உள்ளடக்கத்துக்குச் செல்

சி. ஆர். சரஸ்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. ஆர். சரஸ்வதி
பிறப்புஇந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
பணிநடிகை, அரசியல்வாதி
அரசியல் கட்சிஅ.இ.அ.தி.மு.க (1999 - 2017), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (2018 முதல்)
விருதுகள்கலைமாமணி விருது

சி. ஆர். சரஸ்வதி (C. R. Saraswathi) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிளவுக் குழுவான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.[1]

தொழில்[தொகு]

சி. ஆர். சரஸ்வதி 1979 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 1999 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டில், ஜெயலலிதாவால் அ.தி.மு.க கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.[சான்று தேவை] பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[2][3] இவர் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்.[சான்று தேவை]

விருதுகள்[தொகு]

தமிழ் திரையுலகில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2004 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். 

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1979 சுவர் இல்லாத சித்திரங்கள் செல்வி
1987 எங்க சின்ன ராசா நாகம்மாள்
1988 அண்ணாநகர் முதல் தெரு சரஸ்வதி
1991 புதிய ராகம் ரகுராமனின் தாயார்
1991 வசந்தகால பறவை வழக்கறிஞர்
1992 பொண்டாட்டி ராஜ்ஜியம்
1992 தங்க மனசுக்காரன் யசோதை
1992 அபிராமி சரோஜா
1992 இளவரசன் செல்வநாயகத்தின் மனைவி
1992 சேவகன் அசோக்கின் தாய்
1992 சிங்கார வேலன் சுமதியின் தாயார்
1992 அம்மா வந்தாச்சு பள்ளி ஆசிரியர்
1992 காவியத் தலைவன் பிரியாவின் தோழி
1992 நாளைய செய்தி சாவித்திரி
1993 பிரதாப்
1993 மணிக்குயில் ரத்னசபாபதி மனைவி
1993 எங்க முதலாளி காவேரி அம்மா
1993 பொறந்த வீடா புகுந்த வீடா
1993 மாமியார் வீடு
1994 அமைதிப்படை குயிலியின் தாய்
1994 அத்த மக ரத்தினமே புதுக்கோட்டை சுந்தரி
1994 கில்லாடி மாப்பிள்ளை தேவியின் தாய்
1994 சுப்பிரமணிய சாமி சரசா
1995 எங்கிருந்தோ வந்தான் மீனாட்சி
1995 பாட்டு பாடவா தேவியின் தாய்
1995 கர்ணா மாணிக்கத்தின் மனைவி
1995 ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி
1995 காந்தி பிறந்த மண் சத்யவதி
1996 வசந்த வாசல் வசந்தா
1996 புருஷன் பொண்டாட்டி சூரியகலா
1996 செல்வா பாமா
1997 புதுநிலவு
1997 ஒன்ஸ்மோர் கவிதாவின் அம்மா
1998 நாம் இருவர் நமக்கு இருவர்
1998 என் உயிர் நீதானே ஜானகியின் அண்ணி
1998 நினைத்தேன் வந்தாய் சாவித்திரியன் அத்தை
1998 சிவப்பு நிலா வழக்கறிஞர்
1999 கெஸ்ட் அவுஸ்
1999 மறவாதே கண்மணியே
2001 என் புருசன் குழந்தை மாதிரி
2002 பம்மல் கே. சம்பந்தம் மாலதியின் தாய்
2002 காமராசு வசந்தியின் தாய்
2002 கார்மேகம்
2002 இவன்
2006 47ஏ பெசன்ட் நகர் வரை
2007 நம் நாடு
2008 பழனி தீப்தியின் தாய்

குறிப்புகள்[தொகு]

  1. "Tamil Nadu polls: CR Saraswathi's journey from silver screen to political theatre". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
  2. "Saraswathi C.R(AIADMK):Constituency- PALLAVARAM(KANCHEEPURAM) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
  3. "Comedian, supporting actor accomplish what heroes could not - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._சரஸ்வதி&oldid=4014685" இலிருந்து மீள்விக்கப்பட்டது