மத்தியதரைக் கடல் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்தியதரைக் கடல் பிராந்தித்தின் வரைபடம்

மத்தியதரைக் கடல் பிராந்தியம் (Mediterranean Basin) என்பது மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பிரதேசங்களைக் குறிக்கும். இப்பிராந்தியம் நடுநிலக்கடல் சார் வானிலையும், வறண்ட கோடைக்காலம் கொண்டது. இங்கு மத்திய தரைக்கடல் காடுகள் மற்றும் குறுங்காடுகள், அடர்ந்த புதர்கள் கொண்டது. இதன் கிழக்கில் மெசொப்பொத்தேமியா நாகரிகம், தெற்கில் பண்டைய எகிப்து நாகரிகம், வடக்கில் கிரேக்க நாகரிகம் மற்றும் பண்டைய உரோமை நாகரீகம் செழித்திருந்தது.

புவியியல்[தொகு]

கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்ட மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் வரைபடம்
     பாலைவன காலநிலை                நடுநிலக்கடல் சார் வானிலை
     அரை வறண்ட காலநிலை                ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை
     துணை ஆர்டிக் காலநிலை                ஈரப்பதமான கண்ட காலநிலை
     தூந்திர காலநிலை

மத்தியதரைக் கடல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா கண்டங்களை இணைக்கிறது. ஆப்பிரிக்காவின் நைல் நதி மற்றும் ஐரோப்பாவின் ரோன் நதிகள் மத்தியதரைக் கடலில் கலக்கிறது. மத்தியதரைக் கடல் பிராந்தியம் மாறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் உயர்ந்த மலைகள், பாறைகள் நிறைந்த கடற்கரைகள், அடர்ந்த புதர்கள், அரை வறண்ட புல்வெளிகள், கடலோர ஈரநிலங்கள், மணல் கடற்கரைகள் மற்றும் எண்ணற்ற தீவுகளின் நிலப்பரப்பை கொண்டுள்ளது.[1]

மத்தியத்தரைக் கடல் பிராந்தியத்தின் மேற்கே மகரோனிசியா, அசோரசு, கேப் வர்டி[2], மதீரா, மற்றும் கேனரி தீவுகள்[3] மற்றும் மேற்கில் லெவண்ட் பிரதேசமும் அமைநதுள்ளது.

மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் கிழக்கில் மேற்காசியாவில் உள்ள லெவண்ட் மற்றும் அனதோலியா, நெகேவ் பாலைவனம், சிரிய பாலைவனம் மற்றும் ஈராக் பிரதேசங்கள் உள்ளது. [4]

மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் தெற்கில் உள்ள வடக்கு ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனம், அட்லசு மலைத்தொடர் மற்றும் நைல் நதி பாய்கிறது.

மத்தியதரைக் கடலின் வடக்கில் உள்ள தெற்கு ஐரோப்பாவில் ஐபீரிய மூவலந்தீவு, இத்தாலிய மூவலந்தீவு மற்றும் பால்கன் குடாக்கள் அமைந்துள்ளது. பிரனீசு மலைத்தொடர் ஸ்பெயின் மற்றும் பிரான்சு நாடுகளை பிரிக்கிறது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் இத்தாலி மற்றும் நடு ஐரோப்பாவை பிரிக்கிறது. இத்தாலிக்கு கிழக்கே உள்ள ஏட்ரியாட்டிக் கடல் மற்றும் பால்கன் மலைகள் மேற்கு ஐரோப்பா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை பிரிக்கிறது.

வேளாண்மை[தொகு]

மத்தியதரைக் கடல் பிராந்திய வடிநிலத்தின் முக்கிய பயிர்த்தொழில் கோதுமை, காய்கறி, பருப்புகள் ஆகும். இங்கு வளரும் மரங்கள் ஆலிவ், அத்தி ஆகும். பழங்களில் கிச்சிலி, எலுமிச்சை, திராட்சைப்பழம் ஆகும்.

நடுநிலக் கடலைச் சுற்றியுள்ள நாடுகள் பட்டியல்[தொகு]

தெற்கு ஐரோப்பா[தொகு]

 1. போர்த்துக்கல்
 2. எசுப்பானியா
 3. ஜிப்ரால்ட்டர் (ஐக்கிய இராச்சியம்)
 4. பிரான்சு
 5. மொனாக்கோ
 6. இத்தாலி
 7. கிரேக்கம்
 8. சுலோவீனியா
 9. குரோவாசியா
 10. பொசுனியா எர்செகோவினா
 11. மொண்டெனேகுரோ
 12. அல்பேனியா
 13. பல்கேரியா
 14. துருக்கி
 15. சைப்பிரசு
 16. சிரியா
 17. லெபனான்
 18. இசுரேல்
 19. பாலத்தீனம்
 20. எகிப்து
 21. லிபியா
 22. துனீசியா
 23. அல்ஜீரியா
 24. மொராக்கோ

நடுநிலக் கடலிக் உள்ள பெரிய தீவுகள்[தொகு]

நடுநிலக் கடலின் இருபெரும் தீவுகள்: சிசிலி மற்றும் சார்தீனியா
நாட்டின் கொடி தீவின் பெயர் பரப்பளவு (சகிமீ) மக்கள் தொகை
இத்தாலி சிசிலி சிசிலி 25,460 5,048,995
இத்தாலி சார்தீனியா சார்தீனியா 23,821 1,672,804
சைப்பிரசு சைப்பிரஸ் 9,251 1,088,503
பிரான்சு கோர்சிகா கோர்சிகா 8,680 299,209
கிரேக்க நாடு கிரீட் 8,336 623,666
கிரேக்க நாடு ஈவோபியா 3,655 218.000
எசுப்பானியா மயோர்க்கா மயோர்க்கா 3,640 869,067
கிரேக்க நாடு லெஸ்பாஸ் 1,632 90,643
கிரேக்க நாடு ரோடிஸ் 1,400 117,007
கிரேக்க நாடு சீயோஸ் 842 51,936

நடுநிலக் கடல் பிராந்தியத்தின் கடல்கள்[தொகு]

 1. அசோவ் கடல்
 2. கருங்கடல்
 3. மர்மரா கடல்
 4. ஏஜியன் கடல்
 5. ஏட்ரியாட்டிக் கடல்
 6. அயோனியன் கடல்
 7. லெவண்டைன் கடல்
 8. லிபியன் கடல்
 9. லிகூரியன் கடல்
 10. திராசியன் கடல்
 11. அல்போரான் கடல்
 12. டைர்ஹெனியன் கடல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Natura 2000 in the Mediterranean Region. European Commission of the European Union. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-79-11587-5. http://ec.europa.eu/environment/nature/info/pubs/docs/biogeos/Mediterranean.pdf. பார்த்த நாள்: August 6, 2015. 
 2. "Mediterranean Basin". CEPF. பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.
 3. The Status and Distribution of Reptiles and Amphibians of the Mediterranean Basin. Neil Cox, Janice Chanson, Simon Stuart. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-8317-0912-3. https://books.google.com/books?id=HlekD2kK0dAC&q=mediterranean+basin&pg=PP6. பார்த்த நாள்: 29 November 2020. 
 4. Hegazy, Ahmad; Lovett-Doust, Jonathan (2016). "2.18 Iraq". Plant Ecology in the Middle East. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-107874-3. https://books.google.com/books?id=DifRCwAAQBAJ. "the Eastern Mediterranean conifer-sclerophyllous-broadleaf forest ecoregion, which extends slightly into Iraq" 

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]