சேதுராமன் பஞ்சநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேதுராமன் பஞ்சநாதன் (Sethuraman Panchanathan) (பிறப்பு: சூன் 24, 1961) அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழக அறிவியலாளர். இவர், அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்[1][2][3]. சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த விவேகானந்தா கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பொறியியல் இளநிலை பட்டமும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உயர்நிலை பட்டமும் பெற்றுள்ளார். ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் (கனடா) முனைவர் பட்டம் பெற்றவர்[4]. 1998 ஆம் ஆண்டு முதல் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில், பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதுராமன்_பஞ்சநாதன்&oldid=2220397" இருந்து மீள்விக்கப்பட்டது