உள்ளடக்கத்துக்குச் செல்

டூன்: பாகம் ஒன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டூன்: பாகம் ஒன்று
Dune: Part One
இயக்கம்டெனிசு வில்லெனுவ்
தயாரிப்பு
  • மேரி பாரன்ட்
  • டெனிசு வில்லெனுவ்
  • கேல் பொய்டர்
  • ஜோ கரக்கியோலொ சூனியர்
திரைக்கதை
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுகிரெயிக் பிரேசர்
கலையகம்லெஜென்டரி பிக்சர்கள்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 3, 2021 (2021-09-03)(வெனிசு)
அக்டோபர் 22, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்156 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$165 மில்லியன் (1,180 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$401.8 மில்லியன் (2,873.5 கோடி)[3][4]

டூன்: பாகம் ஒன்று (ஆங்கிலம்: Dune: Part One) 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஐக்கிய அமெரிக்க காவிய அறிபுனைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் டெனிசு வில்லெனுவ் ஆல் எழுதி இயக்கப்பட்டுள்ளது. பிராங்க் எர்பெர்ட்டால் எழுதப்பட்ட அதே பெயரிலான 1965 புதினத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. டிமதி சாலமே, ரெபெக்கா பர்குசன், ஆஸ்கர் ஐசக், ஜோஷ் புரோலின், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட், டேவ் பாடிஸ்டா, சுடீவன் மெக்கின்லி ஹென்டர்சன், ஜெண்டயா, சேங் சென், சார்லொட்டு இரம்பிலிங்கு, ஜேசன் மோமோவா, ஹாவியர் பார்டெம் ஆகியோர் நடித்துள்ளனர்.

டேவிட் லிஞ்ச்சின் டூன் திரைப்படத்தினைத் தொடர்ந்து இப்புதினத்தினை வைத்து எடுக்கப்பட்ட இரண்டாவது திரைப்படமாகும். மூன்றாவது திரைத் தொகுப்பு ஆகும்.பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஒரு திரைப்படத்தினை எடுக்கத் துவங்கி தொல்வியடைந்ததை தொடர்ந்து லெஜென்டரி என்டர்டெயின்மென்ட் இத்திரைப்படத்திற்கான உரிமைகளை 2016 ஆம் ஆண்டில் வாங்கியது. பிப்ரவரி 2017 இல் வில்லெனுவ் இயக்குனராக இணைந்தார். திரைப்பிடிப்பு மார்ச்சு முதல் சூலை 2019 வரை பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது. திரைப்பிடிக்ககப்பட்ட சில இடங்கள் - புடாபெசுட்டு, ஜோர்தான், நோர்வே, மற்றும் அபுதாபி.

டூன் 2020 இறுதியில் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றினால் தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, 78ஆவது வெனீசு சர்வதேச திரைப்படத் திருவிழாவில் செப்டம்பர் 3, 2021 அன்று வெளியிடப்பட்டது. சர்வதேச வெளியீடு செப்டம்பர் 15, 2021 அன்று நடந்தது. ஐக்கிய அமெரிக்காவில் எச்பிஓ மாக்சில் அக்டோபர் 22 அன்று வெளியானது. பொதுமக்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பினைப்பெற்றது. திரைவண்ணம், இசை, நடிப்பு, திரைபிடிப்பு, இயக்கம் மற்றூம் கதாப்பாத்திரங்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. $165 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், $401 மில்லியன் வருவாயினை ஈட்டியது. 2021 சிறந்த 10 திரைப்படங்களில் ஒன்றாக பல குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றது, அதில் குறிப்பாக 10 ஆசுக்கர் பரிந்துரைகளைப் பெற்றது, (சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த தழுவிய திரைக்கதை சேர்த்து), அதில் ஆறினை வென்றது: சிறந்த இசை, சிறந்த அசல் இசை, சிறந்த திரை இயக்கம், சிறந்த தயாரிப்பு, சிறந்த திரை வண்ணங்கள், மற்றும் சிறந்த ஒளிப்பதிவு. இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக டூன்: பாகம் இரண்டு, தயாரிப்பில் உள்ளது. நவம்பர் 3, 2023 அன்று வெளியாகவுள்ளது.

வரவேற்பு

[தொகு]

பாக்சு ஆபிசு

[தொகு]

ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவில், இத்திரைப்படம் $108.3 மில்லியன் வருவாயினையும், பிற இடங்களில் $293.5 மில்லியன் வருவாயினையும் ஈட்டி உலகம் முழுவதும் மொத்தம் $401 மில்லியன் வருவாயினை ஈட்டியது.[3][4][5]

விமர்சகர்கள்

[தொகு]

அழுகிய தக்காளிகள் இணையதளத்தில், 486 விமர்சனங்களில் 83% விமர்சகர்களின் விமர்சனம் நல்லதாக இருந்தது , சராசரி மதிப்பீடு - 7.60/10. இணையதளத்தின் பொது விமர்சனம்: "டூன் சில சமயங்களில் கடினமான புதினத்தினால் தவறினாலும் தயாரிப்பு மற்றும் திரைவண்ணங்களால் பார்ப்பவர்களை பெரிதும் கவர்கிறது."[6] எடையிடப்பட்ட சராசரிகளைப் பயன்படுத்தும் மெடாகிறிடிக் இணையதளத்தில், விமர்சகர்கள் இத்திரைப்படத்திற்கு 100 இற்கு 74 மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள 67 விமர்சனங்களை அடிப்படையாக வைத்து, இத்திரைப்படம் "பொதுவாக பாராட்டப்பட்டுள்ளது".[7] சினிமாசுகோர் பயனர்கள் இத்திரைப்படத்திற்கு "A−" மதிப்பீடினைக் கொடுத்துள்ளனர். (A+ முதல் F வரையிலான மதிப்பீடு பலகையில்) போஸ்டிராக் பயனர்கள் 84% நல்ல மதிப்பீடினைக் கொடுத்துள்ளனர்.(சராசரியாக 4.5/5). மேலும் 66% பயனர்கள் பிறரையும் பார்க்க பரிந்துரைப்பேன் என்று கூறியுள்ளனர்.[8]

விருதுகள்

[தொகு]

இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு (அதில் ஆறினை வென்றது),[9] மூனறு கோல்டன் குளோப் விருது (அதில் ஒன்றினை வென்றது),[10] பதினொன்று பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (அதில் ஐந்தினை வென்றது),[11] பத்து கிறிடிக்சு சாய்சு விருதுகள் (அதில் மூன்றினை வென்றது),[12] இரண்டு ஆக்டா சர்வதேச விருதுகள் (அதில் ஒன்றினை வென்றது),[13] பத்து சாடில்லைட் விருதுகள் (அதில் ஐந்தினை வென்றது),[14] ஒரு கிராமி விருது,[15] ஒரு ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுகள் (வென்றது),[16] நான்கு பீபிள்சு சாய்சு விருதுகள்,[17] ஒரு சுகிறீன் ஆக்டர்கள் கில்டு விருதுகள்,[18] மூன்று டோரியன் விருதுகள் (அதில் ஒன்றினை வென்றது),[19] மற்றூம் ஒரு நிகலோடியன் சிறுவர்கள் தேர்வு விருதுகள் (வென்றது),[20] பரிந்துரைக்கப்பட்டது. அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தினால் 2021 இன் சிறந்த 10 திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dune (12A)". British Board of Film Classification. Archived from the original on அக்டோபர் 21, 2021. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2021. Dune Cinema 156m 0s
  2. Fleming, Mike Jr.; Bart, Peter (திசம்பர் 7, 2020). "Bart & Fleming: While WGA, CAA & WME Fight In Court, Streamers Rewrite Movie Paydays; Will Legendary Challenge WarnerMedia Over 'Dune' & Godzilla Vs. Kong' HBO Max Move?" இம் மூலத்தில் இருந்து திசம்பர் 7, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201207223644/https://deadline.com/2020/12/warnermedia-legendary-challenge-dune-godzilla-vs-kong-streamer-battles-looming-1234651283/. 
  3. 3.0 3.1 "Dune". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 30, 2022.
  4. 4.0 4.1 "Dune". த நம்பர்சு. நேஷ் இன்பர்மேசன் சர்விசசு, எல்.எல்.சி. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 25, 2022.
  5. Tartaglione, Nancy; D'Alessandro, Anthony (October 20, 2021). "'Dune' Looks To Make A Difference In Theaters & HBO Max With $70M+ Global Weekend". டெட்லைன் ஹாலிவுட். Archived from the original on October 20, 2021. பார்க்கப்பட்ட நாள் October 21, 2021.
  6. "டூன்: பாகம் ஒன்று". அழுகிய தக்காளிகள். பன்டாங்கோ மீடியா. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help) இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
  7. "Dune". மெடாகிறிடிக். ரெட் வென்சர்சு. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 13, 2021.
  8. D'Alessandro, Anthony (October 24, 2021). "'Dune' Heaps $41M Domestic Opening After Near $10M Sunday; Highest For Denis Villeneuve & HBO Max Day And Date". டெட்லைன் ஹாலிவுட். Archived from the original on October 24, 2021. பார்க்கப்பட்ட நாள் October 26, 2021.
  9. Nordyke, Kimberly; Lewis, Hilary (பிப்ரவரி 8, 2022). "Oscars: Full List of Nominations". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 8, 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  10. Jordan, Moreau (திசம்பர் 13, 2021). "Golden Globes 2022: The Complete Nominations List". வரைட்டி. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 13, 2021.
  11. Grater, Tom (பிப்ரவரி 3, 2022). "BAFTA Film Awards: 'Dune' & 'The Power Of The Dog' Lead Nominations". டெட்லைன் (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் மே 7, 2022. {{cite web}}: Check date values in: |date= (help)
  12. Verhoeven, Beatrice (திசம்பர் 13, 2021). "'West Side Story,' 'Belfast' Lead 2022 Critics Choice Film Nominations". The Hollywood Reporter (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் மே 7, 2022.
  13. Tartaglione, Nancy (சனவரி 26, 2021). "AACTA International Awards Winners: 'The Power Of The Dog' Scoops Best Film – Full List". டெட்லைன். பார்க்கப்பட்ட நாள் சனவரி 26, 2021.
  14. "Power of the Dog, Belfast Lead Nominations for IPA Satellite Awards" (in அமெரிக்க ஆங்கிலம்). திசம்பர் 1, 2021. பார்க்கப்பட்ட நாள் மே 8, 2022.
  15. Lewis, Hilary (நவம்பர் 23, 2021). "Grammys: Jon Batiste Tops With 11 Nominations as Recording Academy Expands General Field Categories". The Hollywood Reporter (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் மே 7, 2022.
  16. Grein, Paul (நவம்பர் 18, 2021). "'No Time to Die' Wins at 2021 Hollywood Music in Media Awards: Full List of Film Music Winners". Billboard.com. பார்க்கப்பட்ட நாள் சனவரி 26, 2022.
  17. Huff, Lauren; Gettell, Oliver (திசம்பர் 7, 2021). "2021 People's Choice Awards: See the full list of winners". எண்டர்டெயின்மென்ட் வீக்லி. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 11, 2021.
  18. சூன்au, Jen (பிப்ரவரி 27, 2022). "SAG Awards 2022: See the Complete List of Winners". People (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 28, 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  19. Beresford, Trilby (பிப்ரவரி 23, 2022). "Dorian Film Awards: 'The Power of the Dog' Leads Nominations From LGBTQ Entertainment Critics". The Hollywood Reporter (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் மே 8, 2022. {{cite web}}: Check date values in: |date= (help)
  20. Pedersen, Erik (மார்ச்சு 9, 2022). "Kids' Choice Awards Nominations Set; Miranda Cosgrove & Rob Gronkowski To Host Show". டெட்லைன் ஹாலிவுட். பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 9, 2022.
  21. Pond, Steve; Gonzalez, Umberto (திசம்பர் 8, 2021). "AFI's Top 10 Films of 2021 Include Dune, King Richard and The Power of the Dog". த விராப். Archived from the original on திசம்பர் 8, 2021. பார்க்கப்பட்ட நாள் சூலை 1, 2022.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டூன்:_பாகம்_ஒன்று&oldid=3930544" இலிருந்து மீள்விக்கப்பட்டது