உள்ளடக்கத்துக்குச் செல்

பி. லூர்து சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. எல். சாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பி. எல். சாமி அல்லது பி. லூர்து சாமி என அறியப்படும் பெரியநாயகம் லூர்து சாமி (2 அக்டோபர் 1925 - 3 சூன் 1999)[1] ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். தமிழில் பல கட்டுரைகளையும், மூன்றுக்கும் மேலான நூல்களையும் எழுதியவர். செடியினவியல், விலங்கியல், பறவையியல் ஆகிய துறைகளில் இவர் தமிழில் எழுதிய நூல்கள் முதன்மையானவை.

இவர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவியல் களஞ்சியத்தின் முதல் முதன்மைப்பதிப்பாசிரியர் ஆவார்.அதன் முதல் தொகுதி இவரது பொறுப்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.[2]

கீழ்வாலை எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை என்பதை முதன்முதலில் இனங்கண்டவர்.இது பற்றிய கட்டுரையை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "தமிழ்க்கல்சர்" இதழில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும் "கீழ்வாலை எழுத்துகள்-ஒரு விளக்கம்" என்ற குறுநூலையும் எழுதினார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  1. இலக்கியத்தில் அறிவியல்; சேகர் பதிப்பகம், சென்னை,
  2. இலக்கிய ஆய்வு (அறிவியல்); சேகர் பதிப்பகம், சென்னை
  3. தமிழகத்தில் தாய்த் தெய்வ வழிபாடு; என்.சி.பி.ஹச், சென்னை.
  4. கம்பன் காவியத்தில் உயிரினங்கள்; கம்பன் கழகம், புதுவை
  5. கீழ்வாலை எழுத்துகள்-ஒரு விளக்கம்
  6. சங்க இலக்கியத்தில் நிலைத்திணையியல் விளக்கம்
  7. சங்க இலக்கியத்தில் செடி கொடிவிளக்கம்; 1967; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  8. சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்; 1970; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  9. சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்; மே 1976; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  10. சங்க நூல்களில் மீன்கள்; சேகர் பதிப்பகம், சென்னை
  11. சங்க நூல்களில் மணிகள்; சேகர் பதிப்பகம், சென்னை
  12. சங்க நூல்களில் விந்தைப்பூச்சி; சேகர் பதிப்பகம், சென்னை
  13. சங்க நூல்களில் முருகன்: சேகர் பதிப்பகம், சென்னை
  14. தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்; 23-2-1984; சேகர் பதிப்பகம், சென்னை
  15. Common Names and Myths of the Flora and Fauna Dravidian Indo-Aryan Languages; சேகர் பதிப்பகம், சென்னை

இது தவிர இவர் சங்க இலக்கியத்தில் நீரின விளக்கம் என்னும் நூலையும் உருவாக்கி வந்தார்.[3] வெளியான செய்தி கிடைக்கவில்லை.

குறிப்பு

[தொகு]
  1. ↑ https://olaichuvadi.in/article/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82/. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. ↑ அறிவியல் களஞ்சியம்,தொகுதி ஒன்று,தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1987.
  3. ↑ சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் நூலின் பதிப்புரையில் உள்ள செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._லூர்து_சாமி&oldid=4656463" இலிருந்து மீள்விக்கப்பட்டது