என் புருசன் குழந்தை மாதிரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என் புருசன் குழந்தை மாதிரி
இயக்கம்எஸ். பி. ராஜ்குமார்
இசைதேவா
நடிப்புலிவிங்ஸ்டன்
தேவயானி
விந்தியா
வடிவேலு
வெளியீடு2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் புருசன் குழந்தை மாதிரி என்பது 2001 ஆவது ஆண்டில் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1] 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்தது.[2][3][4][5] இத்திரைப்படம் சிவாஜி, மீரா ஜாஸ்மின், சங்கீதா ஆகியோரின் நடிப்பில் மா அயநா சண்டி பில்லாடு எனும் பெயரில் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப் பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

முருகேசன் (லிவிங்ஸ்டன்), தனது மாமன் மகளான மகேஸ்வரியையே (தேவயானி) தனது உலகமென நினைத்து வாழ்கிறார். அவருடைய காதலுக்கு மகேஷ்வரியும் சம்மதம் தரவே இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இந்நிலையில் சாந்தமூர்த்தியிடம் நடனக் கலைஞரான சிந்தாமணி (விந்தியா) மாட்டிக் கொள்ளும் போது அவரை முருகேசன் காப்பாற்றி தனது தோட்டத்தில் தங்க வைக்கிறார். எதிர்பாராத விதமாக சிந்தாமணி கர்ப்பமாக முருகேசன் காரணமாகிறார். இதே நேரத்தில் முருகேசனின் மனைவியான மகேஷ்வரியும் கர்ப்பமாகிறார். இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 ஆடிய ஆட்டம் தேவா
2 சித்திரையே ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
3 நாலு அடி ஆறு அங்குலம் வடிவேலு
4 பட்டாம்பூச்சி மனோ, அனுராதா ஸ்ரீராம்
5 வாழ வைக்கும் சபேஷ், கிருஷ்ணராஜ்
6 வெண்ணிலா உன்னிகிருஷ்ணன், சத்யா

மேற்கோள்கள்[தொகு]