இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.
கட்டுரை எண்ணிக்கையில் நல்ல முன்னேற்றம். 8000 ஐத் தாண்டியாயிற்று. யார் யாருக்கு எந்த எந்தத் துறையில் ஈடுபாடு உள்ளதோ அவற்றிலெல்லாம் இயன்றவரை நல்ல கட்டுரைகள் எழுதவேண்டும். இப்பொழுது புதிதாக சேர்ந்திருக்கும் பல பயனர்களும் ஆளுக்கு ஓரிரண்டு கட்டுரைகள் எழுதினாலும் நாம் மிக நல்ல முறையில் முன்னேறலாம். விரைவுந்தத்தைத் தளராமல் இன்னும் பலரையும் சேர்த்து தொடர்ந்து எழுதினால் 2 மாதங்களுக்கு முன் 10,000 கட்டுரை இலக்கை எட்டுவோம். தரம், கட்டுரைக் கருத்து பரட்சி, தொடர்புடைய கட்டுரைகள் திரட்சி, அடிப்படைக் கருத்துக்கள் வளர்ச்சி என்று பல்முனை நோக்கும் கருத்தில் கொள்வோம்.--செல்வா 02:37, 19 மார்ச் 2007 (UTC)
பன்மொழி விக்கிகளில் ஒராண்டாக 70-71 ஆம் இடத்திலேயே இருந்த தமிழ் இப்பொழுதுதான் 66க்கு வர இருக்கின்றது. முன்னே இருந்த மராத்தி மொழியைத் தாண்டும் வாய்ப்புள்ளது. நமக்கு மிகப்மிகப் பின்னே இருந்த வங்காளி, இந்தி மொழி விக்கிகள் இப்பொழுது மிக மிக முன்னே உள்ளது. தரத்தில் தமிழே இந்திய மொழிகளில் அனைத்திலும் முன்னிருந்தாலும், கட்டுரை எண்ணிக்கையில் பின்னிருந்தது உண்மை. புதிதாக வந்து சிறப்பாக பங்களிக்கும் ஒரு சிலரோடு இன்னும் பதிவு செய்துள்ள பலரும் பங்களித்தால் நாம் இன்னும் எவ்வளவோ முன்னேறலாம். மேலும் பல பயனர்கள் முன்வருவார்கள் என நம்புவோமாக!--செல்வா02:55, 19 மார்ச் 2007 (UTC)Reply
sustainabilityக்குத் தற்போது தமிழ் விக்கியில் பேண்தகுநிலை, தாங்குவளர்ச்சித் திறன் என்று வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இரண்டு சொற்களும் திருப்தியாக இல்லை. பேண்த்தகைமை என்று சொன்னால் சரி வருமா? தமிழ் மரபுக்கு ஏற்ற சுருக்கமான சொல் உண்டா? என் ஆய்வுப் படிப்பே sustainability குறித்துத் தான் :) இந்த ஒரு சொல் தடுக்குவதால் பல கருத்துக்களைத் தமிழில் தர இயலவில்லை. tide என்பதற்கு tvuல் ஓதம், ஏற்றவற்றம் என்றிருக்கிறார்கள். ஏற்றவற்றம் காரணப்பெயராக இருக்கிறது. ஓதம் - சொல் மூலம் என்ன? solar energy குறித்த எழுதலாம் என்று இருக்கிறேன்? சூரிய ஆற்றல் என்றால் அனைவருக்கும் புரியும். சூரியன் தமிழ்ச் சொல் என்பதில் குழப்பமாக இருக்கிறது. ஞாயிறாற்றல் என்று எழுதலாமா?--ரவி19:38, 20 மார்ச் 2007 (UTC)Reply
பேண்தகைமை எனலாம். பேண்தகை என்றும் கூறலாம்.(பெருந்தகை என்பது போல). பேண்மை என்றால் பொருள் மிக விரிந்துவிடும் போல் தெரிகின்றது. tide என்பது ஓதம் என சொல்லலாம், ஆனால் "ஓதம் காத்துக் கிடக்குது" என்னும் சொல் வழக்கு ஈரம் மிகுந்துள்ளது என்னும் பொருள் கொண்டது. ஆனால் ஓதம் என்பது நீர் உயர்வதைக் குறிக்கும். எனவே ஓதம் கூடுதல்/ஏறுதல், ஓதம் குறைதல்/இறங்குதல் முதலிய சூழல்களுக்குப் பயன்படுத்தலாம். வெள்ளம் என்பதும் பொருந்தும் ஆனால் flood என்பதற்கே பழகிவிட்டது. ஆற்றில் நீர் உயர்வதைத்தான் வெள்ளம் என்பர் - சில நேரங்களில் குதித்துக்கொண்டு திரளாக திரைந்து வருவதும் உண்டு. (கடலுக்குப் பொருந்தாது என நினைக்கிறேன்). ஏற்றவற்றம் என்றும் ஒரு சொல் உள்ளது (தமிழ் லெக்சிகன்).
சூரியன் என்பது தமிழ்தான், சுர்-சுர-சுரம் (சுடு பாலை), சுரீர், சூரன், சூரியன் எல்லாம் தமிழ்தான். எனினும், பலர் தயங்குகின்றனர். சில இடங்களில் கதிரவன், பகலவன் என்றும் பயன்படுத்தலாம், ஆங்கிலத்தில் solar, helios, sun என்று கூறுவதில்லையா, அது போல். தமிழில் 20 சொற்களாவது இருக்கும். ஞாயிற்றின் ஆற்றல் என்று எழுதுவதால் தவறில்லை. கதிரவன் ஆற்றல் என்றும் எழுதலாம். --செல்வா20:13, 20 மார்ச் 2007 (UTC)Reply
சூரியன் தமிழென்றால் அதையே பயன்படுத்தலாம். அதுவே எளிமையான சொல். தகைமை தகுதி, merit, worth என்பது போல் பொருள் தருவதால் பேண்தகைமை என்றால் பேணத் தகுந்த தகுதி உடையது என்று பொருள் வருகிறதோ? sustainability is the ability / possibility to sustain some thing not the qualification to sustain something..பேணியலுகை அல்லது பேணியல்கை? இல்லை, மொத்தமாய் சுருக்கி பேணுகை என்று சொல்லலாமா? ஓதத்துக்கான சொல் விளக்கம் திருப்தி அளிக்கிறது. அதையே பயன்படுத்துகிறேன். எங்களைப் போன்ற ஆர்வமுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டுதலாய் கலைச்சொல்லாக்கம் குறித்த உங்கள் அனுபவங்கள், வழிமறைகளை உங்கள் வலைப்பதிவில் எழுதினால் மிகந்த உதவியாக இருக்கும். நீங்கள் சொல்வது போல் பாடத்திட்டத்தை உருவாக்குபவர் எல்லாம் தமிழ் விக்கிக்கு வந்தால் அருமை தான். நீங்கள் வந்தபோதும் இன்னும் சிலரை அழைத்திருப்பதாகவும் இணைவர் என்று எதிர்ப்பபார்ப்பதாகவும் கூறி இருந்தீர்கள்!! தமிழ் விக்கிக்கு வந்து பங்களிக்க ஏதோ ஒரு கண்ணுக்குப் புலனாகாத உந்து சக்தி இருக்க வேண்டும் போல :) !!
தமிழ் இணையப் பல்கலையில் mass, weight இரண்டுக்கும் நிறை கொடுத்திருக்கிறார்கள். massக்குப் பொருண்மை, திணிவு, நிறை என்று பட்டியல் நீளுகிறது. :( :( தமிழ் இணையப் பல்கலை தள வடிவமைப்பில் ஏராளமான மாற்றங்கள் தேவை. உங்களுக்கு அறிந்தவர்கள் இருந்தால் முயற்சி எடுக்க வேண்டுகிறேன். பொடிப் பசங்களால் அணுக முடியாத இடம் போல் இருக்கிறது!!!--ரவி20:39, 20 மார்ச் 2007 (UTC)Reply
செல்வா, பழகினால் எதிலும் வேகமாகத் தட்டச்சலாம் என்பது உண்மை தான். ஆனால், தமிழ் 99 பழகவும் எளிது. அயர்ச்சியும் அளிக்காது. தயவுசெய்து இது குறித்த என் வலைப்பதிவுக் கட்டுரையைப் படித்துக் கருத்துப் பகிர வேண்டுகிறேன். ஏற்கனவே பாமினி போன்ற முறையைப் பயின்றவர்கள் தமிழ் 99க்கு மாறுவது சற்று சிரமம். ஆனால், ammaa = அம்மா என்று தமிங்கில விசைப்பலகையில் எழுதுபவர்கள் மிக எளிதாக தமிழ் 99க்கு மாற முடியும். --ரவி22:13, 21 மார்ச் 2007 (UTC)Reply
சிவகுமார், போதிய ஆய்வு செய்யாமல் எங்கிருந்து எங்கு சென்றது என்று கூறுவது தவறாகும். எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன். முதலில் தமிழில் அம் என்றால் நீர். அம்பரம் என்றால் கடல். அம்பணம் என்றாலும் நீர், கடல். அம்பா என்றால் நீராடல் (அம்பா ஆடல் என்றும் கூறுவர்). அப்பை = கொன்றை (மஞ்சள் நிறப்பூ). ம-ப சில இடங்களில் மருவி வரும். எ.கா: அமரம்=அபரம் = பின் பக்கம் (முதுகு). இதன் தொடர்பாய் அம்பர் என்பது கடலில் கிடைக்கும் பொருள் என்று வந்திருக்க வேண்டும். இவை மரப்பிசினாயினும், பால்ட்டிக் நாடு போன்ற நாடுகளில் கடற்கரையில் கிடைப்பது -இன்றும் கிடைப்பது. இது திமிங்கிலத்தின் உறுப்பில் சுரக்கும் ("Ambergris, a morbid secretion of the liver or intestines of the spermaceti whale") என்றும் கருதப்படுகின்றது. எப்படியாயினும் கடலோடு தொடர்பு கொண்டது. கடல்-படு-திரவியம் என்றே அறியப்படுகின்றது. தமிழ்வழிப் பொருள் தொடர்பு புரிகின்றது. எப்பொழுதிருந்து இச்சொற்கள் தமிழில் ஆளப்படுகின்றன என்பனவற்றையும் பார்த்தல் வேண்டும். இப்பொழுது ஆங்கிலத்துக்கு வருவோம்.
ஆக்ஸ்போர்டு அகராதியில் amber என்பதற்குக் கீழ்க்காணும் குறிப்பு உள்ளது (சற்று நீளமானது):
அதன் படி கி.பி. 1400ல் இருந்து ஆங்கிலத்தில் வழங்கி வருகின்றது. (கிரேக்க மொழியில் electron Greek name {hlenisacu}{lambda}{epsilon}{kappa}{tau}{rho}{omicron}{nu}).")
. The resin.
3. a. A yellowish translucent fossil resin, found chiefly along the southern shores of the Baltic. It is used for ornaments; burns with an agreeable odour; often entombs the bodies of insects, etc.; and when rubbed becomes notably electric (so called from its Greek name {hlenisacu}{lambda}{epsilon}{kappa}{tau}{rho}{omicron}{nu}). (See also LAMBER.)
c1400 Destr. Troy v. 1666 Bourdourt about all with bright Aumbur. c1450 Bk. Curtasye III. 481 The wardrop he herbers, and eke of chambur Ladyes with bedys of coralle and lambur. 1463 in Bury Wills 15 A peyre bedys of ambyr with a ryng of syluir. a1529 SKELTON Elynour Rummyng 603 But my bedes of amber, Bere them to my chamber. 1552 HULOET, Ambre called lambre or yelow Ambre. 1556 Richmond. Wills (1853) 89 One paire of long beads of awmer. 1602 SHAKES. Ham. II. ii. 200 Thicke Amber, or Plum-Tree Gumme. 1658 SIR T. BROWNE Hydriot. ii. 18 That Romane Urne..wherein were found an Ape of Agate, an Elephant of Ambre. 1735 POPE Ep. Arbuthnot 169 Pretty! in amber to observe the forms Of hairs, or straws, or dirt, or grubs, or worms! 1794 SULLIVAN View Nat. II. 27 Amber, when rubbed, was observed to attract bits of straw, down, and other light bodies. 1847 BLACKWELL Malet's North. Antiq. 374 Byron caught him up, and..preserved him, like a fly in amber, for future generations to wonder at. 1865 CARLYLE Fredk. Gt. I. II. ii. 54 Amber, science declares, is a kind of petrified resin, distilled by pines that were dead before the days of Adam.
மெரியம்-வெப்ஸ்ட்டர் அகராதி, "Etymology: Middle English ambre, from Anglo-French, from Medieval Latin ambra, from Arabic 'anbar ambergris" என்று தருகின்றது. எனவே அராபிக் மொழித்தொடர்பும் இருக்கும்.
--செல்வா00:11, 24 மார்ச் 2007 (UTC)Reply
செல்வா, 10, 000 கட்டுரை இலக்கை விரைவில் அடைந்து விடுவோம் என்ற நிலையில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் உள்ள பிழைகள் மிகவும் உறுத்தலாக இருக்கிறது. குறிப்பில்வழிப் பக்கம் மூலமோ உங்களுக்குப் பிடித்த பகுப்புகள், தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஆகியவற்றில் உள்ள பிற பயனர்களின் கட்டுரைகளை கவனித்து, குறைந்தபட்சம் எழுத்துப் பிழைகளையாவது களைந்து, உரை திருத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு 5 கட்டுரைகள் என்று திருத்தித் தர இயலுமானாலும் நன்று. --ரவி11:04, 30 மார்ச் 2007 (UTC)Reply
என்னால் கூடியதைச் செய்கின்றேன். இது மிகவும் தேவையான ஒன்று என்பதை நான் உணர்ந்தாலும், உரை திருத்தம் செய்வதிலும் ஒரு தேவைநிலைப்படி ஒரு வரிசை இருப்பது நல்லது. முதலில் சிறப்புக் கட்டுரையாக உள்ளவற்றை சரி செய்யவேண்டும். அடுத்தது நல்ல கட்டுரைகளாக 100 தேர்ந்து அவற்றை சரி செய்யவேண்டும். பின்னர் தலைப்பு வாரியாக (விலங்குகள், நாடுகள், தனிமங்கள், எழுத்தாளர்கள் என்று பகுப்பு வாரியாகச் சென்று) திருத்த வேண்டும். ஆங்கிலத்தில் 1,334 சிறப்புக் கட்டுரைகள் உள்ளன (மொத்தம் 1,712,544), ஜெர்மன் மொழியில் சிறப்புக் கட்டுரைகள் 1016 (மொத்தம் 563.923), பிரஞ்ச்சு மொழியில் சிறப்புக் கட்டுரைகள் 336 (மொத்தம் 468 858). நாம் ஒரு 10 கட்டுரைகள் கூட போதிய தரத்துடன் செய்யவில்லை என்பது என் கருத்து. எனவே மேலிருந்து (சிறப்புக் கட்டுரையில் இருந்து) கீழாக கட்டுரைகள் திருத்தப்படுதல் வேண்டும். என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்--செல்வா16:30, 30 மார்ச் 2007 (UTC)Reply
பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 04 போல பிற பயனர்களும் தொகுத்தால் இரண்டு நன்மைகள். ஓரளவு நல்ல கட்டுரைகளையாவது இனம் காணுதல். மற்றையது காட்சிப்படுத்தலுக்கு உதவுதல். அனைத்து தாய்ப்பகுப்புகளில் இருந்து தெரிவு என்ற படியால் கட்டுரைகள் பரப்பும் உறுதி செய்யப்படுகின்றது. Template பேச்சு பக்கத்தில் உண்டு. நன்றி. --Natkeeran16:39, 30 மார்ச் 2007 (UTC)Reply
உதவுகிறேன். முன்னமே பொருள் இலக்கனம் பற்றி உதவுகிறேன் என்று கூறி இன்னமும் செய்யவில்லை. பல உந்துதல்கள் இருக்கும் பொழுது எது முதன்மை பெறுகின்றது என்பது அம்மானை ஆட்டம் போல் ஆகிவிடுகின்றது. --செல்வா16:33, 30 மார்ச் 2007 (UTC)Reply
மார்ச் 28 ஆம் நள் தொடங்கி இப்பொழுது வரை (8 நாட்களில்) 95 கட்டுரைகள்தான் எழுதியுள்ளோம். இது பழைய நிலையான தொய்வுநிலை. நாளொன்றுக்கு 30 கட்டுரைகள் (10 பேர் x3 என்னும் வீதத்தில்) எழுத வேண்டும். ஒரு சிலரால் எழுத இயலாவிடில் பிற பயனர்கள் வந்து கைகொடுக்க வேண்டும்- இயன்ற அளவு. கட்டுரை விரிவாக்கம், உரைத்திருத்தம், செப்பனிடுதல் எல்லாமும் செய்துகொண்டே இதனையும் விடாது செய்தல் வேண்டும். இப்பொழுது யோகேஸ், மது, காயத்திரி போன்ற அருமையாக எழுதும் பயனர்களும் சேர்ந்திருப்பதால், மற்ற பயனர்களும் கைகொடுக்க வேண்டுகிறேன். நிரோ சற்று ஓய்வு எடுக்கட்டும். 9,000க்கு இன்னும் 97 கட்டுரைகள்தாம் உள்ளன. மூன்றே நாட்களில் எட்ட முடியும். அதன் பின் ஒரு மாதத்தில் 10,000 கட்டுரைகளை எட்டிவிடலாம். பயனர்கள் முன்வருவார்களா?!!--செல்வா 22:00, 4 ஏப்ரல் 2007 (UTC)
62 ஆம் இடத்தில் இருந்து 63 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.--செல்வா12:34, 5 ஏப்ரல் 2007 (UTC)Reply
செல்வா, frankly speaking, இந்த எண்ணிக்கைத் தர வரிசை, தினக் கட்டுரை இலக்கு ஆகியவற்றைக் குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று என்னளவில் தோன்றுகிறது. எந்த வித இலக்கும் இல்லாமல் அன்றாட வேலைப்பளு, moodக்கு ஏற்ப பங்களிப்பாளர்கள் செயற்படும்போது இன்னும் மேம்பட்ட, இயல்பான, தரமான கட்டுரைகள் வரும் என்று தோன்றுகிறது. நாளுக்கு இவ்வளவு என்று முனைந்தால் சில சமயம் குறுங்கட்டுரைகளாவே தொடர்ந்து எழுதத் தூண்டுதலாக இருக்கக்கூடும். தொடர்ந்து இரு ஆண்டுகளாகப் பங்களிக்கும் சிலருக்கு ஒரு வித அயர்ச்சியும் வருவது உண்டு. எனவே கட்டுரை உருவாக்கத் தொய்வு புரிந்துகொள்ளத்தக்கதும் எதிர்ப்பார்க்கத்தக்கதுமே என்று நினைக்கிறேன்.--ரவி13:56, 5 ஏப்ரல் 2007 (UTC)Reply
இதற்கு மறுமொழி உங்கள் பேச்சுப் பக்கத்தில் இடுகிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கும் மொழிபெயர்ப்பிற்கான பரிந்துரைகளுக்கும் நன்றி, செல்வா. இடத்திற்கேற்ப மொழிபெயர்க்க வேண்டும் என்பது தெளிவாலிறது. தாமஸ் கன் என்ற அறிஞர் தந்த வரைவிலக்கணத்தை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் நினைத்திருந்த இடப்பொருளும் அதுவே. விரைவில் நான் எண்ணியிருந்த வரியை முழுவதுமாக நோக்கி மொழிபெயர்க்க முயல்கிறேன்.
Thank you for the welcome. Actually a Malayali/Tamil hybrid is my native language, but I am hampered by poor tamil reading skills. I hope to promote content flow between Indian language wikipedias.ராஜா ராம்02:05, 29 ஏப்ரல் 2007 (UTC)Reply
பார்க்கவும். தர ஒப்பீடுகள் செய்ய எனக்கு நேரம் இல்லை. பல்வகைப் பொறுப்புகள் அண்மையில் மிகுந்துள்ளதால் இன்னும் 6-7 நாட்கள் சரிவர பங்கு கொள்ள இயலாது. அயராது உழைக்கும் தமிழ் விக்கி அன்பர்களுடன் இணைந்து பங்களிக்க இயலாமல் இருப்பது கண்டு வருந்துகிறேன். ஒப்பரிய பயன் பெருக்கும் இந்த விக்கி முயற்சி. வேண்டிய அளவு செப்பம் தீட்டி பெரும் அறிவுக்களஞ்சியமாய்த் திகழும்.
தமிழே இன்னும் பெருமளவிலும் முன்னணியில் உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் 5 ஆவ்து இடத்தில் இருந்தாலும். எல்லாத் தர அளவீடுகளிலும் முதலிடத்தில் உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் தெலுங்கு (27K 36 ஆவது இடம்), வங்காளி (15.6K 47 ஆவது இடம்), மணிப்ப்புரி (12.3K 57 ஆவது இடம்), இந்தி (10.4K 60 ஆவது இடம்), தமிழ் (10.2K 61 ஆவது இடம்).
தமிழ் விக்கியின் தரவுப் பருவளவு 33M, வங்காளி 30 M, தெலுங்கு 24 M, இந்தி 17 M, மராத்தி 14 M. நீளமான கட்டுரைகள் முதலான எல்லாத் தர அளவீடுகளிலும் தமிழே முதலிடம். யாரேனும் இவைகளை தொகுத்து அட்டவனைப் படுத்துங்கள்.--செல்வா14:11, 2 மே 2007 (UTC)Reply
தகவல்களிற்கு நன்றி செல்வா, தகவல்கள் ஆர்வமூட்டுகின்றன. சுந்தரும் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. எனக்கும் விக்கிபீடியாவில் பங்களிப்பதில் இந்தமாதம் 23 வரை சற்றுச் சிரமமாகவே இருக்கும் எனினும் அவ்வப்போது அண்மையமாற்றங்களைக் கவனிப்பதோடு இயன்றவரை எனது பங்களிப்பை செய்யமுயல்கின்றேன். அண்மைக்காலமாக எனது பங்களிப்புக் குறைவடைந்துள்ளது கவலையளிக்கின்றது. இந்த மாதம் 23முதல் மீண்டும் பங்களிப்பினை அதிகரிக்கின்றேன். இப்போதைக்கு சிறுசிறு மாற்றங்கள் மற்றும் குறுங்கட்டுரைகளில் கவனம் செலுத்துவேன். --Umapathy15:41, 2 மே 2007 (UTC)Reply
தரக் குறிப்புகள் ஒப்பீட்டு அட்டவனை
எந்த ஒரு நெடுங்குழுவின் அடிப்படையிலும் ஏறுவரிசை இறங்குவரிசையாக வரிசைப்படுத்திப் பார்க்க வசதியுள்ள அட்டவணை. டெரன்ஸ் துடுப்பாட்டப் போட்டிக் கட்டுரையில் இருந்ததைத் தழுவி ஆக்கப்பட்டது.
நன்றி டெரன்ஸ்!
மே 24 ஆம் நாளாகிய இன்றோடு நான் விக்கியில் இணைந்து ஓராண்டு நிறைவு பெறுகின்றது.
இது வரையிலும் 316 கட்டுரைகள் தொடங்கியுள்ளேன். கட்டுரைகளில் எழுதியதைவிட உரையாடல் பக்கங்களிலே எழுதியது அதிகம் இருக்கும் :) மொத்தத் தொக்குப்புகள் 4480. பல கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன்.
என்றாலும் ஒரு கட்டுரையேனும் எனக்கு நிறைவு தடுமாறு எழுதவில்லை. பட்டாம்பூச்சி கட்டுரையை "விரைவில்" சரி செய்து நிறைவு செய்ய எண்ணியுள்ளேன். இதுபோல இன்னும் ஒரு 100 கட்டுரையாவது சற்றேனும் நிறைவு தருவதாக எழுத வேண்டும் என்னும் அவா உள்ளத்துள் கங்கு போல் உள்ளது! இரண்டாம் ஆண்டு இதனினும் சிறந்ததாக அமைய வேண்டும் என்பது என் அவா. எனக்கு ஊக்கம் அளித்த, என் குறைகளைப் பொருத்தருளிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்--செல்வா16:32, 24 மே 2007 (UTC)Reply
செல்வா, உங்களைப் போன்ற படிப்பறிவும், பட்டறிவும் கொண்டவர்கள் ஒரு ஆண்டுகாலம் தொடர்ச்சியாகவும், ஆர்வத்துடனும் த.வி.க்குப் பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளுக்கும், ஏனைய தொகுப்புக்களுக்கும் மேலாக ஏனைய பங்களிப்பாளர்களை வழிநடத்தியதிலும், ஊக்குவித்ததிலும் உங்கள் பங்களிப்பு முக்கியமானது என்பது எனது கருத்து. மேலும் பல ஆண்டுகள் உங்கள் பணி இன்றுபோலவே இங்கே தொடர எனது வாழ்த்துக்கள். Mayooranathan16:59, 24 மே 2007 (UTC)Reply
செல்வா, தங்களால் சொற்பிறப்பு பற்றி நான் நிறைய தெரிந்து கொண்டேன். தங்கள் பங்களிப்புகள் எனக்கு நானும் அது போல் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கிறது. கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் பங்களிக்க வேண்டுகிறேன். மேலும் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள், நீங்கள் வலைப்பதிவுகளிலும் தமிழ் குறித்து எழுதினீர்களானால் என்னைப் போன்றவர்கள் நிறைய தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். --Sivakumar\பேச்சு17:07, 24 மே 2007 (UTC)Reply
செல்வா, உங்களின் பங்களிப்பு மெச்சதக்கது. உங்களின் கட்டுரையாக்கம், சொல்லாக்கம், நெறிப்படுத்தல், கருத்துபகிர்வு மிகவும் ஆக்கபூர்வமான தளத்தில் த.வி செயற்பட உதவி வருகின்றது. பலருக்கு நல்ல முன் உதாரணமாகவும் இருக்கின்றீர்கள். தொடர்ந்து சிக்கலான தலைப்பில் எழுத முயன்று, கலைச்சொல் வறுமை கோருபவளுக்கெல்லாம் ஒரு நல்ல கலைச்சொல் ஊற்றாக இருக்கின்றீர்கள். மேலும் பல ஆண்டுகள் உங்கள் பணி இன்றுபோலவே இங்கே தொடர எனது வாழ்த்துக்கள். --Natkeeran03:57, 25 மே 2007 (UTC)Reply
மயூரநாதன், சிவகுமார், நற்கீரன், உங்கள் வாழ்த்துக்களுக்கும், ஊக்கங்களுக்கும் மிக்க நன்றி. கட்டாயம் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். த.வி யைக் காட்டிலும் சிறந்த தமிழ்ப்பணி எதுவும் இல்லை என்பது என் உறுதியான நம்பிக்கை. எத்தனைக்கு எத்தனை நாம் கண்ணோடும் கருத்தோடும் இங்கே செப்பம் தீட்டுகிறோமோ அத்தனைக்கு அத்தனை பற்பல மடங்காக நற்பயன் நல்குவது. இங்கு பணியாற்றுவோர்கள், மிக அருமையாக ஒத்துழைத்துப் பயன் பெருக்குவது எண்ணி எண்ணி மகிழத்தக்கது. இதில் பங்கு கொள்வதை நான் பெருமையாகவும், நற்பேறாகவும் கருதுகின்றேன்.--செல்வா13:07, 25 மே 2007 (UTC)Reply
செல்வா உங்கள் வருகையும் தொடர்ச்சியான பங்களிப்பும் விக்கிபீடியாவுக்குக் கிடைத்தமையால் நாமெல்லோரும் பெற்ற பயன்கள் ஏராளம். உங்கள் பங்களிப்பும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். நன்றிகள்; பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். கோபி16:22, 25 மே 2007 (UTC)Reply
பேராசிரியரே இவ் ஒருவருடகாலத்தில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பு எம்போன்ற கத்துகுட்டிகளுக்கு வழிகாட்டியாக இருந்தது என்பது மிகையல்ல உங்களின் பணிதொடர வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவிகின்றேன்.--கலாநிதி 17:02, 25 மே 2007 (UTC)
செல்வா, நீடூழி வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துகிறேன். ஓராண்டில் நீங்கள் இவ்வளவு சாதனைகள் புரிந்திருப்பதைக்கேட்க மகிழ்ச்சி. நான் தமிழ் விக்கிக்கு வந்து ஓரிருமாதங்கள் தான் ஆயிருந்தாலும் உங்களுடைய பங்களிப்புகளையும் தமிழார்வத்தையும் பார்த்து பூரிப்படைகிறேன். இன்னும் நமது விக்கிக்கு உங்களைப்போல் நூற்றுக்கணக்கானவர்கள் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
உமாபதி, கலாநிதி, Profvk, நிரோ, கனகு உங்கள் யாவருக்கும் என் நன்றிகள். பேராசிரியர் Profvk, உங்கள் வாழ்த்துக்கும் ஆசிக்கும் என் நென்ஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் வரவு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கிடைத்தற்கரிய நற்பேறு என்று நான் நம்புகிறேன். கணிதத்திலும், ஆன்மீகத்திலும் மிக நல்ல அருமையான கட்டுரைகள், கருத்துக்குவியல்கள் தமிழுக்குக் கிடைத்து வருவது அருமை. மிக மகிழ்ச்சி தருவது என்னவென்றால், இங்கே பங்காற்றிவரும் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான முறையில் தனித்தனி துறைகளில் பங்களித்து வருவது அருமை. கலாநிதியின் பொருளியல் கட்டுரைகள விரும்பிப் படிப்பவன் நான், தமிழ் விக்கியில் மிகப் பெரும் உந்துதலை அளித்த நிரோ, கணினித் துறை உட்பட பல துறைகளில் பங்களித்த உமாபதி, ஒப்பற்ற வகையில் தொகுப்பு, திருத்தங்களுடன் சி. ஜே. எலியேசர், திரு.வி.க முதலான பற்பல அறிஞர்களைப் பற்றியும் மற்றும் பல் துறைக் கட்டுரைகளையும் ஆக்கிவரும் கனகு என்று நம் த.வி பயனர்கள் பல்துறையையும் கட்டி எழுப்புகின்றனர்.
dctionary
Is there a good english to tamil dictionary online that uses romanized tamil?ராஜா ராம் 01:17, 5 ஜூன் 2007 (UTC)
ஏன் இந்தத் தொய்வு?!
விக்கி நண்பர்களே, விக்கியாக்கத்தில் ஏன் இந்தப் பெரும் தொய்வு?! கனகு, மயூரநாதனும், உமாபதி (நாயன்மார்கள் பற்றி), Profvk அவர்களும்,சிவகுமார் நற்கீரன், சிந்து ஆகியோரும் இன்னும் சிலரும் இடையறாது பணியாறியுள்ளனர். கடந்த மாதத்தில் 192 கட்டுரைகள்தான் ஆக்கப்பட்டுள்ளன. குறைந்தது 30 கட்டுரைகள்எழுதவேண்டிய நானே மூன்றுதான் எழுதினேன் (வண்டு, பிநாஸ், அ.பொ.நூ). விடுபட்டவற்றில் எவ்வளவு ஈடுகட்ட இயலும் என்று பார்க்கின்றேன்! இன்னும் புதிய பயனர்கள் வந்து பங்களிப்பார்களா என்று முயன்று வருகின்றேன். இதுவரை பயன் ஏதும் இல்லை! ஹரிகிருஷண் போன்ற சிறந்த தமிழறிஞர்கள் வருகை தந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. புது முடுக்கத்துடன் கட்டுரைகள் ஆக்குவோம் வாரீர் :) கடந்த ஒரு மாதத்தில் ('சூன் 6, 2007 முதல்) பங்களித்தவர்கள் ஆக்கிய புதிய கட்டுரைகள்:
மற்றும் பலரும் பங்கு கொண்டு ஆக்கம் அளித்துள்ளனர். தோராயமாக என்ன நடந்துள்ளது
என்ற ஒரு கணிப்புதான் இது. யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். --செல்வா 15:41, 6 ஜூலை 2007 (UTC)
உண்மைதான் செல்வா. கட்டுரைகள் மட்டுமன்றித் தொகுப்புக்களுமே குறைவாகத் தான் இருந்தன. என்னுடைய இலக்குப்படி நான் வாரம் 20 - 25 கட்டுரைகள் எழுத வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில் நான் இரண்டு தடவை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே சென்றிருந்ததனாலும், கணினியில் ஏற்பட்ட சில கோளாறுகளினாலும் இந்த இலக்கை எட்டமுடியாமல் போய்விட்டது. வரும் வாரங்களில் இதைச் சரி செய்ய எண்ணியுள்ளேன். Mayooranathan 17:34, 6 ஜூலை 2007 (UTC)
செல்வா, தனிப்பட்ட காரணங்களால் விக்கி போன்றவற்றுக்கு அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆயினும் அண்மைய மாற்றங்களைத் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன். கனக சிறீதரன், மயூரநாதன் ஆகியோர் தொடர்ச்சியாகக் கட்டுரையாக்கத்தில் பங்களித்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது. அண்மையில் உமாபதியும் வேகமாக எழுதி வருகிறார். அதிகம் பங்களித்து வந்த நிரோ, ரவி போறோரது பங்களிப்புக் குறைந்துள்ளது. நற்கீரனது பங்களிப்பும் ஓரளவு குறைந்துள்ளது. புதியவர்கள் வரவு எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றமளிப்பது உண்மைதான். எனினும் மீண்டும் த.வி வேகம் பெறுமென்ற நம்பிக்கை நிச்சயம் உள்ளது. நன்றி. கோபி 17:56, 6 ஜூலை 2007 (UTC)
என் சொந்த வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (நல்லவைதான்!) இன்னும் ஓரிரு திங்கள் என்னால் சரிவர பங்களிக்க இயலாது என்றெண்ணுகிறேன். -- Sundar\பேச்சு 11:10, 10 ஜூலை 2007 (UTC)
செல்வா, தொய்வுக்குப் பல காரணங்கள்.
0. 10, 000 கட்டுரைகள் என்ற ஈராண்டு இலக்குக்காக தொடர்ந்து உழைத்த பலரும் கொஞ்சம் அசதியில் ஓய்வெடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் :)
1. நான், கோபி, மயூரன் போன்றோர் பல இணையத் தமிழ்க் களங்களில் (பிற தமிழ் விக்கி திட்டங்கள் உட்பட) கவனம் செலுத்துகிறோம். தவிர, தமிழ் விக்கிபீடியாவில் கவனித்துக் கொள்ள நம்பகமான ஆட்கள் இருக்கும் நிலையில், தொடக்க முனைப்பு தேவைப்படும் இன்னும் பல களங்களுக்கும் நாங்கள் நகர்ந்து முடுக்கி விடுவது பொருத்தமாக இருக்கும். தமிழ், இணையத்தமிழ் வளர்ச்சிக்குப் பல முனைகளில் செயல்பட வேண்டி உள்ளதால் விக்கியில் மட்டும் முழுமையாகக் கவனத்தைக் குவிக்க இயலவில்லை.
2. முனைப்பு குறையும் பழைய பங்களிப்பாளர்கள் பலரும் இளைஞர்கள். பல்கலைக்கழகப் படிப்பில், வாழ்வில், பணிச்சூழலில் முக்கியக் கட்டத்தில் இருக்கிறோம். சுவரைப் பலப்படுத்த கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
3. நான், கோபி போன்றோர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விக்கியில் உழன்று இருக்கிறோம். இதனால் வரும் ஒரு வித monotony. சோர்வு, சலிப்பு என்று ஒரு மாற்றத்துக்காகவேணும் சிறிது ஒதுங்கி இருந்து விக்கியை அவதானிக்க வேண்டி இருக்கிறது. விக்கி பைத்தியம் :) முற்றி விடக்கூடாது அல்லவா? தவிர, அன்றாடம் விக்கியைக் கவனிப்பது ஒரு விதமான உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது. விக்கியில் உள்ள நல்ல விசயங்கள் ஆனந்தம் தரும் வேளை, எதிர்மறையான விசயங்கள் தேவையில்லாத மனச்சோர்வு, குழப்பத்தைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, நீண்ட பேச்சுப் பக்க உரையாடல்கள். சிறிது ஒதுங்கி இருந்து விட்டு வருவது விக்கியுடனான உணர்வுப் பிணைப்பை ஆக்கப்பூர்வமான வழியில் மாற்றி அமைக்க உதவும் என்று நம்புகிறேன்.
எனினும், ஈராண்டுகளுக்கு முன் நாங்கள் நிறைய பேர் வந்தது போல் புதிது புதிதாகத் தொடர்ந்து பங்களிப்பாளர்கள் வந்து சேர்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். --ரவி 21:31, 10 ஜூலை 2007 (UTC)
செல்வா, தனிப்பட்ட ரீதியில் விரைவில் பங்களிப்பை முன்னர் போல தொடர இருக்கின்றேன். சில வேளைகளில் தொய்வு ஏற்பட்டத்தை முன்னரும் அவதானித்து இருக்கின்றோம். பல தளங்களில் த.வி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. வளர்ச்சியை தொடர்ந்து எதிர்பார்க்கலாம். நன்றி. --Natkeeran 00:13, 14 ஜூலை 2007 (UTC)
செல்வா, நீங்கள் முன்னர் ஒருமுறை பரிந்துரைத்த ' குறியீட்டு முறைக்கும் தமிழ்நெற் தளம் பரிந்துரைக்கும் முறைக்கும் ஒற்றுமைகள் நிறைய இருப்பது போல தெரிகின்றது. ஒப்பிட்டு விளக்கம் தர முடியுமா? --Natkeeran 12:55, 14 ஜூலை 2007 (UTC)
திருவல்லிக்கேணி
நீங்கள் திருவல்லிக்கேணி என்னும் கட்டுரையில் இருந்த வரைபடம் மற்றும் புள்ளியியல் குறிப்புகளை நீக்கியிருந்தீர்கள். இவ்வாறு இரு முறை செய்துள்ளீர்கள். ஏன் என்று விளங்க வில்லை. Kanags என்னும் பயனர் ஒரு முறை நீங்கள் நீக்கிய பகுதியை மீண்டும் சேர்த்தார். இப்பொழுது நானும் செய்திருக்கின்றேன். சோதனை செய்து பார்க்கவேண்டும் எனில், மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.--செல்வா 13:21, 4 ஆகஸ்ட் 2007 (UTC)
நான் விக்கிப்பிடியாவிற்க்கு புதியதாக சேர்ந்திருப்பதால் இத்தவருகள் நடக்கின்றன. நான் புதிய கட்டுரைகளை சேர்க்க தொடர்ந்து தந்கள் அறிவுரையை நாடுகிறேன். .--குருப்பிரசாத் 11:59, 4 ஆகஸ்ட் 2007 (EST)
சுந்தர், மிக நல்ல கண்டுபிடிப்பு. நீங்கள் குறிப்பிட்ட அந்த வலைத்தளம் பற்றி அறியேன் ஆனால் அங்கு கூறியவை அனைத்தும் நன்கு அறிவேன் (பிறதிராவிடமொழி தொடர்பாடுகள் தவிர). நுண்மை என்பது சிறுமை என்னும் அளவு பற்றியது மட்டுமல்ல. Abstract என்பதற்கு நுண்பியம் என்றும் கூறலாம். நுண்மாண் நுழைபுலம் என்பது நுண்புல இயல்புடையதுதான். உங்கள் ஆழ்தேடலில் அந்த வலைத்தளத்தைக் கண்டு இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி. எனக்கு மறுமொழி தருவதில் காலம் தாழ நேரிடலாம். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.--செல்வா 13:34, 2 ஆகஸ்ட் 2007 (UTC)
மறுமொழிக்கு நன்றி. உங்கள் பணிச்சுமைக்கிடையே காலம் தாழ்ந்ததில் வருத்தம் இல்லை.
முன்னர் ஒருமுறை ஆங்கில விக்கியில் "கறி" என்ற தமிழ்ச்சொல்லின் மூலம் பற்றிய ஒரு உரையாடல் நடைபெற்றது. அப்போது நண்பர் ஒருவர் இத்தளத்தை மேற்கோள் காட்டினார். இப்போது மிகவும் பயனுள்ளதாகத் தெரிகிறது. இது உருசியாவின் மானுடவியல் அரசுப் பல்கலைக்கழகத்தின் "ஒப்புமை மொழியியல் மற்றும் பழம்பெரும் மொழிகள் துறை"யினரால் தருவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. "The databases presented here had been developed for several years by the Department of Comparative Linguistics and Ancient Languages of the Russian State University of the Humanities. The Chinese, Sino-Tibetan, North Caucasian and Yenisseian databases were compiled by S. A. Starostin; the Altaic database - by S. A. Starostin, O. A. Mudrak and A. V. Dybo; the Dravidian database - by G. S. Starostin; the Chukchee-Kamchatkan database - by O. A. Mudrak." -- Sundar\பேச்சு 13:53, 2 ஆகஸ்ட் 2007 (UTC)
தகவலுக்கு நன்றி சுந்தர். புகழ்பெற்ற ஆன்றனோவ் (Andronov) போன்ற திராடவியல், தமிழியல் அறிஞர்களை உருவாக்கிய நாடு சோவித் உருசியா. இப்படி தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் நடுநிலை கொண்டு அறிவியல் துல்லியம்- நேர்மையுடன் ஆய்பவர்கள் மிக மிகக் குறைவே. --செல்வா 14:29, 2 ஆகஸ்ட் 2007 (UTC)
சீரற்ற திடக்கோளவடிவங்களின் பிறழ்வையளக்க quadrupole moment என்பதுவும் உண்டு (ஆனால், அது மின்னூட்டுப் பெற்ற கோளங்களுக்கே பொறுந்துமென நினைக்கின்றேன், இருபினும்) அவ்விலகளினின்று இதை வேறுபடுத்திக்காட்டவே வட்ட விலகல் எனக்கொண்டாள வேண்டியதாயிற்று! வட்டத்தை தவிர ஏனைய கூம்பு வெட்டு வடிவங்களுக்கு “மையம்” என்பதில்லை! தோழர் கனகர் சுட்டியதைப்போல் சுற்றுப்பாதை விலகல் எனவும் குறிப்பிடலாம், எனினும் இந்தப்பண்பு எந்தவொரு கூம்பு வெட்டு வடிவங்களுக்கும் பொறுந்தும் என்பதால் பொதுவாக பெயரிட்டேன். (“சுற்றுப்பாதை” என்பதை முன்கொளாவிடினும் அஃது குறிப்பால் உணரப்படும், மட்டுமின்றி கோள்களின் பக்கங்களின் தரவு அட்டவனையில் இப்பெயர் கச்சிதமாயடங்கும் என்பதையும் கருத்தில் கொண்டே சுற்றுப்பாதை என்பதை சேர்கவில்லை!) என் விளக்கங்களை அளித்துவிட்டேன், இவற்றை கருத்தில் கொண்டு மறுமுறை ஆலோசிக்குமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன். தாங்கள் அளித்த அளிக்கவிருக்கின்ற ஆலோசனைகளுக்கு இதயங்கனிந்த நன்றி! -நரசிம்மவர்மன்1006:17, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply
செல்வா, நான் வேண்டியது சுற்றுக்காலம் என்ற இப்பக்கத்தில் உள்ள Sidereal, Synodic, Draconitic, Anomalistic, Tropical ஆகியவற்றை தமிழில் தந்தருள!
மேலும், "தீந்தமிழ் நிகரி" என்ற என் சொல்லாட்சியை பற்றி தாங்கள் குறிப்பிட்டீர்கள், விக்கிபீடியாவில் நான் உழற்ற காரணம் இங்கு வீசும் தேன்தமிழ் தென்றலேயாகும்! தமிழ்நாடிலேயே வாழ்ந்தாலும் தூய்மையான தமிழை சுவாசிக்கும் வாய்ப்பு குறைவுதான்! இன்னும் கூட பத்திக்கு ஒரு பிழையேனும் நேராமல் என்னால் எழுத முடிவதில்லை! இங்கு தமிழின் தூய்மையும் இனிமையும் எனக்கு மிட்டாய் கடையில் நுழைந்த குழந்தயாய் குதூகலப்படுத்துகின்றன! :-)
-நரசிம்மவர்மன்1006:19, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோபால் என்றுதான் 1960களில் இருந்து கேட்டு வருகிறேன். அண்மையில் இம்மொழி பற்றி நான் யாரும் பலுக்கிக் கேட்டதில்லை. ஆனால் இம்மொழி இன்னும் ஊன்றிய பயன்பாட்டில் உள்ளது என அறிவேன். --செல்வா17:04, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply
செல்வா, மூலிகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகள் உருவாக்கப்பட்டு இரண்டாண்டுகளாகின்றன. ஏறத்தாழ 100 கட்டுரைகள் உருவாக்கப்பட்டிருந்தன. தகவல்கள் என்னவோ மூலிகைகள் பட்டியல் என்ற ஒன்றில் கொடுக்கக் கூடியவை. இரண்டாண்டில் அக்கட்டுரைகளை விரிவாக்குவதில்/நீக்குவதில் போதிய கவனம் செலுத்தியது அதிகம் பேரில்லை. தொடர்பான உரையாடல்களில் ரவியும் பங்குகொண்டார். அறிவியற் பெயர் தரப்படாத ஆக்கங்கள் சில நீக்கப்பட்டன. பல மூலிகைக் கட்டுரைகளை நானே விரிவாக்கினேன். எஞ்சி ஓரிருவரிகளாயிருந்த கட்டுரைத் தகவல்களைப் பட்டியலுக்கு நகர்த்திவிட்டு நீக்கினேன். மூலிகைகள் பட்டியல் பக்கத்தில் தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. தகவல்கள் எவையும் நீக்கப்படவில்லை. குறும்பக்கங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
குறுங்கட்டுரைகள்
செல்வா, குறுங்கட்டுரைகள் பக்கத்தை ஓராண்டாக கவனித்து வருகிறேன். குறுங்கட்டுரைகள் இருப்பது எந்த விதத்திலும் பிழையில்லைத்தான். ஆனால் கட்டுரை எண்ணிக்கை அதிகரிக்கவெனவே உருவாக்கப்பட்ட கட்டுரைகளால் பயனில்லை. தம்மளவில் முழுமையான மிகச் சிறு கட்டுரைகள் அவ்வாறே இருக்கின்றன. பார்க்க பொருள் இலக்கணம். அக்கட்டுரையை விரிவாக்க உங்களை நான் முன்பொருமுறை கேட்டிருந்தேன். [1] நான் இதைக் குறிப்பிடுவது குறுங்கட்டுரை விரிவாக்கத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளவேயாகும். பல மூலிகை தொடர்பான கட்டுரைகளை நானே விரிவாக்கியுள்ளேன். சற்றுப் பெரிய மூலிகைக் கட்டுரைகளின் வரலாற்றைப் பார்வையிட்டால் எனது விரிவாக்கங்களைக் கண்டு கொள்ளலாம். மூலிகைகள் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்கவெனவே தமிழ்நாட்டு மூலிகைகள் (க. ரத்னம்), மூலிகைகள் - ஓர் அறிமுகம் - (சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா) இரு நூல்களை வாங்கியிருந்தேன்.
இன்றும் பல குறுங்கட்டுரைகளை விரிவாக்கினேன். அப்பணியைப் பொறுமையாகத்தான் செய்து வருகிறேன். என் செயற்பாடுகள் பிழையானவைதான் என்று நீங்கள் கருதினால் தெரியப்படுத்தி உதவுங்கள். உங்களுக்கு மனவருத்தமளித்தமைக்கு வருந்துகிறேன். நன்றி. --கோபி12:45, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோபி, எழுதுவதற்கு நூற்றுக்கணக்கான-ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றுகின்றன. நீங்கள் பொருள் இலக்கணம் என்னும் கட்டுரையை விரிவாக்கக் கேட்டிருந்தீர்கள், நானும் செய்யத்தான் எண்ணியிருந்தேன், ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. அதனால் அதனை நீக்க வேண்டும் என்பது எனக்கு உடன்பாடில்லை. புதுப்பயனர் பெரியண்ணன் சந்திரசேகர் மிக அருமையாக அது பற்றி எழுதக்கூடியவர். எண்ண ஓட்டத்திலே பல கருத்துக்கள் ஒன்றை ஒன்று முந்துகின்றன. எல்லாமே மிகவும் முக்கியமானதாகத் தென்படுகின்றன. என் எண்ணத்தை விரித்துக் கூறுவது சற்று கடினம். பொதுவாக என் வேண்டுகோள், சிறிய கட்டுரை, 1-2 வரி கட்டுரை என்பதற்காக நீக்க வேண்டாம். தவறான கருத்துக்கள் இருந்தாலோ, அல்லது வேறு குறைபாடுகள் இருந்தாலோ அவற்றை நீக்கலாம், அல்லது மாற்றி திருத்தி எழுதலாம். நீக்கத் தேவை இல்லாத கட்டுரைகளை நீக்கி தரம் பேணுவது என்பது சரியான முறை இல்லை. பயனர்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டுரைகளை நீக்குவதும் என்ன முறை என்று தெரியவில்லை. நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளுக்கும், திருத்தி செப்பம் செய்த கட்டுரைகளுக்கும் நன்றிகள், பாராட்டுகள், ஆனால் இருக்கும் கட்டுரைகளை 20-30 என்ற எண்ணிக்கையில் நீக்குவது தவறு என்பது என் கருத்து. ஓராண்டாக விரிவாக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் வளரும் நிலையில் உள்ள த.வி யில் அப்படி நிகழ்வது தவறொன்றும் இல்லை. பங்களிப்பவர்கள் 8-10 பேராக இருக்கும் பொழுது, செய்ய வேண்டிய பணிக்கள் இப்படி மலையாக இருக்கும் பொழுது அப்படி விரிவாக்கப்படாமல் இருப்பது தவறில்லை. நீக்குவதற்கு செலவிடும் நேரத்தில் இன்னும் சில கட்டுரைகள் சேர்க்கலாம் அல்லது திருத்தி செப்பமடையச்செய்யலாம் (நீங்கள் பிற கட்டுரைகளில் மிகவும் கவனாமாக செய்வதுபோல). தேவை இல்லாமல் கட்டுரைகளை நீக்குவதை நிறுத்த வேண்டுகிறேன்.--செல்வா13:27, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply
நன்றி செல்வா. பொருள் இலக்கணம் பற்றிக் குறிப்பிட்டமைக்குக் காரணம் ஒருவரியேயாயினும் தம்மளவில் முழுமையான கட்டுரைகளுக்கு speed-delete வார்ப்புரு கூட நான் இட்டதில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே; நீக்கக் கோரி அல்ல. தம்மளவில் முழுமையான எந்தச் சிறு கட்டுரையையும் 1-2 வரி என்றாலும் நான் நீக்கவில்லை. நன்றி. கோபி13:37, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply
உண்மை, சுந்தர். கணேஷ்பாட் மிக அருமையாக வேலை செய்து பயனுடைய பல கட்டுரைகளை உருவாக்கியது. பின்னர் ஆர்வமுடையவர்கள், அப்பகுதிபற்றி அறிவுடையவர்கள், செய்தி அறிபவர்கள் வந்து பயன் கூட்டுமாறு விரிவாக்கலாம். மீண்டும் கணேஷ்பாட் இயங்கி இன்னும் மிஞ்சி இருக்கும் ஊர்களுக்கான கட்டுரைகள் உருவாக்கவேண்டும்.--செல்வா13:53, 13 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கணோஷ்பாட் இன் மூலநிரல் கிடைக்குமா? மொழிபெயர்ப்புத் தானியங்கியை உருவாக்க இயலுமா? இதே போன்ற ஒரு தானியங்கியை உருவாக்க விரும்புகின்றேன் அதற்கு என்ன செய்யவேண்டும் ?--உமாபதி\பேச்சு 09:17, 4 ஜனவரி 2008 (UTC)
உமாபதி, நீங்கள், இதுபற்றி சுந்தரிடம் கேளுங்கள் அல்லது கணே^சிடமே கேளுங்கள். கட்டாயம் தானியங்கிவழி மொழிபெயர்ப்பு (குறிப்பாக எந்த இந்திய மொழிகளில் இருந்தும் தமிழுக்கோ அல்லது எதிர் திசையிலோ) செய்ய இயலும். ஏனெலில், மொழியின் சொற்றொடர் அமைப்பு மிகப்பெரும்பாலும் தமிழடிப்படையே (வட இந்திய ஆரிய மொழிகள் கூட தமிழடிப்படையிலேயே சொற்றொடர் அமைப்பு கொண்டுள்ளது). தமிழடிப்படை என்றாலும் திராவிட அடிப்படை என்றாலும் சற்றேறக்குறைய ஒன்றே - பலரும் நேர்மையாக சாய்வின்றி நோக்கினால் உணர்வர். இதனாலேயே எந்த இந்தியத் தூணைக்கண்டத்தாரும் எளிதாக வேறொரு இந்தியத் துணைக்கண்ட மொழியை கற்றுக்கொள்ளலாம். இது பற்றி நான் பேரா. 'சார்'ச் ஃஆர்ட் அவர்களிடம் உரையாடய பொழுது (தமிழ். நெட்டில்) அவரும் பாராட்டியுள்ளார். இன்னும் அதிகம் உணரப்படாத உண்மை இது. நான் மட்டுமோ, நான் முதலிலோ கண்டு பிடித்ததல்ல. கட்டாயம் தானியங்கி மொழிபெயர்ப்பி செய்தல் இயலும். எனக்குப் போதிய விடுபாடு இருந்தால் நானே செய்யவும் கூடும்! நீங்கள் செய்து வெற்றி நாட்ட வாழ்த்துக்கள்!--செல்வா 15:13, 4 ஜனவரி 2008 (UTC)
செல்வா, பதினைந்தாம் என்பதை 15ம், 15-ம், 15ஆம், 15 ஆம், 15-ஆம்... இவற்றில் எவ்வாறு எழுதுவது பொருத்தமானது? இந்த எல்லா வகைகளைம் நூல்களில் இப்பொழுது கண்டேன். 15ம் என எழுதுவது உறுத்துவதாக இருததால் இந்தத் தேடல்.. --கோபி04:53, 15 செப்டெம்பர் 2007 (UTC)Reply
நீங்கள் தந்தவற்றுள் 15ஆம், 15 ஆம் என்பன நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் 15 ஆவதில்என்று கூறுவதற்குப் பதிலாக 15 ல் என்று எழுதலாம் என்பது என் நினைப்பு. 8 ஆவது வயதில் என்பதை 8 ல் என்று சொல்லலாம் என நினைக்கிறேன். 8 இல் என்றால் 8 இல்லை என்பது போல் தோன்றுகின்றது. இது ஒரு சுருக்கெழுத்து முறைதான். 8 இல் என்றும் எழுதலாம். --செல்வா05:01, 15 செப்டெம்பர் 2007 (UTC)Reply
உங்கள் செய்தியை இன்றுதான் கண்டேன். இருப்பினும் நீங்களும் பேராசிரியர் வீ.கே. அவர்களும் கட்டுரையை விரிவுபடுத்தியுள்ளதைக் கண்டேன். நானும் என் பங்கிற்கு ஏதாவது செய்கிறேன். -- Sundar\பேச்சு12:48, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply
தங்களின் வெண்கலம் கட்டுரையில் "மாழைக் கலவை"யென்ற சொல்லாட்சி கண்டேன், அஃது alloy என்பதன் நிகர்ப்பதம் என உனர்ந்தாலும், "மாழை" என்பதன் பொருளும் அப்பதத்தின் மூலம் (etymology) பற்றியும் அறிய விழைகின்றேன்!
-நரசிம்மவர்மன்1006:36, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply
Periapsis, apapsis என்பனவற்றை சிறும வீச்சு, பெரும வீச்சு எனக் குறிப்பது பொருந்தும் என நினைக்கிறேன். சிறுமம் = minimum, பெருமம்=maximam. Apsis என்பதற்குப் பொதுவாக உலா வீச்சு அல்லது சுற்றுப்பாதை வீச்சு என்று சொல்லாம். மையவிலக்கம் என்னும் சொலாட்சி மிகவும் நன்றாக உள்ளது, ஆனால் அது பொறியியலில் வேறு பொருள் தரவல்லது (Cams போன்றவற்றில் மையப் பிறழ்வு செய்வதைக் குறிக்கும், இதனையும் eccentricity என்றுதான் கூறுவர்; பொருள் வட்டமாகவே இருக்கலாம், ஆனால் மையத்தை விட்டு நகர்ந்து ஓரிடத்தில் அச்சு அமைந்தால் அப்பொருள் அசையும் பொழுது வீச்சு மாறும்)--செல்வா12:17, 19 செப்டெம்பர் 2007 (UTC)Reply
முன்னர் நான் பகலவ குறைவிலக்கம், பகலவ மிகைவிலக்கம் என்று பரிந்துரைத்தேன் (பூமி கட்டுரையில்). எனவே, நடுவிருந்து குறைவிலக்கம், நடுவிருந்து மிகைவிலக்கம் என்றால் பொருந்தும் என நினைக்கிறேன். நடுவிருந்து விலகல் அல்லது நடுவிருந்து விலக்கம் என்றும் கூறலாம். அதாவது மையவிலக்கம் அல்லது நடுவிலக்கம் என்னும் பொழுது நடுவே (மையமே) நகர்ந்ததாக பொருள் தர வாய்ப்புள்ளது. இத்தகு "குழப்பங்கள்", வழக்கத்தால் சரியாகும் (தெளிவுபடும்) என்பது உண்மை. ஆனால் இயலும் பொழுது, மாற்றி அமைக்கலாமே என்பது என்பதுதான் கருத்து.--செல்வா13:21, 19 செப்டெம்பர் 2007 (UTC)Reply
விலக்கம் -> வீச்சு/மையம் -> நடுவிலிருந்து
தங்களின் கருத்துக்களை ஏற்று அவற்றை செயலாக்கியும் விட்டேன். "மையவிலக்கம்" எனப்பெயரிட முதலில் தயக்கம் இருந்தபோதிலும் "வட்டவிலகல்" கட்டுரை இருப்பதனால் குழப்பம் நேர வாய்ப்பில்லை எனவென்னினேன், பொறியியலில் இச்சொல் ஆளப்படுவதை உணர்த்தியமைக்கு நன்றி!
-நரசிம்மவர்மன்1005:51, 20 செப்டெம்பர் 2007 (UTC)Reply
சரி செய்தாயிற்று வேறு பிரச்சினைகள் வருகிறதா என கவனித்து சொல்லவும். (ஒக்டோபர் 30 வரை சீனா செல்வதால் விக்கிபீடியா பக்கம் வர வாய்ப்பிலை.) நீங்கள் உருவாக்கிய இரண்டு வார்ப்புருக்களை ஏற்கனவே வேறு பெயரில் இருக்கும் இரண்டு வார்புருக்களுக்கு வழிமாற்றியுள்ளேன். அவை கீழே உள்ளன:
இவற்றில் நீங்கள் கட்டுரையில் பயன்படுத்திய இந்தோ-ஐரோப்பியம் என்பதை நான் வார்ப்புருவில் இணைத்ததைப் போல 12 மேலதிக எழுத்து முறைகளை "| XXXXX " என்றவாறு பொருத்தமான வரியில் இணைத்துக் கொள்ளலாம்.--டெரன்ஸ்\பேச்சு15:50, 20 செப்டெம்பர் 2007 (UTC)Reply
செல்வா, தனிமங்களின் தகவல்கள் அடங்கிய தகவற்சட்டங்கள் சில தனித்தனி வார்ப்புருக்களாக உள்ளன. அவை கட்டுரைப் பக்கங்களில் இருப்பதுவே கூடுதற் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. அவற்றை நகர்த்துவதில் உங்களுக்கு ஆட்சேபணை உண்டா? --கோபி06:35, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோபி, தனித்தனி வார்ப்புர்க்களாக இருப்பதில் முக்கிய நன்மைகள் சில உள்ளன. இதனால்தான் ஆங்கில விக்கியிலும் பல தனிமங்களுக்கு இப்படி தனித்தனி வார்ப்புருக்கள் உள்ளன. ஒருவர் ஒரு தனிமத்தின் கட்டுரையில் ஒரு புது செய்தியை சேர்க்கும் பொழுது (தொகுக்கும் பொழுது) தற்செயலாய் அல்லது தவறுதலாக முக்கியமான தரவுகளை மாற்றிவிடுவதை (அல்லது தகவற்சட்ட அமைப்பு சிதைந்து விடுவதை) தடுக்கவே இப்படி தனி வார்ப்புருக்கள் உள்ளன (என்று நினைக்கிறேன்). ஆனால் எல்லாத் தனிமங்களுக்கும் அப்படி ஆங்கிலத்தில் உருவாகவில்லை. தமிழில் ஒருகாலத்தில் இப்படி எல்லாத் தனிமங்களுக்கும் இருப்பது நல்லது. தகவற்சட்டம் தனி வார்ப்புருவாக இருந்தால், கட்டுரையின் நீளம் (`பைட் அளவு சிறியதாக உள்ளது என்று நினைக்கிறேன், இது தர அளவீட்டில் குறைவாகத் தென்படலாம்). இப்பொழுது உள்ளதை மாற்ற வேண்டாம் என நினைக்கிறேன்.--செல்வா12:51, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply
செல்வா, பைட் அளவு சிறிதாக உள்ளதென்பதற்காக நான் வார்ப்புருக்களை இணைக்கக் கேட்கவில்லை. ஒரு கட்டுரையில் மாற்றம் செய்ய இன்னொரு பக்கத்துக்குச் (வார்ப்புருவுக்கு) செல்ல வேண்டியிருப்பது சாதாரண கட்டுரைப் பக்கங்களுக்குப் பொருத்தமில்லை போல இருக்கிறது. வார்ப்புருக்களின் பயன்பாடு தொடர்பில் எனக்குத் தெளிவில்லை. --கோபி13:00, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோபி, மொத்தக் குறிக்கோளே அதுதான்! - அதாவது மிக முக்கியமான தரவுகளில் மாற்றம் செய்ய வேண்டியிருப்பின், இன்னும் ஒரு உள் வார்ப்புருவுக்குச் செல்லவேண்டும். இதுவே குறிக்கோள். (தகவற்சட்டத்தில் உள்ள முக்கியமான தரவுகள் தவிர்த்த) பிற செய்திகளைக் கட்டுரையில் திருத்தம் செய்ய "தொகு" என்று ஒருமுறை சொடுக்கினால் போதும். ஆங்கில விக்கியிலே மாங்கனீசுen:Manganese, குரோமியம் en:chromium போன்ற கட்டுரைகளைப் பாருங்கள். --செல்வா13:08, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply
சுழற்சிக் காலம் என்ற இக்கட்டுரையில், leap என்பதற்க்கு "எச்சம்" எனப் பயன்படுத்தியுள்ளேன் (leap year -> எச்ச வருடம்), அது பொருத்தமா? "எச்சம் பெற்ற" (leap year -> எச்சம்பெற்ற வருடம்)என்றுக் கொள்ளலாமா? தங்கள் கருத்துக்களை பகிரவும்! -நரசிம்மவர்மன்1007:44, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply
எச்சு ஆண்டு என்பது சரியாக இருக்கும். ஆனால் கனகு வேறு சொல் ஆண்டிருக்கின்றார் என்று நினைக்கிறேன். பின்னர் பார்த்து எழுதுகிறேன். எச்சு என்பது அதிகம். எச்சம் என்பது மிஞ்சி இருப்பது. அடிக்கருத்து ஒன்றாக இருந்தாலும், பொருள் குறிப்பு சற்று வேறானது. --செல்வா12:54, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply
செல்வ, எக்காரணத்தினாலோ யான் இதுவரை Moment மற்றும் Momentum இவற்றிர்க்கிடையிலான வெறுபாட்டை உணராமல் இரண்டிற்க்கும் "உந்தம்" என்ற பதத்தையே வழங்கி வந்துள்ளேன்! Moment of inertia என்பதற்க்கு "நிலைமாறு உந்தம்" எனக்கொண்டேன், இஃது தவறு என்று உணர்ந்தேன். Momentum என்பதற்க்கு உந்தம் எனவழங்குவதைப் போல் Moment (Moment of a force) என்பதர்க்கு விசையின் வினை (அல்லது அதையொத்த ஒரு பதம், அதை தாங்கள்தான் வழங்க வேண்டும்!) எனக்கொள்ளலாமா?
மேலும், Moment of inertia என்பதற்க்கு "நிலைமாறா வினை" அல்லது "சுழற்சிமாறா வினை" என்றோ, கோணத் திணிவு (இஃது கருத்துருவில் சரியென்றாலும், வழக்கில் பொருந்துமா என்று தெரியவில்லை!) என்றோ கொள்ளலாமா?
-நரசிம்மவர்மன்1005:31, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply
இலங்கையில் உயர்தரப்பாடத்திட்டத்தில் இத்தகைய கலைச்சொற்கள் பல ஏற்கனவே தமிழிலுள்ளன. உயர்தரத்தில் கணிதம் கற்ற இலங்கையர் அச்சொற்களை இங்கே அறிமுகம் செய்வது பயனுள்ளதாயிருக்கும். நன்றி. --கோபி06:03, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோபி சொல்வது சரி. இவற்றுக்கு கலைச்சொற்கள் ஏற்கனவே உள்ளன. இலங்கையில் க.பொ உயர் தரம் (eq grade 11, 12) தமிழில் நடைபெறுவதால், இத்தகைய எண்ணக்கருக்கள் சிந்தனைக் கூறுகள் தமிழிலேயே மாணவர்களுக்கு பரிச்சியம். என்னிடமே சில நூற்கள் இருக்கின்றன. மேலும், இணைய தமிழ் பல்கலைக்கழக அகராதியை பாருங்கள். அங்கு இலங்கை கலைச்சொற்களும் பல சேர்க்கப்பட்டு இருக்கிறன. இருப்பினும் நீங்கள் உங்கள் பணிகளை தொடருங்கள். மற்றவர்களுக்கா காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. --Natkeeran23:38, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply
Moment of Inertia என்பதைத் தமிழில் பலவாறு கூறலாம். (ஆனால் Moment என்னும் கருத்து பொதுமையானது, கணிதத்தில் பல ஆழமான கருத்துக்களையும் சுட்டுவது. இங்கு இருப்பது எளிமையான ஒரு கருத்து) விளக்கத்தோடு சொல் பதிந்தால்தான் பொருந்துமா பொருந்தாதா என்பதும் தெளிவாகும். கருத்தளவிலே எப்படித் "திணிவு" அல்லது "நிறை" (எடை அல்ல, நிறை) என்பது ஒரு பொருளுக்குத் தரப்படும் ஒரு குறிப்பிட்ட விசைக்கு அப்பொருள் பெறும் முடுக்கத்தை கட்டுறுத்தும் ஒரு அடிப்படையான பொருளின் பண்போ (F = m a), அதே போல ஒரு பொருள் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பொருளுக்குத் தரப்படும் ஒரு குறிப்பிட்ட முறுக்குவிசை (torque)க்கு அப்பொருள் பெறும் கோண முடுக்கத்தைக் கட்டுறுத்தும் அடிப்படையான பண்பு சுழல்நிறை எனலாம் (அதாவது, முறுக்கு விசை = சுழல்நிறை x கோணமுடுக்கம்). நில் => நிற்றல் => நிறை. இங்கு "தங்குதல்" "இருத்தல்" என்னும் பொருளும் கொள்ளும். இருப்பு = நிலை (நிலை பெற்று இருத்தல்) என்னும் பொருள் இருப்பதையும் உணர வேண்டும். இது தவிர, இழுவல், இருத்தல். வல்லின று -> இறுகுதல் (இறுப்ப = கிடக்க, இறுக்க = தங்க, இறுகுதல் = உறைதல்), உறைதல் முதலான சொற்கள் வழியும் பல சொற்கள் ஆக்கலாம். "திணிவு" என்னும் சொல் இங்கு பொருந்துவது கடினம். இழு என்றால் பின்வாங்கு, இழுகுணி என்றால் சோம்பேறி (இதுதான் inertia), இழுகுதல் என்றால் தாமதித்தல். எனவே சுழலிழுவை, சுழலிழுக்கம், சுழலிழுவம் சுழலிழுகுணி (="inertia for angular motion") என்றும் கூறலாம். --செல்வா03:47, 26 செப்டெம்பர் 2007 (UTC)Reply
moment of inertia, moment மற்றும் பல இயல்பியல் கலைச்சொற்களுக்கும் ஏற்கனவே தமிழ் இணையப் பல்கலை அகரமுதலியில் நல்ல தமிழ்ச் சொற்கள் தரப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே தமிழ் அறிவியில் பாடநூல்களில் உள்ள சொற்கள். தயவு செய்து அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்தலாம். மாணவர்கள் தமிழ் விக்கி கட்டுரைகளைப் புரிந்து கொள்ள இதுவே இலகுவான வழி. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொல் வட சொல்லாகவோ மிகவும் தவறான பொருள் தருவதாக இருந்தாலோ மட்டுமே புது சொல் ஆக்கலாம். நற்கீரன், தமிழகத்திலும் இளங்கலை அறிவியல் வரை முழுக்கத் தமிழ் வழிக் கல்வி உண்டு. முதுகலையில் ஆங்கிலத்தில் தேர்வுகள் அமையும்போது கூட மாணவர்களின் புரிதல் பெரிதும் தமிழ் வழியே தான் இருக்கிறது. --Ravishankar10:56, 26 செப்டெம்பர் 2007 (UTC)Reply
பாடநூல்களில் இருக்கும் சொற்களையும், ஏற்கனவே தரம் செய்யப்பட்ட சொற்களையும் எடுத்தாள்வது நல்லது, உடன்படுகின்றேன். ஆனால், பல சொற்கள் (பொருள்) தவறாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் உள்ளன. மேலும், வளர்ந்துவரும் அறிவியலில், புது சொல்லாட்சிக்கள், புதிய கோணத்தில் பார்வைகள் எழுகின்றன. இவற்றையெல்லாம் உறைந்து போன சொற்பட்டியல்கள், முறைப்படி அலசி ஆராய்தமைக்காத பட்டியல்கள், பல-தொடர்பான-கருத்துக்களுக்கு ஏற்ப முரண் இயைபு பார்த்தமைக்காத பட்டியல்கள் பயன் தராது. இதில் உண்மையான பல இடர்ப்பாடுகள் உள்ளன. பொதுச்சீர்மை வேண்டும் என்று மன்றாடுபவர்களில் நானும் ஒருவன், ஆனால் அதனைக் காக்கவேண்டியவர்கள், போற்ற வேண்டியவர்கள், எடுத்து வளர்க்க வேண்டியவர்கள் நாம் அறிய செயல்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. ஏன் இணைய பல்கலையில் இருப்பவர்கள் இங்கு வந்து உதவலாகாது? ஏன் பலதுறை பல்கலை ஆசிரியர்களும்,கல்வியாளர்களும் வந்து இங்கு சிறிதளவாவது பங்கு கொள்ளலாகாது? பொது கருத்தாடல் சற்று நி்ற்கட்டும். Moment of Inertia என்பதற்கு TVU தரும் சொற்கள்: சடத்துவ திருப்புத்திறன் (வே.பொறி, மின்.பொறி, இயற்.,), சடத்துவ திருப்புமை (வேதியியல்), நிலைமத் திருப்புத்திறன்,(கணிதம்), உறழ்மை திருப்புமை (இயற்., இயங்கியல் பொறி.) பிறகு Moment என்பதற்கு திருப்புத் திறன் திருப்பு விசை, திருப்புமை, விலக்களவு ஆகிய சொற்கள் தரப்பட்டுள்ளன. "சடத்துவம்" என்னும் சொல்லாட்சி, இலங்கை வழக்காக இருக்கும் என்று நினைக்கிறேன். இச்சொற்களில் திறன் என்பது பொருந்துமா என்று கேட்கவேண்டும் (யாரிடம்??!). அதே பட்டியலில் efficiency என்பதற்கு திறன் என்றும், வினைத்திறன், செயல்திறன் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல்கள், அகராதிகள் எல்லாம், போதிய அளவு அலசப்படாமலும், தக்காரைக் கொண்டு முறைசெய்து, செப்பம் பார்க்கப்படாமலும், இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுக்கப்பட்டும் (பொறுக்கப்படாமல் - பொறுக்குதல் என்பது தேர்ந்து எடுத்தல்) ஆக்கப்பட்டதாகத்தான் தோன்றுகின்றது. இருப்பதைக் குறைகூற விரும்பவில்லை, ஆனால் நம் தேவையை நாம் நன்கு உணரவேண்டும். பொதுவாக சொற்களைத் தனித்தனியாக ஒருபோதும் மொழிபெயர்க்கவோ, புதிதாக ஆக்கவோ கூடவே கூடாது. கருத்துச் சூழலில், அல்லது சிறப்பாக பொருள் தரும் இயல்பான சொற்றொடர்களில் அமைத்தே ஆளத்தொடங்க வேண்டும். செயற்கையாக சொற்றொடர்களில் அமைத்துக் கூறுவதும் தவறு. இவை அனைத்தும் என் பட்டறிவின் பயனாய் கூறும் என் தனிப்ப்ட்ட கருத்துக்கள். பகிர்வதே என் நோக்கம். Moment என்பதற்கு திருப்புமை என்பது பல இடங்களில் பொருந்தும். "சடத்துவம்" என்பது inertia என்பதின் நேரடி மொழிபெயர்ப்பு (வடமொழி, ஜடம், ஜடத்துவம்) ஆனால் கருத்தளவில் பொருந்தாது. சடத்துவம் என்பதற்கு மாறாக "நிலைம" என்று சொல்லலாம், அதாவது நிலைகொண்டிருக்கும் திருப்புமை என்பது பொருள் பொருந்துவது. Moment of Inertia என்பதற்கு "நிலைம திருப்புமை" என்பது பொருந்தும். ஆனால் அது திரும்பும், சுழலும் வினையில் பொருண்மைக்கு (நிறை, திணிவு, mass) ஈடான ஒன்று என்பதை உணர்த்தவில்லை (அதனால் தவறு இல்லை). --செல்வா14:35, 26 செப்டெம்பர் 2007 (UTC)Reply
செல்வா, உங்கள் மறுமொழியை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இணையப் பல்கலை பட்டியலில் போதாமைகள், பிழைகள் உள்ளனவே. அவற்றை உருவாக்கியவர்கள், அறிஞர்கள் விக்கிபீடியாவுக்கு வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் நிலை தற்போது இல்லை. தற்போதைய நிலையில் தமிழ் விக்கிபீடியாவில் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்த அறிவே அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். இல்லை தெரிந்தும் நாம் just another website என்று பார்க்கப்படலாம். வருங்காலத்தில் அந்த அளவு தமிழ் விக்கிபீடியா வலு மிக்கதாக வளர்ந்தால் ஒரு வேளை வரலாம். இல்லை, தனித்தோ அரசு ஊதியம், கட்டளையின் அடிப்படையிலோ மட்டும் அவர்கள் செயல்பட விரும்பலாம். தற்போதையய என் கருத்துக்கான பின்புலம்: ஒரு வேளை தமிழ் இணையப் பல்கலையில் நீங்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொள்ளும் சொல் இருந்தும் கூட அறியாமையின் காரணமாகப் புதுச்சொல்லை விக்கிபீடியர் எவரும் உருவாக்கி விடக்கூடாதே என்பதற்காகத் தான். inertiaவுக்கு நீங்கள் பரிந்துரைப்பது போல் இன்னும் சிறந்த சொல் இருக்கும் பட்சத்தில் தயவு செய்து இக்குறிப்புகளைப் பேச்சுப் பக்கத்தில் தாருங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் இப்படி செய்வது சிரமமாக இருக்கலாம். ஆனால், பழைய சொல் மூலம் தேடுபவர்கள், இச்சொல்லின் சிறப்பு அறிய விரும்புபவர்களுக்கு உதவும் ஆவணப்படுத்தலாக இருக்கும். சிறந்த சொற்களைக் கையாள வேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். அதேவேளை, ஏற்கனவே பழைய சொற்களில் படித்து வரும் மாணவர்களுக்குப் புரிய வேண்டு்மே என்ற கவலையையும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.--Ravishankar15:20, 26 செப்டெம்பர் 2007 (UTC)Reply
TamilVuவில் Torque, Torsion ஆகியச் சொற்களுக்குக் ஒரே சொல்லான "முறுக்கம்/முறுக்கல்/முறுக்கு" கொடுத்துள்ளனர். Torqueற்கு இச்சொல் பொறுந்தாது. Torque என்பதற்கு "Moment of Force" என்பதே வரையறு. ஆகையால் Torqueற்கு "விசைத்திருப்பம்" என்பதே பொறுத்தம். Torsion/முறுக்கம் என்பது Torque/விசைத்திருப்பத்தால் ஏற்படும் உருக்குலைவு. அது ஒரு விளைவு.
தமிழ் வழி கல்வி மாணவர்கள் இப்படிப்பட்ட முரணான சொற்கள் கொண்ட பாடநூல்களை படித்துவிட்டு அவர்கள் கதி என்னவென்று யோசிக்க வேண்டும்.
இப்போது உள்ள கலைஞரரசுக்கு தமிழ் மீது சற்றும் அக்கரை இல்லை. தமிழக உள்நாட்டுப் பறப்பகங்களில் இப்போது தமிழே காணோம். இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் உண்டு. இவர்கள் இதற்கே சற்றும் எதிர்ப்பு தெரிவிக்காத இருக்கும் போது, தமிழ் கலைச்சொல் தரப்படுத்தல் போன்ற தமிழ் வளர்ப்புச் செயல்களில் இவர்களை நம்பிக்கை வைக்கக்கூடாது.
தமிழ் கலைச்சொற்கள் தரமாக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை நீண்ட நாள் காலமாக உள்ளது. அது தனியார் முனைவால் தான் நடை பெற இயலும். இதன் பொருட்டு, www.geocities.com/tamildictionary/physics போன்ற அகராதிகள் ஒரு துவக்கம் தான்.
- Raj / thozhilnutpam.com
ராஜ், உங்கள் வருத்தம் புரிகின்றது. எனக்கும் உங்களைப்போல் கவலைகள் உண்டு. கலைச்சொற்கள் பல இடங்களில் இன்னும் போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை (பொதுவாக மிக நல்ல வளர்ச்சி இருந்த பொழுதிலும்). கலைஞர் அரசு தமிழுக்கு எதிரானது போன்ற கருத்துக்களை இங்கு வைக்காமல் இருப்பது நல்லது என்பது என் தனிக்கருத்து. அமைச்சர் தென்னரசு பல நல்ல ஆக்கங்கள் செய்துள்ளார். கலைஞர் பதவியில் அமர்த்திய பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ தமிழைக் கட்டாயப் பாடமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வைத்துள்ளார். தமிழைத் தமிழக அரசானது அவர்களால் இயன்றளவு வளர்த்து வருகிறார்கள். இது பற்றி இங்கு கருத்துரையாட வேண்டாம் என்பது என் வேண்டுகோள். டார்க் (torque), டார்^சன் (torsion) பற்றி நீங்கள் கூறியது சரியே. தமிழ் இணைய பல்கலைகழக அகராதியில் பல சொற்கள் இப்படித் தவறாகவோ அல்லது குழப்பம் தரும் வகையிலோ உள்ளன. ஆனால் கருத்துரையாடி நமக்குச் சரியென்று தோன்றும் சொற்களை கட்டுரைகளில் தக்க இடங்களில் பயன்படுத்திப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக வளைவுந்தம் என்னும் கட்டுரையைப் பாருங்கள். அதில் முறுக்குவிசை என்று ஆண்டிருக்கின்றேன். எச்சொல்லும் அதனதன் சூழலில் பயன்படுத்தும் பொழுதுதான் அதன் நிறைகுறைகளும், பொருள் ஏற்கும் திறமும் ஏற்காமையும் விளங்கும். தனிச்சொற்களாக "மொழி பெயர்ப்பதில்" அதிகம் பயனில்லை என்பதும் என் பட்டறிவால், துய்ப்பறிவால் கண்டது. நீங்கல் செய்யும் முரற்சிகளையும், உங்கள் தொடர்ந்த பணிகளையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். மேலும் வளர்ந்து செழிக்க என் வாழ்த்துக்கள்.--செல்வா13:56, 22 மார்ச் 2008 (UTC)Reply
பொறுத்தருளுங்கள்!
செல்வ, ரவி, தங்களின் கருத்துகளுக்கு முதற்க்கண் நன்றி. செல்வாவின் கருத்துகளை ஏற்பதோடல்லாமல், அவர் அதை பகர்வதர்க்கு முன்னமே என் நிலைபாடும் அதான். விக்கிபீடியா எந்த ஒரு தமிழ்ச்சார் ஆக்க குழுவிற்க்கும் சளைத்தது அல்ல. சொல்லப்போனால், அரசியல் மற்றும் பிற சார்புகள் பற்றி தமிழ்த் "தொன்டாற்றும்" இயக்கங்களை விட, தமிழ்நாட்டு தமிழர் மட்டுமின்றி அனைத்து ("த.நா" தமிழரை விட "இல" தமிழர் இங்கே அதிகம் என்பது தாங்கள் அறியாததல்ல!) தமிழரும் பங்களிக்கும் த.வி. ஓர் உண்மையான தமிழ் இயக்கம். உழுதுண்டு வாழ்வோராய் நாம் முன்செல்வோம் மற்றவர் தொழுதுண்டு பின் தொடரட்டும்!
ஆயினும், தோழர் ரவியின் கவலை நியாயம்தான்! இலைமறை காயாய் சில (பல?) நல்ல சொற்கள் த.இ.ப. போன்றவற்றிலும் இருக்கத்தான் இருக்கும். அவற்றை அறவே ஒதுக்குதல் மடமை. இங்கே நான் செய்யும் பிழையும் அஃதே! த.இ.ப. என் உலவியில் சரியாய் படிக்கபடாததால் அதனை நான் ஒப்புவதில்லை! மற்றபடி, அதனை ஒப்பக் கூடவேகூடாது என்ற பிடிவாதம் எதுவும் இல்லை! உலவியில் உள்ள பிரச்சனை தீரும்வரை த.வி-யில் பங்களிக்காமல் இருப்பதை விட, செய்ய முனைந்ததை செய்துவிட்டு பின்னர் (தவறோ அஃதில் மேலும் சிறப்பாய் செய்ய வாய்ப்போ இருப்பின்) திருத்திக்கொள்ளலாம் என்ற மனப்பாங்கில்தான் நான் பனியாற்றுகிறேன்! இதை பொறுத்தருளி, த.வி-க்கு சிறப்பாய் பங்களிக்க எனக்கு மேலும் உதவுமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறேன் :-)
(செல்வாவுக்கு, தயைகூர்ந்து தாங்கள் (தங்கள் பேச்சு பக்கத்தில் நான் இடும்) என் கருத்துக்களுக்கு அளிக்கும் மறுமொழிகளை என் பேச்சு பக்கத்திலும் இடும் சிரமத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் :-) )
செல்வ, தாங்கள் ஊகித்ததை போல "மறு" என்றால் மறுப்பது மற்றும் எதிரான அல்லது பிறிதொரு என்பதை நான் அறிந்தேயுள்ளேன், தமிழன்னையின் சொற்திரட்சியில் ஒரே பொருள்தர பல சொற்களும், பல பொருள்தரும் ஒரே சொல்லும் பெற்றுள்ள மாயையின் மாழையை ரசித்து ருசிக்கும் காரணம் கருதி சொற்களை ஆண்டு மகிழ்வது என் வழக்கு! அதனின், ரவியின் கருத்துகளை நான் மறுக்கவில்லை என்பதை குறிப்பாய் முன்னுணர்தவே அவ்வாறு குறிப்பிட்டேன். சொற்-பொருள் விளையாட்டைவிட, தங்களிடமிருந்து "மறு" பற்றி மேலும் அரின்துகொண்டதில் மகிழ்சி அதிகம் :-)
செல்வா, எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு நன்றி. செய்ய வேண்டியதென்று உள்ளவை ஆயிரமாயிரம். பங்களிப்பதோ நாம் 10-15 பேர்தான். இப்போதுள்ள எல்லாக் குறுங்கட்டுரைகளும் ஓரளவேனும் விரிவாக்கப்படக் கூடியவை. சில நீங்கள் குறிப்பிட்டதுபோல நன்கு விரிவாகவும் எழுத வேண்டியவை.
த.வி.யில் என் பங்களிப்பு முடிந்தவரை மற்றவர்கள் கவனிக்காதவற்றைக் கவனிப்பதாகவே இருந்துவருகிறது. கட்டுரை அதிகரிப்பு வேகம் போதியதாக இல்லாதபோது நிறையக் குறுங்கட்டுரைகள் எழுதினேன்; படிமங்களுக்கான உரிமங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதைச் சுட்டிக் காட்டினேன்; தேவையற்ற வழிமாற்றிகளை நீக்கினேன்; மிகச்சிறு கட்டுரைகள், கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமற்றவற்றை நீக்கினேன். இந்த வரிசையில் இப்பொழுது குறுங்கட்டுரை விரிவாக்கம்.
நான் ஒருவரி என்ற காரணங்காட்டி பல கட்டுரைகளை நீக்கினேன். அந்தவகையில் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதும் என்கடமையாகிறது. பைட்டு அளவுக்காக என்று அல்ல. ஒரு தலைப்பை சரியாக விளக்கும்போதே ஆயிரம் பைட்டுத் தாண்டிவிடுகிறது. பல குறுங்கட்டுரைகளில் தலைப்பை விளக்கும் பொதுவான அறிமுகங்கள், பிறவிக்கியிணைப்புக்கள் போன்றனகூட இல்லை. அவற்றை அடையாளங்கண்டு சற்றேனும் விரிவாக்கி வருகிறேன்.
அண்மைக்காலங்களில் உருவாகும்கட்டுரைகளில் 90% ஆனவை 2000 பைட்டு அளவைவிடப் பெரியவை. இது எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதுதானே. முன்புபோல பங்களிக்க இப்பொழுது எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதற்காக வருந்துகிறேன். நன்றி. கோபி14:24, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply
நற்கீரன், நான் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன், நீங்களும் கூறிவிட்டீர்கள். தொடக்கமாக ஒரு விக்கித்திட்டம் பக்கம் செய்துள்ளேன். அதனையும் உங்கள் ஒருங்கிணைப்புப் பக்கத்திலே சேர்ட்த்துவிடுங்கள். தனிமங்கள் விக்கித்திட்டம் பக்கம் இன்னும் சரி செய்ய வேண்டு (இது தொடக்கம்தான்), இதுவரை ஏறத்தாழ 54 தனிமங்கள் பற்றி எழுதியுள்ளேன். இன்னும் சரி பாதிக்கு மேல் எழுத உள்ளது.--செல்வா23:49, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply
நன்றி செல்வா, இந்த திட்டத்தின் உடனடி தொடர்பாக உங்களது பெயரை இட்டுள்ளேன். ஆட்சோபனை என்றால் தெரியப்படுத்தவும். மேலும், இலக்கு 2007 என்று சற்று இறுக்கமாக இட்டுள்ளேன். பொருத்தமில்லை என்று உணர்ந்தால், மாற்றிவிடவும். --Natkeeran23:15, 1 அக்டோபர் 2007 (UTC)Reply
கட்டாயம் செய்யவேண்டியது. முக்கியமான மொழிகள் 100-200 என்று வரையறை செய்து அதனை முதல் கட்டமாக செய்யலாம் என்று தோன்றுகின்றது. என்ன நினைக்கிறீர்கள்?--செல்வா03:37, 1 அக்டோபர் 2007 (UTC)Reply
செல்வா, எனது பயனர் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் விட்ட குறிப்புக்களுக்கு நன்றி. ஆங்கில விக்கிபீடியாவில் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. இதைவிட எத்னோலாக், ஆம்னிகுலாட் போன்ற தளங்களிலும் தகவல்கள் உள்ளன. திராவிட மொழிகள் என எத்னோலாக்கினால் அடையாளம் காணப்பட்ட 70 மேற்பட்ட மொழிகள் தொடர்பில் ஏற்கெனவே குறுங்கட்டுரைகள் உள்ளன. இணைப்புடன் கூடிய பட்டியலை இங்கே பார்க்கவும். இந்திய-ஆரிய மொழிகளிலும் சுமார் 25 மொழிகள் வரை குறுங்கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் விரிவாக்கப்பட வேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் ஒரு மொழி பற்றிய கட்டுரையில் கட்டாயம் இருக்கவேண்டியவை. இவை தவிர ஒவ்வொரு மொழிக்குடும்பத்தில் இருந்தும் முக்கியமான மொழிகளை இனங்கண்டு அவற்றில் கட்டுரைகளைத் தொடங்கலாம். Mayooranathan17:37, 1 அக்டோபர் 2007 (UTC)Reply
"மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமான கண்டுபிடிப்பு மொழி." உங்கள் அறிமுகம் நன்று. எனினும் இந்தக் கூற்று சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகின்றது. மீள்பரிசீலக்கவும். --Natkeeran23:45, 5 அக்டோபர் 2007 (UTC)Reply
நற்கீரன், சொல்லலாம், ஆனால் இங்கு இது ஓர் அறிவுத்துறைக்கு உள்ள விக்கி வாயில். இது தனித்துறைக்கான உள்வாயில். உள்வாயிலுக்குள்ளும் பல உள்வாயில்கள் உண்டு. எனவே இங்கு வலைவாயில் என்பது பொருந்தாது. தமிழ் விக்கியின் முதற்பக்கம்தான் வலைவாயில். மற்றதெல்லாம் துறைக்கான உள்வாயில்கள். அதற்குள்ளும் பல நிலைகளில் உள்வாயில்கள் பல இருக்ககூடும். எடுத்துக்காட்டாக வாயில்:அறிவியல், ஒரு பெரும் துறைக்கான துறைவாயில், அதனுள் அதனுள் சென்றால் பகுப்பு:வேதியியல் என்பதும் ஓர் உள்வாயில் (இதனை இப்பொழுது விரிக்காமல் இருக்கலாம்). இப்படியாக பல உள்வாயில்கள் அவ்வவ் உள்துறையில் உள்ள பகுதிகளுக்கு இட்டுச் செல்லும்.--செல்வா22:30, 6 அக்டோபர் 2007 (UTC)Reply
சரி, செல்வா. நான் தகவல்களை நீக்கிவிடுகிறேன். இன்னுமொரு விடயம். நீங்கள் சுட்டிய நூலில் தரப்பட்ட விடயங்கள் சற்று பயம் தருகின்றது. இதன்படி தமிழ் எழுத்துக்களையும் இலக்கணத்தையும் அவர்களே முதலில் ஆக்கியது அல்லது சீரமைத்தது போன்றல்லவா தெரிகின்றது. --Natkeeran14:16, 7 அக்டோபர் 2007 (UTC)Reply
உண்மை எதுவோ, அதனை அறிந்து ஏற்பது நமக்கு என்றும் வளம் சேர்க்கும். தமிழ் மொழியின் இலக்கணமும், முறைமையும் குறைந்தது 1500 -2000 ஆண்டுகளுக்கு முன்னரானது. ஆனால் தமிழில் அச்சிட்டது (ஒல்லைச் சுவடிகள் இவைகளுக்கு மிக முந்தியது) 1554ல் தான். இது எம்மொழியின் அச்சு வரலாற்றுடன் ஒப்பிட்டாலும், முன்னணியில் (முதலில் அல்ல) உள்ளது. கூட்டன்பர்கு வேதாகமம் 1455ல் (இது முதல் அச்சு அல்ல, முதல் நகரக்கூடிய எழுத்துக்கள் உள்ள அச்சு முறைப்படி ஆக்கியது). பொதுவாக் எது உண்மையோ அதனை உவந்து முன்நிறுத்த வேண்டும். தமிழின் பெருமை ஒரு சிறிதும் குறையாது. கூடவே செய்யும். என் தனிக்கருத்துக்கள்--செல்வா14:25, 7 அக்டோபர் 2007 (UTC)Reply
நான் சுட்ட முனைந்தது பார்வைகளின் வித்தியாசத்தையே. ஆங்கிலோ-சக்சன் தமிழியல், தமிழ் வழித் தமிழியல் என்று இரு முனைப்படுத்தி புலமையாளர்களின் பார்வைகள், தமிழியலில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் கருப்பொருள்கள், நோக்குகள் வேறுபடுத்தப்பட்டன. ஆங்கில கல்வியாளர்களிடம் தமிழியல் நோக்கி வித்தியாசமான அல்லது வேறுபட்ட பார்வை இருக்கும், அது இயல்பானதே. ஆனால் அது எப்பிடி வேறுபடுகின்றது, அந்த வேறுபாடு எப்படி எம்மை பாதிக்கின்றது, அவை எப்படி நம் மீதான எமது பார்வையை பாதிக்கின்றது போன்ற விடயங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலோ-சக்சன் தமிழியல் ஆய்வாளர்கள் முக்கியப்படுத்தும் முனைகளின் நாமும் கவனம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இதைப் பற்றி மேலும் அலச எனக்கு இத்துறையில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. இது ஒரு குறிப்புக்காக மட்டுமே. நன்றி.--Natkeeran22:03, 7 அக்டோபர் 2007 (UTC)Reply
இன்னுமொன்றையும் இங்கு குறிக்க வேண்டும். இதே கலைக்களஞ்சியத்தில் இந்தியா பற்றிய கட்டுரை எப்படி ஆக்கப்படிருக்கின்றது என்பதை பார்க்க. அதில் பெரும்பகுதி இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களைப் பற்றிய விபரிப்பாகவே இருக்கின்றது. ஒவ்வொருவரும் தத்தமது பார்வையை முக்கியப்படுத்துவர் என்ற உங்கள் கூற்று சரிதான். அதைப்பற்றிய நமது விழிப்புணர்வுதான் இங்கு முக்கியம்.
இன்னுமொரு எடுத்துக்காட்டு Psychology கல்வித்துறை. பல்கலைக் கழக கல்வித்திட்டத்தில், அவர்கள் இந்தக் கல்வித்துறையின் வரலாற்றை 1850 களில் பின்பு மேற்கத்தைய அறிஞர்களின் அலசல்களோடு ஆரம்பித்து, கிழக்கே இந்தத் துறையில் ஈட்டப்பட்ட அறிவு எல்லாவற்றையும் ஒரு தெரிவு பாடத்திற்குள் அடக்கிவிடுகின்றார்கள். இது எப்படி என்றால், சமயங்கள் என்ற படிப்புத்துறையில் கிறிஸ்தவ சமயத்தை மட்டும் படிப்பது போன்றதாகும்.
இக்குறை எமக்கில்லை என்று சொல்லவில்லை. அந்தக் குறை எமக்கும் உள்ளது என்ற விளிப்புணர்வும் எமக்கு தேவை....மேலும் பின்னர்.
செல்வா நீங்கள், கட்டுரைகளை தரப்படுத்த தொடங்கியிருப்பதுக் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கையாழும் தரப்படுத்தல் முறையை விக்கியில் பதிவு செய்தால் ஏனையவருக்கும் இணங்கான வசதியாக இருக்கும். மேலும் புதிதாக வரும் பயனருக்கு கட்டுரைத் தரம் பற்றி தெரிந்துக்கொள்ள வசதியாக கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் இணைப்பையும் கொடுக்க வேண்டும். இதனை ஒரு வார்புரு மூலம் செய்யலாம். வேண்டுமானால் ஒன்றை ஆக்கித் (ஆங்கில விக்கியில் இருந்து சுட்டுத்) தருகிறேன் :).--டெரன்ஸ்\பேச்சு03:24, 12 அக்டோபர் 2007 (UTC)Reply
தாரகை என்பது தமிழ்ச்சொல்லா? தரப்படுத்தலில் நாள்மீன் என்பதற்குப் பதில் இச்சொல்லைப் பயன்படுத்தலாமா? நாள்மீன் என்பதைக் காட்டிலும் தாரகை என்பது பரவலாக அறியப்பட்ட சொல்லோ என்று நினைக்கிறேன்--Ravishankar11:26, 12 அக்டோபர் 2007 (UTC)Reply
தாரகை என்பது தமிழல்ல என்று நினைக்கிறேன் (பரிபாடலில் பயன்பட்டுள்ளது, தமிழ்வழி பொருள் கூறமுடியும்). ஆனால் நாள்மீன் மிக அருமையான சொல், அது வேண்டாம் என்றால் விண்மீன். அல்லது மின்னுவது மீன் என்பதால் தமிழில் மீன் என்றாலே நாள்மீன்தான், எனவே மீன் என்றே எழுதலாம். மீன் என்னும் உயிரினத்தோடு குழப்பம் ஏதும் வராது. இடத்திற்கு ஏற்றார்போலத் தானே பொருள் கொள்ளும். மீன் என்றால் நாள்மீன் என்று பரவலாக ஆளப்பட்டு வந்துள்ளது. மீன் என்பது சுருக்கமாகவும் உள்ளது.--செல்வா12:13, 12 அக்டோபர் 2007 (UTC)Reply
மேலே குறிப்பிட்ட சித்தர் பாடல்களில் வேதியியல் குறிப்புகள் செறிந்து காணப்படுவதாக ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றியும் தமிழர் வேதியியல் அல்லது அது தொடர்பான தேடல்கள் குறித்தும் ஒரு சிறு கட்டுரை வரைந்தால் நன்றாக இருக்கும் நன்றி. --Natkeeran22:43, 14 அக்டோபர் 2007 (UTC)Reply
செல்வா, பயர்பாக்ஸ் 3 சோதனைப் பதிப்பில் தமிழ் டொமைன்கள் தெளிவாகத் தெரிகின்றது. இது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயம். பயர்பாக்ஸ் 3 இன் 2ஆவது சோதனைப் பதிப்பை தற்போது http://www.mozilla.com/en-US/firefox/all-beta.html ஊடாகப் பெறலாம்.--Umapathy (உமாபதி) 05:13, 29 டிசம்பர் 2007 (UTC)
தங்களின் அக்கறைக்கு மிகவும் நன்றி செல்வா! கூடிய விரைவில் சொந்தக் கணினி வாங்க எண்ணியுள்ளேன். அதன் பின் முழு வீச்சுடன் பங்களிக்க முடியும் என நம்புகிறேன். எனினும் விக்கி மாற்றங்களை அவதானித்துக் கொண்டே வருகிறேன்.--Sivakumar\பேச்சு12:37, 18 அக்டோபர் 2007 (UTC)Reply
புத்த மதம் தொடர்பாக ஆங்கில விக்கீடியாவில் உள்ளது போல் ஒரு 'போர்ட்டல்' உருவாக்க ஆசைபடுகிறேன். மேலும் பௌத்தம் தொடர்பான கட்டுரைகளை உருவாக்க ஒரு 'ப்ராஜெக்டையும்' உருவாக்க எண்ணுகிறேன். தயவு செய்து எவ்வாறு இதை செயவது என்பது தெரியவில்லை. தயவு செய்து உதவவும். −முன்நிற்கும் கருத்து பயனர்:Vinodh.vinodh (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
வினோ'த், கட்டாயம் செய்யலாம். வாயில்:கணிதம் என்னும் பக்கத்தைப் பார்க்கவும் (வாயில்:கணிதம்). அதனை ஒட்டி (தேவையான மாற்றங்களுடன்) புத்த மதத்திற்கு கட்டாயம் ஒரு "வாயில்" உருவாக்கலாம். நான் செய்ய நினைத்து மிகப்பலவும் செய்யாமலும், அரைகுறையாய் செய்ததும் நிறைய உள்ளன. புத்த மதத்தைப் பற்றி எழுதவும், சமணமதத்தைப் பற்றி எழுதவும் நிறைய ஆவல் உண்டு -ஆனால் எப்பொழுது இயலும் என்று தெரியவில்லை. --செல்வா11:40, 16 நவம்பர் 2007 (UTC)Reply
நான் புத்த, சமண மதங்களைப் பற்றி ஏதும் இன்னமும் எழுதவில்லை. படித்திருக்கிறேன், புரிந்துகொண்டிருக்கிறேன், இரண்டொரு கவிதைகள் இயற்றியுள்ளேன், ஆனால் இங்கு விக்கியில் ஏதும் இவைபற்றி எழுதவில்லை. ஆனால் எழுத ஆவலுண்டு (நான் ஆவலுறா தலைப்புகள் குறைவென்றே எண்ணுகிறேன் :) ).--செல்வா11:58, 16 நவம்பர் 2007 (UTC)Reply
பேச்சுப் பக்கத்தில் முனைவர் நா. கணேசனின் 15-பக்கக் கட்டுரை ஒன்றை குறிப்பிட்டுள்ளேன். பார்க்கவும். அவலோகிதர் வழிபாடு தமிழகத்தில் இருந்து பரவியதாக சிலர் நினைக்கின்றனர். பொதிய மலை தெக்கணமூர்த்தி , தட்சிணாமூர்த்தி, அவலோகிதராக புத்தமதத்தில் பரவியது என்பார்கள் சிலர். தமிழகம் பௌத்த மதத்தை ஒருகாலத்தில் வளர்த்தது உண்மை. *சென் மதத்தை நிறுவியவர் காஞ்சிபுரத்துத் தமிழர். --செல்வா14:10, 17 நவம்பர் 2007 (UTC)Reply
அறிவேன். மஹாயான சித்தாந்தம் தோன்றியெதே தென்னிந்தியாவில் தானே. பௌத்தம் வளர்த்த தமிழகத்தில் பௌத்தம் காணக்கிடைக்காதது வருத்தத்திற்குரியது.மேலே கூறியது போல் அவலோதரின் தமிழ் தொடர்பையும் கட்டுரையுடன் சேர்க்கவும் வினோத்14:15, 17 நவம்பர் 2007 (UTC)Reply
எனது செயலுக்கு மன்னிப்பு கோருகிறேன். உண்மையில் விக்கி மென்பொருளை பயன்படுத்துவதி எனக்கு அவ்வளவு அனுபவம் கிடையாது. அந்த குறுங்கட்டுரைகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்குடனே அவ்வாறு செய்தேன். தவறு நேர்ந்திருப்பீன் மீண்டும் மன்னித்தருள வேண்டுகிறேன் வினோத்14:19, 17 நவம்பர் 2007 (UTC)Reply
செரித்தல், சமிபாடு இவற்றில் எது அதிகப் பொருத்தமானது? சமிபாட்டுத் தொகுதி என்ற பிரயோகம் ஈழத்துப் பாடநூல்களில் உள்ளது. செரித்தல் இயக்கம் என்பதற்குப் பதிலாகச் சமிபாட்டுத் தொகுதி என்பதைப் பயன்படுத்தலாமா? கோபி04:59, 18 நவம்பர் 2007 (UTC)Reply
கோபி, செமித்தல், செரித்தல் இரண்டுமே ஒரே பொருள்தரும் நல்ல சொற்கள். அற்றல் என்பதும் அருமையான சொல். பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு செமித்தல், செமியாமை (அல்லது சமித்தல் சமிபாடு) என்பன விளங்குமா என அறியேன். செரித்தல், செரியாமை, செரிமானம் என்பன விளங்கும் என நினைக்கிறேன். சமி என்பது க்ஷமி என்னும் வடமொழி வழியதாக இருக்கலாம் என நினைக்கிறேன். செரித்தல் இயக்கம், செரிமான இயக்கம், செரிப்பியக்கம், செமிப்பியக்கம், செமித்தல் இயக்கம், செமிபாடு (சமிபாடு) இயக்கம்/தொகுதி. தொகுதி என்னும் சொல் உறுப்புகளை மட்டும் குறிக்கும், இயக்கம் என்பது உறுப்புகளும், அதன்வழி நடக்கும் இயக்கங்களையும் சுட்டும். சமிபாட்டுத் தொகுதி ஈழத்துப் பாடநூல்களில் இருந்தால், அதனை முதல் பத்தியிலேயே குறிக்கலாம். தமிழ்நாட்டு பாடநூல்களில் செரித்தல், செரிமானம் ஆகிய சொற்கள் ஆள்கின்றனர். உணவுச் செரிமான உறுப்புகள் என்பது 11 ஆம் வகுப்புப் பாடத்தில் உள்ள ஒரு தலைப்பு. செரித்தல் இயக்கம் என்று இருப்பதே தெளிவாக இருக்கும் (தமிழ்நாட்டினருக்கு). செரித்தல் என்னும் சொல் ஈழத்தில் ஆட்சியில் இல்லையா? --செல்வா14:56, 18 நவம்பர் 2007 (UTC)Reply
இல்லை செல்வா. நான் அறிந்தவரையில் செரித்தல் என்னும் சொற்பயன்பாடு ஈழத் தமிழில் இல்லை. சமிபாடு, சமித்தல் (எழுதும்போது), செமிபாடு, செமித்தல் (பேச்சு வழக்கு) போன்ற சொற்களே பெரும்பாலும் பயன்படுகின்றன. Mayooranathan17:15, 22 நவம்பர் 2007 (UTC)Reply
நேர்ச்சி தொடர்பில் உங்கள் விளக்கம் நன்று. இதையொத்த ஒரு உரையாடல் இங்கு நடைபெற்றது. இதில் நேருவதால்தான் நேரம் என்று குறித்தனரோ என்று நான் வியந்திருந்தேன். அது சரியா? இது சரியென்றால் அறிவியலாளர்களால் பெரிதும் போற்றப்படும் லெச்லீ லாம்போர்டின்லாஜிகல் கிளாக் என்ற கருத்துரு தமிழ் மொழியில் அடிப்படையிலேயே இருந்துள்ளது என்பது புலனாகும். :-) -- Sundar\பேச்சு03:25, 22 நவம்பர் 2007 (UTC)Reply
நேரம், நேர் (நிகழ்) என்னும் சொற்களுக்கிடையிலான தொடர்புகள் பற்றி நானும் பல தடவைகளில் சிந்தித்திருக்கிறேன். சுந்தரின் கருத்துச் சரி என்றுதான் எனக்கும் படுகிறது. இது தவிர நேர்த்தி, நேர்மை, நேர் (straight) போன்ற சொற்களில் தொனிக்கும் linear என்னும் பொருளும் கூட இந்த நேரம் என்னும் கருத்துருவுடன் தொடர்பு உள்ளதுபோல் எனக்குத் தெரிகிறது. Mayooranathan17:46, 22 நவம்பர் 2007 (UTC)Reply
சுந்தர், மயூரநாதன், இந்த நேரம் என்பது நேருவது, நிகழ்வது என்னும் அடிப்படையிலேயே உருவானது. அது லெஸ்லி லாம்போர்டின் கருத்துடன் ஒரு கோணத்தில் ஒத்ததே (அவர் போல் துல்லியமாய் நிறுவிக்கொண்டதாகக் கொள்ள இயலாதெனினும், அடிப்படைக் கருத்தில் ஒற்றுமை உண்டு. பார்க்கவும்: 'சூலை 1978 ஆம் ஆண்டு Communications of the ACM என்னும் ஆய்விதழில் லெஸ்லி லாம்போர்ட் எழுதிய "Time, Clocks, and the Ordering of Events in a Distributed System" என்னும் தலைப்பிட்ட கட்டுரையில் கூறுவது போல "However, we have taken the more pragmatic approach of only
considering messages that actually are sent. We should
be able to determine if a system performed correctly by
knowing only those events which did occur, without
knowing which events could have occurred."))
நேர்தல், நேர்வு, நேரல் என்னும் சொற்களுக்கு "உடன்பாடு" "எதிர்தல்" "கூடுதல் அல்லது கிட்டல், பொருந்துதல்" என்னும் பொருட்கள் நடுவானவை. "சம்பவித்தல்" என்பதும் குறிக்கப்படும் பொருள். எனவே நிகழ்தல். கூடுதல், கிட்டுதல், பொருந்துதல் என்பனவும் உடன்படுதல் என்னும் அடிக்கருத்தே. எதிர்தல் (=கிட்டுதல்). தமிழில் நேர்பு என்றால் ஒன்றிப்பு (ஒற்றுமை கொள்ளுதல், ஒன்றாதல்). இதுவும் "உடன்படுதல்" என்னும் அடிப்படை கொண்டதே. (நேர்பு என்பதை symmetry என்னும் சொல்லுக்கும் தமிழில் ஆளலாம் - இது பற்றி பின்னர் எழுதுகிறேன்). நேர் என்பதற்கு உண்மை என்று ஒரு பொருள் உண்டு - அதாவது மாறுபாடு இல்லாமல் "உள்ளதுடன்" ஒன்றி இருப்பதால் உண்மை. ஒற்றுமை இருப்பதால் உவமை என்னும் ஒரு பொருளும் உண்டு. இப்படியாக நேர் என்னும் சொல்லுக்குத் தமிழில் உள்ள 17 பொருட்களுக்கும் உள்ள அடிப்படை வேர்ப்பொருள் ஒற்றுமையை (நேர்மையைப்) உணரலாம். கழக அகராதி தரும் பொருள்களாவன: "உடன்பாடு, உண்மை, உவமை, ஒப்புரவு, கற்பு, சரி, செவ்வை, தகுதி, நீதி, நீளம், நுட்பம், நேரசை, நேரென்னேவல், பாதி, முன், மேல்வரிசை" பாதி என்னும் பொருள் எப்படி வந்ததென்றால், ஒரு சீரான பொருளை எப்படி வெட்டினால் இரு பகுதிகளும் ஒன்றாக இருக்கும் என்னும் கருத்தில் எழுந்தது. வட்டத்தை நடுவே வெட்டினால் இரு பகுதிகளும் ஒன்று போலவே இருப்பதால், பாதி என்னும் பொருள் பெற்றது. நேரம் என்பதற்கு பகலில் பாதி என்றும் ஒரு பொருள் உண்டு. அதில் இருந்தே, காலை நேரம், மாலை நேரம் என்னும் வழக்கும் வந்தது. காலை நேரம் என்பது morning time அல்ல, "first half of the the day". கால் என்றால் தொடக்கம் என்று பொருள். கால் கொள்ளுதல் என்றால் தொடங்குதல். நேர்க்கோடு (நேர்கோடு) என்பது முன் பகுதிக் கோட்டுடன் ஒன்றிய திசையிலேயே (ஒன்றிப்புடன்) விரியும் கோடு. நேர் என்பதற்கு நீளம் என்று ஒரு பொருள் உண்டு. இப் பொருள் நேரான திசையில் உள்ள இடைத் தொலைவு என்னும் பொருளும் கொள்ளும், வளைந்து உள்ள ஒரு வடிவின் நீளம் எனில், அந்த வளைந்த வடிவுடன் ஒன்றி இருந்து பெற்று, ஒரு நீட்ட அளவுடன் ஒப்பிட்டுப் பெற்றது என்பது பெறப்படும். நேர் என்பதை primary standard of comparison என்றும் கொள்ளலாம். நேர் என்னும் சொல்லின்வழி பிறந்த சொற்களையும், அது உணர்த்தும் பொருட்களையும், அச்சொற்கள் ஆளப்பெற்ற சொல்லாட்சிகளையும் விரித்தால் பெருகிவிடும். நேர்த்திக் குறிப்பு, நேர்சீர், நேர்த்திக்கடன், நேர்நிறை, நேர் சொல்லுதல் போன்ற சொற்களையும் அவற்றின் பொருட்களையும் கண்டு தேர்க. நேர்மை என்பது ஆங்கிலத்திலும் "straight forward" என்று குறிப்பிடப்படுவதையும் நோக்குக. நேர், நேர்த்தி, நேர்மை, நேர்ச்சி, நேர்வு, நேரல், நேர்தல், நேர்பு என பல சொற்கள் உள்ளன.--செல்வா03:27, 26 நவம்பர் 2007 (UTC)Reply
விளக்கம் அருமை, செல்வா. உங்கள் ஒவ்வொரு விளக்கத்திலும் தமிழ் மொழியின் எளிமையும் ஆழமும் புலப்பட்டு என்னை பெரும் வியப்பிலாழ்த்துகின்றன. ஓரெழுத்து மற்றும் ஈரெழுத்து வேர்களைக் கொண்டு எத்துனை பொருள்களை தகுந்த கரணீயத்துடன் உணர்த்த முடிகிறது! இத்தகு சிறப்புக்களைக் கற்கவும் கற்றதை ஆவணப்படுத்தவும் எனக்கு இப்பிறவி போதாதே என்று வருத்தமாக உள்ளது. -- Sundar\பேச்சு05:39, 26 நவம்பர் 2007 (UTC)Reply
அதிலும் இவற்றில் பல சொற்கள் அன்றாடம் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் கூடுதல் சிறப்பு. "கூடி வருதல்", "கிட்டுதல்", "நேர்த்திக்கடன்" போன்ற சொற்கள் இன்றளவும் பாமரர்களிடையேயும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை விடுத்து பிறமொழிச் சொற்களை நாடுதலும், பிற மொழிச்சொற்களோடு ஒலி ஒற்றுமையை மட்டும் பெற்று புதுச்சொல் ஆக்குவதும் என்ன அவலம்? -- Sundar\பேச்சு05:45, 26 நவம்பர் 2007 (UTC)Reply
மிகவும் நேர்த்தியான விளக்கம் செல்வா. இவ்வளவு நேரம் எடுத்து விளக்கம் தந்தமைக்கு நன்றி. இதுபோல ஆய்வு செய்து வெளிக் கொணர்வதற்கு ஏராளமான விடயங்கள் தமிழில் உள்ளன. ஆனாலும் இத்தகைய ஆய்வுகளை ஊக்குவித்து எல்லோருக்கும் எளிதில் பயன்படும் வகையில் பதிப்பிப்பதற்கான முறைமைகள் தான் நம்மிடம் இல்லை. இவ்வாறு பல்வேறுபட்ட சொற்களின் வேர்களுக்கு இடையிலான தொடர்புகளை அறிந்து கொள்வதன்மூலம் நமது பண்பாட்டின் அடிப்படைகளையும், நமது முன்னோரின் உலக நோக்கையும் விளங்கிக் கொள்ள முடியும். Mayooranathan17:26, 26 நவம்பர் 2007 (UTC)Reply
சுந்தர், மயூரநாதன், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. உண்மையிலேயே மயூரநாதன் கூறுவது போல சொற்களுள் ஏராளமான அருமையான கருத்துக்கள், நம் முன்னோர்களின் அறிவார்ந்த பார்வைகள், புதைந்து கிடக்கின்றன. நடு-நடுதல்-நடுக்கம் பற்றி முன்னர் எழுதியது நினைவிருக்கலாம். தமிழ்ச்சொற்களின் ஆழம் வியப்பூட்டுவதாகும். சிறுகச் சிறுக அவரவர் தாங்கள் கண்டுணர்ந்ததைப் பகிர்ந்து கொள்வதன்வழி, ஒரு சிறிதாகிலும் பதிவாகும், ஆவணப்படுத்தலாம்.--செல்வா16:26, 27 நவம்பர் 2007 (UTC)Reply
செல்வா, பௌத்தம் சார்ந்த கட்டுரைகளையும் ஒரு முறை முடிந்தால் Review செய்யுங்கள். பல புதுக்கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன. திட்டப்பக்கத்தை காணவும் வினோத் 15:17, 2 டிசம்பர் 2007 (UTC)
மொழி மாற்றம்
செல்வா, நீங்கள் மொழி மாற்றம் கட்டுரையில் செய்த திருத்தங்களுக்கு நன்றி. Mayooranathan 18:10, 2 டிசம்பர் 2007 (UTC)
Hi Prof
Prof Selva, you guys are just simply great, there's no doubt on that. Lemme make it clear, there was nothing wrong on ur replies or for that matter any one else's replies. You guys had your POV and I had mine. Seeing your(all the admins as a whole) Contributions in the Tamil Version of Wikipedia and me Virtually doing nothing around here compared to the volumes of your work, I felt as if I am provoking you guys with my petty comments and views. Frankly this is(ok, was) the thought I got in my mind.
The Following Section is intended to be Comical:Not to be Taken Seriously
Ok Ok Ok Ofcourse I also got a bit annoyed. Man, You just imagine my Plight, with virtually no one to support me, whatever I say you guys start a discussion it. Right from my Article on Manjusri to this Article on Kama Shastra. Its not fair u see ;-). May be you should start commenting when some more guys come around :-))(Atleasy I will have some support around) . Its just too boring to defend my postion again and again that too virtually on the same issue.
So out of my Annoyance I changed the Article Topics(I should have not done that, Sorry I got too emotional a bit. May be you should ban me for a week or so. ), I suppose you dont mind reverting them back to their old forms. வினோத் 18:01, 8 டிசம்பர் 2007 (UTC)
வினோத், பேச்சு:தமிழ்ப் பிராமி என்னும் பக்கத்தில் நான் உங்கள் கருத்துக்கு வலு சேர்த்துள்ளேன் :) --செல்வா 18:17, 8 டிசம்பர் 2007 (UTC)
Ya I Know. You are such a nice guy :-). So, can I revert back the articles to the old topics again ? We can a have Discussion(!?) and then change the topics I guess. வினோத் 18:21, 8 டிசம்பர் 2007 (UTC)
Esoteric
Esoteric என்பதற்கு என்ன தமிழ்ச்சொல்லை நான் பயன்படுத்த வேண்டு. அந்தரங்கம் :-) என எனது ஆங்கில-தமிழ் அகராதி காட்டுகிறது. இதை பயன்படுத்த விருப்பமில்லை. இனி வஜ்ரயானம் சார்ந்த கட்டுரைகளை இயற்றப்போவதால் இந்தச் சொல் அடிக்கடி வரும். தயவு செய்து இதற்கு தகுந்த தமிழ்ச்சொல்லை தெரிவிக்கவும் வினோத் 17:44, 9 டிசம்பர் 2007 (UTC)
Esoteric என்பதின் அடிப்ப்டையான கருத்துக்கள், ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் மறைபொருள், உட்பொருள். இரகசிய அறிவு உண்மை போன்றவை. தமிழில் இதற்கு பல சொற்கள் உண்டு, ஆனால் அவை பலரும் அறிந்தவை. அவையாவன: மறை, மறைபொருள், உட்பொருள். சிறப்பு உட்பொருள், தனி உட்பொருள் என்றும் கூறலாம். இவற்றோடு அறிவு என்னும் சொல்லையும் சேர்த்து உட்பொருள் அறிவு, மறைபொருள் அறிவு, சிறப்பு உட்பொருள், தனிமறையான அறிவு, மறை உயர்பொருள் அறிவு என்று பலவாறு கூறலாம். அறிவு என்பதற்கு மாறாக சில இடங்களில் ஒழுக்கு என்பதும் பொருத்தும். இரகசிய என்னும் பொருள் ஏற்கனவே உள்ளதென்றாலும், வலியுறுத்த வேண்டியிருப்பின், கமுக்க அறிவு (கமுக்கம் = இரகசியம்) என்றும் கூறலாம். தீற்று தருதல் என்றால் சிறப்பான இரகசிய அறிவு புகட்டுதல் என்னும் பொருள் உண்டு. எனவே இடத்திற்கு ஏற்றார்போல குறிக்க இயலும்.--செல்வா 02:40, 10 டிசம்பர் 2007 (UTC)
வரும் சில நாட்கள் பங்கு கொள்வது சற்று கடினம்
முடிந்த பொழுது சிறிதளவாவது பங்கு கொள்கிறேன். வரும் 2-3 நாட்கள் பங்கு கொள்வது
மிகவும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 13:38, 10 டிசம்பர் 2007 (UTC)
மயக்கத்தை தீர்க்க வேண்டுதல்
செல்வா, நான் இது வரை இயற்றிய எல்லா கட்டுரைகளிலும் வடமொழிப்பெயர்களை தமிழாக்கும் போது 'அர்' விகுதியுடனே மொழிப்பெயர்த்தேன். இந்த முறை தவறோ என எனக்கு ஒரு மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மரபுப்படி 'அன்' விக்தி சேர்ப்பதே வழக்கம். எ.டு இந்திரன்,யமன்,சிவன்,வருணன்,பிரம்மன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். யாரும் இதை இந்திரர்,யமர்,சிவர்,வருணர் என பாவிப்பது இல்லை. எனவே போதிசத்துவர்களை புத்தர்களையும் யிதங்களையும் மொழிப்பெயர்க்கும் போது அர் விகுதி சேர்த்து மரபுப் பிழை செய்து விட்டேனோ என எனக்கு ஒரு எண்ணம் எழுந்துள்ளது. எனவே எனது இந்த ஐயத்தை தீர்க்குமாறு வேண்டுகிறேன் வினோத் 06:57, 16 டிசம்பர் 2007 (UTC)
வினோத், இராமன் - இராமர், கிருஷ்ணன்-கிருஷ்ணர், புத்தன் - புத்தர், மகாவீரர், என்றெல்லாமும் உள்ளது. சிவனார், யமனார் என்றும் கூறுவதுண்டு. எனவே அர், ஆர் விகுதிகள் சேர்ப்பதுண்டு. சில சொற்கள் அன் விகுதியோடுதான் பரவலாக அறியப்படுகின்றது. எனவே இரண்டுமே சரிதான். ஆனால் அர் விகுதி பன்மையையோ, பெருமையையோ உணர்த்தும். அப்பன் என்பது அப்பர் என்று திருநாவுக்கரசரைக் குறிப்பது போல. (அப்பன் என்றாலே உயர்ந்தவர், பெரியவர் என்று பொருள். உயர்ர்தவன், பெரியவன் என்பதை உயர்ந்தவர், பெரியவர் என்றால் சற்று நுட்பப்பொருள் வேறுபாடு இருப்பதாகச் சிலர் உணரலாம்.)--செல்வா 15:38, 16 டிசம்பர் 2007 (UTC)
பேச்சுப் பக்கத்தில் உரையாடல் கோணம்
செல்வா, நீங்கள் சுட்டிக்காட்டியதை நானும் உணர்ந்தேன். பயனுள்ளதாகச் செய்யவெனப் பல பணிகள் இருக்க அவற்றைத் திசைதிருப்புவதாக அமைந்த உரையாடலென்பதால் முட்டாள்த்தனமென்று குறிப்பிட்டேன். ஆயினும் அதனை நான் எழுதியது அதிகப்பிரசங்கித்தனமானதும் பொருத்தமற்றதும்தான். நன்றி. கோபி 23:13, 17 டிசம்பர் 2007 (UTC)
2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்
செல்வா, உங்களின் தொடர்ச்சியான, ஆர்வலான, செழுமையான பங்களிப் த.வி ஒரு பெரிய பலம். அப்பணியை நீங்கள் இயலுமானவரை தொடர்ந்து நல்வீர்கள் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு. இவ்வருட ஆண்டறிக்கையிலும் உங்கள் தற்சமயத்தில் த.வி. நோக்கிய உங்கள் பார்வையையும், ஒரு வேலைத்திட்ட பரிந்துரையையும் பகிர்ந்தால் நன்று. நன்றி.
கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டுச் செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிபீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:
த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி.
சங்கம் மருவிய காலம், களப்பிரர் காலம், பல்வர் காலம்
0 - 500 ஆண்டுகள் வரை தமிழ் அறிஞர்கள் பற்றிய சில தகவல்களை சேகரித்து பகிர முடியுமா. இதைத் தொடர்ந்து வரும் பக்தி காலம், சோழர் காலம், அதன் பின் வரும் இஸ்லாமிய, ஐரோப்பிய பங்களிப்புகள், மறுமலர்ச்சி காலமாக கருதப்படக்கூடிய 1800 நூற்றாண்டு, வளர்ச்சிக்காலமாக கூறக்கூடிய 1900 நூற்றாண்டு ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்படுகின்றன. ஆனால் 0 - 500 என்ன நடந்தது...சற்று மயக்கமாகவே இருக்கின்றது. அறிய ஆவல். நன்றி. --Natkeeran 02:18, 22 டிசம்பர் 2007 (UTC)
மிகச்சிறந்த படைப்புகளாகிய சிலப்பதிகாரம், சீவசிந்தாமணி போன்ற காப்பியங்கள் முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் வரை பல நூல்கள் இக்காலகட்டத்தில்தான் எழுந்தன. பொதுவாக இலக்கியத்தில் இது பலராலும் "இருண்ட" காலம் என்று கூறப்படுவதற்குக் கரணியம் இக்காலத்தில் சிவனிய (சைவ), மாலிய (வை^ச்ணவ) மதங்கள் அல்லாத சமண, புத்த மதங்கள் தலை தூக்கியிருந்தது என்று கொள்வது பொருந்தும். களபிரளர் தமிழரல்லர் என்று ஒரு சாராரும், களமர் என்னும் தமிழர்கள்தான் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இது பற்றி பின்னர் எழுதுகிறேன்.--செல்வா 17:35, 22 டிசம்பர் 2007 (UTC)
நன்றி. உங்கள் கூற்று தற்போதைய வரலாற்று பார்வையுடன் ஒத்துப்போகிறது. மேலும் சில கருத்துக்களுக்கு பேச்சு:கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் பார்க்கவும். --Natkeeran 17:48, 22 டிசம்பர் 2007 (UTC)
உங்கள் பாராட்டுக்கு நன்றிகள். வெகு விரைவில் இங்கு எனது பணிகளை மீள தொடங்க முயற்சிக்கிறேன். --டெரன்ஸ்\பேச்சு 03:17, 25 டிசம்பர் 2007 (UTC)
மொழிபெயர்ப்பு உதவி தேவை
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களே,தங்கள் பாராட்டிற்கு நன்றி. மேலும் உங்களிடமிருந்து சில உதவி தேவை. ஐயா எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது. பல ஆங்கில இணையதளங்களில் உள்ள ஹாசன் பற்றிய செய்திகளை சேகரித்த பின் நான் கூகுளின் இந்திய எழுத்து மாற்றியை பயன்படுத்தி இக்கட்டுரையை எழுதியுள்ளேன். தாங்கள் இக்கட்டுரையில்லுள்ள பிழைகளை திருத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். Rnarendr 04:25, 2 ஜனவரி 2008 (UTC)
உதவி
செல்வா, எனக்கு ஒரு ஐயம்(அப்பப்ப Doubt கேக்கறன்னு கோச்சிக்காதீங்க:-)).
அருகன் என்பது அர்ஹதன் என்ற சொல்லின் தமிழ் வழக்கா ? அல்லது இரண்டும் வெவ்வேறு பொருளை குறித்த சொற்களா. அருகன் என்ற சொல்லாட்சி திடீரென்று நினைவுக்கு வந்தது (தமிழில் எப்போதோ அருக தேவனை குறித்த பாடலை படித்ததாக நினைவு. எனினும் இங்கு அருகதேவன் என்பது மகாவீரரை குறிக்கின்றது என கருதிகிறேன்). இரண்டு ஒலிப்பியல் முறையில் ஒற்றுமை உடையவனாக உள்ளன. என்வே இரண்டும் ஒரே சொல்லா என ஐயம் எழுந்தது.
இரண்டு ஒரே சொல்லெனில் தானியங்கி மூலம் அர்ஹத என்பதை அருக என மாற்று விடுகிறேன்
ஐம்பெருங்காப்பியங்களில் இரண்டு பௌத்தத்தை சார்ந்தவை என்ற நிலையில் பண்டைய பௌத்த தமிழ் இலக்கியங்களில் நிச்சயமாக பௌத்த சமய கலைச்சொற்கள் தமிழ் வடிவில் நிறைய இருக்கும். அவற்றை சுட்டிக்காட்டினால், கட்டுரைகளில் அவற்றை மாற்றிவிடலாம்.
அருகன் என்னும் சொல் தமிழில் பல்வேறு சூழல்களில் பல்வேறு பொருட்கள் கொள்ளும். அருகன் என்றால், அருகே, நெருக்கமாக என்னும் பொருளில் நண்பன் என்று பொருள் (நெருக்கமானவன், அன்புகொள்ளத்தக்கவன், தோழன்). Arhat என்று சமணமதத்தில் கூறுவோரையும் சுட்டும். அருகன் என்னும் சொல் புத்தரையும், சிவனையும் கூட சுட்டும், ஆனால் சமணர் மத அருகரையே அதிகமாக சுட்டுவதாக நினைக்கிறேன். தமிழ்வழி உணர்த்தும் பொருள் (நுட்பப்பொருள்) வேறான அடைப்படையில் எழுவதாக இருக்கலாம். --செல்வா 06:28, 4 ஜனவரி 2008 (UTC)
எனவே அர்ஹதன் என்பதை அருகன் எனவும் அர்ஹத நிலை என்பதை அருக நிலை எனவும் கட்டுரைகளில் மாற்றிவிடலாமா ?
கட்டாயம் அருகன் என்று மாற்றலாம், வினோத். குறைந்தது தமிழில் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொல்லாட்சி.--செல்வா 15:26, 4 ஜனவரி 2008 (UTC)
காலநிலையா அல்லது வாநிலையா?
வானிலை என்பதில் தினமும் மற்றம் இருக்கும் ஆனால் காலநிலையில் இவ்வாறு மற்றங்கள் எதுவும் ஏற்ப்படது.
இன்னும் சொல்லப்பொனல் காலநிலையில்(Climate) பருவங்கல்(Seasons) அடங்கும், பருவங்களுக்கு (Seasons) ஏற்றவாரு வாநிலை (Weather) மாறும். அதனால் இக்கட்டுரைக்கு இந்தியாவின் காலநிலை என்ற தலைப்பே சரியாக அமையும். --Rnarendr 04:49, 4 ஜனவரி 2008 (UTC)
మీకు నా హృదయ పూర్వ ధన్యవాదలు
సెల్వాగారూ మీకు నా కృతజ్ఞతలు. ఎన్నో సారి మీతొ ఎంతో అతి ఉగ్రంగా మీ మాటలకు ఎదురుగా చర్చ చేసినా కూడా అవి అంత చూడకుండా నన్ను ఇంత ఎన్కరేజ్ చేసినందుకు చాలా సంతోషంగా ఉంది. నిజం చెప్పాలంటే, మొతటి సారి మంజుశ్రీ లేఖలో జరిగిన చర్చలో మీ ముందు నేను నేరుగా కనిపడితే నన్ను తన్నెస్తారో ఎంవో అని అనుకున్నాను :-). ఎందుకంటే మీ మాటలను బట్టి మీ వయసు 23-25 వరకు ఉంటుందని నేను అనుకున్నాను. తర్వాతే కోపి నా పేజ్లో చెప్పగానే మీరు ప్రఫస్సర్ అని ననకు తెలుసింది.(తర్వాతే మీ యూసర్ పేజిని చూసాను, అంత వరకు నేను చేడలేదు). మంజుశ్రీ చంచ జరిగినప్పుడు ఇక తమిళ వికిపీడియా వైపే రాకూడుదు అని అనుకున్నాను. రవి నన్ను ప్రశాంతం చెసిన తర్వాతే నా తప్పు నాకు తెలిసింది. మీకు ప్రఫసర్ అని తెలుసిన తర్వాత, రెండవ సారి కామ శాస్త్రం లేఖలో చర్చ జరిగినప్పుడు మీకు నేను అనావసరమైన కష్టాలు ఇస్తున్నానని అనుకున్నాను. రెండవ కామ శాస్త్ర చర్చలో నేను మీకు కష్టం ఇస్తున్నాని నేను అనుకుంటు, ఆ సారి కూడా తమిళ వికిపీడియా వైపు రావడానికి వీల్లేదని అనుకున్నాను. ఇవ నేను తప్పుగా నా కల్పన వల్ల అనుకున్నవి అని నాకు తర్వాతే ఆలోచన వచ్చింది.(సుందర్ జరిగిన చర్చను ఇందులో నేను చేర్చ లేదు వివరాలకు చూడండి ఇజనమి టాక్ పేజిని. :-) ఇది కూడా నేను పొరప్పాటపడి పిచ్చితనంగా తీసిన నిర్ణయం. ఈ సారి నేను ప్రశాంతం అయినందుకు కారణం కోపి. కోపి పాపం నాకోసమే ప్రత్యేకంగా జి-మెయిల్ టాక్ లో నాతో మాట్లాడి నన్ను ప్రశాంతం చేసారు.)
ఏంవో మీతో ఈ మాటలు చెప్పాలని అనుకున్నాను. చెప్పాను. నా మీద ఏ రకమైన కోప పడకుండా, నెను చేసిన తప్పులన్ని క్షమించి నా పిచ్చి మాటలన్ను నిర్లక్ష్యం చేసందుకు నా దన్యవాదాలు.
నేను మనసులో అనుకున్నది అట్లాగే ఏ విదమైన మార్పు లేకుండా మీతో చెప్పాలని అనుకున్నాను, అందుకె తెలుగులొ రాసాను. తప్పుగా అనుకొ వద్దు. మికు తెలుగు తెలుసు అని ముందు ఒక సారి ఎక్కడో చెప్పినట్టు నాకు గుర్తు.
வினோத், உங்களி மனமார்ந்த நன்றி தெரிவித்தமைக்கு நன்றி. உங்களுடைய மேற்கண்ட மறுமொழிக்கும் மிக்க நன்றி. உண்மையில் தமிழ் வீக்கியில் உங்களுடைய அருமையான பௌத்தமத கட்டுரைகளைப் படிப்பவர்கள்தான் உங்களுக்கு நன்றி கூறுதல் வேண்டும். அப்படிப் படிக்கும் ஒருவனாகவே நான் என் நன்றி, பாராட்டுதல்களைத் தெரிவித்தேன். நீங்கள் முதலாவது பேராசிரியர், அப்படி இப்படி என்றெல்லாம் நினைக்காமல் நீங்கள் முதலில் நினைத்தவாறே உடன் பங்களிக்கும் ஒருவனாகவே என்னுடன் உரையாடுங்கள். கருத்துவேறுபாடுகள் பற்றி ஒரு சிறிதும் தயங்காதீர்கள் (தயங்க மாட்டீர்கள் என்பது என் நம்பிக்கையும் கூட:) ). Constructive dialog (வளர்முக கருத்தாடல்) என்பார்களே அதுதான் என்றுமே நல்லது என்பது என் கருத்து. என் பொருட்டு ரவி, சுந்தர் உங்களிடம் கூறியதற்கு நன்றி..எனக்கு தெலுங்கு எழுத்துக்களைப் படிக்க ஓரளவிற்குத்தெரியும் என்றேன், நீங்கள் எழுதியதில் ஒரு தெலுகு அகராதிகள் ஏதும் இல்லாமல் 60% புரிந்து கொண்டுள்ளேன் (மெதுவாக படித்து), ஆனால் தெலுகு அகராதி இருந்தால் 70% - 80%தெளிவாக புரிந்து கொள்ள இயலும். நீங்கள் தெலுகு எனக்குத் தெரிந்ததாக எங்கோ படித்ததாக நினைவு என்று குறிப்பிட்டுளது, அண்மையில் பெயர் பதிவு செய்யாது சுவிட்சர்லாந்து நாட்டிலில் இருந்து சினிவாச இராமானுசர் கட்டுரையின் பேச்சுப் பக்கதில் உரையாடியதில் இருக்கும் என நினைக்கிறேன்.
மீண்டும் நானும் என் ஹ்ருதய பூர்வ தன்யவாதத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தெலுங்கில் மறுமொழி இடத் தெரியாது, எனவே மன்னிக்கவும். --செல்வா 20:06, 5 ஜனவரி 2008 (UTC)
நான் தெலுங்கில் எழுதியது உங்களுக்கு இடர்ப்பாடாக இருந்திருப்பின் வருந்துகிறேன். மனதார தோன்றியதை தோன்றிய விதமாகவே எழுத வேண்டும் என கருதியே அவ்வாறு எழுதினேன். தமிழில் எழுதினால் என்னுடைய எண்ணம் மொழிமாற்றத்துக்கு உள்ளாகும் என்பதால் நான் எழுதவில்லை. உங்களுக்கு தேவையில்லாமல் இடர்ப்பாடுகள் தந்தற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்
வினோத், நீங்கள் தெலுங்கில் எழுதியது எனக்கு மகிழ்ச்சியே, ஒரு சிறிதும் வருத்தம் இல்லை! எனக்கு தெலுங்கு சரளமாக பேச, எழுத, புரிந்துகொள்ளப் படிக்கத் தெரியும் என்று நினைக்க வேண்டாம் என்று தெரிவிக்கவே நான் என் நிலைமையைக் கூறினேன். தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி ஓரளவிற்கு அறிமுகம் உண்டு (~60%), (சில நேரங்களில் அது 80% ஆகவும் இருக்கலாம்) ஆனால் சரளமாக பேச எழுத, படிக்க, புரிந்துகொள்ளத் தெரியாது. அதுவும் நான் தெலுங்கு ஓரளவிற்குப் பயின்றது 30 ஆண்டுகளுக்கு முன்னர் (ஆந்திராவில் அமலாபுரம் தாலுக்காவில் இருந்த அருள்திரு பாலயோகீசுவரரைக் காணச் செல்லும் முன் பயின்றது). நீங்கள் என்னிடம் உரையாடும்பொழுது தெலுங்கில் எழுத நினைத்தால் எழுதுங்கள், நான் புரிந்துகொண்டதை வைத்துக்கொண்டு தங்களுக்கு தமிழில் மறுமொழி இடுகிறேன். நான் தவறாகப் புரிந்து கொண்டு மறுமொழி தந்தால் தயங்காது திருத்துங்கள். --செல்வா 13:26, 6 ஜனவரி 2008 (UTC)
இந்திய மொழி எழுத்துக்களைப் படிக்க இனியன் உதவலாம்--ரவி 17:27, 6 ஜனவரி 2008 (UTC)
இந்தியக் காலநிலை
நீங்கள் சொன்னதுபோல நான் இக்கட்டுரையை தொடருகிறேன். தயவுகூர்த்து நான் எழுதும் ஆங்கில வார்த்தைகளை அதற்கு இணையான தமிழ் வார்த்தைகளாக மாற்றி விடவும் --Rnarendr 02:49, 8 ஜனவரி 2008 (UTC)
மேலும் கிழே குறிப்பிட்டுள்ளவை சரியாகுள்ளதா என்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Alpine climate - ஆல்பைன் காலநிலை
Humid subtropical - ஈரப்பதமிக்க subtropical
Tropical wet and dry - ஈரம் மற்றும் வரண்ட Tropical
Tropical wet - ஈரமான Tropical
Semi-arid - பகுதி வறட்சி
Arid - வறட்சி
--Rnarendr 03:18, 8 ஜனவரி 2008 (UTC)
பரிந்துரை
Alpine climate - ஆல்ப்மலய காலநிலை தட்பவெப்பம்
Humid subtropical ==> ஈரப்பத கீழ்வெப்பமண்டல
Tropical wet and dry ==> வறண்ட மற்றும் ஈர வெப்பமண்டல
Tropical wet ==> ஈர வெப்பமண்டல
Semi-arid ==> குறைய வறண்ட, குறை புன்நில, குறை வெங்கான்நில
Arid ==> வறண்ட, புன்புல, வெங்கான்நில, பொட்டல் என பல பெயர்கள் வழங்கலாம். ஆனால் வறண்ட என்பது போதும்.
--செல்வா 03:45, 8 ஜனவரி 2008 (UTC)
காலனிலையா வானிலையா
உங்கள் கருத்துக்களை பார்த்தேன், நானும் இங்குள்ள பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் புவியில் புத்தகங்களை புரட்டிப்பார்த்தேன். அதில் ஒருபுறம் காலநிளைக்கேர்றவாறு தட்பவெப்பநிலை மற்றும் வானில மாறும் என்றும் மற்றொருபுறம் தட்பவெப்பநிலை என்னும் சொல்லை காலநிலை என்ற சொல்லுக்கு பதிலாக பயன் படுத்தப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்த தமிழ் மற்றும் புவியில் ஆசிரியர்களிடம் விசாரித்ததில் என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.
When I see this topic in broad and generalised view I come to an conclusion that Temperature (தட்பவெப்பம்), Weather (வானிலை), Seasons (பருவ காலம்) are the phenomena under the main topic Climate (காலநிலை). We might need some help from our friends in Wiki to have more suggestion regarding this topic.
--Rnarendr 03:54, 8 ஜனவரி 2008 (UTC)
தட்பவெப்பம் என்பது Temperature அல்ல!! தட்பம் என்பது குளிர்நிலையைக் குறிக்கும். வெப்பம் என்பது வெப்பநிலையைக் குறிக்கும். தட்பவெப்பம் என்பது இவ்வேறுபாடுகளால் உள்ள சூழ்நிலை,காரணிகள் எல்லாவற்றையும் குறிக்கும். அதுதான் Climate. தட்பவெப்பம் என்று கூறும்பொழுது "நிலை" என்று கூறத்தேவை இல்லை. வெப்பநிலை, குளிநிலை, தட்பவெப்பம் எனபன வெவ்வேறானவற்றைக் குறிக்கும். Please understand that Temperature is வெப்பநிலை and don't mixup this with தட்பவெப்பம். The tamil terminology அடிதடி , தட்டுமுட்டு, வெட்டுகுத்து, and numerous such expressions mean not the individual words in those, but like "disturbance/turmoil", "household things", "violent orgy" etc. In short they are sort of idiomatic (with some underlying rationale) expressions.--செல்வா 04:10, 8 ஜனவரி 2008 (UTC)
உங்கள் கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனாலும் தட்பவெப்பம் என்பது Temperature அல்ல என்ற உங்கள் கருத்தில் எனக்கு ஒரு ஐயம் உள்ளது. தங்கள் கூறியதுபோல தட்பவெப்பம் சொல் குளிர் மற்றும் வெப்ப அளவினை குறிக்கும் சொல். அதாவது இங்கு குளிர் என்னும் சொல் வெப்பநிலையின் குறைந்த அளவையும் வெப்ப சொல் வெப்பநிலையின் அதிக அளவையும் குறிக்கிறது என்பதே என் கருத்து. இதற்கு எடுத்துக்காட்டாக மேலும் கடலுக்கடியில் உள்ள சூழ்நிலையை தட்பவெப்பத்தால் (low and high temperature) ஆராயப்படுகிறது. Climate என்னும் சொல் கடலின் மேல்மட்டத்திலிருந்து வளி மண்டலத்தின் பகுதி (stratosphere) வரையுள்ள இடத்தில் ஏற்படும் வளி மண்டல மாற்றங்களை தனக்குள் அடக்குகிறது. A term/word defining relative difference between a maximum and minimum temperature cannot be considered as a word equivalent to Climate.--Rnarendr 05:09, 8 ஜனவரி 2008 (UTC)
ஐயா.. என்னை தவறாக நினைக்க வேண்டாம். இங்கு நான் நம்புகிறேன், நான் நம்பவில்லை என்ற கருத்திற்கே இடம் இல்லை.My main aim is to deliver a standrad article about Indian Climate in Tamil. எனக்கு தெரிந்த சில தமிழ் மற்றும் புவியியல் பேராசிரியர்களின் உதவியுடன் நான் இக்கட்டுரையை எழுதி வருகிறேன். நீங்கள் கூறுவதை போல நான் கூகிள் தேடலை நம்பியதில்லை. ஆங்கிலத்தைபோல தமிழிலும் ஒருசொல் பலபொருள் கொண்டுள்ளது. கிளிமடே என்பதற்கு தட்பவெப்பத்தை தவிர வேறு ஏதேனும் சொல்லுள்ளதா என்று கூறுங்களேன்--Rnarendr 11:55, 21 ஜனவரி 2008 (UTC)
செல்வா Vanakam :)
Eppidi sugam? I've been trying to figure out how to request help here. I would like to know if you could help me translate a version of two or three sentences of this article for the Tamil Wikipedia? The initial two or three sentences would be more than enough since a short stub-translation could later provide the basis for future development. Happy 2008! ;) -Angayarkarasi 04:52, 8 ஜனவரி 2008 (UTC)
எனக்கு ஒரு ஐயம், சமசுகிருதத்தின் தாக்கம் தமிழில் உள்ளதா? அல்லது ஆரியர்களின் வருகையால் சில எழுத்துக்கள் தமிழில் வந்ததா?--Rnarendr 12:09, 21 ஜனவரி 2008 (UTC)
செல்வா, புரவுக்காடு போன்ற பலருக்கும் புதிய சொற்களை கட்டுரைகளில் ஆளும்போது, அச்சொற்களுக்கான விளக்கங்களை விக்சனரியில் சேர்த்து விட்டு கட்டுரையில் இருந்து தொடுப்பு தந்தால் உதவும் என்று கேட்டுக் கொள்கிறேன். --ரவி11:08, 2 பெப்ரவரி 2008 (UTC)Reply
ஆம் ரவி, அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும். புரத்தல் என்றால் பாதுகாத்தல். புரவலர் என்றால் காவலர் (அரசர்/அரசி). காப்பு அளிக்கப்பட்ட காடு என்னும் பொருளில் புரவுக்காடு என்று எழுதியிருந்தேன். தொடுப்பு தர முயல்கிறேன். எப்படித் தர வேண்டும் என்று மறந்துவிட்டது :)--செல்வா14:25, 2 பெப்ரவரி 2008 (UTC)Reply
Image:Egret all sky gamma ray map from CGRO spacecraft.gifஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT08:51, 3 பெப்ரவரி 2008 (UTC)Reply
Image:Moon gamma rays egret instrument cgro.jpgஐ பதிவேற்றம் செய்ததற்கு நன்றிகள். இருப்பினும் இந்த கோப்பின் விபரண பக்கத்தில் இதை கோப்பை இயற்றிவரை குறித்த தகுந்த காப்புரிமை வார்ப்புரு காணப்படவில்லை, எனவே இந்த கோப்பின் காப்புரிமை நிலைமை தெளிவற்றதாக உள்ளது. தாங்கள் இந்த கோப்பை இயற்றவில்லை எனில், தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவை சேர்க்க வேண்டும். தாங்கள் ஏதேனும் வலைத்தளங்களில் இருந்து பெற்றிருப்பின், அந்த வலைத்தளத்தின் முகவரியோடு, வலைத்தளத்தின் பயன்பாட்டு அதிகாரத்தையும்(Terms of Use)ஐயும் சேர்த்து அளிக்க வேண்டும். ஒருவேளை, அந்த படத்தின் காப்புரிமை வேறு எவரிடமோ இருந்தால், அதற்குறிய தகுந்த வார்ப்புருவை சேர்த்து விடவும். எச்சரிக்கை, பெரும்பாலான வலைத்தளங்களில் இருந்து பெறப்படும் படமங்கள் காப்புரிமை கொண்டதாக இருக்கலாம். எனவே தகுந்த திறவுமூல அல்லது கட்டற்ற வலைத்தளங்களில் இருந்து படிமங்களை பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அதற்கு மேற்கூறிய தகுந்த மூலம் மற்றும் வார்ப்புருவை இணைத்து விடவும். தாங்கள் பதிவேற்றிய கோப்புகளை இந்த சுட்டியின் மூலம் காண்லாம். தகுந்த காப்புரிமை இல்லாத வார்ப்புருக்கள் இந்த எச்சரிக்கை விடபட்ட ஒரு மாத காலத்துக்குள் நீக்கப்பட்டுவிடும். எனவே தயை கூர்ந்து அதற்குள் தகுந்த வார்ப்புருவை தாங்கள் பதிவேற்றிய படிமத்துடன் இணைத்து விடவும். நன்றி --VinodhBOT08:54, 3 பெப்ரவரி 2008 (UTC)Reply
படிமம்:Gnb.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
Information Literacy என்பதைத் தகவற் பகுத்தறிவு எனத் தமிழில் பயன்படுத்தலாமா? Information Competency, Information Fluency போன்ற சொற்களாலும் Information Literacy குறிப்பிடப்படுவதுண்டு. நல்ல தமிழாக்கத்தைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். கோபி01:39, 1 மார்ச் 2008 (UTC)Reply
செல்வா, தகவல் தேர்ச்சி, தகவல் தேர்ச்சித் திறன், தகவல் அறிதிறன், தகவல் தேர்திறன் ஆகிய சொற்களையும் கவனத்திலெடுக்கக் குறிப்பிட்டுள்ளீர்கள். Information Literacy என்பதில் தகவலின் தேவையை உணர்தல், தேவையை வரையறுத்தல், தேடிப்பெறல் அல்லது உருவாக்குதல், விளங்கிக் கொள்ளல், பயன்படுத்தல் போன்ற பல படிநிலைகள் இருப்பதால் தகவற் பகுத்தறிவு என்பதனை விட தகவல் அறிதிறன் என்பதே பொருத்தமெனப் படுகிறது. நன்றி. கோபி04:55, 3 மார்ச் 2008 (UTC)Reply
:படிமம்:Heat Content of Zn(c,l,g).PNG இன் காப்புரிமை என்ன?
படிமம்:Heat Content of Zn(c,l,g).PNG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
செல்வா, Native People, Native Plants போன்றவற்றில் வரும் Native என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? நான் சில இடங்களில் Native People என்பதற்குத் தொல்குடி என்று பயன்படுத்தியுள்ளேன். ஒரு மானிடவியல் நூலில் திணைக்குடி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். திணை என்னும் சொல்லுக்கு place, region போன்ற பொருள்களும் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் தரப்பட்டுள்ளன. மயூரநாதன்12:06, 14 மார்ச் 2008 (UTC)Reply
மயூரநாதன், Native என்பதற்கு எல்லா இடங்களிலும் பொருந்தி வரும் சொல் இருக்குமா என அறியேன். இச்சொல்லை மக்கள் இனத்தின் ஒருபகுதியைக் குறிக்கும்பொழுது பழங்குடி, தொல்குடி, ஆதிவாசி, முதற்குடிகள் முதலான சொற்களைக் கேட்டிருக்கின்றேன். திணைக்குடி என்பதும் பொருந்தும் சொல்லாகத்தான் தெரிகின்றது. ஆங்கிலத்தில் aborigines, native people, autochthonous, first nations people என்று பலவாறு கூறுகின்றனர். இவற்றுள் பொருள் வேறுபாடுகள் குறைவு என்றே நினைக்கிறேன், என்றாலும் துல்லியமாய் இது பற்றி எண்ணி, வேறுபாடுகள் இருப்பின், அதற்கேற்றார்போல தமிழில் ஆக்க வேண்டியிருக்கும். திணைக்குடி என்பது பொருந்தும் ஆனால் எத்தனைப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.--செல்வா14:39, 14 மார்ச் 2008 (UTC)Reply
Native People என்பதை ஊர்மக்கள் அல்லது அவ்விடத்தைச் சேர்ந்த மக்கள் எனலாம் மேலே செல்வா கூறியதுபோன்று பூர்வீகக்குடிகள் என்பதையும் பயன்படுத்தலாம். Native Plants என்பதை அவ்விடத்து மரங்கள் அல்லது பாரம்பரிய மரங்கள் என்றவாறு சந்தர்பத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம் என்பது என்னுடைய கருத்து.--உமாபதி\பேச்சு17:20, 22 மார்ச் 2008 (UTC)Reply
புதிய பகுதி தான் சரி. தொடர்புடைய மீடியாவிக்கி பக்கத்தை மாற்றி இருக்கிறேன். புதியப் பகுதி என்று வந்தது மீடியாவிக்கித் தமிழாக்கத்தில் நேர்ந்த பிழையாக இருக்கலாம்--ரவி12:57, 26 மார்ச் 2008 (UTC)Reply
சுந்தர் பேச்சுப் பக்கத்தில் பதிவு செய்த மறுமொழியின் படி:
படத்தில் கொடுத்துள்ள பறவைகளின் அலகுகளுக்கான சொற்கள் பற்றி நீங்கள் என் பயனர் பக்கத்தில் ஒரு வேண்டுதல் விடுத்திருந்தீர்கள். அவற்றிற்கான ஈடு இணையான சொற்களை பரிந்துரைத்து கீழே பட்டியலிட்டிருக்கின்றேன். ஒரு சிறிது இங்கு (அல்லது சொல் தேர்வு பக்கத்தில்) அலசிய பின்னர் நீங்கள் இன்க்˘ச்கேப் ஐப் பயன்படுத்தி மாற்றிவிடுங்கள். பறவைகளின் உறுப்புகள் பற்றிச் சில சிறப்புச் சொற்கள் தமிழில் உண்டு. அவற்றில் ஏதேனும் இங்கு பயன்படக்கூடிய சொற்கள் பி. எல். சாமி அவர்களின் புத்தகத்தில் கொடுத்துள்ளதா என்று ஒரு பார்வை இடுகின்றேன். சற்று பொறுத்து இருங்கள். நன்றி. --செல்வா16:46, 31 மார்ச் 2008 (UTC)Reply
பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் மிகவும் நன்றாக உள்ளன. ஆனால் filter feeding என்பதற்கு ஈடான பொருள் சேறு அளை என்பதில் கிடைப்பதாகத் தெரியவில்லை. மயூரநாதன்19:32, 31 மார்ச் 2008 (UTC)Reply
நன்றி.
மயூரநாதன், Flamingo என்பதை பி. எல். சாமி பூநாரை என்று கூறுவார். அத்தகு பறவைகள் நீரும் சேறுமாக உள்ள பகுதியில் அலகை உள்ளே விட்டு, இங்கும் அங்குமாக அளைந்து தன் உணவை உண்ணுகின்றது. Filter என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் வடிகட்டி அலகு என்று வரும். வேறுவிதமாகக் சொல்லுவதென்றால் சலி அலகு
(சலித்தல் என்றாலும், இங்கும் அங்குமாக ஆட்டி வகைப்படி பிரித்து எடுப்பதைக் குறிக்கும்). இந்த சலித்தல் என்பதில் இருந்து சல்லடை (sieve) என்னும் சொலும் பெறுகின்றோம். வடிகட்டி, சல்லடை போன்ற சொற்கள் உண்மையிலேயே இங்கு பறவை அலகுகளுக்குப் பொருந்துமா என அறியேன். இன்னும் சற்று தீர எண்ணியபிறகே சொல்ல முடியும்.
நல்ல பரிந்துரைகள். தினையுண்ணி முகமலர்ச்சியை ஏற்படுத்தியது. எங்கள் ஊரில் பலரும் கம்பங்கூழ், கேப்பை (கேழ்வரகு) கூழ் ஆகியவற்றைத் தினைமாவினால் ஆனது என்பர். சலி அலகு என்று மொழிபெயர்த்து சேறு அளை என்பதை அடைப்புக்குறிகளிடையே தரலாமென நினைக்கிறேன். -- சுந்தர்\பேச்சு06:01, 1 ஏப்ரல் 2008 (UTC)Reply
படிமத்தை மொழிபெயர்த்தேன். ஏதோ வழுவினால் தமிழ் எழுத்துக்கள் படிம விவரப்பக்கத்தில் தெரியவில்லை. எழுத்துரு சிக்கல் போலும், விரைவில் சரி செய்கிறேன். "Filter feeding" என்பதற்கும் "Not to scale" என்பதற்கும் மொழிபெயர்ப்புகள் தேவை. -- சுந்தர்\பேச்சு12:16, 1 ஏப்ரல் 2008 (UTC)Reply
வாவ்! ரொம்ப அருமையா வந்திருக்கு, சுந்தர்!! Filter feeding என்பதற்கு வடிப்பலகு எனலாம். பி. எல் சாமி அவர்களின் நூலில் பூநாரை (Flamigo) பற்றிய பகுதியை எடுத்து வைத்திருக்கின்றேன். நாளைக்குள் அதில் கூறியுள்ள சில அருமையான செய்திகளை, இங்கு பதிவு செய்கிறேன். ஒன்றே ஒன்று இப்போதைக்கு (பக்கம் 94): " இவ்வாறு பூநாரை மண்ணிலிருந்து நுண்ணிய இரையை அலகினால் வடிகட்டி எடுத்து உண்பதை வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்தான் கண்டுபிடித்தனர்" (பின்னர் இது பற்றி இன்னும் எழுதுகிறேன்). Not to scale என்பதை ஒப்பளவு இல்லை அல்லது சீரொப்பு அளவு இல்லை அல்லது ஒப்பளவு வரைவு இல்லை என்று ஏதேனும் ஒன்றை சொல்லலாம். உங்களுக்குத் தினையுண்ணி பிடித்து இருப்பது கண்டு மகிழ்ச்சி. பயிறுண்ணி என்றும் சொல்லலாம். --செல்வா14:50, 1 ஏப்ரல் 2008 (UTC)Reply
நாளை படத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து விடுகிறேன். (பி.எல்.சாமி அவர்களின் தகவல்கள் வியப்பூட்டுகின்றன. அறியக்காத்திருக்கிறேன்.) -- சுந்தர்\பேச்சு16:11, 1 ஏப்ரல் 2008 (UTC)Reply
படத்தில் "ஒப்பளவு வரைவு இல்லை" என்னும் தொடரைக் கீழே இடப்புறமாக இடாமல் நடுவே இட்டுப், பின்னர்
படத்தின் இட-வலப் பக்கங்களில் எழுத்துக்களைத்தாண்டி இருக்கும் வெற்றுப் பகுதிகளை நறுக்கி விட்டீர்கள் என்றால் படம் சற்று பெரிதாக எடுப்பாக (மூலப் படத்தில் உள்ளது போல) இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன்.--செல்வா14:28, 2 ஏப்ரல் 2008 (UTC)Reply
'இன்க்˘ச்கேப்' ஒலிபெயர்ப்பு தொடர்பில் உங்கள் எண்ணங்களையொத்தே என்னுடையதும் உள்ளன. இந்த பிறைக்குறியை எப்படி உள்ளீடு செய்கிறீர்கள்? தொகுத்தல் பக்கத்தில் உள்ளீடுக்கான உதவிப்பகுதியில் (கீழே உள்ளது) இந்தக்குறியையும் இணைக்க வேண்டும்.
எ˘ச்.வி.'சி. கோப்புகளிலுள்ள உரைகளை மட்டும் மொழிபெயர்க்க எந்த ஒரு உரை தொகுப்பு மென்பொருளையும் பயன்படுத்தலாம். படிமத்திலுள்ள உரைகள் எ˘ச்.வி.'சி. கோப்புகளில் உரைகளாகவே சேமிக்கப்பட்டுள்ளதால் எளிதில் மொழிபெயர்க்க வசதி. விக்கிமீடியா பொதுவில் பரிந்துரைக்கிறார்கள். படிமங்கள் தேடுபொறிகளில் சிக்கவும் தானியங்கி முறையில் மொழிபெயர்க்கப்படவும் வழியுண்டு.
ஒரு கொசுறான தகவல். அந்தப் பறவைப்படம் உட்பட ஆ.வியில் உள்ள எண்ணற்ற பறவை வரைபடங்கள் சியாமள் என்பவர் வரைந்தவை. விக்கிக்கு வெளியிலும் என் நண்பராகிவிட்டார். அவர்தான் என்னை மூங்கில் அணத்தான் கட்டுரையை எழுத்தத் தூண்டினார். -- சுந்தர்\பேச்சு06:46, 1 ஏப்ரல் 2008 (UTC)Reply
சியாமள் பங்களிப்பை அறிந்தும், உங்கள் தனிச்சிறப்பான மூங்கில் அணத்தான் கட்டுரையைக் கண்டும் (முன்னரே பார்த்து மகிழ்ந்தேன்) மகிழ்ந்தேன். இந்த breve என்னும் ஒலித்திரிபுக் குறியை கூகுள் மின்மடற்குழுக்களிலும் இட இயலும். மைக்ரோ ˘சா'வ்ட் வோர்டு போன்ற பயன் மென்பொருட்களில் (மென்பொருள் என்பதை மென்பி எனலாம் - எளிதாக மாற்றி அமைக்க வல்லதால் ) யூனிக்கோடு குறியெண் என்ன என்று அறிந்தால் அந்த எண்ணை இட்டு பின்னர் Alt + x என்று அழுத்தினால் அந்தக் குறி தென்படும். பிரீவ் (breve) என்னும் நிலாவின் கலை (பிறை) போல் உள்ள குறியின் யூனிக்கோடு என் 0306 என்பதாகும். இங்கே பாருங்கள்.
மைக்ரோ ˘சா'வ்ட் தளத்தில் இப்படி அறியத் தருகிறார்கள்
"If you know the character code, you can enter the code in your document and then press ALT+X to convert it into a character. For example, press 002A and then press ALT+X to produce *. The reverse also works. To display the Unicode character code for a character that is already in your document, place the insertion point directly after the character and press ALT+X."
எனவே ஒரு குறியை படி எடுத்து இட்டபின் ஆல்ட் எக்˘ச் ஐ அழுத்தினால் (வோர்டு இல்) அதன் யூனிக்கோடு குறியெண் கிட்டும்.
initial என்பதை விலாசம் / முதல் எழுத்து / தலை எழுத்து என்றெல்லாம் பரவலாகப் பேச்சு வழக்கில் குறிப்பதாக நினைக்கிறேன். இவற்றில் பெருவழக்கு, வேறு வழக்குகள் உண்டா? பேச்சு வழக்கில் தலைப்பு எழுத்து என்று கூற மாட்டார்கள் தானே? அப்புறம், நீங்கள் அன்றாடம் வந்து பங்களித்து, வழிகாட்டி உதவுவது பெரும் ஊக்கம் அளிக்கிறது. உங்களைப் போல் துறைக்கு ஒரு வழிகாட்டி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?--ரவி22:18, 14 ஏப்ரல் 2008 (UTC)Reply
நன்றி ரவி. முன்னெழுத்து என்று வேண்டுமானால் சொல்லலாம். தலை எழுத்து என்றால் பொருள் வேறு அல்லவா :) தலைப்பு என்பது முதலில் வருவது என்றும் பொருள் தரும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் (தலைப்பு எழுத்தில்) எழுதுவதால் அப்படி எழுதினேன். புடவை முந்தானையில் கூட தலைப்பு உண்டு. "தலைப்பிலே சொன்னேன்" என்றால் "முதலிலேயே சொன்னேன் என்று பொருள்". முதலில் வருவது என்று பொருள் உள்ளது. எனவே தலைப்பு எழுத்து என்பது சரியான சொல்லாட்சி, ரவி. --செல்வா22:43, 14 ஏப்ரல் 2008 (UTC)Reply
இந்த இடுகையில் தலை எழுத்து என்பது பேச்சு வழக்கில் உள்ளது பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே தான் அதைப் பயன்படுத்தினேன். எனக்குத் தெரிந்து பேச்சு வழக்கில் உள்ள வேறொரு சொல் விலாசம் மட்டுமே. அது தமிழ் இல்லையோ என்பதால் விட்டு விட்டேன். --ரவி09:35, 15 ஏப்ரல் 2008 (UTC)Reply
ரவி, அந்த வலைத்தளம் இருப்பதாகத் தெரியவில்லை. விலாசம் என்பது முகவரி. தலை எழுத்து என்றால் fate என்னும் பொருள் வருமே! --செல்வா12:30, 15 ஏப்ரல் 2008 (UTC)Reply
ஓ..அந்தத் தளம் தற்காலிகமாக முடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் வரும். தலையெழுத்து என்றால் விதி என்று தான் நானும் அறிந்திருந்தேன். ஆனால், மக்கள் பேச்சு வழக்கில் இந்த சொல் இருப்பதாக அந்த இடுகை மூலம் அறிந்திருந்ததால் அதற்கு முன்னுரிமை தரலாமே என்று பார்த்தேன் --ரவி13:38, 15 ஏப்ரல் 2008 (UTC)Reply
செல்வா, அந்த 977 என்ற தகவலுக்கு நன்றிகள். தங்களைப் போன்றவர்களின் ஊக்கம் ஒன்றே போதும். இன்னும் நிறைய எழுதலாம். இந்தத் தகவலை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதைத் தெரிவிப்பீர்களா?.--Kanags\பேச்சு21:19, 16 ஏப்ரல் 2008 (UTC)Reply
நீங்கள் நூலகத் திட்டம் பற்றி அறிவீர்கள். அதில் தற்போது ஏறத்தாழ 1600 நூற்கள் பதிவேற்றப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட செயற்திட்டமும் (+1000) தொடங்கி விட்டது. இந்த நூற்களை பரந்த வாசிப்பு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வப்பொழுது சில இடுக்கைகள் (5-10 வரிகள்) எழுதி பங்களித்தால் நன்றாக இருக்கும். எ.கா நீங்கள் படித்த நூற்களின் அறிமுகங்கள் தரலாம். ஈழத்து இலக்கியம் பற்றியும் இடுக்கைகள் தரலாம்.
செல்வா, உங்களூக்கு நோரச் சிரமம் இருப்பது அறிந்ததே. உங்கள் நேரத்தை செறிவு மிக்க கட்டுரைகளை படைப்பதில் செலவழிப்பதே தகும். இருப்பினும் உங்கள் இலக்கிய சமூக ஆர்வங்கள் பரந்ததே...
உங்களின் ஈழ இலக்கிய அறிமுகம் எவ்வளவு என்று தெரியாது. உங்களிடன் ஏற்கனவே தொடர்பான ஆக்கங்கள் இருந்தால், அல்லது ஆக்கினாலும் நாம் நிச்சியம் பதிவேம். நன்றி.
--Natkeeran16:32, 3 மே 2008 (UTC)Reply
நீங்கள் ஏன் நிர்வாக அணுக்கம் பெறக்கூடாது? பிழையான தொகுப்புகளை நீங்கள் முன்னிலைப்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன். இது போன்ற நிர்வாகப் பணிகளைச் செய்ய உதவும்--ரவி15:43, 19 மே 2008 (UTC)Reply
செல்வா, நீங்கள் நிர்வாகி அணுக்கம் பெறுவதை நானும் ஆதரிக்கிறேன். இது பல வகைகளிலும் உங்களுக்கு மட்டுமல்லாமல் புதிய பயனர்களுக்கும் பொதுவாக தமிழ் விக்கிபீடியாவுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ரவி குறிப்பிட்டது போல சில சிறிய நிர்வாகப் பணிகளையாவது செய்ய உதவும்.--Kanags\பேச்சு22:52, 19 மே 2008 (UTC)Reply
கனகு, ரவி, நிர்வாகி ஆன பின்பு என்னென்ன செய்ய இயலும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும் என்றால் நான் அணுக்கம் பெற முன்வருவேன். --செல்வா23:10, 19 மே 2008 (UTC)Reply
செல்வா, உங்களுக்கு இருக்கும் நேரத் தட்டுப்பாட்டில், நிர்வாகி ஆவதாலேயே நீங்கள் கூடுதலாகச் சிலப் பணிகளைச் செய்து தர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. அடிக்கடி வந்து போகும் நம்பகமான பயனர் எவருக்கும் நிர்வாகி அணுக்கம் தரலாம் என்பதே என் நிலைப்பாடு. பயனர்களின் தேவையில்லாத தொகுப்புகளை முன்னிலைப்படுத்துதல் (நிர்வாகியானால் இதைச் செய்வது இலகு), கண்ணில் படும் தேவையற்ற பக்கங்களை அழித்தல் ஆகிய இரு இலகுவான வேலைகளைச் செய்யலாம். --ரவி06:11, 20 மே 2008 (UTC)Reply
நிருவாகியாகப் பரிந்துரைத்து, முன்மொழிந்த ரவிக்கும், வாக்களித்து ஊட்டுக்கால்தந்த (ஆதரவுதந்த) அனைவருக்கும் என் நன்றிகள்.--செல்வா14:56, 27 மே 2008 (UTC)Reply
செல்வா, உங்கள் நிருவாக அணுக்கத்திற்கான வாக்கெடுப்பில் நான் இட்டிருந்த கருத்தை நீங்கள் தவறாகக் கொண்டிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். முதல் நபராக வழிமொழிய வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் தெளிவற்ற உரையை இட்டுவிட்டேன். மற்றபடி உங்கள் பொறுப்புணர்வின்மீது எனக்கு எள்முனையளவும் ஐயமில்லை. மெய்யாலுமே உங்கள் விடுபாட்டாண்மைக்கு நிருவாக அணுக்கம் இடையூறாகும் வாய்ப்பை எண்ணிக்கூட மெலிதாக அச்சப்பட்டேனேயொழிய வேறு எதுவுமில்லை. -- சுந்தர்\பேச்சு02:45, 21 மே 2008 (UTC)Reply
செல்வா, அழுத்தம் பற்றிய உங்களது பக்கப்பட்டை விளக்கம் மிகவும் எளிமையாகவும் நன்றாகவும் இருக்கிறது. நன்றி. அப்படியே, உங்களது நிருவாக அணுக்கத்திற்கும் வாழ்த்துக்கள். --இரா.செல்வராசு00:03, 22 மே 2008 (UTC)Reply
இன்றோடு நான் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்ந்து இரண்டாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. மூன்றாவது ஆண்டின் தொடக்கம். இதுகாறும் 507 கட்டுரைகள் என் பெயரிலும், மற்றும் ஐ.பி முகவரிகளில் ஏறத்தாழ 7-10 கட்டுரைகளும் தொடங்கி எழுதியுள்ளேன். சொல் பற்றிய உரையாடல்களில் ஏறத்தாழ 100 குறிப்புகளாவது சிறிதும் பெரிதுமாக எழுதியுள்ளேன். இவை தவிர பல கட்டுரைகளை விரிவு படுத்தியுள்ளேன். இன்றுவரை மொத்தம் 8124 தொகுப்புகள் செய்துள்ளேன். தமிழ் விக்கிப்பீடியா இன்னும் விரைவாகவும் செறிவாகவும், அழகாகவும், எடுப்பாகவும் வளரவேண்டும் என்பது என் அவா. பல நல்ல புதுப்பயனர்கள் சேர்ந்துள்ளார்கள். நாம் எல்லோருமாகச் சேர்ந்து, முன்பினும் விறுவிறுப்புடன் உழைத்தால் இன்னும் நன்றாக வளர்வோம். என்னால் இயன்ற அளவு நான் வரும் ஆண்டுகளில் உழைக்க இருக்கின்றேன். --செல்வா04:15, 24 மே 2008 (UTC)Reply
வாழ்த்துக்கள் செல்வா. உங்களது இருப்பும் அழைப்பும் பெரும் ஊக்கத்தையும் உந்துதலையும் அளித்தது. அளிக்கிறது. உங்களது உழைப்பிற்கு வந்தனம். இன்னும் இரு வாரங்களில் நான் இங்கு சேர்ந்தும் இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால் இப்போது தான் அதிக நேரம் பங்களிக்க ஆரம்பித்திருக்கிறேன். --இரா.செல்வராசு04:26, 24 மே 2008 (UTC)Reply
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் செல்வா, விக்கிபீடியாவில் தங்களின் ஊக்கமான பயனுள்ள கருத்துக்கள் என்றும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அண்மையில் நீங்கள் மின்தமிழ் மடலாடும் குழுவிற்கு தமிழ் விக்கிப்பீடியா பற்றிய தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்திருந்தீர்கள். அது பல புதிய பயனர்களை ஈர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எல்லோரும் சேர்ந்து உழைப்போம். மீண்டும் வாழ்த்துக்கள்.--Kanags\பேச்சு04:50, 24 மே 2008 (UTC)Reply
உங்கள் நேரடி பங்களிப்புடன் கூடவே உங்கள் பேரூக்கத்தினாலும் காலத்தினாற் செய்த உதவிகளாலும் தமிழ் விக்கிப்பீடியா அடைந்த மாபெரும் ஏற்றம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கட்டுரை விரிவாக்கத்திற்கும் பின்னர் உங்கள் ஊக்கம் தரும் சொற்களை எதிர்நோக்கி ஒரு நான்காம் வகுப்பு மாணவன் கணக்கை விரைந்து முடித்து ஆசிரியை தனது ஏட்டில் நன்று என சிவப்பு மையில் எழுதுவாரா என்ற ஏக்கத்துடன் காத்திருப்பதுபோல் இருந்ததுண்டு. :-)
அன்புள்ள செல்வராசு, கனகு, சுந்தர், உங்கள் அன்பான வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. விக்கிப்பீடியா உண்மையிலேயே ஓர் அற்புதமான களம். இப்படி நூறாயிரக்கணக்கில், மில்லியன் கணக்கில் அருமையான படங்களுடன், பொதுச்சொத்தாக அறிவுக் களஞ்சியமாக உருவாக்க அமைத்துத் தந்த விக்கி நிறுவனத்திற்கு முதலில் நன்றி சொல்லுதல் வேண்டும். தமிழர்களில் இன்னும் பெரிய அளவிலே (ஆயிரக்கணக்கானோர் ஏன் வரலாகாது?!) பலரும் வந்து உண்மையான நல்லாக்கங்கள் தர வேண்டும். இன்றில்லையெனினும், கட்டாயம் ஒருநாள் அண்மையிலோ, சேய்மையிலோ வந்து நல்லாக்கம் தருவார்கள் என்று திண்ணமாய் நம்புகின்றேன். இங்கிருக்கும் நாம், நம்மால் இயன்றவாறு திறமுடனும், சுறுசுறுப்புடன் மிக மிகப் பயன்தருமாறு பல அரிய செய்திகளைத் தக்க சான்றுகோள்களுடன் சேர்த்துக்கொண்டே வந்தோமானால், விளையும் பயன் மிகப் பெரிதாம். பின்னர் வருவோருக்கும் இவ்வாக்கம் உண்மையான ஓர் ஊக்கம் தருவதாக அமையும். சுந்தர், நீங்கள் கூறுவதைக் கேட்டு உண்மையிலேயே சிரித்துவிட்டேன்! ஆனால் நீங்கள் கூறுவதில் ஓர் அடிப்படை உண்மை உண்டு. யாரொருவருக்கும், பிறந்த குழைந்தையாயினும், 80-90 அகவை நிறம்பியவராயினும், ஊக்கம் என்பது ஆற்றல் புதுக்கும் மருந்து. அதே நேரத்தில் வள்ளுவர் கூறியது போல ஊக்கம் உடைமை உடைமை என்றார்போலே அழியா நல் தன்னூக்கம் பெற்றிருத்தல் வேண்டும், அல்லவா? பெருமை கண்டு செருக்காமலும், சிறுமை கண்டு குறுகாமலும் இடையறாது ஊக்கம் உடைமை, உள் உடைமை, வேண்டும். அதுவே உடைமை. இங்கே விக்கிப்பீட்யாவிலே நாம் எல்லோருமாகச் சேர்ந்து "கலக்கலாம்", சுந்தர் :) --செல்வா13:04, 24 மே 2008 (UTC)Reply
ஆம், செல்வா. இந்த அறிவுக் களஞ்சியம் வருங்காலத்தில் பெரும் பயன் தரும். மேலும் நீங்கள் சுட்டியுள்ளதுபோல் தன்னூக்கமே சிறந்தது. எப்போதும் கொள்கிறேன். புதுப்பயனர்களை ஊக்கப்படுத்துவதற்கு மட்டும் நேரம் ஒதுக்குவோம். மற்றபடி இலக்கிய நடையில் எழுதும் வாய்ப்பிற்காக அவ்வப்போது இதுபோன்ற உவமைகளைப் பேச்சுப்பக்கங்களித் இடலாமென எண்ணுகிறேன். உண்மையில் பொது நுகர்வு ஆக்கம் என்றால் ஆங்கிலக் கலப்போடு கணக்கு டீச்சர் நோட்புக்கில் என்று எழுதினால் மட்டுமே தகும் என்ற ஒரு பரவலான தோற்றம் உள்ளதாலும் என்னால் எளிதில் அனைவரும் விரும்பும் வகையில் எழுத முடியவில்லை என்ற எண்ணத்தினாலும் என்னால் வலைப்பதிய முடியவில்லை. :-( -- சுந்தர்\பேச்சு15:23, 24 மே 2008 (UTC)Reply
வாழ்த்துகள் செல்வா. கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அரும்பங்களிப்புகள் தந்துள்ளீர்கள். பல வகையிலும் பலருக்கு முன்மாதிரிப் பங்களிப்பாளராக இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒருவர் வேலை நெருகடிக்கு இடையிலும் எப்படி இவ்வளவு பங்களிக்க இயல்கிறது என்று என்றும் வியப்பதுண்டு. எதிராளி எவ்வளவு தான் கடுமையாகப் பேசினாலும் பொறுமை இழக்காது, நன்னோக்கில் விளக்கிக் கோரும் உங்கள் பண்பை நானும் பெற்றுக் கொள்ள வேண்டும் ! விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களுக்குப் போதிய ஊக்க மொழிகள், பாராட்டுகள் இல்லை என்று வலைப்பதிவுகளில் சில சமயம் சுட்டப்படுவதுண்டு. அந்தக் குறையை நீங்கள் போக்கி வருகிறீர்கள். உங்களைப் போன்றவர்களிடம் இருந்து பதக்கம் பெறுவதே ஒரு மகிழ்ச்சி தான் (ஆயிரவர் பதக்கம் எல்லாம் என்று வாங்குவேன் எனத் தெரியாது :( 100, 200 என்று குட்டிப் பதக்கங்கள் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் :) ) நாங்களும் இனி புதிய பங்களிப்பாளர்களை நிறையவும் பழகியவர்களை அவ்வப்போதும் ஊக்கப்படுத்த நினைவு கொள்ள வேண்டும்.
பல இடங்களில் நீங்கள் பொறுமையாக விளக்கிய பின்னும் தொடர் கேள்விகள் இருந்தாலன்றி பதில் நன்றி, ஆமாம் என்று சொல்லாமல் அடுத்த உரையாடலுக்கு நகர்ந்து விடுகிறேன். பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இருக்கிற எல்லா நேரத்தையும் அனைவரும் முழுத் திறத்துடன் பயன்படுத்தவே இப்படி செய்கிறேன்.
இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் முழு வீச்சில் பங்களிக்க வேண்டும். விரைவில் உங்களுக்குக் கிடைக்கும் நிருவாக அணுக்கமும் அதற்கு உதவும் என்று நம்புகிறேன். மஉங்களைப் போல் பல செல்வாக்கள் தமிழுலகுக்கு கிடைக்க வேண்டும். நன்றி--ரவி18:02, 24 மே 2008 (UTC)Reply
ரவி, உங்கள் கருத்துகளுக்கும், நன்மொழிகளுக்கும் நல் ஊக்கங்களுக்கும் நன்றி. ரவி, நான் பதக்கங்கள் இட்டு மகிழ்ச்சியைத் தெரிவிப்பது ஓர் உடன் உழைப்பாளி என்னும் உரிமையில்தான். கட்டுரை எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு நான் பதக்கம் அளிக்கவில்லை. உண்மையிலேயே என் உள்ளத்தில் நெகிழ்ந்த நன்றிப்பெருக்கால் என் மகிழ்ச்சியைத் தெரிவிக்க பதக்கங்கள் அளித்தேன். பேராசிரியர் விகே கணிதவியலில் ஆக்கிய கட்டுரைகள் எண்ணிக்கையில் சிறிதாயினும், அவர் பங்களித்த பாங்கும், பங்களிப்புகளின் ஆழமும், அவர் பணியாற்றிய பொழுது இடையறாது உழைத்து எடுத்துக்காட்டாக விளங்கியதும்தான் நான் அவருக்கு பதக்கம் அளிக்க உந்தியது. அதே போல டெரன்சு அருமையான கட்டுரைகள் இயற்றியது மட்டுமன்றி, பின் புலத்தில் அமைதியாய் வளம் பெருக்கும் வார்ப்புருக்கள் போன்று எத்தனையோ அருமைகள் படைத்து வருகின்றார். வினோத் 1000 கட்டுரைகள் எழுதவில்லை, ஆனால் எத்தனை ஊக்கத்துடன் எத்தனைப் பாங்காகவும், விரிவாகவும், கட்டுக்கோப்புடனும் 3-4 துறைகளில் (பௌத்தம் மட்டுமல்ல) கட்டுரைகள் ஆக்கி வளம் தந்துள்ளார். உங்கள் பணிகள் தமிழ் விக்கிப்பீடியா தோன்றிய தொடக்க காலங்களில் வலுவான உரமிட்டவை. நீங்களும், சுந்தரும், சிவகுமாரும் இன்னும் ஒரு சிலரும்தானே மயூரநாதனுக்கு உறுதுணையாய் இருந்து முளைக்கும் காலத்தில் கண்ணும் கருத்துமாய் வளர்த்தெடுத்தவர்கள்! தமிழ் விக்கிப்பீடியா வரலாற்றில் (தமிழ் மொழி வரலாற்றில்!) நீங்கள் எல்லாம் இடம்பெற்றவர்கள்! நீங்கள் இன்றும் இங்கு பங்களிப்பது போக, பல அரங்குகளில் பலவழிகளில் தொடர்ந்து ஆக்கம் அளித்து வருகின்றீர்கள். எனவே குட்டிப் பதக்கத்தை விடுங்கள். நீங்கள் 500 கட்டுரைகள் எழுதி முடித்தால் ஒரு குட்டிப் பதக்கம், ஆனால் நீங்கள் ஈராயிரவர், மூவாயிரவர் என்று ஆயிரங்கள் வரிசையில் பதக்கம் பெறவேண்டும் என்று விரும்புகிறேன் :) கட்டுரை எண்ணிக்கையைவிட கட்டுரையின் தரத்தையும், ஆழத்தையும், நல்ல நடையையையும் காத்து வளர்த்தெடுப்பது முக்கியம் அல்லவா. நான் 'பில் 'கேட்˘சின் செல்வத்தில் நூற்றில் அல்லது ஆயிரத்தில் ஒரு பங்கு செல்வம் படைத்தவனாய் இருந்திருந்தால் உண்மையிலேயே ஆயிரம் ஆயிரமாய் பொற்காசுகள் தந்திருப்பேன் :) (கனடாவின் லூனி என்னும் ஒரு டாலர் நாணையம் பொற்காசு போலவே இருக்கும் :) ) இப்பொழுது வெறும் கணித்திரையில் ஒரு பதக்கம்தான், நன்றிப் பெருக்கைக் காட்ட, மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள. --செல்வா00:17, 25 மே 2008 (UTC)Reply
செல்வா, தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் இரண்டாண்டுப் பணி நிறைவு எய்தியதையிட்டு எனது வாழ்த்துக்கள். இக் காலகட்டத்தில் நீங்கள் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கைகளையோ, தொகுப்புக்களின் அளவையோ வைத்து உங்கள் பணியின் அளவைக் கணக்கிட முடியாது. உங்கள் தொடர்ச்சியான ஊக்குவிப்பு பல ஆயிரக்கணக்காண கட்டுரைகளை ஏனைய பங்களிப்பாளர்கள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. கடந்த இரண்டாண்டு காலத்தில் எழுதப்பட்ட ஏராளமான கட்டுரைகளில், கலைச்சொல் உதவி, தமிழ் நடை உதவி, தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான உதவி எனப் பல்வேறு வழிகளூடாக உங்கள் பங்கு இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் விலைமதிப்பிட முடியாத உங்கள் பணி நீண்டகாலம் தொடரவேண்டும் என்பதே எனது பேரவா. மயூரநாதன்16:36, 29 மே 2008 (UTC)Reply
மயூரநாதன், உங்கள் நல்வாழ்த்துகளுக்கும், அன்பான நன்மொழிகளுக்கும் மிக்க நன்றி. நீங்கள் விடுப்பில் இருந்து வந்தது கண்டு மகிழ்ச்சி. நான் கட்டாயம் என்னால் இயன்ற அளவு தமிழ் விக்கிப்பீடியாவில் ஈடுபாடுடன் பங்குகொள்வேன். --செல்வா21:53, 29 மே 2008 (UTC)Reply
செல்வா Nilgai க்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா? அதை பற்றிய கட்டுரையை தொடங்க விரும்புகிறேன். இவ்விலங்கு முற்காலத்தில் தமிழகத்தில் காணப்பட்டது, சமீபமாக தமிகத்தில் இருந்து அழித்தொழிக்கப்பட்டது. --கார்த்திக்15:43, 25 மே 2008 (UTC)Reply
கட்டாயம் எழுதுங்கள் கார்த்திக். தமிழில் பழையபெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் நீலமான் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். நீலமா என்றும் சொல்லலாம்.நீல், நீன் என்றாலும் நீலம்தான். ஞீலம் என்றாலும் நீலம்தான். நீன்மை என்றால் "blueness" or just blue. . பைஞ்ஞீலம என்பது நீலமும் பச்சையும் கலந்த "இராமர்" நிறம் என்று இன்று பெண்கள் கூறும் நிறம். கெம்புநீலம் என்பது சிவப்பும் நீலமும் கலந்த நிறம். நிறத்தொடர்புக்காகக் கூறுகிறேன். நீன்மா, நீலமா, நீலமான் என்று சொல்லலாம். நீலகை என்றுகூட சொல்லலாம். ஆந்தையைக் கூகை என்று கூறுவதுபோல. --செல்வா16:15, 25 மே 2008 (UTC)Reply
முகுந்த், நாமும் பங்கு கொள்ள வேண்டும்தான். என்றாலும், பல விக்கித் திட்டங்களிலும் (த.வி., விக்சனரி, விக்கி மூலம்... போன்ற எல்லாவற்றிலும்) பங்களிப்பவர்கள் ஒரு சிலராகவே இருப்பதால், எவ்வாறு எல்லாத் திட்டங்களிலும் பங்களிக்க இயலும் என்று தெரியவில்லை. நீங்கள் தொடங்குங்கள். ஆர்வம் உடையவர்கள் வந்து பங்களிப்பார்கள். த.வியும், விக்சனரியும் முன்னுரிமை கொண்டவை. ஆனால் விக்கி சுற்றுலா போன்றவை நேரடியாகப் பலருக்கும் பயனுடையதாக இருக்க வாய்ப்புண்டு. முடிந்தால், பெரு நாடு, கனடா ஆகிய நாடுகளில் சில இடங்களைப்பற்றி எழுத முனைகிறேன் (இப்பொழுதல்ல!). --செல்வா22:00, 29 மே 2008 (UTC)Reply
இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.