ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி (Oru Oorla Oru Rajakumari) பாக்யராஜ் இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வேணு தயாரிப்பில், இளையராஜா இசை அமைப்பில், 15 ஜனவரி 1995 ஆம் தேதி வெளியானது. பாக்யராஜ், மீனா, ஜனகராஜ், விஜயகுமார், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]

பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது.[4]

நடிகர்கள்[தொகு]

பாக்யராஜ், மீனா, சனகராஜ், விஜயகுமார், லிவிங்ஸ்டன், சி. ஆர். சரஸ்வதி, நிர்மலாம்மா, சுரபி, சார்லி, குமரிமுத்து, நளினிகாந்த்.

கதைச்சுருக்கம்[தொகு]

படித்த வேலையில்லாத இளைஞர் வெங்கட் (பாக்யராஜ்). வேலையில்லாமல் இருக்கும் வெங்கட்டை, குடும்பத்தினர் எள்ளி நகையாடினர். அவனது பாட்டி மட்டும் அவன் மேல் அதிக பாசமாக இருந்தார். மேலும், ஓர் இளவரசியை தான் வெங்கட் மணமுடிப்பான் என்ற கனவுடன் இருந்தார் அவனது பாட்டி.

அரச பரம்பரையைச் சேர்ந்த, நீலகிரி எஸ்டேட்டின் உரிமையாளர் லட்சுமி பிரபாவின் (மீனா) திருமண நிச்சயத்தின் பொழுது, பங்குச் சந்தையில் பெருத்த நஷ்டம் என்ற தவறான தொலைபேசி அழைப்பால், லட்சுமி பிரபாவின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். அதனால், தன் செல்வத்தை விரும்பாமல், தன்னை விரும்பும் நபரை திருமணம் செய்ய முடிவு செய்கிறாள் லட்சுமி பிரபா.

பின்னர், லட்சுமி தோட்டத்தில் மேலாளராக வேலைக்கு சேருகிறான் வெங்கட். அந்த எஸ்டேட்டின் கணக்காளர் தான் அரண்மனையின் ராஜா என்றும், லட்சுமி ஒரு பணிப்பெண் என்றும் நாடகமாடுகிறார்கள். வெங்கட்டின் காதலை அடைய பொறுமையுடன் காத்திருக்கிறாள் லட்சுமி.

பின்னர், வெங்கட்டின் பாட்டியின் கனவு பலித்ததா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

இப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் இளையராஜா ஆவார். ஆறு பாடல்களுக்கும் வரிகளை எழுதியவர் வாலி (கவிஞர்) ஆவார்.[5]

பாடல்களின் பட்டியல்
ட்ராக் பாடல் பாடியவர் வரிகள் நீளம்
1 அழகு நிலா மனோ வாலி 5:20
2 ஒரு மைனா குஞ்சு மனோ, எஸ். ஜானகி வாலி 5:03
3 எத்தனை நாளா மனோ, உமா ரமணன் வாலி 4:59
4 கண்மணி காதல் மனோ வாலி 5:03
5 வந்தாள் வந்தாள் மனோ, ஸ்வர்ணலதா வாலி 5:29
6 ராஜா ராஜாதான் மனோ, எஸ். ஜானகி வாலி 5:49

வரவேற்பு[தொகு]

வேறு எந்த இயக்குனராலும் எடுத்திருக்க முடியாத கதை என்றும், இயக்குனர் பாக்யராஜ் சற்று நம்பத்தக்க வகையில் படத்தை இயக்கியுள்ளதாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://www.lakshmansruthi.com/". External link in |title= (உதவி)
  2. "http://www.jointscene.com/". Archived from the original on 2011-12-24. 2019-03-27 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)CS1 maint: unfit url (link)
  3. "http://www.cinesouth.com". 2006-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-27 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)
  4. "http://www.behindwoods.com/". External link in |title= (உதவி)
  5. "https://gaana.com". External link in |title= (உதவி)
  6. "New Straits Times. p. 13".

வெளி-இணைப்புகள்[தொகு]