செல்லினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sellinam logo.png

செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியது. இதை தைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிட்டது. நோக்கியா, சாம்சங் போன்ற கருவிகளில் இயங்கி வந்த செல்லினம், பின்னர் ஐபோன், ஐபேடு, ஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005ஆம் ஆண்டு “Most Innovative Mobile Application” என்ற பிரிவில், மலேசிய அரசின் ஆதரவில் வழங்கப்படும் “Malaysian ICT Excellence Award” என்ற விருதை வென்றது செல்லினம் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "செல்லினத்தைப் பற்றி". பார்த்த நாள் 25-09-2021.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லினம்&oldid=3357863" இருந்து மீள்விக்கப்பட்டது