விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு100

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெலுங்கு விக்கிப்பீடியா குறித்த ஒரு பத்திரிகை செய்தி[தொகு]

படிக்க: Telugu Wikipedia struggles to stay afloat--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:19, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]

சிவகுரு, முக்கியமான ஒரு விசயத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி. அண்மைய சில மாதங்களாக பல்வேறு இந்திய விக்கிப்பீடிக்களின் பங்களிப்புகளும் வீழ்ந்து வருகின்றன. இதைப் பற்றிய என் கருத்துகளை இங்கு பகிர்ந்துள்ளேன். ஓரளவு தாக்குபிடித்து நிற்பது தமிழும் வங்காள மொழியும் தான். என்ன சிக்கல்?
விக்கிப்பீடியா தவிர்த்த திட்டங்களில் கவனத்தைப் பகிர்கிறார்கள். மலையாள விக்கிப்பீடியாவின் தேக்கத்துக்கு ஈடாக அவர்களின் விக்கி மூலத்தின் வளர்ச்சி இருக்கிறது. நமக்கு ஏற்கவே மதுரைத் திட்டம் போன்ற திட்டங்கள் இருந்ததால் இத்தகைய உழைப்புச் சிதறல்கள் குறைவாக இருந்தன.
சில சிறிய விக்கிப்பீடியாக்கள் அடிக்கடி நிகழ்ச்சிகள், பரப்புரைகள் நடத்துவது அவர்கள் உழைப்பைக் கோரக்கூடும். நாம் எப்போதாவது தான் இது போல் செய்கிறோம். பரப்புரைகளையும் பலரும் பொறுப்பெடுத்துச் செய்கிறோம் என்பதால் இதுவும் நமக்குப் பொருந்தாது.
பல மொழிகளிலும் முதல் தலைமுறைப் பங்களிப்பாளர்களே தொடர்ந்து பங்களித்து களைத்து ஓய்ந்து விட்டார்கள். தமிழில் 2010 வரை ஒரு தலைமுறை. அதற்குப் பிறகு இரண்டாம் தலைமுறை. தற்போது தமிழிலும் ஒரு தேக்க நிலை இருக்கிறது (ஒவ்வொரு மாதமும் பங்களிப்போம் எண்ணிக்கை 250 என்ற அளவிலேயே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்விக்கி10 சமயத்தில் 370 வரை சென்றோம்). புதிதாக பல பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் அவர்களை பண்பட்ட பங்களிப்பாளர்களாக மாற்றுவதற்கும் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை இனங்கண்டு செயற்பட வேண்டும். 2010க்குப் பிறகு சோடாபாட்டில் பல பங்களிப்பாளர்களுக்கு உதவி மெருகேற்றினார். தற்போது அது போல் இன்னும் ஒரு சிலராவது இருந்தால் அடுத்த நிலைக்கு முன்னகர முடியும். --இரவி (பேச்சு) 16:57, 29 சூலை 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
அண்மைக் காலங்களில் தமிழ் விக்கியின் பல்வேறு தர அளவீடுகள் வீழ்ச்சி கண்டிருப்பது உண்மையே. 2013 நவம்பர் மாதத்துக்குப் பின்னர் ஒரு தேக்க நிலை உள்ளது. கடந்த ஏப்ரலில் ஒரு தற்காலிக ஏற்றம் ஏற்பட்டுப் பின்னர் மீண்டும் இறங்கிவிட்டது. இந்த நிலை பற்றி ஆராய்ந்து நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல பயனர்கள் முனைப்பாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பழைய விக்கித் தலைமுறையினரும் முற்றாகக் களைத்து ஒதுங்கிவிட்டார்கள் என்று சொல்வதற்கு இல்லை. சிறீ, இரவி போன்றோர் இன்னும் முழு வீச்சுடன் இயங்குகின்றனர். வேகம் சற்றுக் குறைந்திருந்தாலும் நானும் இன்னும் ஓயவில்லை. சுந்தர், நற்கீரன், செல்வா, போன்றோரும் பக்கத்திலே இருக்கின்றனர். இரண்டாம் விக்கித் தலைமுறைப் பயனர்கள் பலர் முதல் தலைமுறையினர் பலரைவிட முனைப்பாகவே இயங்குகின்றனர். மூன்றாம் தலைமுறையை வலுவானதாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தேவை. விக்கிக்குப் பங்களிப்பதில் பயனர்களுக்குக் கிடைக்கும் முதன்மையான பயன்கள் மற்றப் பயனர்களுடைய அங்கீகாரமும், இச்செயற்பாடுகளினூடே கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியுமே. இதை வலுப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு, அடிக்கடி நிகழும் வாக்குவாதங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும், பராமரிப்பு வேலைகளின்போது பிற பயனர்களுக்குக் குறிப்பாகப் புதியவர்களுக்குச் சலிப்பை உண்டாக்கும் வகையில் கடுமையாக நடப்பதையும், இறுக்கமான போக்குகளைக் கடைப்பிடிப்பதையும் குறைத்துக்கொண்டு எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் போக்கை வளர்க்க வேண்டும். அத்துடன், எல்லாத் தலைமுறைகளைச் சேர்ந்தோரிடையேயும், புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும், நட்பு ரீதியான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். இது குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று தேவை. வேண்டுமானால் பயனர்களிடையே ஒரு கருத்தறியும் survey ஒன்றை நடத்திக் கருத்துக்களை அறிந்து அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கலாம். --- மயூரநாதன் (பேச்சு) 21:13, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
மிக்க👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:32, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 05:01, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
முதல் தலைமுறையினர் களைத்து விட்டார்கள் என்பது மற்ற பல விக்கிப்பீடியாக்களைக் குறித்தே சொன்னேன். தமிழ் விக்கிப்பீடியாவில் அப்படி நிகழவில்லை என்பது நமது பலங்களில் ஒன்று. இதற்கு எல்லா வேலையையும் ஒருவரே அல்லது ஒரு சிலரே இழுத்துப் போட்டுச் செய்யாமல், தேவைப்படும் போது ஓய்வுகள் எடுத்துத் திரும்புவதும் உதவி இருக்கிறது. தொடர் பங்களிப்புகளைக் கூட்டுதல், புதிய பங்களிப்பாளர்களை மெருகேற்றுதல், இணக்கச் சூழலைப் பேணுதல் முதலியவற்றுக்கான முயற்சிகளை வரவேற்கிறேன். தரம் பேணும் உரையாடல்களைத் தனிப்பட இட்டுச் செல்லாமல் இருந்தால் போதுமானது. இதற்குத் தேவையான இடங்களில் விக்கிச் சமூகம் தலையிட வேண்டும். அது நெடுநாள் பயனராக இருந்தாலும் சரி, புதியவராக இருந்தாலும் சரி :) பட்டும் படாமல் பொத்தாம் பொதுவாக அறிவுரை கூறுவதும் ஒதுங்கி இருப்பதுமே பல வேளைகளில் உரையாடல்களைச் சிக்கலாக்கி விடுகிறது. --இரவி (பேச்சு) 05:26, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

திகதியும் எண்களும்[தொகு]

தமிழில் திகதிகளை எழுதுகையில் 8 செப்டம்பர் 1943 என்றோ செப்டம்பர் 8, 1943 என்றோ எழுதுவது தமிழ் முறைக்கு ஒவ்வாதது. தமிழ் முறையில் எழுதுகையில் 1943 செப்தெம்பர் 8 என்றவாறு எழுதுவதே சரியானது. ஆண்டு, மாதம், திகதி என்ற ஒழுங்கில் இடம் பெற வேண்டும். அத்துடன் 8 ல் என்றோ 8 ம் என்றோ 8 ன் என்றோ எழுதுவதும் தவறு. ஏனெனில் பகுபதங்களின் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் போன்ற எவ்வுறுப்பும் மெய்யெழுத்தில் தொடங்காத அதே வேளை (ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன போன்ற) வேற்றுமை உருபு எதுவும் மெய்யெழுத்தில் தொடங்குவதுமில்லை. எனவே, அவ்வாறான இடங்களில் 8 இல், 8 ஆம், 8 இன் என்றவாறு எழுதுவதே முறை. எனவே, இதற்கு மாறான வடிவங்களில் எழுதுவோர் தமது எழுத்து நடையைத் திருத்திக் கொள்ள வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 05:17, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தொடர்ந்து இங்கு உரையாட வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 05:21, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வருங்கால நிருவாகிகள்[தொகு]

வருங்காலத்தில் நிருவாகப் பொறுப்பு ஏற்கக் கூடியவர்களை இனங்கண்டு ஊக்கம் அளிக்க, வழிகாட்ட விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 09:56, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பத்தாண்டுகளைக் கடந்த பங்களிப்புகள்[தொகு]

மயூரநாதனும் சுந்தரும் பத்தாண்டுகளைக் கடந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார்கள். இது தொடர்பாக சுந்தர் முகநூலில் எழுதிய குறிப்பு முக்கியமானது. அனைவரும் தங்கள் வாழ்த்துகளை இருவரின் பேச்சுப் பக்கங்களில் தெரிவிக்க வேண்டுகிறேன். இது போல் 1, 2, 5, 8 என்று ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்புகளை நிறைவு செய்தவர்களுக்கான பதக்கங்களை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்வோம் :) --இரவி (பேச்சு) 09:56, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி!! இருவருக்கும் என் வாழ்த்துகள்! :) முன்னோடிகளாக இருந்து வழிகாட்டியமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:32, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி இரவி. அந்த முகநூல் குறிப்புகூட பொதுவான தமிழ்ப்பணிகளைப்பற்றி அமைந்துவிட்டது. அத்தனைக்கும் தமிழ் விக்கிப்பீடியாதான் அடிப்படை. இங்கு நான் பெற்ற அனுபவங்களையும் உடன்பழகிய அனைத்து விக்கிநண்பர்களையும் பற்றி எழுதி முடியாது. நான் பெயரையோ, நிகழ்வையோ குறிப்பிடாவிட்டாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நினைத்துக்கொள்கிறேன் என்றுமட்டும் கூறிக்கொள்கிறேன். இனி சற்றேனும் பங்களிக்கத்தொடங்குகிறேன். :) -- சுந்தர் \பேச்சு 10:45, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியத் தலைப்புகள்[தொகு]

ஏற்கனவே, முக்கியமான 10,000 தலைப்புகளை இனங்கண்டு கட்டுரைகளை உருவாக்கியது போல் தமிழ்ச் சூழலில் வெளியாகியுள்ள முக்கிய கலைக்களஞ்சியங்களில் உள்ள தலைப்புகளையும் இனங்கண்டு கட்டுரைகளை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா ஒரு இலட்சம் கட்டுரைகள் மைல்கல்லை அடையும் போது, பல அடிப்படையான தலைப்புகளிலும் கட்டுரைகளைக் கொண்டிருக்கும். அண்மையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் கொடையளித்த வாழ்வியல் களஞ்சியம், குழந்தைகள் களஞ்சியம் முதலியன தமிழ் இணையக் கல்விக்கழக இணையத்தளத்தில் உள்ளன. அங்கிருந்து தலைப்புகளை எடுத்து இடலாம். நான் விகடன் வெளியிட்ட பிரிட்டானிகளா தகவல் களஞ்சியத்தில் இருந்து தலைப்புகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளேன். இந்நூல் உள்ளோர் இப்பணியில் இணைந்து உதவிடுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:04, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]


பிற்காலப் பாண்டியர்கள்[தொகு]

விக்கிபிடியாவில் உள்ள பிற்காலப் பாண்டி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சர்ச்சை உள்ளது.

  1. சர்ச்சை-முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டுரையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1216 முதல் 1239 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.கட்டுரையின் தகவல் சட்டதில் கி.பி. 1216-1238 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.கட்டுரைக்கான கட்டுரைக்கான மேற்கோள்களை ஆராயும் போது தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1238)வரை ஆட்சி புரிந்தாக உள்ளது. இந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பின்படி (கி.பி. 1216 - 1244) வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.
  2. சர்ச்சை-இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் இந்த கட்டுரையில் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பாண்டி மன்னனான இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி்.பி. 1237 - 1266)[1] வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.இந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பின்படி கி.பி. 1238[2] ஆட்சிக்கு வந்தான் என்று உள்ளது .
  3. சர்ச்சை-இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கட்டுரையில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239 முதல் 1251 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது..தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி (கி.பி. 1238 - 1255)வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.
  4. சர்ச்சை-இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் இந்த கட்டுரையில் இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1281 வரை தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி (கி.பி. 1254 - 1265) ஆட்சி புரிந்தாக உள்ளது.

இது போன்ற இன்னும் பல வரலாறு கட்டுரைகளில் தமிழ் விக்கிபிடியாவில் உள்ளன.-- mohamed ijazz(பேச்சு) 08:07, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

சான்றுகள்[தொகு]

தகவல்[தொகு]

ஏறத்தாழ 200 திரைப்படங்கள் குறித்து ராண்டார் கை எழுதியுள்ள கட்டுரைகளுக்குரிய இணைய இணைப்புகளை, Blast from the Past (column) எனும் ஆங்கில விக்கி கட்டுரையில், தொகுத்துள்ளார்கள். பழைய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் இற்றை செய்ய விரும்பும் பயனர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம்! (சில இணைப்புகள் வேலை செய்யவில்லை - குறிப்பிட்ட இணையத்தளத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஒரு வரம்புக்குள் உட்படும் கட்டுரைகளைப் பற்றிய தகவலை அதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பாக பதிந்து வைத்தால் எளிதாக இருக்கும். எ.கா: தமிழகக் கோயில்களைப் பற்றிய குறிப்பாக இருந்தால் தமிழகக் கோயில்கள் என்ற கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஆங்கிலத் திரைப்படங்களைப் பற்றியதாக இருந்தால் ஆங்கிலத் திரைத்துறை என்ற கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஆலமரத்தடியின் தொகுப்புகளை அடிக்கடி பரணேற்றிவிடுகிறோம். (புதியவர்கள்) பரணேற்றிய தொகுப்புகளில் பெரும்பாலும் தேடுவது இல்லை என நினைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:02, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று! காண்க: பேச்சு:ராண்டார் கை, பேச்சு:தமிழகத் திரைப்படத்துறையில் தகவல் உதவி எனும் துணைத் தலைப்பு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:16, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் அரவணைப்பு[தொகு]

"தமிழ் விக்கிப்பீடியாவில் மக்கள் இவ்வளவு வரவேற்பா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. ஊருக்கு வந்தாப்ல இருக்கு :) உங்களை போல நிறைய எழுதறவங்களோட முதல்லயே அறிமுகம் கிடைக்கறது ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா சேர்ந்து செயல்பட விருப்பம்" - இதற்கு விளக்கவுரை தேவையில்லை தானே? :)--இரவி (பேச்சு) 19:28, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:01, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 06:42, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 04:52, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

Help for translate[தொகு]

Hello and sorry for writing in English. Can anyone help me translate a small article (2 paragraphs) from English to your language and create the article in your wiki? Please, fell free to answer in my talk page in your wiki anytime. Thanks! Xaris333 (பேச்சு) 00:42, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழ்த்தட்டெழுத்து குறித்து ஒரு வேண்டுகோள்[தொகு]

மக்களே,

  • தமிழ்99 கற்க மிக எளிதான ஒரு தட்டெழுத்து முறையோடு மட்டுமல்லாமல், தட்டுப்பிழையின்றியும் விரைவாகவும் தமிழில் எழுத மிகவும் துணை செய்கின்றது.
  • தமிழ்99-இல் தட்டெழுதுவதால் தங்கள் வரிகள் பிழையின்றி வருவதோடு தாங்கள் தமிழ் எழுதுவதையும் முன்னேற்ற உதவுகிறது.
  • நான் அண்மையில் செய்த பல தொகுப்புகளில் பிழைகளின் அறிகுறிகள் "எழுத்துப்பெயர்ப்பு" முறையில் தட்டெழுதுவதின் பக்கவிளைவுகளாகத் தோன்றுகின்றன.
    • குறிப்பாக "எழுத்துப்பெயர்ப்பு" முறையில் தட்டெழுதுவோர், ஒன்றுக்கு இரண்டு முறை முன்தோற்றத்தைச் சரிபார்த்து, நீங்கள் எழுத நினைத்தது சரியாக தட்டுப்பிழையின்றி வந்துள்ளதா என்று உறுதி செய்தபின் சேமிக்கவும்.
    • இதனால் உங்கள் மெய்ப்பு பார்த்தல் திறன் பெருகுவதோடு, கட்டுரைத் தரம் கூடும், பிறர் திருத்தம் செய்யவேண்டிய தேவையும் குறையும்.
  • முடிந்தவரை தமிழ்99 கற்றுக்கொண்டீர்கள் என்றால், இவ்வனைத்து பலன்களோடு, வேற்று மொழியின் மூலம் தமிழை எழுதவேண்டிய இழுக்கும் ஏற்படாது.

-இது "எழுத்துப்பெயர்ப்பில்" இருந்து "தமிழ்99" முறைக்கு மாறி, இப்பொழுது தவறின்றி விரைவாகத் தமிழ் எழுதும் ஒருவனின் அன்பு வேண்டுகோள். நன்றி! தமிழ்த்தம்பி (பேச்சு) 07:49, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

எழுத்துப்பெயர்ப்பு முறையில் எழுதுவது ஒன்றும் இழுக்கானது அல்ல. எழுத்துப்பெயர்ப்பு முறையில் தட்டெழுத்து செய்து பழக இங்கு செல்லவும். உதவிக்கு வேண்டுமானால் Show Keymap ஐ தெரிவு செய்து தேவையான எழுத்துருக்களை டைப் செய்து பழகலாம், அதே எழுத்துருதான் நம் தமிழ் விக்கியிலும் பயன்படுத்தப்படுகின்றது. வேண்டுமானால் Tamil Unicode என கூகிளில் டைப் செய்து வேறு வலைத்தளங்களிலும் சென்று பழகலாம், பார்க்கலாம்!.... --யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:06, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நன்றி யாழ்ஸ்ரீ, தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியில் எழுத வேற்றுமொழியான ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது இழுக்கு என்பது என் கருத்து. தமிழ்99 முறையில் தட்டெழுதப் பழகக்கூட பல இணையப்பக்கங்கள் உள்ளன! - தமிழ்த்தம்பி (பேச்சு) 08:23, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் குறிப்பிட்ட தளத்தைவிட இந்தப்படம் உள்ள தளம் மிக நன்றாக உள்ளது.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:28, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இணைப்புக்கு நன்றி யாழ்ஸ்ரீ, நான் குறிப்பிட்டது போல பல இணையப்பக்கங்கள் உள்ளன. நான் தனிப்பட்ட முறையில் கணிணியில் விக்கிப்பீடியாவின் உள்ளமைந்த தமிழ்99 முறையும், பிற இடங்களில் எ-கலப்பை நிரலும், செல்பேசியில் செல்லினம் நிரலும் பயன்படுத்துகிறேன். - தமிழ்த்தம்பி (பேச்சு) 09:47, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
தமிழ்த்தம்பி, இங்குள்ள மூத்த பயனர்கள் தமிழ்99 முறையைப் பின்பற்றுகிறார்கள். அது எளிமையானதும், பயன்தரவல்லதும் ஆகும். என்னைப் போன்ற சிலர் எழுத்துப்பெயர்ப்பு முறையைப் பின்பற்றுகிறோம். எழுத்துப்பெயர்ப்பை ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு வருந்த வேண்டியதில்லை. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:00, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
தலைவரே, இதில் மூத்தவர் இளையவர் என்ற பாகுபாடு என்ன இருக்கு. என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன், அவரவர் கருத்தை அவரவர் சொல்கின்றனர், ஏற்பவர் ஏற்கலாம், எதிர்ப்பவர் எதிர்க்கலாம். ஆனால் கலந்துரையாடல் நடக்க வேண்டும், கருத்துக்கள் பரிமாறப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இனிவரும் பயனர் அனைத்து கோணங்களையும் படித்து, தமக்குகந்த தெரிவைச் செய்ய வேண்டும். இது விக்கிப்பீடியா, வடகொரியா அல்ல :) (ஆனா அவங்க தமிழ்99 -இல் தான் தட்டெழுதணும் :P //கிண்டல்) -
தமிழ்த்தம்பி (பேச்சு) 18:39, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
யப்பா சாமி, உமக்கு ஆதரவாகவே நான் கருத்து தெரிவித்திருந்தேன். :) என்னையே குழப்புறீரே! :( மூத்த பயனர்கள் என குறிப்பிட்டதன் காரணம்: தொடக்க காலத்தில் இருந்தே அவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பதை குறிப்பிட விரும்பினேன். மூத்தவர் என்ற சொல் வயதில் மூத்தவரை குறித்தது அல்ல, தொடக்க காலத்தில் இருந்தே இணையத்தில் தமிழை பழகிவந்தோரைக் குறித்தேன். பின்னர் இணைந்த என்னைப் போன்ற பயனர்கள் எழுத்துப்பெயர்ப்பில் பழகி அப்படியே எழுதுகின்றோம். யாரையும் நான் குறை சொல்லவில்லையே. விளக்கம் கொடுக்க வந்த என்னை வில்லனாக்கிவிட்டீரே. :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:46, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
அடடா, எப்படியோ சொன்னது எப்படியோ ஒலித்துவிட்டது, நான் உங்கள் கருத்துக்களை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை, என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க உங்கள் மறுமொழியைப் பயன்படுத்திக்கொண்டேன். மன்னிக்கவும். மேலும் மூத்த பயனர் குறித்து நானும் உங்கள் பொருளிலேயே சொன்னேன் - உண்மையில் நானே விக்கிப்பீடியாவில் எழுதுவதன் மூலம் தான் என் தமிழ்99 திறனை மேம்படுத்திக்கொள்கிறேன். புதியவர்களுக்கு தமிழ்99 எழுத்துப்பெயர்ப்பைவிட அரியதென்ற தவறான ஒரு எண்ணம் உருவாவதை நாம் தடுக்க வேண்டும். இன்று ஆங்கிலத்தட்டச்சு பயிலாது, பணிக்காக விரல் தடவி தடவி கணிணியில் தட்டிப்பழகிய என்னைப் போன்றவர்தான் பலர். இது போன்றவர்க்கு அதே தடவல் சிலநாள் தடவி தமிழ்99 கற்றுக்கொண்டால் ஆங்கிலத்தில் தட்டுவதை விட சிறப்பாக தமிழ்99-இல் நேராகத் தமிழில் எழுதலாமே. இதில் எழுதுவது மட்டும் அல்ல, எண்ண செயல்முறை (thought process) முதற்கொண்டு பயன்கள் உள்ளன. தமிழராகிய நமக்கு எண்ணங்கள் தமிழிலேயே தோன்றும், அவற்றை எழுத்துப்பெயர்ப்பு செய்யவேண்டுமானால் நம் மூளை தமிழை ஆங்கில வடிவமாக்கி அதைத் திரும்ப, கணிணி தமிழுக்கு மாற்றுகிறது. இது ஒரு தேவையில்லாத சுற்றுவழிமுறை (தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது என்பார்கள்). அடப் போங்க, பேசிப் பேசி வாய் வலிக்குது எழுதி எழுதி கை வலிக்குது, போய் ஏதாவது உருப்படியான கட்டுரையைத் தொகுப்போம். -
தமிழ்த்தம்பி (பேச்சு) 19:32, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் பயன்பாடுகள்...[தொகு]

என் குழந்தைகளின் (பள்ளிக்கூட) வீட்டுப் பாடங்களுக்கு (assignments), விக்கிப்பீடியா மூலமாக உதவும்போது... ஒரு இறுதிப் பயனர் (end user) என்ற நிலையில் விக்கியின் முக்கியத்துவத்தை நன்கு உணர முடிகிறது. ஒவ்வொருவரும் எழுதும் தகவல்கள், மற்றவர்க்கு எப்படி உதவுகிறது என்பதனை என் குழந்தைகளுக்கு நான் இந்தத் தருணங்களில் சொல்லிக் காட்டுகிறேன். எதிர்காலத்தில் அவர்களும் விக்கியில் எழுத வேண்டும் என்பது என் ஆசை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:32, 18 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கட்டுரைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவை தொடர்பான கோரிக்கைகளையும் முன்வையுங்கள். மேம்படுத்தி உதவுங்கள். :) குட்டி செல்வசிவகுருக்களுக்கு வரவேற்பு! ;) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:42, 18 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் நல்லதொரு கவனிப்பு. குழந்தைகள் எழுதும் அளவுக்கு வளர்ந்தபின் நம் பாராட்டுக்குரிய தோழர்கள் பள்ளிமாணவ விக்கிப்பீடியர்கள் போல அவர்களையும் பங்களிக்க ஊக்குவியுங்கள். (இன்று முகநூலில் நிகழ்நிலையை இற்றைப்படுத்தும் ஆயிரத்தில் ஒரு தமிழ்ப்பிள்ளை விக்கியில் கட்டுரைகளை இற்றைப்படுத்தினால் நாம் எங்கோ போய்க்கொண்டிருப்போம் ;) ) - தமிழ்த்தம்பி (பேச்சு) 19:15, 18 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்//இன்று முகநூலில் நிகழ்நிலையை இற்றைப்படுத்தும் ஆயிரத்தில் ஒரு தமிழ்ப்பிள்ளை விக்கியில் கட்டுரைகளை இற்றைப்படுத்தினால் நாம் எங்கோ போய்க்கொண்டிருப்போம்//--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:40, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் உங்கள் குழந்தைகள் மட்டுமா நானும் கூட assignments செய்ய விக்கிப்பீடியாவை நன்றாக பயன்படுத்துகின்றேன், இப்படி எத்தனை பேர் உள்ளார்களோ!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:56, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் விரைவில் பயன்தரும் கீரையைப்போலவும், சிலநாள்கழித்துத்தரும் வாழையைப்போலவும், சில ஆண்டுகள்கழித்துக்குலைதரும் தென்னை போலவும் தலைமுறைகள் தாண்டியும் பயன்தரும் பனையையும் ஆலையும் போலவும் பலவகைகளில் பயன்தரும். -- சுந்தர் \பேச்சு 13:39, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் மாணவர்களும், மற்றவர்களும் பயன்படுத்துகிறார்கள் என்று அறிவது விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விடயம். அதேவேளை, இது பயனுள்ளனவும், சரியானவையுமான தகவல்களை வழங்குவதில் நமக்குள்ள பொறுப்பையும் ஞாபகப்படுத்துவதாக உள்ளது. --- மயூரநாதன் (பேச்சு) 17:23, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் //நானும் கூட assignments செய்ய விக்கிப்பீடியாவை நன்றாக பயன்படுத்துகின்றேன்// எங்கட பள்ளிக்கூடத்தில விடமாட்டினம் :( --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:39, 20 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

Letter petitioning WMF to reverse recent decisions[தொகு]

The Wikimedia Foundation recently created a new feature, "superprotect" status. The purpose is to prevent pages from being edited by elected administrators -- but permitting WMF staff to edit them. It has been put to use in only one case: to protect the deployment of the Media Viewer software on German Wikipedia, in defiance of a clear decision of that community to disable the feature by default, unless users decide to enable it.

If you oppose these actions, please add your name to this letter. If you know non-Wikimedians who support our vision for the free sharing of knowledge, and would like to add their names to the list, please ask them to sign an identical version of the letter on change.org.

-- JurgenNL (talk) 17:35, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

I'm yet to read the original proposal, JurgenNL. But, in principle, this sounds like a bad move. Unless there's some compelling reason that I haven't thought about exists. -- சுந்தர் \பேச்சு 04:00, 23 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

Process ideas for software development[தொகு]

’’My apologies for writing in English.’’

Hello,

I am notifying you that a brainstorming session has been started on Meta to help the Wikimedia Foundation increase and better affect community participation in software development across all wiki projects. Basically, how can you be more involved in helping to create features on Wikimedia projects? We are inviting all interested users to voice their ideas on how communities can be more involved and informed in the product development process at the Wikimedia Foundation. It would be very appreciated if you could translate this message to help inform your local communities as well.

I and the rest of my team welcome you to participate. We hope to see you on Meta.

Kind regards, -- Rdicerb (WMF) talk 22:15, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

--This message was sent using MassMessage. Was there an error? Report it!

Thank you for the intimation, Rdicerb. We'll take note and respond. -- சுந்தர் \பேச்சு 03:57, 23 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இந்தியாவில் விக்கிமீடியா திட்டங்களை வளர்ப்பதற்கான அணுகுமுறை குறித்த கலந்துரையாடல் கூட்டம்[தொகு]

இந்தியாவில் விக்கிமீடியா திட்டங்களை வளர்ப்பதற்கான அணுகுமுறை குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை விக்கிமீடியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு மொழி சார் விக்கிமீடியா சமூகமும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குத் தங்கள் சார்பாளர்களை அனுப்பி வைக்கலாம். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விக்கிமீடியா இயக்கத்தினைக் கவனித்து தொடர்ந்து செயற்பட்டு வருபவர்களாக இருப்பது நல்லது. தமிழ் விக்கிப்பீடியா சார்பாக சுந்தர், சிரீக்காந்த், சோடாபாட்டில் ஆகியோரைப் பரிந்துரைப்பதுடன் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன். சுந்தர், இந்திய விக்கிமீடியா கிளையின் நிறுவன உறுப்பினரும் முன்னாள் செயற்குழு உறுப்பினரும் ஆவார். சோடாபாட்டில் முன்னாள் செயற்குழு உறுப்பினர். சிரீக்காந்த் இந்திய விக்கிமீடியா கிளையின் (முன்னாள்?) உறுப்பினர். மற்ற பல இந்திய விக்கிமீடியா சமூகங்களில் நல்ல அறிமுகம் உடையவர். நான் கடந்த ஓராண்டாக இந்திய விக்கிமீடியா கிளை, CIS-A2K தொடர்பான உரையாடல்களில் முனைப்பான பங்கெடுத்து வருகிறேன். ஒரு மொழி சார் சமூகத்தில் இருந்து குறைந்தது ஒருவர் என்று கூறி உள்ளார்கள். மேற்கொண்டு எத்தனை பேர் என்பது அவர்கள் தெரிவாக இருக்கலாம். எனவே, ஒன்றுக்கு நான்கு பெயர்களாக நாம் பரிந்துரைப்பது நன்று. இது தொடர்பாக எவருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கும் பட்சத்தில் இன்னும் 3 நாட்களுக்குள் தெரிவிக்கவும். அதன் பிறகு, இதனைத் தமிழ் விக்கிப்பீடியாவின் அலுவல் முறை பரிந்துரையாக இங்கு தெரிவிக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 07:03, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 08:05, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:08, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். சோடாபாட்டில் பெயர் ஏற்கனவே இங்கு சேர்க்கப்பட்டுள்ளது இரவி.--ஆர்.பாலா (பேச்சு) 08:17, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
ஆம், சோடாபாட்டில் பெயர் ஏற்கனவே அங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிமீடியா சமூகம் சார்பாகவும் பரிந்துரைக்கும் போது, அப்பரிந்துரைக்கு இன்னும் வலு கூடும்.--இரவி (பேச்சு) 08:19, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 08:19, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இக்கூட்டத்துக்கான நாள், கலந்து கொள்வோர் முடிவான பிறகு, தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் இங்கு கலந்துரையாடி அதன் இணக்க முடிவை நமது சார்பாளர்கள் மூலம் முன்வைக்குமாறும் கேட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் யார் கலந்து கொண்டாலும், நமது சமூகத்தின் முறையான கருத்தைப் பதிவு செய்யவும் முடியும்.--இரவி (பேச்சு) 08:22, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:08, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மயூரநாதன் (பேச்சு) 15:11, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 15:30, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:22, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 09:20, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இற்றை: நாம் பரிந்துரைத்த சார்பாளர்கள் அனைவரையும் அழைத்துள்ளார்கள். தமிழ் விக்கிமீடியர்களின் அலுவல்முறை பரிந்துரைகளைத் தருவது தொடர்பான உரையாடலுக்கு இங்கு வாருங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 21:40, 18 செப்டம்பர் 2014 (UTC)

நாம் சார்பாளர் பரிந்துரைகளை முன்வைத்த பிறகு சிரீக்காந்த் தனிப்பட்ட காரணங்களுக்காக வர முடியாது என்று தெரிவித்துள்ளார். சுந்தரும் வேறு பயணங்கள் குறுக்கிடலாம் என்பதால் கலந்து கொள்வது உறுதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே, இருவருக்கும் மாற்றாக மேலும் இரு பயனர்களைப் பரிந்துரைக்கிறேன்.

  • பயனர்:செல்வா - ஒரு பேராசிரியராக, பல்வேறு நிறுவனங்களில் பங்கு கொண்டு அனுபவம் மூலம் திறம்பட கருத்துகளை முன் வைக்க முடியும்.
  • பயனர்:Commons sibi - தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறகட்டளையின் செயலர் என்ற முறையில் இந்தியாவில், தமிழகத்தில் அமைப்பு அடிப்படையிலான செயற்படுகள், வேர்மட்டச் செயற்பாடுகள் பற்றிய புரிதல் உள்ளவர். விக்கிமீடியாவில் பெண்கள் பங்களிப்புக்காக தொடர் கல்லூரி பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். விக்கிமீடியா இந்தியக் கிளையின் உறுப்பினர்.

இன்னும் 12 மணி நேரங்களுக்குள் புதிய சார்பாளர்களின் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் இப்பரிந்துரைகளுக்கு விருப்பம் தெரிவித்து உங்கள் ஆதரவைத் தர வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:05, 19 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 14:24, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--சோடாபாட்டில்உரையாடுக 14:26, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:39, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 14:41, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 15:40, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:21, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--சுந்தர் \பேச்சு 05:36, 20 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:41, 20 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 08:55, 20 செப்டம்பர் 2014 (UTC)

ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. செல்வாவையும் சிபியையும் முறைப்படி பரிந்துரைத்துள்ளோம். --இரவி (பேச்சு) 09:24, 20 செப்டம்பர் 2014 (UTC)

கிறித்துப்பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புத்திட்டம்[தொகு]

சென்ற ஆண்டு கிறித்துப்பல்கலைக்கழகத்தில் தமிழைப்பாடமாகக் கொண்ட மாணவ மாணவியருக்கு விக்கிப்பீடியாவில் தொகுக்கும் பணியைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருந்தனர். இதற்காக ஒருநாள் நான் பயிற்சியளித்தேன். வில்லுப்பாட்டில் சிவனியம் என்ற நல்ல கட்டுரையொன்றும் வேறு சில கட்டுரைகளும் மாணவர்கள் வழியாகக் கிடைத்தன. ஆனால் அதிலிருந்து தொடர்ச்சியான பங்களிப்பாளர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. இம்முறை மீண்டும் பயிற்சிக்கு அழைத்தார்கள். இருந்தாலும் காலம் குறைவாக இருந்ததாலும் எனக்கு விடுப்பு கிடைக்காததாலும் அவர்களது காலக்கெடு முடியவிருந்ததாலும் தொலைபேசி வழியாக அவர்களது ஆசிரியைக்கும் போன ஆண்டு சிறப்பாகப் பங்களித்த மாணவிக்கும் பயிற்சியளித்தேன். சென்ற ஆண்டின் பயிற்சி வகுப்பின் ஒலிக்கோப்பும் அவர்களிடம் இருந்ததாகச் சொன்னார்கள். மேலும் உதவிக்கு அந்தப்பல்கலையில் முகாமிட்டிருக்கும் பிறவிக்கி ஆர்வலர்களையும் CIS-A2K அலுவலர்களையும் அணுகுமாறு கேட்டிருந்தேன். அவர்களில் இரகீம் என்னை அழைத்துப்பேசினார். மாணவர்கள் குறுகியகாலத்தில் விக்கி கட்டுரை எழுதும் அளவுக்கு தேர்ச்சிபெறுவது சிரமம். எனவே அவர்களுக்கு விக்கிமூலத்தில் ஒரு பக்க அளவுக்குப் பதிவேற்றும் பணியைத்தரலாம் என்றிருக்கிறோம் என்றார். இதுதொடர்பாக நாளை என்னைச் சந்திக்க விரும்புகிறார். அண்மையில் தமிழ்வளர்ச்சிக்கழகத்திடம் கொடையாகப்பெற்ற கலைக்களஞ்சியத்தொகுதிகளில் ஒரு சிறு பகுதியைப் பதிவேற்றும்படி கூறலாமா? -- சுந்தர் \பேச்சு 12:56, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 14:25, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சுந்தர், CIS-A2Kன் பல்வேறு விக்கிமீடியா செயற்பாடுகள் குறித்து எனக்குக் கடுமையான விமரிசனம் உள்ளது. இந்தச் செயற்பாட்டைப் பொருத்தவரை, கல்லூரி மாணவர்களைத் தட்டச்சுப் பணியில் ஈடுபடுத்துவது ஆற்றல் விரயம். ஏதாவது ஒன்றைச் செய்து கணக்கு காட்டுவதற்கு மட்டும் தான் இது உதவும். தவிர, நேரடியாக விக்கியில் முறையாக உரையாடி, சமூகத்தின் ஒப்புதல் பெற்று திட்டங்களை வகுக்காமல் ஒரு சிலர் வழியாக இது போன்ற கருத்து, உதவிகளைப் பெற்றுச் செயல்பட்டுப் பிறகு சமூகத்தின் ஒப்புதல் பெற்று தான் செய்தோம் என்கிறார்கள். எனவே, என்ன செய்வது என்றாலும் நேரடியாக அந்தந்த திட்டங்களில் அவர்களே வந்து நேரடியாக உரையாடிச் செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:10, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
எனக்கும் இதுகுறித்துச்சில மாற்றுக்கருத்துகள் உண்டு, இரவி. நான் இங்கு பதிவிடுமுன்னர் இரகீம் பேசியபோது என்னிடம் தகவலைமட்டும் பெற்றுக்கொண்டு விக்கிமூலத்தில் ஆலமரத்தடியில் செய்தி போடுகிறேன் என்றுதான் சொன்னார். போட்டாரா என நான் இன்னும் பார்க்கவில்லை. மற்றபடி தொடர்ந்து தட்டச்சுப்பணியில் ஈடுபடுத்துவது ஆற்றல்விரயமே என்றாலும் இதை அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சியாகத்தான் காண்கின்றனர். அதாவது தமிழ் தட்டச்சையும் மீடியாவிக்கி இடைமுகத்தையும் பழகிக்கொள்ள வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். ஒரு மாணவர் ஒரு பக்கம் மட்டுமே பதிவேற்றுவார். அடுத்த அரையாண்டில் விக்கிப்பீடியா நடைமுறையைப் பழக்கத் திட்டம் போலிருக்கிறது. சென்ற ஆண்டு அறிமுக வகுப்புக்குப்பின்னரும் பல மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவில் எத்தகைய கட்டுரைகளை எழுதவேண்டும், எப்படி உள்ளிட வேண்டும் என்பது புலப்படவே இல்லை என்பது எனது வருத்தம், ஆர்வமின்மைதான் காரணமா தெரியவில்லை. ஒருவேளை தமிழக கல்லூரியில் இதுபோல நடத்தினால் சரியாக இருக்குமோ? -- சுந்தர் \பேச்சு 03:40, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சுந்தர், மலையாள விக்கிமூலம் வியத்தகு அளவில் வளர்ந்து வருகிறது. அவர்கள் IT@School திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களை இதில் ஈடுபடுத்தி வருகிறார்கள். அண்மையில், அவர்கள் நடத்திய போட்டிக்கும் மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதே போன்று பல்வேறு சமூகங்களும் போட்டிகளை நடத்துகின்றன. போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு அணுகுமுறைகள் மூலம் தமிழ் விக்கிமூலத்தை எப்படி வளர்ப்பது என்று நாமும் சிந்திக்கத் தொடங்க வேண்டும். நிற்க ! CIS-A2K இடம் விக்கி நெறிமுறைகளைப் பின்பற்றி விக்கியில் உரையாடுங்கள் என்று பல இடங்களில் கோரிக்கை விடுத்தாலும், விக்கியில் யாரும் உடனடியாக பேசி முடிவெடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஒரு குறையாகச் சொல்கிறார்கள். ஒரு வேளை, வேறு சில மொழிச் சமூகங்களுக்கு இது பொருந்தலாம். ஆனால், தமிழில் அந்த நிலை இல்லை. அதுவும், இரகீம் போன்ற விக்கிப்பீடியா முறைகள் அறிந்தவர்கள் இதனைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களிடம் இது குறித்து கேட்டது போலவே இன்னும் ஒரு விக்கிப்பீடியரிடமும் கேட்டதாக அறிகிறேன். அப்புறம், உங்களைப் போன்றவர்களை Point of contacts என்று அழைக்கிறார்கள் :) விக்கிக்கான point of contact என்பது ஆலமரத்தடியாக அல்லவா இருக்க வேண்டும்? :) இன்னும் தமிழ் விக்கிமூலம் தளத்தில் அவர்கள் உரையாடத் தொடங்க வில்லை. அவர்கள் அவ்வாறு உரையாட முன்வந்தால், அவர்களின் அணுகுமுறை பற்றி உரையாடலாம். மற்றபடி, மாணவர்களுக்கு ஏன் ஆர்வமில்லை என்பது தனியொரு பெரும் உரையாடலாக போகும் :)--இரவி (பேச்சு) 04:29, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
ஏற்கனவே சந்திக்க ஒப்புக்கொண்டதால் இன்று சந்திக்கிறேன். சந்திக்கும்போது இந்த point of contact பற்றிய கருத்தை இன்று வலியுறுத்துகிறேன், இரவி. மற்றபடி ஆலமரத்தடியில் பதியும்போது தொடர்பாடல்குறித்து மேலும் வலியுறுத்துவோம். விக்கிமூலத்தின் வளர்ச்சித்திட்டங்களைப்பற்றி பிறிதோர் இழையில் உரையாடுவோம். தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் கொடையும் அதில் முக்கிய பங்குவகிக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 05:22, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சரி, சுந்தர். நன்றி.--இரவி (பேச்சு) 09:54, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
உங்கள் விமர்சனத்தை இப்போதுதான் பார்த்தேன் இரவி. மிகவும் முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள். விக்கிமீடியா அறக்கட்டளையின் மொத்த அணுகுமுறையிலேயும்கூட எனக்குப்பல விமர்சனங்கள் உண்டு. நடுவில் என்னால் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அளவுக்கு நேரம் வாய்க்காததால் ஒதுங்கிவிட்டேன். நிற்க.
சற்றுமுன் இரகீமிடம் பேசினேன். நேற்றிரவு Christ University UG students typing at Tamil Wikisource, A CIS-A2K project என்ற இழையைத்தொடங்கியிருப்பதாகவும் கட்டாயம் சமூகத்தின் ஒத்துழைப்புடனேதான் இதை அணுகுவேன் என்றும் உறுதியளித்தார். விக்கிக்கு வெளியே இப்போது உரையாடப்போவதையும் அங்கே பதிவதாகவும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் இம்முறை உரையாடலைத் தொடர்வோம். -- சுந்தர் \பேச்சு 11:45, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நேற்று மாலை இரகீமைச் சந்தித்தேன். பின்வரும் தகவல்கள் தெரியவந்தன. கன்னடத்துக்கும், சமக்கிருதத்துக்கும் அங்கு முகாமிட்டிருந்த அலுவலர்கள் வழியாக அந்தந்த மொழித்துறைகள் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள். தமிழ்த்துறைக்கு சரியான ஆள் கிடைக்காததாலும் அவர்களுக்கு இதை பாடத்திட்டத்தில் எப்படி வடிவமைப்பது என்பது தெரியாமலும் தள்ளிப்போட்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் என்னை அணுகி, என்னால் நேரில் செல்லமுடியாத நிலையில் அப்போதுதான் விசயவாடாவில் இதைப்போன்றதொரு திட்டத்தைச் செயல்படுத்தியிருந்த இரகீமைக்கேட்டிருக்கிறார்கள். அவருக்குத் தமிழ் சிறிதுதெரியும் என்பதால் அதைக்கொண்டு நமது சில உதவிப்பக்கங்களை பி.டி.எஃப். வடிவில் அவர்களுக்குத் தந்து பாடத்துக்கென ஒரு உள்வலைதளத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். முதற்கட்டமாக வெறும் தட்டச்சுப்பயிற்சியும் சிறு தேர்வும் வைக்கவிருக்கிறார்கள். தட்டச்சுப்பயிற்சிக்கு முல்லைப்பாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒரு முப்பது சொற்களை எழுதித்தருமாறு கேட்டார். அதை வைத்து சில தட்டச்சு கேள்விகள் இருக்கும் போலிருக்கிறது. அடுத்தடுத்த அரையாண்டுகளில் படிப்படியாக அவர்களை விக்கியில் பயனர்வெளியில் முதலிலும், பின்னர் கட்டுரைவெளியிலும் பங்கேற்கும் வகையிலும் பயிற்சிளிக்கவுள்ளனர். அவருடன் பேசியதில் தனிப்பட்ட அளவில் அவருக்கு அக்கறை இருப்பதாகத்தெரிகிறது. அடுத்து ஓசூரிலும் இதுபோலத்தொடங்க எண்ணுகிறார். நிற்க.
இரவி, மேலே விமர்சனத்தில் கேட்டுள்ள கேள்விகள் முக்கியமானவை. தொடர்ந்தும் சரியான களங்களில் எழுப்பவேண்டும். ஆனால், ஓர் ஒப்பந்தப்புள்ளியில் குளறுபடியிருந்து சாலை அமைத்தால் அதைப்பற்றி கேள்வி எழுப்பினாலும் அந்தச்சாலையைப் பயன்படுத்தாமல் விட மாட்டோமே, அதுபோல இதுபோன்ற திட்டங்களைப் பயன்படுத்தவும் செய்யவேண்டும் என நான் கருதுகிறேன். திட்டத்தின் நோக்கமும் பயனும் சரியா எனப் பார்ப்போம். இவ்வளவு வளம் செலவழித்து இவ்வளவு குறைவான பயனா என்ற கேள்வியை வேறிடத்தில் முன்வைக்கலாம். அதைத்தவிர, நமது இயல்பான வளர்ச்சியையும் அலுவல் கணக்கில் காட்டிவிடாமல் இருக்க தகுந்த அளவைகளை ஏற்படுத்துவோம். இது என் தனிக்கருத்து மட்டுமே. மற்றபடி ஏற்கனவே இரவி விக்கிமூல ஆலமரத்தடியில் உரையாடலைத் தொடர்ந்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாடலாம். -- சுந்தர் \பேச்சு 10:22, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சுந்தர், இது தனியொரு பாடத்திட்டமா அல்லது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியா என்று தெளிவில்லை. இது போன்ற இன்னும் பல விவரங்களை விக்கிமூலத்தில் கேட்க வேண்டும். கிறித்துப் பல்கலைக்கழகத்திடம் இப்படி ஒரு பாடத்திட்டத்தை முன்வைத்ததே CIS தான். இரகீம் ஒரு CIS ஊழியர் தான். நீங்கள் சொன்னதில் இரகீம் கிறித்துப் பல்கலைக்கு இயன்ற அளவு உதவுவது போல் ஒரு தோற்றம் வருவதால் இதனைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. CIS திட்டங்களின் மீதான ஒட்டு மொத்த விமரிசனங்களைத் தனியாகப் பார்க்கலாம். ஆனால், பூனாவில் விக்கிமீடியா கல்வித் திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை ஆய்ந்து ஒரு பரிந்துரையை அளித்துள்ளார்கள். அதன் முக்கிய பரிந்துரைகளைக் கூட இப்போதும் இவர்கள் பின்பற்றவில்லை. முக்கிய இரு பரிந்துரைகள்: 1. மாணவர்கள் தன்னார்வமாகவே இத்திட்டத்தில் ஈடுபட வேண்டும். 2. கல்வித் திட்டம் சமூகத்தின் துணையுடன் உருவாக்கப்பட வேண்டும். இந்த இரண்டு விசயங்களையும் ஒழுங்காகச் செய்தால், மாணவர்களுக்குத் தட்டச்சு பழகவில்லை, தொடர் ஆர்வம் இல்லை என்பன ஒரு பிரச்சினையாகவே இருக்காது. மற்ற இந்திய விக்கிச் சமூகங்கள் தங்களுடன் முனைப்பாக ஒருங்கிணைந்து செயல்படவில்லை அல்லது விக்கிக்கு வெளியே கருத்து சொன்னதாகச் சொல்லி திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். எனவே, குறைந்த பட்சம் தமிழ் விக்கிச்சமூகத்துடனாவது முறையாக உரையாடி முன்னகர்வது சரியாக இருக்கும். கூகுள் திட்டத்துடன் நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டு மற்ற விக்கிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது போலவே இதனையும் அணுகுகிறேன். ஒட்டு மொத்தமாக CIS திட்டங்களே வேண்டாம் என்று மறுப்பது என் நோக்கம் இல்லை. தொடர்ந்து விக்கிமூலத்தில் உரையாடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 11:14, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
முக்கிய கேள்விகள்தாம் இரவி . அந்த இழையில் நான் மேலும் எதுவும் கூறுவதற்கிருந்தால் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:37, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி, சுந்தர். விக்கிமூலத்தில் தட்டச்சுப் பயிற்சி முடித்த பிறகு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளும் இடுவார்கள் என்பதால் இது இங்கும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விசயம் தான். தகுந்த இடத்தில், நேரத்தில் உரையாடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 11:42, 27 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா பற்றி விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலரின் குறிப்பு[தொகு]

I very much want the communities to "decide for themselves"! I look forward to the fruits of such community decisions in the form of, for example grant proposals that we could directly support, or in the form of direct communication with WMF for non-financial support as well (evaluation, communication/media, technical tools, etc.). (Indeed, I'm hope we can see some such expressions of community will in the relatively-simple question of nominating delegates for this meeting, right on this page...) Some communities (one notable example is the Tamil community) are remarkably organized and self-sufficient, and have found (I think) a comfortable modus vivendi with the rest of the movement, where they run their own programs and activities, reject "interventions", and occasionally seek and receive WMF grants to support those activities. I think that's fantastic, and any community that is interested in this model and able to adopt it would be absolutely welcome to do so - https://meta.wikimedia.org/wiki/Talk:India_Community_Consultation_2014#Suggestions பக்கத்தில் இருந்து...--இரவி (பேச்சு) 17:57, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:51, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 02:23, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 02:56, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 09:22, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நல்லது. -- சுந்தர் \பேச்சு 12:21, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 09:22, 3 செப்டம்பர் 2014 (UTC)