பயனர் பேச்சு:C.R.Selvakumar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1


பார்க்க பேச்சு:பேருள்--ரவி 23:10, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

விடுப்பு[தொகு]

செல்வா, நீங்கள் விக்கிபீடியாவிடம் கோரியிருந்த விடுப்பு முடிவுற்றது. விரைவில் பணிக்குத் திரும்புங்கள். ;) -- Sundar \பேச்சு 07:43, 6 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

செல்வா, உங்கள் மீள்வரவை எதிர்பார்த்திருக்கிறோம். நீங்கள் வந்தால் அனைவரதும் பங்களிப்பு வேகம் தூண்டப்படுவதோடு பல சந்தேகங்களையும் உங்களிடம் கேட்கக் கூடியதாயிருக்கும். உங்கள் சேவை எமக்குத் தேவை. --கோபி 20:12, 12

செப்டெம்பர் 2006 (UTC)

நேற்று செல்வாவை மின்மடலில் தொடர்பு கொண்டேன். விடுப்பு முடிந்து விட்டதாகவும், தமிழ் விக்கிபீடியா நடப்புகளை கவனித்து வருவதாகவும் விரைவில் பங்களிக்கத் தொடங்குவதாகவும் மறுமொழி தந்துள்ளார்.--ரவி 09:45, 13 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நண்பர்களே, நான் விடுமுறையில் இருந்து திரும்பிவிட்டேன் (ஆகஸ்ட்டு 30 ஆம்நாள்). எழுதத்தொடங்க இன்னும் இரண்டொரு நாட்களே ஆகும். தங்கள் வரவேற்பு மொழிகளுக்கு நன்றி. நான் முன் போலவே முனைந்து பங்கு கொள்வேன்.--C.R.Selvakumar 12:59, 13 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா.[பதிலளி]

வாருங்கள் செல்வா, உங்கள் விடுமுறை பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். விக்கிபீடியாவில் உங்கள் ஆக்கங்களை (முக்கியமாக ஆக்கபூர்வமான கருத்துக்களை) காண ஆவலாயுள்ளோம்.--Kanags 13:04, 13 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
வருக. உங்கள் மீள்வருகை எங்களுக்குப் பல மடங்கு ஊக்கம் தருகிறது. -- Sundar \பேச்சு 14:11, 13 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
தாங்கள் மீண்டும் முழுவீச்சில் பங்களிக்கத் துவங்கியிருப்பது எனக்கு பன்மடங்கு ஊக்கத்தைத் தருகிறது. --Sivakumar \பேச்சு 06:46, 24 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பார்க்க[தொகு]

பார்க்க பேச்சு:பேருள், பேச்சு:மாதிகை--ரவி 20:23, 19 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

புதிய தமிழ் சொற்கள்[தொகு]

செல்வா, வணக்கம். நீங்கள் மீண்டும் தீவிரமாகப் பங்களிக்க ஆரம்பித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் வந்ததுமே புது உத்வேகத்தை உணர முடிகிறது. நன்றி. பேருள், மாதிகை, ரேடியம் ஆகியவற்றின் பேச்சுப் பக்கங்களில் உங்களது கருத்துக்களை வாசித்த பின் எனக்குப் படுவதை சொல்கிறேன்.

  1. மாதிகை அப்படியே இருக்கலாம். மாசிகை, மாத இதழ் போன்றவற்றை உருவாக்கி மாதிகைக்கு வழிமாற்றி விடலாம்.
  2. பேருள் இனை விக்சனரிக்கு நகர்த்தி விட்டு நீக்கி விடலாம்.

மேலும்,

  1. நீங்கள் எண்ணியிருப்பதைப் போல கட்டுரையாக்கத்தில் உங்கள் அதிக கவனத்தைச் செலுத்திப் பணி தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அவசியம் நீங்கள் பங்களிக்க் வேண்டிய பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறியுதவினீர்களென்றாலே போதுமானது. ஏனெனில் நாம் ஆக்க வேண்டிய தலைப்புக்கள் ஏராளம் ஏராளம் உள்ளன.
  2. ரவியும் நானும் விக்கிபீடியாவின் தரத்தைப் பேணுவதற்காகவே சில நீக்கற் பரிந்துரைகளை முன்வைத்திருந்தோம். விக்கிபீடியாவின் தரம் என்ற நன்னோக்கைத் தவிர வேறு காரணங்களில்லை. தவறெனின் தயைகூர்ந்து மன்னிக்கவும்.

தோழமையுடன், கோபி 17:04, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரை விரிவாக்கம்[தொகு]

செல்வா, பிவருவனவற்றை ஓரளவேனும் விரிவாக்கி உதவ முடியுமா? நன்றி.

--கோபி 18:58, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பரிந்துரை தேவை[தொகு]

  • wikt:ta:video game நிகழ்பட ஆட்டம், (வீடியோ என்பதற்கு நிகழ்படம், நகர்படம், நிகழ்காட்சி என்று மொழி பெயர்க்கலாம்)

நன்றி. --Natkeeran 21:11, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


  • wikt:ta:popular culture பொதுப் பண்ணொய்யாரம் (கருத்தளவிலே popular culture, pop culture என்பது பொது மக்கள் கொண்டாடும் கலை, பண்பாடு பற்றிய தற்கால ஈடுபாடுகள் எனலாம். குறிப்பாக இளைஞர்கள் விரும்பி ஈடுபாடு காட்டும் பாடல், நடை உடை பாவனைகள், கலைநுட்பப் போக்குகள் முதலிவற்றைக் குறிக்கும். ஒய்யாரம் என்றாலே கலை, அழகு முதலியவற்றின் முன்னோட்ட வீச்சைக் குறிக்கும். பொதுமக்கள்+கலை, பண்பாடு + ஒய்யாரம் என்பதை எவ்வாறேனும் குறிப்பதாக சுருக்க வேண்டும். எனவே இப்போதைக்குப் பொதுப் பண்ணொய்யாரம், அல்லது பொதுப் பண்ணோச்சம் (பண் + ஓச்சம்), அல்லது பொதுக் கலையோச்சம் என்று கூறலாம். ஓச்சம் என்றால் சிறப்பான உயர்வு.
நீங்கள் people culture என்று பொருள் கொள்வதாக தெரிகின்றாது. பொது என்பது - common எனபதையே சிறப்பாக சுட்டும். culture என்றால் பண்பாடு என்ற சொல்லை பரவலாக பயன்படுத்துகின்றோம்.

Popular culture என்பதில் பொதுமக்கள் பரவலாக கைக்கொள்ளும் கலை-பண்பாட்டு பழக்க வழக்கங்களும் ஈடுபாடுகளையும் குறிக்கும். எனவே People culture என்று சொல்வது பொருந்தும். எளிய மொழி பெயர்ப்பு வேண்டும் எனில் பொதுமக்கள் பண்பாடு = பொதுப் பண்பாடு என்றே கொள்ளலாம். ஆனால் pop culture என்று சொல்வதிலே இளைஞர்களோ முதியவர்களோ தம்காலத்தில் அல்லது தற்காலத்தில் புதுத் தூக்கலாக மிகு வீச்சுடன் உள்ளதாக உணரப்படும் கலை, பண்பாட்டு ஈடுபாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடும். பண்பாடு என்பது காலத்தால், வழிவழியாய் வந்த பல்லோர் துணையால் சிறப்பேறி நுட்பேறி பண்பட்ட கலைச் சிறப்பான வெளிப்பாடு. popular culture என்பதில் சிலவோ பலவோ அப்படி பிற்காலத்தில் பண்பட்ட கலை-பண்பாடாகக் கருதப்படலாம்.பண்பாடு என்பதற்குச் சரியான ஆங்கில்ச்சொல் இல்லை, அதே போல culture என்பதற்கும் இணையான தமிழ்ச்சொல் இல்லை (கலை, பண்பாடு என்பது சற்றேறக்குறைய பொருந்தும்). எனவே நான் பரிந்துரைத்ததில் பண்பாடு என்பதை ஒருவாறு தவிர்த்துள்ளேன். பொது என்பது common, common people, general public, public ஆகியவற்றுக்கு இணையாகப் பல இடங்களில் பயனடுத்த இயலும்.--C.R.Selvakumar 00:35, 28 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

culture (பண்பாடு), mass culture (பெருந்தொகை பண்பாடு?), pop culture, high culture (மேல்வர்க்க பண்பாடு), counter culture (மறைநிலை பண்பாடுகள்??), multiculture (பன்முக பண்பாடு), "primative" culture, folk culture (நாட்டார் பண்பாடு) போன்ற கருத்துக்களை வேறுபடுத்தி காட்டவேண்டும். பொது என்ற சொல்லில் POPULAR என்ற கருத்துரு வருகின்றதா? தற்சமயம் ஏதாவது வழக்கில் இருக்கின்றதா?

பரவலர் பண்பாடு (= popular culture) என்றும் சொல்லலாம். counter culture என்பதற்கு எதிர்ப் பண்பாடு, எதிர்முரண் பண்பாடு எனலாம். folk culture என்பதை நாட்டார் பண்பாடு எனலாம், நாட்டுப்புறப் பண்பாடு எனலாம். multiculture என்பது பல்லினப்பண்பாடு எனலாம். popular என்னும் சொல் population, பொதுமக்கள், மக்கள் என்பதோடு தொடர்புடையதே.--C.R.Selvakumar 00:35, 28 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

  • wikt:ta:video game நிகழ்பட ஆட்டம், (வீடியோ என்பதற்கு நிகழ்படம், நகர்படம், நிகழ்காட்சி என்று மொழி பெயர்க்கலாம்). Interactive என்பதற்கு ஊடாட்டம் எனலாம்.
நிகழ்பட ஆட்டம் நன்றாகவே இருக்கின்றது. நிகழ்பட விளையாட்டு எப்படி? --Natkeeran 00:07, 28 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

--C.R.Selvakumar 21:55, 27 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா--C.R.Selvakumar 23:42, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran 00:56, 28 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பக்க மீட்பு[தொகு]

செல்வா, பக்கங்களை நகர்த்தும் போது, வரலாறுகளை ஒன்றிணைக்கும் பொருட்டு, சில சமயம் பக்கங்களை நீக்கி மீண்டும் இணைக்க வேண்டி வரும். இது விக்கி நுட்பக்காரணங்களால் உள்ள நடைமுறை. இதன் காரணமாகவே, கோபி தனிமங்களின் எண் பட்டியல் கட்டுரையை நீக்கிப் பின் திரும்பவும் மீட்டு எடுத்திருக்கிறார் என நினைக்கிறேன் (நீக்கல் மற்றும் மீட்பு பதிகைகளில் அவரது குறிப்புகளில் இருந்து அறியக்கிடைப்பது). அக்கட்டுரை தற்போது மீண்டும் உள்ளது. நன்றி--ரவி 20:38, 29 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி ரவி. --C.R.Selvakumar 20:50, 29 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

செல்வா, இரண்டு கட்டுரைகள் ஒரே தலைப்பிலமைந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் போது ஒன்றை நீக்கிவிடலாம்தான். ஆனால் முதலில் உருவாக்கப்பட்ட கட்டுரையைவிட இரண்டாவதே விரிவானதாக இருப்பின் முதலாவதை அதன் பக்க வரலாற்றுடன் சேர்த்து அழிப்பது நல்லதல்லவே. ஆதலால் இரு பக்கங்களையும் சரியான தலைப்புக்கு நகர்த்தி நீக்கி பின்னர் மீண்டும் மீட்டெடுக்கும்போது பக்கவரலாறுகள் இணைக்கப்படும். இதனையே கணையாழி (இதழ்), பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தனிமங்களின் எண் பட்டியல் போன்றனவற்றுக்குச் செய்தேன். நன்றி. கோபி 03:50, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, தங்கள் விளக்கங்களுக்கு நன்றி. தனிமங்களின் பட்டியல்களில் இன்னும் பொருண்மை அடிப்படையிலும் பட்டியல் ஒன்று ஆக்க வேண்டும். --C.R.Selvakumar 12:51, 30 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

சிறு குறிப்பு[தொகு]

செல்வா, உள்ளிணைப்புகள் தந்து நிர்வாக உதவியில் பங்கு கொண்டதற்கு நன்றி. இது போன்ற சிறு தொகுப்புகளை செய்யும்போது, அவற்றை சிறு தொகுப்பு என்று அறிவித்து குறியிடுமாறு வேண்டிக் கொள்கிறேன். இது அண்மையமாற்றங்கள் பக்கத்தில் முக்கியமான தொகுப்புகளை மட்டும் பிறர் எளிதில் கண்டு கொள்ள வழிவிடும். நன்றி--ரவி 08:07, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி ரவி. இனிமேல் சிறு தொகுப்பு என்று அறிவிக்கிறேன்.--C.R.Selvakumar 23:38, 9 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

உதவி[தொகு]

செல்வா, {{betasoftware}} வார்புரு பயர்பாக்ஸ் உலாவியில் உடைந்தவண்ணம் காணப்படுகின்றனது. உங்களிற்கு நேரமிருக்கும் போது சரிசெய்யவியலுமா?. இதுபோன்ற பிரச்சினையை முன்னர் நீங்கள் சரிசெய்ததாக ஞாபகம். இதுபோன்றபிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்தீர்கள் எனபதையும் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். --Umapathy 09:40, 13 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்து தேவை[தொகு]

[http://ta.wikipedia.org/w/index.php?title=Wikipedia_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81_%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29&diff=77405&oldid=54481 இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. -- Sundar \பேச்சு 06:48, 26 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

புதிய விக்கிக் கணக்கு உருவாக்கம்[தொகு]

செ.இரா.செல்வகுமார் என ஒரு பயனர் பக்கம் உருவாக்க எண்ணியுள்ளேன். இப்பொழுதிருக்கும் பக்கத்தை நீக்கிவிடலாம் எனவும் எண்ணியுள்ளேன் (இன்னும் உறுதியான முடிவு எடுக்க வில்லை). இந்த புதிய பயனர் நான் தான் என உறுதி செய்ய இக்குறிப்பை இங்கு இடுகிறேன்.செல்வா

செல்வா, உங்கள் பயனர் கணக்கைவிரும்பினால் புதிய கணக்கிற்கு வழிமாற்றிவிடலாம் இதனால் உங்களின் பங்களிப்புக்கள் பேணப்படும். ஆங்கில விக்கிபீடியாவில் இதைச் செய்கின்றார்கள் இதை நாம் இங்கும் செய்யலாம். நிர்வாகிகள் செய்யக்கூடியதே ஆயினும் நான் இதற்கு முன்னர் செய்யாததால் தயக்காமாகவுள்ளது.--Umapathy 03:54, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
அதுதான் சரியாக இருக்கும். நானும் இதற்கு முன்னர் செய்ததில்லை, இருப்பினும் அந்தச் சிறப்புப் பக்கத்திற்கான இடைமுகம் எளிமையாகவே உள்ளது. ஆங்கில விக்கியில் அதிகாரித் தரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இவ்வணுக்கம் உள்ளது. -- Sundar \பேச்சு 07:13, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
உமாபதி, சுந்தர், உங்கள் இருவருக்கும் நன்றி. அருள் கூர்ந்து (1) என் பயனர் பக்கத்தை பயனர்:செல்வா என்னும் புதிய பக்கத்துக்கு நகர்த்தி விடுங்கள். (2) பயனர்:செ.இரா.செல்வகுமார் என்னும் புதிய பக்கத்தை நீக்கி விடுங்கள். மிக்க நன்றி
உங்கள் பங்களிப்பு வரலாற்றை புதுக் கணக்கிற்கு மாற்ற முயன்றபோது அது புதுக்கணக்கு உருவாக்கப்படுவதற்கு முன்னர் செய்ய வேண்டியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு வழியிருக்கிறதா என்று பார்க்கிறேன். இல்லையெனில் வெறுமனே பயனர் பக்கத்தை மட்டும் வழிமாற்றலாம். -- Sundar \பேச்சு 13:06, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
இத்தகைய சூழல்களில் முதலில் உங்களது விருப்பமான புதுப்பெயரில் கணக்கு இருக்கக்கூடாது. ஆனால் நீங்கள் ஏற்கெனவே உருவாக்கி விட்டீர்கள். அதனால், "செல்வா" என்ற கணக்கை "UsurpTesting" என்று மறுபெயரிட்டேன். அதன்பின் உங்கள் பழைய கணக்கை "செல்வா" என்று பெயர் மாற்றினேன். பின்னர், உங்கள் பழைய பயனர் பக்கத்தை புதிய் பக்கத்திற்கு வழிமாற்றம் செய்தான். இதுபோன்ற சிக்கலான சூழலைப் பற்றி en:Wikipedia:Changing username மற்றும் en:Wikipedia:Usurpation என்ற உதவிப் பக்கங்கள் மூலம் அறிந்தேன். முடிந்தால் மேலே உள்ள எனது சுருக்கமான வழிகாட்டலை ஒரு உதவிப் பக்கமாக உருவாக்கலாம். -- Sundar \பேச்சு 14:13, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர், விளங்களுக்கும் நன்றி--Umapathy 08:29, 4 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
செல்வா, உங்கள் முன்னைய பயனர் பேச்சினையும் புதிய பயனர் பெயருக்கு நகர்த்தினால் நன்றாயிருக்குமே! மேலும் நீங்கள் பயனர் பெயரைத் தமிழுக்கு மாற்றிக் கொண்டமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். நேரங் கிடைக்கும் போதெல்லாம் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்குமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:24, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:C.R.Selvakumar&oldid=79532" இலிருந்து மீள்விக்கப்பட்டது