போடன்பிளாட் நடவடிக்கை
போடன்பிளாட் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
பல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
கனடா நியூசிலாந்து போலந்து[8][8] ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஆர்தர் கோனிங்காம் ஜிம்மி டூலிட்டில் ஹோய்ட் வாண்டென்பர்க் | வெர்னர் கிரெய்பி ஜோசம் ஷ்மிட் டய்ட்ரிக் பெல்ஸ் கார்ல் ஹென்ஷெல் கோட்டார்ட் ஹான்ரிக் |
||||||
படைப் பிரிவுகள் | |||||||
2வது வான்படை 8வது வான்படை 9வது வான்படை | 2வது சண்டை விமானக் கோர் 3வது சண்டை விமான டிவிசன் 5வது சண்டை விமான டிவிசன் |
||||||
இழப்புகள் | |||||||
305 விமானங்கள் அழிக்கப்பட்டன; 190 சேதமடைந்தன | 280 விமானங்கள் அழிக்கப்பட்டன; 69 சேதமடைந்தன |
போடன்பிளாட் நடவடிக்கை (Operation Baseplate, இடாய்ச்சு: Unternehmen Bodenplatte) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு வான்படைச் சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்படையான லுஃப்ட்வாஃபே வடமேற்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டிருந்த நேச நாட்டு வான்படைகளை அழிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடிக்க டிசம்பர் 16, 1944ல் ஜெர்மனி பல்ஜ் தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் இரு வாரங்களில் படை முன்னேற்றம் தடைபட்டு இழுபறி நிலை உருவானது. இந்த மந்த நிலையை மாற்றி தடைபட்ட தரைப்படை முன்னேற்றத்தை மீண்டும் தொடங்க ஜனவரி 1, 1945 அன்று லுஃப்ட்வாஃபே போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது. பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டிருந்த நேசநாட்டு வான்படைப்பிரிவுகளைத் தாக்கி அழித்து பல்ஜ் போர்முனையின் வான்வெளியில் வான் ஆதிக்கம் அடைவதே இத்தாக்குதலின் நோக்கம். மிக ரகசியமாக இத்தாக்குதலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றதால், நேச நாட்டு உளவுத்துறைகளால் இது நடைபெறப் போகிறதென்று கண்டுபிடிக்கமுடியவில்லை. மேல்நிலை மற்றும் கீழ்நிலை உத்திகள் அளவில் இத்தாக்குதல் நேசநாட்டுப் படைகளை வியப்பில் ஆழ்த்தினாலும், நினைத்த இலக்குகளை அடைய முடியவில்லை.
இத்தாக்குதலில் லுஃப்ட்வாஃபே விமானங்கள் நூற்றுக்கணக்கான நேசநாட்டு விமானங்களை அவற்றின் ஓடுதளங்களில் அழித்தன. ஆனால் நேசநாட்டு விமான எதிர்ப்பு பீரங்கிகளால் ஜெர்மானிய விமானங்கள் பலவும் சுட்டு வீழ்த்தப்பட்டன. தாக்குதலுக்கான ஆயத்தங்கள் வெகு ரகசியமாக இருந்தபடியால் ஜெர்மானிய விமான எதிர்ப்பு பீரங்கிக் குழுமங்களுக்கும் தாக்குதலைப் பற்றிய முன்னறிவிப்பு செய்யப்படவில்லை. இதனால் லுஃப்ட்வாஃபே விமானங்களை எதிரி விமானங்கள் என்று தவறாகக் கருதி அவை தாக்கியதால், லுஃப்ட்வாஃபேக்கு மேலும் பல இழப்புகள் ஏற்பட்டன. எதிர்பார்த்தபடி பல்ஜ் போர்முனையில் லுஃப்ட்வாஃவேவினால் வான் ஆதிக்கம் பெற இயலவில்லை. நேசநாட்டு விமானங்கள் ஜெர்மானியத் தரைப்படைகளைத் தாக்குவது நிற்கவில்லை.
நேசநாட்டு விமானங்கள் ஓடு தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த போது அழிக்கப்பட்டதால், அவற்றின் விமானிகள் உயிர் தப்பினர். போரினால் பாதிக்கப்படாத நேசநாட்டு தொழிற்சாலைகள் எளிதில் புதிய விமானங்களைத் தயாரித்து இழப்புகளை ஈடுகட்டி விட்டன. ஆனால் போரினால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்த ஜெர்மானியத் தொழில் துறையால் லுஃப்ட்வாஃபே இழந்த விமானங்களுக்குப் பதில் புதிய விமானங்களைத் தயாரிக்க முடியவில்லை. மேலும், லுஃப்ட்வாஃபே விமானங்கள் நடுவானில் அழிக்கப்பட்டபடியால் உயிரிழந்த தேர்ந்த விமானிகளுக்கும் ஏனைய வான்படை வீரர்களுக்கும் பதில் குறுகிய காலத்தில் புதிய விமானிகளுக்கு ஜெர்மனியால் பயிற்சி அளித்து தயார் செய்ய முடியவில்லை. இத்தாக்குதல் மேல்நிலை உத்தியளவில் ஜெர்மனிக்குப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. வெகுவாக பலவீனமடைந்த லுஃப்ட்வாஃபே இதற்குப் பின் போர் முடியும்வரை எந்தவொரு பெரும் தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Girbig 1975, p. 73.
- ↑ Prien & Stemmer 2002, p. 349.
- ↑ Franks 1994, pp. 163–165.
- ↑ Zaloga 2004, p. 61.
- ↑ Girbig 1975, p. 114.
- ↑ Cladwell 2007, p. 262.
- ↑ Girbig 1975, p. 12.
- ↑ 8.0 8.1 Agreement #4 of the 11 June 1940 between the United Kingdom and Poland recognised the Polish Navy and Army as sovereign but that of the Air Force was refused. Agreement #7 reversed this decision in June 1944, and the Polish Air Force was "returned" to full Polish jurisdiction (with the exception of combat assignments, although the Poles retained the right to veto). Peszke 1980, p. 134
மேற்கோள்கள்
[தொகு]- Caldwell, Donald and Muller, Richard. The Luftwaffe Over Germany: Defense of the Reich. Greenhill books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85367-712-0
- de Zeng, H.L; Stanket, D.G; Creek, E.J. Bomber Units of the Luftwaffe 1933-1945; A Reference Source, Volume 1. Ian Allen Publishing, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85780-279-5
- de Zeng, H.L; Stanket, D.G; Creek, E.J. Bomber Units of the Luftwaffe 1933-1945; A Reference Source, Volume 2. Ian Allen Publishing, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-903223-87-1
- Forsythe, Robert. JV 44; The Galland Circus. Burgess Hill, West Sussex, UK: Classic Publications, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9526867-0-8
- Forsythe, Robert & Laurier, Jagdverband 44: Squadron of Experten. Osprey. Oxford. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1846032943
- Franks, Norman The Battle of the Airfields: 1 January 1945. Grub Street, London, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-898697-15-9
- Franks, Norman Fighter Command Losses of the Second World War: Volume 3, Operational Losses, Aircraft and Crews 1944-1945. (Incorporating Air Defence Great Britain and 2nd TAF Midland. London, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85780-093-1
- Girbig, Werner. Start im Morgengrauen. Germany: Pietsch-Verlag Paul Pietsch Verlage GmbH + Co, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-613-01292-8
- Girbig, Werner. Six Months to Oblivion: The Eclipse of the Luftwaffe Fighter Force Over the Western Front, 1944/45. Schiffer Publishing Ltd. 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88740-348-4
- Johnson, J.E. Wing Leader (Fighter Pilots). London: Goodall Publications Ltd. 2000 (original edition 1956). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-907579-87-6.
- Manrho, John & Pütz, Ron. Bodenplatte: The Luftwaffe's Last Hope-The Attack on Allied Airfields, New Year's Day 1945. Ottringham, United Kingdom. Hikoki Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-902109-40-6
- Peszke, Michael Alfred A Synopsis of Polish-Allied Military Agreements During World War Two The Journal of Military History. October 1980. Volume 44. Number 3, pp. 128–134
- Parker, Danny S. To Win The Winter Sky: The Air War Over the Ardennes, 1944-1945. Da Capo Press, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-938289-35-7.
- Prien, Jochen & Stemmer, Gerhard. Jagdgeschwader 3 "Udet" in World War II. Atlgen, Germany: Schiffer Military History, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7643-1681-8
- Weal, John. Jagdgeschwader 27 'Afrika'. Osprey, Oxford. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84176-538-4
- Weal, John. Focke-Wulf Fw 190 Aces of the Western Front. Osprey, Oxford. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85532-595-1
- Weal, John. Bf 109 Defence of the Reich Aces. Osprey, Oxford. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84176-879-0
- Weinberg, Gerhard. A World At Arms, Cambridge University Press: 2 edition, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-05216182-6-7