ஆல்பிரெஃக்ட் டியுரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆல்பிரெஃக்ட் டியுரே
Dürer - Selbstbildnis im Pelzrock - Alte Pinakothek.jpg
ஆபிரெஃக்ட் டுயூரேயின் தன்னுருவப்படம் (1500), அட்டையில் எண்ணெய் வண்ண ஓவியம், ஆல்ட்டெ பினகொத்தெக்,மியூனிஃக்
தேசியம் செருனியர்
அறியப்படுவது அச்சுருவாக்கம், தீட்டோவியம், கீறுங்கலை
குறிப்பிடத்தக்க படைப்புகள்

Knight, Death, and the Devil (1513) Saint Jerome in his Study (1514) Melencolia I (1514)

Dürer's Rhinoceros

ஆல்பிரெஃக்ட் டியூரெ (Albrecht Dürer(ஒலிப்பு [ˈalbʀɛçt ˈdyʀɐ]) (மே 21, 1471ஏப்ரல் 6, 1528)[1] என்பவர் ஜெர்மன் ஓவியரும். அச்சுருவாக்கக் கலைஞரும் ஆவார். இவர் ஜெர்மனியில் நியூரெம்பர்கில் பிறந்து அங்கேயே இறுதியில் இறந்தார். இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்: வீரன், சாவு, சாத்தான் (1513), புனித செரோம் தான் படித்துக்கொண்டிருத்தல் (1514) , வருத்தம் (1514). இவற்றை விரிவாக திறனாய்வாளர்கள் பலகாலமாக அலசி வந்திருக்கின்றார்கள். இவருடைய நீர்ச்சாந்து (water color) இயற்கைக் காட்சிப் படங்கள் ஐரோப்பாவிலேயே முன்னோடியானதும், சிறந்தவை என்றும் புகழ்பெற்றவை. இவருடைய மரக்கட்டை அச்சுப் (woodcut) படங்கள் இத்துறையில் புதுமைகள் படைத்தவை. இவை இத்துறையில் இவருடைய நுட்ப முறைகளால் எவ்வளவு வளர்ச்சிகள் அடைய வாய்ப்புகள் உள்ளன என்று காட்டியது. ஆல்பிரெஃக்ட் டியுரே இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களுடைய கலைநுணுக்கத்தை உணர்ந்தும், ஜெர்மனியின் அறிவுசார்ந்த அறக்கொள்கையரின் கொள்கைகளை அறிந்தும், தான் ஆக்கிய இத்தாலியப் புராணக் கதைகளை ஒட்டிய கலைப்படைப்புகள் இவருக்கு நிலைத்த புகழை ஈட்டுத் தந்துள்ளன. இவை மட்டுமல்லாமல் இவருடைய கணிதம் சார்ந்த உருவத் தோற்றங்களும், சரியான உடலுருவ விகிதங்கள் பற்றிய அறிவும் கொண்டு இவர் ஆக்கிய படைப்புகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன.

சிறுபராயம்[தொகு]

டியுரே 1471 ஆம் ஆண்டில் மே மாதம் 21 ஆம் திகத் தம் பெற்றோர்களுக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். அதுடன் அவர் தம் பெற்றோர்களுக்கு இரண்டாவது ஆண் பிள்ளையுமாவார். இவரின் பெற்றோர்களுக்கு பதினான்கு தொடக்கம் பதினெட்டு வரை பிள்ளைகள் இருந்துள்ளன. டியுரேயின் தந்தையின் பெயர் அஜ்டொசி (Ajtósi) என்பதாகும், அவர் ஒரு பொற்கொல்லன் ஆவார். ஜேர்மானியப் பெயரான டியுரே ஹங்கேரிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும். பிற்காலத்தில் டியுரே எனும் பெயர் ரியுரே என மாற்றப்பட்டது. அதுவே குடும்பப் பெயராகவும் மாற்றப்பட்டது.
டியுரே சிறுவயதிலேயே தனது ஆசானின் மகளான பர்பரா ஹொல்பெர் (Barbara Holper) என்பவரை மூத்த திருமணம் செய்து கொண்டார்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Müller, Peter O. (1993) Substantiv-Derivation in Den Schriften Albrecht Dürers, Walter de Gruyter. ISBN 3-11-012815-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரெஃக்ட்_டியுரே&oldid=2225885" இருந்து மீள்விக்கப்பட்டது