan Shah of Perak | ||||
பின்னையவர் | ராஜா ஜபார் | ||||
பிறப்பு | 27 நவம்பர் 1956 ஜார்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா | ||||
துணைவர் | துவாங்கு சாரா சலீம் | ||||
| |||||
மரபு | சியாக் பேராக் House of Siak-Perak | ||||
தந்தை | பேராக் சுல்தான் அசுலான் சா Sultan Nazrin Muizzuddin Shah ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah | ||||
தாய் | துவாங்கு பைனுன் பிந்தி முகமது அலி | ||||
மதம் | இசுலாம் |
சுல்தான் நசுரின் சா அல்லது பேராக் சுல்தான் நசுரின் சா; (ஆங்கிலம்: Nazrin Shah of Perak அல்லது Sultan Nazrin Muizzuddin Shah; மலாய்: Sultan Nazrin Muizzuddin Shah Ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah); (பிறப்பு: 27 நவம்பர் 1956); பேராக் மாநிலத்தின் சுல்தான் ஆவார். அத்துடன் டிசம்பர் 2016 முதல் மலேசியாவின் துணை பேரரசர் பொறுப்பையும் வகிக்கின்றார்.[1][2]
சுல்தான் நசுரின் சா, ஜொகூர் சுல்தான் துங்கு இசுமாயில் இட்ரிசு (ஜொகூர் பட்டத்து இளவரசர்) அவர்களின் உறவினரும் ஆவார். ஏனெனில் இருவரும் பேராக் சுல்தான் இட்ரிசு சா I என்பவரின் வழிமுறையினர் ஆகும். அத்துடன் சுல்தான் நசுரின் சா, பேராக் சுல்தானகத்தின் 35-ஆவது சுல்தானும் ஆவார்.
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]சுல்தான் நசுரின் சா 1956-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி, அப்போதைய மலாயாவின் பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுன் நகரில் அவரின் தாத்தா அல்மர்கும் சுல்தான் யூசுப் இசுதின் சா ஆட்சியின் போது பிறந்தார். அவர் பேராக்கின் சுல்தான் பேராக் சுல்தான் அசுலான் சா (Sultan Azlan Muhibbuddin Shah) மற்றும் பேராக் அரசியார் துவாங்கு பைனுன் பிந்தி முகமது அலி (Tuanku Bainun Binti Mohd Ali) ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.
கல்வி வாழ்க்கை
[தொகு]சுல்தான் நசுரின் சா 1962 முதல் 1967 வரை கோலாலம்பூர் குவாந்தான் சாலை தொடக்கநிலைப் பள்ளியில் (Sekolah Rendah Jalan Kuantan, Kuala Lumpur) தன் தொடக்கக் கல்வியைப் படித்தார். பின்னர் கோலாலம்பூர் செயின்ட் ஜான் கல்வி நிலையத்தில் 1968 முதல் 1970 வரை பயின்றார்.
அதன் பின்னர் 1975-ஆம் ஆண்டு வரையில் ஐக்கிய இராச்சியம் இலண்டன் மாநகரின் கேம்பிரிட்ச் லேய் கல்விக்கழகத்தில் (The Leys School) ஆறாவது படிவம் பயின்றார்.
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
[தொகு]ஆக்சுபோர்டு வொர்செஸ்டர் கல்லூரியில் (Worcester College), தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்; ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஜான் எப். கென்னடி அரசுப் பள்ளியில் (John F. Kennedy School of Government) அரசியல் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
மலேசிய அரசியலமைப்பு, முடியாட்சியின் பங்கு, கல்வி, இசுலாம், இன உறவுகள் மற்றும் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
1993—ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் கிரான்பீல்ட் தொழில்நுடபக் கல்விக்கழகத்தில் வணிக நிர்வாகத்தின் கௌரவ முதுநிலைப் பட்டம்; 1999-இல் ஜப்பான் சோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்திற்கான கௌரவ டாக்டர் பட்டம்; மற்றும் 2016-இல் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
விருதுகள்
[தொகு]வழங்கப்பட்ட விருதுகள்:
பேராக் விருதுகள்
[தொகு]- பேராக் அரசு விருது (DK) (1987)[3]
- சுல்தான் அசுலான் சா - பேராக் குடும்ப வரிசையின் உயர்ந்த வகுப்பு (DKSA) (2005)[4]
- அசுலானி அரச குடும்பத்தின் முதல் வகுப்பின் உறுப்பினர் (DKA I)[5]
- குரா சி மஞ்சா கினி விருது (SPCM) – Dato' Seri (1986)[6]
- தாமிங் ஸ்ரீ முதல் நிலை விருது (SPTS) – Dato' Seri Panglima (1989)
- பேராக் அரச குடும்ப முதல் நிலை விருது (SPMP) – Dato' Seri
மலேசிய விருதுகள்
[தொகு]- மலேசியா :
- முதல் நிலை விருது - en:Order of the Crown of the Realm (DMN) (2014)[7]
- பெர்லிஸ் :
- சிலாங்கூர் :
- இரண்டாம் நிலை விருது en:Royal Family Order of Selangor (DK II) (2003)[8]
- முதல் நிலை விருது en:Royal Family Order of Selangor (DK I) (2015)
- கிளாந்தான் :
- கிளாந்தான் அரச குடும்பத்தின் உறுப்பினர் en:Royal Family Order of Kelantan (DK) (2015)
- கெடா :
- கெடா அரச குடும்பத்தின் உறுப்பினர் en:Royal Family Order of Kedah (DK)
- நெகிரி செம்பிலான்:
- ஜொகூர் :
- முதல் நிலை விருது- en:Royal Family Order of Johor (DK I) (2019)
- பகாங்:
- முதல் நிலை விருது - en:Family Order of the Crown of Indra of Pahang (DK I) (2019)
கெளரவ பட்டங்கள்
[தொகு]- ஐக்கிய இராச்சியம் :
- வணிக நிர்வாகத்தின் கெளரவ முதுநிலை - en:Cranfield Institute of Technology - (1993)[9]
- கௌரவ பட்டம் - en:University of Nottingham - (2016)[9][10]
- சப்பான் :
- பொருளாதாரத்தின் கௌரவ டாக்டர் - en:Soka University - (1999)[9]
- மலேசியா :
- இசுலாமிய நிதித் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் - en:International Centre for Education in Islamic Finance (INCEIF) University - (2019)[11]
சிறப்புகள்
[தொகு]பல இடங்களுக்கு இவரின் பெயரிடப்பட்டுள்ளது:
- பேராக் லெங்கோங் ராஜா மூடா நசுரின் பாலம்
- பேராக், ஈப்போ, டாக்டர் நசுரின் சா மசூதி
- ராஜா டாக்டர் நசுரின் சா குடியிருப்பு கல்லூரி, மலாயா பல்கலைக்கழகம், கோலாலம்பூர்
- ராஜா டாக்டர் நசுரின் சா உயர்நிலைப்பள்ளி பேராக், பேராக் தெங்கா
- ராஜா டாக்டர் நசுரின் சா சாலை, ஈப்போ, பேராக்
- பேராக் லூமுட் மீன் துறை கல்லூரி
- சுல்தான் நசுரின் சா மையம்[12] வொர்செஸ்டர் கல்லூரி, ஆக்சுபோர்டு, ஐக்கிய இராச்சியம்
- சுல்தான் நசுரின் சா பள்ளிவாசல், தாப்பா, பேராக்
- சுல்தான் நசுரின் சா பாகன் டத்தோ, பேராக்
மேற்கோள்
[தொகு]- ↑ Anbalagan, V. (29 May 2014) Raja Nazrin proclaimed as the 75th Sultan of Perak, The Malaysian Insider.
- ↑ Raja Nazrin proclaimed new Sultan of Perak, The Malay Mail. 30 May 2014
- ↑ "DK 1987". pingat.perak.gov.my.
- ↑ The Admire Hunkz, Photo of Crown Prince wearing DKSA
- ↑ Radin Blog, Royal Family of Perak, Photo of Crown Prince and Family wearing DKA I
- ↑ Blog, Photo of Prince Nazrin (third from the left) wearing former SPCM ribbon
- ↑ "Semakan Penerima Darjah Kebesaran, Bintang, dan Pingat Persekutuan".
- ↑ "DK II 2003". awards.selangor.gov.my.
- ↑ 9.0 9.1 9.2 "ABOUT HRH SULTAN NAZRIN SHAH, SULTAN OF THE STATE OF PERAK".
- ↑ "Sultan Nazrin conferred with honorary degree".
- ↑ "SULTAN NAZRIN SHAH CONFERRED HONORARY DOCTORATE IN ISLAMIC FINANCE AT INCEIF 11TH CONVOCATION".
- ↑ RIBA Architecture