1471

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1471
கிரெகொரியின் நாட்காட்டி 1471
MCDLXXI
திருவள்ளுவர் ஆண்டு 1502
அப் ஊர்பி கொண்டிட்டா 2224
அர்மீனிய நாட்காட்டி 920
ԹՎ ՋԻ
சீன நாட்காட்டி 4167-4168
எபிரேய நாட்காட்டி 5230-5231
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1526-1527
1393-1394
4572-4573
இரானிய நாட்காட்டி 849-850
இசுலாமிய நாட்காட்டி 875 – 876
சப்பானிய நாட்காட்டி Bunmei 3
(文明3年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1721
யூலியன் நாட்காட்டி 1471    MCDLXXI
கொரியன் நாட்காட்டி 3804

1471 (MCDLXXI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்[தொகு]

  • மார்ச் 1 – வியட்நாம் பேரரசர் லே தான் தொங் தலைநகர் சாம்பாவைக் கைப்பற்றி, வியட்நாமின் மத்திய பகுதியில் புதிய பகுதிகளை அமைத்தார்.
  • மார்ச்ரோசாப்பூப் போர்கள்: யோர்க் வம்ச அரசர் நான்காம் எட்வர்டு இங்கிலாந்து திரும்பி முடியாட்சிக்கு உரிமை கோரினார்.
  • ஏப்ரல் 14 – ரோசாப்பூப் போர்கள்: நான்காம் எட்வர்டு ரிச்சார்டு நெவில் கோமகன் தலைமையிலான லங்காஸ்திரிய இராணுவத்தை தோற்கடித்தார். ரிச்சார்ட் நெவில் இதன் போது கொல்லப்பட்டார்.
  • மே 4 – ரோசாப்பூப் போர்கள்: நான்காம் எட்வர்டு மார்கரெட் மகாராணி மற்றும் அவரது மகன் வேல்சு இளவரசர் எட்வர்டு தலைமையிலான லங்காஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தார். இச்சமரில் இளவரசர் எட்வர்டு கொல்லப்பட்டார். பின்னர் இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் என்றி கொல்லப்பட்டார்.
  • ஆகத்து 9 – நான்காம் சிக்சுடசு 212வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
  • ஆகத்து 24 – போர்த்துகல் மன்னர் ஐந்தாம் அஃபொன்சோ மொரோக்கோ நகரமான அர்சீலாவைக் கைப்பற்றினார்.
  • ஆகத்து 29 – மொரோக்கோவின் தாஞ்சியர்சு நகரில் இருந்து குடிமக்கள் வெளியேறியதை அடுத்து அதனை போத்துக்கீசர் கைப்பற்றினர்.
  • அக்டோபர் 10 – சுவீடனின் அரசப் பிரதிநிதிகளின் படையினர் உழவர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் உதவியுடன், டென்மார்க் மன்னர் முதலாம் கிறித்தியானின் தாக்குதலை சுவீடன் பிரங்கன்பர்க் நகரில் இடம்பெற்ற சமரில் முறியடித்தனர்.
  • டிசம்பர் 21சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி தீவுகளை போர்த்துக்கீச மாலுமிகள் கண்டுபிடித்தனர்.[1]

பிறப்புகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Francisco, Albertino; Agostinho, Nujoma (2011). Exorcising Devils from the Throne: São Tomé and Príncipe in the Chaos of Democratization. பக். 28. ISBN 9780875868486. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1471&oldid=2550822" இருந்து மீள்விக்கப்பட்டது