பாக்கு நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாக்குநீரிணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பாக்கு நீரிணை

பாக்கு நீரிணை தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். மேட்டுப்பாங்கான ராமர் பாலம் இதனை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது[1]. இது 53 முதல் 80 கி. மீ (33 முதல் 50 மைல்) அகலம் உடையது. இந்த நீரிணைக்கு மதராசு மாகாணத்தின் ஆளுனராக (1755 - 1763) இருந்த சர் இராபர்ட் பாக் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்கான திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

  1. இலங்கை வரைபடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கு_நீரிணை&oldid=2736333" இருந்து மீள்விக்கப்பட்டது