உள்ளடக்கத்துக்குச் செல்

லெவண்டைன் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெவண்டைன் கடல்
வகைகடல்
வடிநில நாடுகள்கிரேக்கம் (நாடு), துருக்கி, எகிப்து, சிரியா, லெபனான், இசுரேல், ஜோர்தான், சைப்பிரசு, ஈராக்கு, சினாய் தீபகற்பம், நதிநீர் வரத்துக்காக பல நாடுகள் வடிநிலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேற்பரப்பளவு320000 சகிமீ (120000 சதுர மைல்கள்)
லெவண்டைன் கடலின் நீளம்

லெவண்டைன் கடல் (The Levantine Sea) என்பது மத்தியதரைக் கடலின் கடைக்கோடி கிழக்குப் பகுதியில் உள்ளது. .

நிலவியல்[தொகு]

லெவண்டைன் கடல் வடக்கு மற்றும் வடகிழக்கு மூலையில் துருக்கியையும், கிழக்கில் சிரியா, லெபனான், இஸ்ரேல் மற்றும் கிழக்கில் காசா பகுதி, தெற்கில் எகிப்து மற்றும் வடமேற்கில் ஏஜியன் கடல் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டுள்ளது. இப்பகுதியின் மேற்கு எல்லை உருவமற்றுக் காணப்படுவதால், மத்தியதரைக்கடல் (மெடிட்டெரேனியன்) என்பது ஒரு சொற்பதமாகவே பொதுவான வழக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. மத்திய தரைக்கடலின் (லிபிய கடல்) பகுதிக்கு அடுத்த திறந்த மேற்கு எல்லையானது லிபியாவிலிருந்து கௌடாசுக்கு ராஸ் அல் எலால் தலைநிலப்பகுதிகளிலிருந்து எழும் ஒரு கோடாக வரையறுக்கப்படுகிறது.

அதன் துணைக்குழுவில் மிகப்பெரிய தீவு சைப்ரஸ் ஆகும் . அதிகபட்ச ஆழம் 4,384 மீ (14,383 அடி) கிரீட்டிற்கு தெற்கே 80 கிலோமீட்டர்.(50 மைல்கள்) தொலைவில் பிளினி அகழியில் காணப்படுகிறது. லெவண்டைன் கடல் 320,000 சதுர கிலோமீட்டர் (120,000 சதுரமைல்கள்) பரப்பை உள்ளடக்கியது .

சைப்ரஸுக்கும் துருக்கிக்கும் இடையிலான லெவண்டைன் கடலின் வடக்குப் பகுதியை மேலும் சிலிசியன் கடல் என்று குறிப்பிடலாம். வடக்கில் இரண்டு பெரிய விரிகுடாக்கள் உள்ளன, இஸ்கெண்டெரூன் வளைகுடா (வடகிழக்கில்) மற்றும் அந்தல்யா வளைகுடா (வடமேற்கில்).ஆகியவை ஆகும்.

வடிநிலங்கள்[தொகு]

லெவண்ட் வடிநிலம் அல்லது லெவண்டைன் வடிநிலம் (யுஎஸ்ஈஐஏ)

லெவியதன் வாயுப்படுகை லெவன்டைன் வடிநிலத்தின் தென்கிழக்கு மூலையில் மத்தியப் பகுதியில் உள்ளது.[1] [2]

லெவண்டைன் ஆழ்கடல் வடிநிலத்தின் மேற்கில் நைல் சமவெளியின் வடிநிலம்உள்ளது, அதைத் தொடர்ந்து ஹெரோடோடஸ் வடிநிலம், (130,000 சகிமீ பெரியது) மற்றும் 3,200 மீ (10,500 அடி) வரை ஆழமுடையது.[3] இது -340 மில்லியன் ஆண்டுகள் வரை சாத்தியமான வயதில் - உலகளவில் அறியப்பட்ட மிகப் பழமையான கடல் மேலோடு என்று நம்பப்படுகிறது. [4]

சூழலியல்[தொகு]

சூயஸ் கால்வாய் 1869 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது, இது லெவண்டைன் கடலை செங்கடலுடன் இணைக்கிறது – முக்கியமாக பெரிய கப்பல்களுக்கு. செங்கடலானது கிழக்கு மத்தியதரைக் கடலை விட சற்று உயரமாக அமைந்திருக்கிறது, எனவே, கால்வாயானது அலைகளால் ஆன ஒரு நீரிணையாக செயல்படுகிறது. இது மத்தியதரைக் கடலுக்குள் தண்ணீரை வெளியேற்றும். கசப்பான ஏரிகள் – ஹைபர்சலின் இயற்கை ஏரிகள், கால்வாயுடன் தொடர்பிலிருப்பது – பல தசாப்தங்களாக செங்கடல் இனங்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்வதற்கு ஒரு தடையாக இருந்தன, ஆனால், அவற்றின் உப்புத்தன்மை செங்கடலுடன் சமமாக இருந்ததால், இடம்பெயர்வுக்கான தடை நீக்கப்பட்டது, செங்கடலில் இருந்து தாவரங்கள் மற்றும் விலங்குகள் கிழக்கு மத்தியதரைக் கடலில் குடியேறத் தொடங்கியுள்ளன. கால்வாயின் தலைமைப் பொறியாளரான ஃபெர்டினாண்ட் டி லெசெப்சின் பெயரால் இது லெசெப்சியன் இடம்பெயர்வு என அழைக்கப்படுகிறது. .

நதி வெளியேற்றத்தின் பெரும்பகுதி நைல் நதியினைச் சார்ந்தது ஆகும். அஸ்வான் உயர் அணை 1960 களில் ஆற்றின் குறுக்கே அமைந்திருப்பதால், இது எகிப்திய விவசாயம் மற்றும் மக்கள் தொகையை பெருக்க உதவுகிறது. இது கடலுக்கு, நன்னீரின் ஓட்டம், மண்ணில் உள்ள மலை தாதுக்கள் மற்றும் வண்டல் படிவுகள் மூலம் பயணிக்கும் தூரம் (இதற்கு முன், வெள்ள நீரால் ஏற்பட்டது) குறைந்துள்ளது. இது கடலை முன்பை விட சற்று உப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைவானதாக ஆக்குகிறது. இது மீனவர்களின் வலையில் காலை நேர மத்தி மீன் விழும் அளவைக் குறைத்துவிட்டது, ஆனால், இது பல செங்கடல் வாழ் உயிரினங்களுக்கு சாதகமானதாகவும் உள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2011-07-17.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2011-02-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Hydrocarbon Potential in Herodotus Basin, Eastern Mediterranean, p. 2
  4. Ben-Gurion University of the Negev: Three Hundred Million Years Under the Sea
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவண்டைன்_கடல்&oldid=3817211" இலிருந்து மீள்விக்கப்பட்டது